Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 23

அதிகாலமே எழுந்து என்றும் இல்லாத புத்துணர்ச்சியுடன் கிளம்பி, தனது ராயல் என்பீல்ட் பைக்கில் பறந்து கொண்டு இருந்தான் கார்த்திக். மெரூன் கலர் சட்டை, கையில் காப்பு, கருப்பு கூலர் என ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்தான். வேகமாக வந்து ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி அதன் மேல் அமர்ந்து காத்திருந்தான் காதலியின் தரிசனத்திற்காக. இன்னும் திறக்கப்படாத கதவையும் தனது கடிகாரத்தையும் வெறிக்க வெறிக்க பார்த்து இருந்தான். ஐயோ பாவம். இவனின் நேரமோ என்னவோ இன்னும் யாரும் வந்தபாடு இல்லை. பலமணி நேர காத்திருப்புக்கு பிறகு அந்த கமிஷ்னர் அலுவலகம் எப்போதும் போல பரபரப்பாக இயங்க தொடங்கியது. அனைவரும் இவனை ஒரு மார்கமாக பார்த்து வைக்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.

பலமணி நேர காத்திருப்பிற்கு பிறகு வந்தால் அவனின் கனவு காதலி. கார்-இல் இருந்து இறங்கி காக்கி உடையில் கம்பிரமாக அவள் நடந்த வந்த தோரணையை பார்த்து கார்த்திக் மூச்சு விடவும் மறந்து இருந்தான். அவனின் கனவு தேவதைக்கும் இவளுக்கும் எவ்வளவு வித்யாசம். அந்த கள்ளியின் முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். ஆனால் இவளிடம் அதெல்லாம் டெலஸ்கோப் வைத்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. காவல் அதிகாரிக்கே உள்ள அந்த திறமிருடன் இவள் நடந்து வந்தது, அவனுக்கு ஒரு மரியாதையும் பயத்தையும் சேர்த்தே தந்தது. அவள் கடந்து சென்றது கூட தெரியாமல் அவளை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்து பிரீஸ் ஆகி நின்றவனை ஒரு கான்ஸ்டபிள் வந்து அழைத்த பின் தான் இவ்வுலகத்திற்கே வந்தான்.

“தம்பி… உங்கள மேடம் கூப்பிட்டாங்க…” என சொல்லிவிட்டு செல்ல ஒரு சின்ன சிரிப்புடன் அவரை பின்தொடர்ந்தாலும் உள்ளுக்குள் பயம் பதட்டம் எல்லாமே இருக்க தான் செய்தது. அவளை பார்க்கும் முன்பு வரை இருந்த தைரியம் எல்லாம் அவளை பார்த்த பிறகு ஆட்டம் கண்டது. பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டான் என்று சொன்னால் மிகையாகாது. அவளின் அறை வாயிலில் விட்டுவிட்டு அவர் சென்று விட, ஒரு வித தயக்கத்துடன் கதவை தட்ட உள்ளே இருந்து கம்பீரமாக குரல் ஒலித்தது… எஸ்.. கம் இன்… என வர எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என தைரியத்தை வரவழைத்து உள்ளே சென்றான். ஏதோ கேஸ் கட்டுகளை பார்த்து கொண்டு இருந்தவள் நிமிர்ந்து இவனை பார்த்து சிட்… என இருக்கையை காட்ட இவனும் உட்கார்ந்தான்.

“சொல்லுங்க என்ன விஷயம்…” என கேள்வியுடன் நிறுத்த, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தவன், “அது வந்து.. அது எப்படி சொல்றது… அது” என இழுக்க அவளுக்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது. “ஹலோ மிஸ்டர்… எதுக்கு வந்துருக்கீங்கனு கேட்டா என்ன வந்து போயினு இழுத்துட்டு இருக்கீங்க.. என்ன விஷயம்… Mr. ஆதித்யா எதாவது சொன்னாரா..?” என்று கேட்டுவிட்டு அவனை பார்க்க, “அது வந்து… ஹான்.. அன்னைக்கு கல்யாணத்துல அர்ரெஸ்ட் பண்ணிங்களே.. அந்த கேஸ் என்னாச்சு… அதை பத்தி கேட்டுட்டு வர சொல்லி ஆதி அனுப்புனாங்க…” என எப்படியோ சமாளித்து வைக்க, இப்போது வெளிப்படையாகவே முறைக்க ஆரம்பித்துவிட்டாள்.

