Loading

“ என்ன குக் பண்ணுறீங்க முத்து?..மட்டன் கிளீன் பண்ணுறீங்கலே..” என்றாள்..

 

[ ராசாத்தி உனக்கு அது மட்டன் தான்னு தெரிந்திருக்கே அதுவே சாதனைதான்..] 

 

 அவள் கேள்வி கேட்கவும் திரும்பி அவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தான்..

 

‘ என்ன இன்னைக்கு ஆடு வந்து தானா தலைய குடுக்குது.. இவ கண்ணுக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல.. திடீர்னு வந்து அவளாவே பேசுறா?.. இது சரி இல்ல.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா ராம்..’ என்று அவன் மனசாட்சி அவனுக்கு எடுத்துக்கூறியது ..

 

 

 அவள் கேள்வி கேட்டுவிட்டு தன்னையே பார்த்திருப்பதை பார்த்து பதில் கூறினான்..

 

 

“ உனக்குத்தான் மட்டன் பிரியாணி ரொம்ப பிடிக்குமேடி.. அதுதான் ரெடி பண்ணுறேன்.. ” என்றான்..

 

 

“ ஹேய்..! வாவ் சூப்பர்.. யார் உனக்கு சொன்னா?… எனக்கு மட்டன் பிரியாணி ரொம்ப பிடிக்கும்னு.. அப்படியே சிக்கன் லாலிபப் பண்ணி தருவியா?.. அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்றாள்..

 

 

 அவள் அப்படி கேட்டதும் அவள் கண்ணில் வந்து போன ஆசை மின்னல்களை பார்த்து அவனுள் ஆயிரம் பூக்கள் பூத்தது..

 

 

“ ம். சரிடி பண்ணிக் கொடுக்குறேன்.. வேற எதுவும் வேணுமா?..” என்றான்..

 

 

“ இல்லை இப்ப இதுவே போதும்.. ஆனா கொஞ்சம் சீக்கிரம் பண்ணு.. எனக்கு பிரியாணிக்கு வயிறு ரொம்ப பசிக்குது..” என்றாள்..

 

 

“ ம்ம். சரி..” என்று கூறிவிட்டு அவன் வேலையை தொடர்ந்தான்..

 

 

 அவளும் சமையலறையில் இருந்து அவள் அறைக்கு சென்று நாளைய எக்ஸாமுக்கு படிப்பதற்கு கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்கே வந்துவிட்டாள்..

 

 

 மீண்டும் அவள் வந்து அமர்ந்ததை திரும்பி பார்த்துவிட்டு அவன் சமையல் வேலையை தொடர்ந்தான்..

 

 

 சற்று நேரம் அவளும் சின்ஸீயராக படிக்க ஆரம்பித்து விட்டாள்..

 

 

 தொடர்ந்து படிப்பது அவள் மண்டையில் ஏறவில்லை..

 

 

 காரணம் என்னவென்றால் பிரியாணி அவள் மூளையை ஆக்கிரமித்து இருந்தது..

 

 

“ வாவ். பிரியாணி மணம் மனதை அள்ளுது.. இன்னும் நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணனுமா?.. எப்ப முடியும்?..”

 

 

 அவள் வாயை சப்புவதை பார்த்து சிரித்துக் கொண்டான்.. அவளின் ஆட்டிடியூட் பார்த்து சப்பும் வாயை அப்படியே இழுத்து கொஞ்ச தோனியது.. அவள் என்ன சொல்வாளோ?.. அதை ஏற்றுக் கொள்வாளோ?.. என தெரியாமல் தவித்து போய் அவனை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்… 

 

 

“ இன்னும் 15 நிமிஷத்துல முடிஞ்சிடும்..” என்றான்..

 

 

 அப்போது சீதாவுக்கு யசோதாவிடம் இருந்து அழைப்பு வந்தது..

