Loading

 

அந்த பெரிய வீடு பல வண்ண  மலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக இருந்தது அப்போது ஒருவன் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே ஏலே பாண்டி சாப்பாடு எல்லாம் ரெடி ஆகிவிட்டதா பெரியவர்களுக்கு எல்லாம் முதலில் பரிமாறலாம் நாம் நலங்கு வைப்பதற்கு நேரம் ஆகும் அதற்கு முன்பாகவே அவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டே பந்தி பரிமாறும் இடத்திற்கு நகர்ந்தான்

அப்பொழுது அவனை அந்த பெரிய வீட்டின் ஆலமரமான அந்த வீட்டின் வயதானவர் தாத்தா கருப்பையா அவனை அழைத்தார் ஏலே மகிழா இங்கே வாடா என்றார் அவனும் பாண்டியிடம் நீ கொஞ்ச நேரம் பந்தியை பார்த்துக் கொண்டிருடா நான் வருகிறேன் என்று கூறி விட்டு மகிழ் தாத்தா இருக்கும் இடத்திற்கு சென்றான் என்ன பையா என்றான்

சாப்பாடு எல்லாம் ரெடியாகிவிட்டதா என்றார் அதுதான் பையா பார்க்க போறேன் எல்லாம் ரெடி ஆகிவிட்டது முதலில் பந்தி பரிமாறி விடலாம் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள் நாம் நலங்கு வைக்கும் வரை அவர்கள் எல்லாம் காத்திருக்க வேண்டாம் பெரியவர்களுக்கு பசிக்கும் அல்லவா அதனால் அவர்களுக்கு முதலில் பரிமாறி விடலாம் என்று முதலில் பந்தியை தான் கவனிக்க செல்கிறேன் என்றான்

சரி அதற்காக தான் நானும் இப்போது உன்னை அழைத்தேன் எல்லாம் ரெடி  ஆகிவிட்டதா என்று பார்த்துவிட்டு அனைவருக்கும் பந்தியை பரிமாறு என்றார் சரி பையா என்று கூறிக்கொண்டு இருந்தான் என்ன பையா உன் பேரன்  பேத்தி கல்யாணம் என்றவுடன் இருபது வயது குறைந்தது போல் துள்ளி குதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறாய் என்றான்

அவர் அவனைப் பார்த்து சிரித்து விட்டு பின்னே இல்லையா நம் வீட்டின் முதல் திருமணம் எனது இரண்டு பேர பிள்ளைகளுக்கும்  திருமணம் பிறகு சந்தோஷமாக இல்லாமல் இந்த கிழவன் எப்படி இருப்பேன் இருபது வயசு குறைந்தது போல தெரிகிறது  என்று கேட்டுக் கொண்டிருந்தார் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு கருப்பையாவின் மனைவியும் அந்த வீட்டின் பெரிய மனுஷியுமானா பாண்டியம்மாள் வந்தார் 

வந்தவர் பேரனிடம் என்னடா மகிழ உன் தாத்தாக்கு 20 வயதுக்கு குறைந்தது மாதிரி என்று சொல்கிறாய் 20 வயது தான் ஆகிறது என்று கூட சொல்வார் அந்த மனுஷன் என்று சொல்லி தனது கணவனின் மேவாயில் இடித்தார் அவனும் அவரைப் பார்த்து சிரித்து விட்டு ஆமாம் பாட்டி நீ சொல்வது போல் தான் இப்பொழுது தான் 20 வயது இருப்பது போல் துள்ளி குதித்துக் கொண்டுதான் இருக்கிறார் பையா என்று கூறி சிரித்தான்

அப்பொழுது கருப்பையா தனது மனைவி பேரன் இருவரையும் பார்த்து சிரித்தார் பிறகு பாண்டியம்மா  மகிழா சாப்பாடு எல்லாம் ரெடியாகிவிட்டதா என்றார் அனைத்தும் ரெடி ஆகிவிட்டது பற்றி நம்ம வீட்டு திருமணத்தில் ஏதாவது குறை வைத்து விடுவேன் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் செய்து விடுவேன் என்றான்