“அந்த டீடைல்ஸ் எல்லாம் ஏற்கனவே அவருக்கு இன்போர்ம் பண்ணிட்டனே…” என ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு கேட்க கார்த்திக், ‘அட பாவி ஆதி… இதெல்லாம் சொல்ல மாட்டியா டா… போச்சு… இப்போ என்ன சொல்லி சமாளிக்குறது… இந்த காக்கி ஜிலேபி வேற மொறைக்குது.. என்னடா கார்த்திக் உனக்கு வந்த சோதனை… பார்த்து பேசவே நடுங்குது.. இந்த லட்சனத்துல காதலை சொல்லி இவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி… சுத்தம்… டேய் கார்த்தி… நீ சன்னியாசி தான் டா…’ என யோசனையில் இருந்தவனை டேபிள்-இல் தட்டி நிகழ்வுக்கு கொண்டு வந்தால் ஆருத்ரா.

“என்ன நான் பேசிட்டே இருக்கேன்… பதிலை காணோம்… Mr. டோன்ட் வேஸ்ட் மை டைம்…” என பொரிந்து தள்ள கார்த்திக் “அது வந்து…” என மறுபடியும் ஆரம்பிக்க கோவத்தில், “கெட் அவுட்… இடியட்…” என சொல்ல இவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் எழுந்தவன் கதவு வரை சென்றவன் திரும்பி பார்த்து… மேடம்… என அழைக்க எரிச்சலுடன் தலையை தூக்கி பார்க்க, “கோவப்பட்டாலும் அழகாதா இருக்கீங்க….” என சொல்லிவிட்டு ஓடிவிட்டான். ஆருத்ரா முறைத்தாலும் கண்ணுக்கு புலப்படாத ஒரு சிரிப்பு திடீரென இதழ் ஓரம் வந்து மறைந்து போனது.

கார்த்திக் அங்கே இருந்து கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தான். ‘எப்படி அவளை கரெக்ட் பண்றது… ஒன்னும் புரியலையே… ஆதி கிட்ட எதாவது ஹெல்ப் கேக்கலாமா… அதை விட்டாலும் வேற வழி இல்லை’ என தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தவனை ஆதி போன் செய்து வர சொல்ல… ‘நண்பனே போன் பண்ணிட்டான்… போறோம் பேசுறோம்… அவளை கரெக்ட் பன்றோம்… ச்சி பண்றேன்…’ என யோசித்து கொண்டே குதூகலமாக சென்றான். உள்ளே சென்றவனை ஆதி அடி பிரித்து எடுத்துவிட்டான். “டேய்… எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அடி டா… வலிக்குதுடா…” என கெஞ்ச பாவம் பார்த்து விட்டான்.

“சார்…. இப்போ தான் ஆபீஸ் வந்திங்க… இவ்ளோ நேரம் எங்க இருந்திங்க…” என கேட்க, “அது வந்து மச்சான்… அது… ஹான் வீட்டுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன் மச்சான்… ஏன் மச்சான் எதாவது பிரச்சனையா…” என கேட்க, ஆதி அவனை முறைத்து கொண்டே, “எங்க கமிஷனர் ஆபீஸ்-ல யா… அங்க எப்போ மார்க்கெட் ஓபன் பண்ணாங்க… எனக்கு தெரியாம…” என நக்கலாக கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான் கார்த்திக். “டேய் அறிவு கெட்டவனே… எதுக்குடா அங்க போன… அதுவும் காலங்காத்தால… நான் போன் பண்ணா சார் எடுக்கவே மாட்டீங்க… ஆனா இன்னைக்கு விடிஞ்சும் விடியும் முன்னே அங்க போயிருக்க… போனதும் இல்லாம அந்த ACP கிட்ட என்ன சொல்லி தொலைச்ச… அந்த பொண்ணு எனக்கு போன் பண்ணி திட்டுது… என்னடா நெனச்சுட்டு இருக்க… ஒழுங்கா உண்மையா சொல்லு…” என கண்டிப்புடன் கேட்க இதோ சொல்லிவிட்டான் அவனின் கனவு முதல் இன்று நடந்தது வரை.