 

 

 அவர் அங்கே சென்று சந்தோஷமாக இருந்தாலும் சிந்தனை முழுவதும் மகளிடம் மட்டுமே இருந்தது..

 

 

 எப்போது என்ன செய்வாள்.. ராமுடன் சண்டை போடுவாளோ?.. அவனுடன் சந்தோஷமாக இருப்பாளா?.. என்று நினைத்து கவலை கொண்டார்..

 

 

 கைபேசியில் தாயின் எண்ணை பார்த்ததும் இன்று ஏதோ நல்ல மூடில் இருப்பாள் போல்.. சிரித்து கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

 

 

 அந்தப் பக்கம் யசோதா மகளுடன் பேசினார்..

 

 

“ ஹலோ சீதா எப்படிடா இருக்க?.. மாப்பிள்ளை எங்க..?”

 

 

“ அம்மா நான் ஜாலியா இருக்கேன்.. உங்க மாப்பிள்ளை இதோ குக் பண்ணுறார்.. நான் எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பண்ணுறீங்க?.. அத்தை எங்க?. அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?..” என்றாள்..

 

 

 மகள் குரலில் இருக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து யசோதா பூரித்துப்போனார்..

 

 

 அவர்கள் இருவருக்கும் தாம்பத்தியம் நடப்பது அடுத்தது.. ஆனால் அதற்கு முதல் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சண்டை போடாமல் ஒற்றுமையாக இருந்தாலே யசோதாவிற்கு போதும்..

 

 

 இனி அதுவும் தன்னால் நடந்து விடும் என்று அவருக்கு நம்பிக்கை வந்தது..

 

“ உங்க அத்தை துர்கா வீட்ல இருக்காங்க.. நான் அண்ணன் கூட இங்க மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கேன்.. மாப்பிள்ளை என்னமா சாப்பாடு பண்ணினார்.. நீ எதுவும் ஹெல்ப் பண்ணுனியா?..” என்றார்..

 

 

“ எனக்கு பிடிக்கும்னு மட்டன் பிரியாணி பண்ணினார்.. நாங்க சாப்பிட போறோம், நீங்க சாப்பிட்டீங்களா?..” என்றாள்..

 

 

“ இனிதான் சீதா நாங்க சாப்பிடணும் மாப்பிள்ளை கிட்ட குடு…” என்றார்..

 

 

 “ இந்தாங்க அம்மா பேசணுமாம்..” என்று சொல்லி கைபேசியை ராமிடம் கொடுத்தாள்..

 

 

“ ஹலோ அத்தை சொல்லுங்க..” என்றான்..

 

 

“ என்ன மாப்பிள்ளை நீங்க.. அவளை சின்ன சின்ன வேலைகளை செய்ய வச்சிருக்கலாமே.! நீங்களும் ரொம்ப இடம் கொடுத்து அவளை கெடுக்குறீங்களோனு தோணுது மாப்பிள்ளை.. ” என்றார்..

 

 

“ என்ன பெரிய வேலை அத்தை.. இதெல்லாம் எனக்கு பழகின வேலை தானே.. லக்ஷ்மிக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு அதுக்கு படிச்சிட்டு இருந்தா எப்படி தொல்லை பண்ணுறது.. அதெல்லாம் போகப் போக அவளே பழகிக்கு வா..” என்று மனைவிக்கு ஆதரவாக பேசினான்..

 

 

 

“ சரி தம்பி நீங்க என்னைக்கு அவளை விட்டு கொடுத்து இருக்கீங்க.. சீதா எதாவது சுடு சுடுன்னு பேசினாலும் நீங்க உடனே திருப்பி பேசிடுங்க தம்பி.. கேட்டுகிட்டு அமைதியா இருந்தீங்கன்னா அவளுக்கு உங்க மேலையும் பயம் இல்லாமல் போயிடும்..” என்றார் யசோதா..