ஆதி தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டான். கார்த்திக் ஒன்றும் தெரியாத அப்பாவி போல அவனை பார்த்து படி இருக்க ஆதி, “சோ… சார் அந்த பொண்ண கனவுல பாத்து காதல் பண்ணி… இப்போ நேர்லயும் காதல் பண்ண போயிட்டீங்க… அதுவும் கமிஸ்னீர் ஆபீஸ்க்கு… அப்படி தான…” என நிறுத்த, வேகமாக தலையை மட்டும் ஆட்டினான். “மச்சான் நீ தான் எங்களை சேர்த்து வைக்கணும்… ப்ளீஸ் டா… நீயும் கல்யாணம் பண்ணிட்ட… அடுத்து நானும் பண்ணணும்ல… அதனா மச்சான் நியாயம்…” என அப்பாவியாக கேட்க, “அதெப்படி சார் எதுவும் சொல்ல மாட்டீங்க… நாங்க மட்டும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்… என்கிட்ட எல்லாத்தையும் சொல்றவன் இத மட்டும் ஏன்டா மறைச்சுட்ட…” என சாந்தமாக கேட்டாலும் அவனின் குரலில் வேதனை இருக்க தான் செய்தது.

கார்த்திக் ஒரு மாதிரி ஆகிவிட, “மச்சான் அப்படி எல்லாம் இல்லடா… அது ஜஸ்ட் கனவு… அவளை நேர்ல பாப்போமா இல்லையானு தெரியல… அதனால தான் மச்சான் சொல்லலை… மத்தபடி உன்கிட்ட மறைப்பானா… போ மச்சான் என்னைய போய் சந்தேகபட்றியே…” என போலியாக கண்ணீர் வடிக்க, “அட ச்சி… கேவலமா நடிக்காத… எருமை” என திட்ட, அனைத்து பல்லையும் காட்டி சிரித்து வைத்தான். “சரி ஏதோ நண்பனா போயிட்ட… பாத்துக்கலாம்…” என சொல்ல, சந்தோசமாக நண்பனை கட்டிப்பிடித்து முத்தமழை பொலிந்தவன்… “அப்போ ஓகே மச்சான்… சரி அதெல்லாம் இருக்கட்டும்… கேட்கணும்னு நெனச்சேன்… என்ன புது மாப்பிளை… அதுக்குள்ள ஆபீஸ் வந்துட்டீங்க… என்னடா நடந்தது.. ஒரே ஜாலி தான் போலயே…” என கேட்க சுத்தியும் அடிக்க எதாவது கிடைக்குமா என தேடி பார்க்க அதற்குள் பறந்துவிட்டான் கார்த்திக். வாய்க்கு வந்தபடி திட்ட அதெல்லாம் கேட்பதற்கு அவன் இருந்தால் தானே… ஆதியின் போன் அடிக்க அதை எடுத்து பார்க்க கார்த்திக் தான். “என்ன மச்சி என்னைய திட்டி முடுச்சிட்டியா… சரி பரவாயில்ல… என்னோட ஆள் நம்பர் மட்டும் அனுப்பி வெச்சுட்டு நீ திட்றத கன்டினியூ பண்ணி மச்சி…” என சொல்லிவிட்டு உடனே வைத்துவிட்டான். ஆதி, அவனை திட்டி களைத்து போய் “எல்லாம் தலையெழுத்து” என சகித்து கொண்டே நம்பர் அனுப்பி வைக்க, அதை பார்த்ததும் முகம் பிரகாசமாக, உடனே அவளின் எண்ணை ஜிலேபி என்று பதிந்துவிட்டு, ஒரு குறுந்செய்தியை அனுப்பி விட்டு, பதிலுக்காக காத்திருந்தான்.

கல்லூரியில் ஒரே சந்தோசமாக வலம் வந்தால் கயல். அவள் திரும்பி காலேஜ் வந்ததில் சிவா, திவ்யாவிற்கு ஏக சந்தோசம். கயல் சந்தோசமாக இடைப்பட்ட நாட்களில் நடந்ததை எல்லாம் சொல்ல, ஆதியை வைத்து அவளை ஓட்டி கொண்டு இருந்தனர். கயலுக்கே தெரியாமல் ஆதியை பற்றி பேசும்போது எல்லாம் ஒரு வெட்கம் நாணம் வந்து ஒட்டி கொண்டது என்னவோ உண்மை தான். ஆனால் அதை அவள் உணர்ந்து கொள்ளும் நாள் எல்லாமே கைமீறி சென்று இருக்கும் என பேதைக்கு தெரியவில்லை போல… விதியை யாரால் தான் மாற்ற முடியும். கயலின் திடீர் திருமணம், அந்த புகைப்படத்திற்கான விளக்கம், முதல்வரின் மன்னிப்பு எல்லாமே அனைவர்க்கும் தெரிய, அதன்பிறகு அதை பற்றி யாரும் பேசவில்லை. நமக்கு எதற்கு வம்பு என நினைத்து விட்டுவிட்டனர். மனதிற்குள் மட்டுமே பொறாமை பட முடிந்தது பலரால்.

எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க கயல் இந்த இடைப்பட்ட நாட்களில் நடந்ததை எல்லாம் மூச்சு விடாமல் இன்னும் சொல்லிக்கொண்டு இருக்க அவளின் சந்தோசத்தை பார்த்து இவர்களும் நிம்மதி அடைந்தனர். கயலின் பேச்சில் ஆதியின் பெயர் இடைப்பட அதை குறித்து வைத்து கொண்டு சிவாவும் திவ்யாவும் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். பேசி கொண்டே இருந்த கயல் அவர்களின் சிரிப்பை பார்த்து என்னவென்று கேட்க, திவ்யா “என்னடி ஒரே ஆதி சார் அ பத்தியே பேசுற.. என்ன மேடம் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா…” என கேட்க, “அதெல்லாம் இல்லடி… அவருமேல ஒரு மரியாதை இருக்கு… நான் நினைக்குறது எல்லாம் அவரு செஞ்சு முடுச்சுறாரு… எக்ஸாம்பிள் அப்பா, தம்பி அப்புறம் இந்த காலேஜ் ப்ரோப்லம் எல்லாமே… அதனால அவரை புடிக்கும்… மத்தபடி எதுவும் இல்லை…” என சொல்ல, திவ்யா, அதையும் பாப்போம்… என செல்லமாக சொல்லிக்கொண்டே கன்னத்தை கிள்ள, கயல் சிரித்து கொண்டாள்.

கயலுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது, நீங்க எப்படி கல்யாணம் நடக்கும்போது கரெக்டா வந்திங்க… என்னதான் நடந்துச்சு… என கேட்க சிவா சொல்ல ஆரம்பித்தான். எல்லோரும் மேல பாருங்க… பிளஷ்பேக் போலாம்….

கயல் என்ன செய்வது என்று யோசிக்கும்போது அவளுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அருண் மட்டுமே. அதனால் சுமதிக்கு தெரியாமல் அருண் இடம் தன் நண்பர்களை சந்தித்து இந்த கடிதத்தை மட்டும் கொடுக்க சொல்லி கொடுத்துவிட்டாள். அதை சுமதிக்கு தெரியாமல் எடுத்த செல்ல அரும்பாடு பட வேண்டி இருந்தது. ஒருவழியாக கல்லூரிக்கு வந்த அருணுக்கு யாரை பார்ப்பது எப்படி விசாரிப்பது என தெரியாமல் கேட் வாயிலில் முழித்து கொண்டு இருந்தவனை பார்த்து ஒரு மாணவன் கேட்க அவனும் அக்காவை பற்றி தனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்ல, அவனை காத்திருக்க சொல்லவிட்டு கயலின் வகுப்பில் இருந்த அவளின் நண்பர்கள் திவ்யா, சிவாவை தேடி அவர்களிடம் வந்து சொல்ல இவர்களும் அருணை காண வர, அவனும் அவர்கள் தான் என உறுதி செய்து கொண்டு அந்த கடிதத்தை கொடுத்தான்.

அதில் வீட்டில் நடந்த பிரச்சனை, அதனால் ஏற்பாடு செய்யபட்ட திடீர் கல்யாணம், கல்யாணம் நடக்கும் இடம் நாள் எல்லாமே குறிப்பிட்டு எழுதி இருக்க அதை படித்த இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. சிவா, நம்ம போலீஸ்-ல புகார் கொடுத்தரலாம், வேற வழி இல்லை என்ன பேசிக்கொண்டு இருக்கும்போதே அங்கே வந்த வெண்பா என்ன போலீஸ்… எதுக்கு புகார்… என விசாரிக்க கல்லூரியில் பிரச்சனை ஆரம்பித்து இந்த கடிதம் வரை அனைத்தும் சொல்லி முடிக்க வெண்பாவிற்கு கஷ்டமாக போயிவிட்டது.