 

 

“ என்ன அத்தை பேசுறீங்க.. கணவன் மனைவிக்குள்ள பயத்துக்கு என்ன வேலை.. அவளும் என்னை மாதிரி சக மனுசி தானே..! அன்பும் காதலும் புரிந்துணர்வும் இருந்தாலே போதும்.. மாமாவுக்கு நீங்க பயப்பிடிங்களா என்ன?.. மாமா தான் உங்களை பயந்து நடுங்கற நிலைமையில் வைச்சுருந்தாரா?.. இல்லைதானே.. நீங்களே சீதாவை பாராட்டுற அளவுக்கு சீதா என்னோட குடும்பம் நடத்துவா இருந்து பாருங்க.. ” என்று அவருடன் பேசினான்..

 

“ சரி தம்பி எனக்கும் அதுதானே வேணும்.. எல்லாம் நீங்க பார்த்து மாத்திடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.. இனி நான் சீதா வை பற்றி கவலை பட மாட்டேன்.. சரி கணேஷ் அண்ணன் கூட பேசுங்க குடுக்குறேன்..” என்றார்..

 

ராம் கணேசன் யமுனா இருவரிடமும் பேசி நலம் விசாரித்ததும் அலைபேசியை வாங்கி துண்டித்தார் யசோதா..

 

 

ராம் காலையில் இருந்த அதே லுக்கோடு தற்போதும் இருந்தான்.. கழுத்தில் இருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்து விட்டு சமைத்தது அனைத்தையும் எடுத்து மேசையில் வைத்து விட்டு அறைக்குச் சென்று குளித்துவிட்டு பத்து நிமிடத்தில் வந்தான்..

 

 

 

 அவன் வருகிறானா?.. என்று மாடிப்படியை பார்த்து டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் சீதா..

 

 

 குளித்துவிட்டு வேறொரு லுங்கியை கட்டிக் கொண்டு வந்தான்..

 

‘ இவனுக்கு இந்த லுங்கியை தவிர வேற உடுப்பே இல்லையா என்ன?.. எப்ப பாரு இதே கட்டிக்கிட்டு வருவான்.. ஒரு ஷாட்ஸ் போட்டாத்தான் என்னவாம்.. ஒருவேளை இல்ல போல.. நாளைக்கு ஈவினிங் அழைச்சிட்டு போய் வாங்கி கொடுக்கணும்.. ’ என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அவன் வந்து அவளுக்கு தட்டு எடுத்து வைத்து சுடச் சுட மட்டன் பிரியாணியை தட்டில் எடுத்து வைத்தான்.. அவள் விரும்பிய சிக்கன் லாலிபப் எடுத்து வைத்தான்..

 

 

 மட்டன் கிரேவியும் செய்து இருந்தான்..

 

 

 ஒரு வாய் சாப்பாடு எடுத்து வாயில் வைத்ததும் “ வாவ்..! அமேஸிங்.. டேஸ்ட் வேற லெவல் அள்ளுது.. எத்தனையோ ஹோட்டல் அண்ட் ரெஸ்டாரண்ட் எல்லாத்திலயும் சாப்பிட்டு இருக்கேன்.. ஆனா இந்த டேஸ்ட் எங்கேயுமே சாப்பிட்டதில்லை.. சூப்பர்.. ” என்று பாராட்டியபடியே சப்புக்கொட்டி ரசித்து மீண்டும் வாங்கி சாப்பிட்டாள்..

 

 

 அவளுக்கு எதிரே அவன் இருப்பதை பார்த்து “ நீங்களும் சாப்பிடுங்க முத்து.. எடுத்து வைக்கவா தட்டுல..” என்று கேட்டது மட்டும் இல்லாமல் அவனுக்கு முன் தட்டை எடுத்து வைத்து அதில் பிரியாணியும் அள்ளி வைத்தாள்..

 

 

 அவள் செய்த இந்த ஒரு செயலில் அவனுக்கு மனம் நிறைந்து போனது..

 

 

 சிறு வயதிலேயே தாயை இழந்தவன்.. ராமின் தாய் இருந்த வரைக்கும் அதிகம் அவர்தான் ராமுக்கு உணவு ஊட்டியே விடுவார்..

 

 

 ஊர் பெண்கள் எல்லாம் பார்த்து கேலி பேசுவார்கள்..

 

வளர்ந்த பின்னும் தாய் ஊட்டி சாப்பிடுகிறான் என்று..

 

 

 யார் கண் பட்டதோ அது அத்தோடு முடிந்து விட்டது..

 

 

 தாய் இறந்ததும் என்று அவன் சமையலறையை பொறுப்பெடுத்தானோ அன்றிலிருந்து அவனே அவனுக்கு தெரிந்த அளவில் சமைத்து அதை அவன் தட்டில் போட்டு சாப்பிடுவான்..

 

 

யமுனா ஓரளவுக்கு பெரிய பொண்ணு ஆனதும் அவளை சமையலறை பக்கமே விடமாட்டான்.. தன்னை போல் அவளும் கஷ்டப்பட வேண்டாம்.. படிக்கும் வயது வரை படித்துவிட்டு அதன் பின் சமையலை கற்றுக் கொள்ளட்டும் என நினைத்தான்..

 

 

 

 தாய்க்கு பின் தாரம் என்பது போல்..

 

 ராமின் அம்மாவிற்கு பின் இன்று அவள் கையால் உணவு எடுத்து வைத்தது அவனுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் கொடுத்தது..

 

 

அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டே இருவரும் வயிறு நிறைய உணவு உண்டு விட்டு ராம் அனைத்தையும் எடுத்து சமையல் அறையில் வைத்ததும் அவனுடன் சேர்ந்து அவளும் எடுத்து வைத்து உதவி செய்தாள்… பாதாம் போட்டு பால் காய்ச்சி கிளாஸில் ஊத்தி அறைக்கு எடுத்துச் சென்றான் ராம்..

 

 

 

 இருவருக்கும் கல்லையும் தின்றால் கரையும் வயது.. அதனால் இந்த இரவு நேரத்தில் மட்டன் பிரியாணி சாப்பிட்டது அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்கவில்லை..

 

 

 

 நேரம் இரவு பத்து மணியை நெருங்கியதும் அவன் கொடுத்த பாலை வாங்கி குடித்ததும் அவள் இடத்தில் சென்று படுத்துவிட்டாள் சீதா…

 

 

 

 ராம் சற்று நேரம் பல்கணியில் நடந்து திரிந்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி அனைத்தையும் ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு கதவை நன்றாக பூட்டிவிட்டு அவர்கள் அறைக்கு வந்து அவள் அருகே படுத்துக்கொண்டான்..

 

 

 

 சற்று நேரத்தில் தூக்க கலக்கத்தில் ராம் மீது கையையும் காலையும் போட்டு அவனை அணைத்து கொண்டு உறங்கினாள் சீதா..

 

 

 

 அவனும் அவள் நெற்றியில் படர்ந்து இருந்த முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் மட்டும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல் அவள் தூக்கம் கலையாத வண்ணம் முத்தம் கொடுத்துவிட்டு மன அமைதியோடு கண்ணுறங்கினான்..

 

 

 

 நாளை விடியல் சீதாவிற்கு வைத்திருக்கும் அடியை அவள் வாழ்நாளில் எதிர்பார்த்து இருக்க மாட்டாள்..

 

 

 

 ராமும் எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கபோகிறான்..

 

 

 

 நம்பிக்கை துரோகத்தின் மூலம் நாளை சீதா உண்மையை உணர்ந்து கொண்டால் மட்டும் வைரக்கல் எது கண்ணாடிக்கல் எது என சீதா உணர்ந்து தெரிந்து கொள்வாள்..

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்