“நானும் இப்போ தான் கேள்வி பட்ட… என்ன ப்ரோப்லம்ன்னு உங்ககிட்ட தெளிவா கேட்கலாம்னு வந்தா அதுக்குள்ள இவ்ளோ நடந்துருச்சா… சரி விடுங்க இந்த பிரச்னையை நான் பாத்துக்குறேன்…” என சொல்ல எப்படி என திவ்யா கேட்க ஆதியை பற்றின அனைத்தையும் சொல்லி அண்ணன் கிட்ட சொல்லிட்டா போதும்… அவங்க பாத்துப்பாங்க… என சொல்ல மற்றவர்களும் அவனை பற்றி கேள்விப்பட்டதால் சரி என்று சொன்னார்கள். அருணை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்து என்ன செய்யலாம் என்று பிளான் போட்டனர்.

அன்று இரவே வெண்பா ஆதியிடம் சொல்ல, அவனுக்கு ஒரு நிமிடம் இதயம் துடிப்பதை நிறுத்தி இருந்தது. சமாளித்து கொண்டு தான் பார்த்து கொள்வதாக சொல்லி வெண்பாவை அனுப்பி விட்டு தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். கயல் மேல் ஒருவித ஈர்ப்பு இருந்தது உண்மை தான். அதற்காக காதலா என்று கேட்டால் பதில் இல்லை. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காக்க வேண்டும் என முடிவு செய்து இதை கார்த்திக் இடம் சொல்லி, கயலின் குடும்பம், சொந்தம், சுமதி என எல்லாவிதமான டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிக்கொண்டான். அதன்பிறகு தனக்கு தெரிந்த உயர் அதிகாரி மூலம் ஆருத்ரா-வை பற்றி அறிந்து அவளிடம் உதவி கேட்க அவளும் ஒத்து கொண்டாள்.

சீதா மற்றும் வெங்கட் இடம் வெண்பா அனைத்தையும் சொல்லிவிட எப்படியாவது அவளை காக்க வேண்டும் என அவரும் மகனிடம் சொல்ல அவனும் அனைத்தையும் சொன்னான். சீதாவிற்கு, கயலை நினைத்து பாவமாக இருந்தது. இந்த சிறு வயதிலே எத்தனை கஷ்டங்களை தாங்கி இருக்கிறாள் என. அதனால் அனைவரும் கிளம்பி விட்டனர் கயலின் திருமணம் நடக்கும் கோவிலுக்கு. சுமதிக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் சேமித்து ஆருத்ராவிடம் கொடுக்க, அதன்பிறகு தான் கல்யாணம் நடக்கும் சமயம் அனைவரும் அங்கே வந்து கல்யாணத்தை நிறுத்தியது.

இதை எல்லாம் சொல்ல கயலுக்கு கண்ணீரே வந்துவிட திவ்யா சமாதானம் செய்தாள். ஆதியின் மேல் மதிப்பும், மரியாதையும் இன்னும் கூடி கொண்டே போனது. சீதா, வெங்கட், வெண்பா என அனைவரும் அவளுக்கு இன்னும் பிடித்து போனது. தன்னை பற்றி தெரிந்தும் அவர்கள் தன்மேல் வைத்த நம்பிக்கை அவளுக்கு மெய்சிலிர்க்க செய்தது. சிவா, திவ்யாவும் சமாதானம் செய்ய மெலிதாக புன்னகை அரும்பியது.
அந்த நாள் மிக இனிமையாக அமைந்தது கயலுக்கு. ஆனால் அதே நாள் முடியும்போதும் இதே போல் இருக்குமா என்றால் கேள்விக்குறி தான்…??

கயலின் வருகைக்காக மிகவும் கோவமாக காத்திருந்தான் ஆதி…. அவனின் கோவம் எதற்கு….??
இது எதுவும் தெரியாமல் சந்தோசமாக அறைக்குள் நுழைந்தால் கயல்…. இனி என்ன ஆகும்… பாப்போம்…!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்