அப்போது பாண்டியம்மாள் மகிழா அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாய் இன்று உனது தங்கைக்கு தான் நலங்கு வைக்க போகிறோம் என்றார் அதனால் தானே பாட்டி அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறேன் நம் வீட்டின் விசேஷம் நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்றான் அதற்கு அனைத்து வேலையும் நீயே ஓடி ஓடி பார்த்தால்

உன் தங்கையை யார் பார்ப்பது என்றார் அதான் இத்தனை பேர் இருக்கிறார்கள் அல்லவா நீங்கள் பார்த்துக் கொள்ள மாட்டீர்களா என்று கூறிக் கொண்டிருந்தான் அப்போது அவனது பெரிய அத்தை காவேரி அங்கு வந்தார் அம்மா இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் நேரம் ஆகிறது நீங்கள் வந்துதானே இருவரையும் மனையில்  உட்கார வைக்க வேண்டும் உங்கள் பேரன் பேத்தி நீங்கள் என்னவென்றால் அமைதியாக இங்கு வந்து அப்பாவிடம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்

பிறகு தனது மருமகனை பார்த்தார் மகிழா நீயும் வாடா இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றார் நீங்கள் அனைவரும் பாருங்கள் நான் போய் பந்தியை பார்க்கிறேன் என்று கூறி விட்டு சென்றான் டேய மகிழ நலுங்கு வைக்கும் போது நீ இருக்க மாட்டாயா என்றார் அத்தை நழுங்க வைக்கிற இடத்தில் எனக்கு என்ன வேலைக்கு நீங்கள் அனைவரும் வையுங்கள் நான் சென்று பந்தியை பார்க்கிறேன் என்று விட்டு எலே பாண்டி எல்லாம் ரெடியாகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டே ஓடிவிட்டான்

பிறகு பாண்டியம்மாள் தனது மகளை பார்த்து சரிடி நான் வரேன் நீ போ என்றார் காவேரி தன் தாய் முறைத்து பார்த்து விட்டு அது என்னை  போ என்று சொல்கிறீர்கள் வாருங்கள் என்றால் நான் வராமால நீ போ டி நான் வருவேன் என்றார்  சரிமா என்று கூறிவிட்டு காவிரி சென்று விட்டார் காவிரி சென்றவுடன் பாண்டியம்மாள் தனது கணவனை பார்த்து ஏங்க சீக்கிரம் வாருங்கள் இல்லை என்றால் உங்கள் உங்க பெரிய மகள் திரும்பவும் வந்து கத்துவாள் என்று கூறி சிரித்துவிட்டு தனது பேரன் இருக்கும் அறைக்குச் சென்றார்

இன்று அந்த வீட்டின் பெரிய பேரனுக்கு தான் இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இருப்பதால் இன்று காலையில் தான் ஊரையே அழைத்து பந்த கால் நட்டார்கள் இப்போது நல்ல நேரம் பார்த்து நழுங்க வைக்க போகின்றார்கள் ஊரை சேர்ந்து தான் நழுங்க வைக்க போகிறது அந்த நலங்கு வைக்கும் பங்க்ஷனிற்கு தான் இப்பொழுது இந்த வீடே கலை காட்டி இருக்கிறது கிளம்பிட்டியா என்று கேட்டுக் கொண்டே பாண்டியம்மாள் தனது பேரனின் அறைக்கு சென்றார்

அவனும் தனது பாட்டியை பார்த்துவிட்டு என்ன பாட்டி  என்னை பார்த்தால் எப்படி தெரியுது உன்ன பார்த்தா மாப்பிள்ளை கலை நன்றாக தெரிக்கிறது என்றார் அவனும் தனது பாட்டியை பார்த்து சிரித்து விட்டு என்னை விட என்னுடைய  பாட்டி தான் பியூட்டி மாதிரி இருக்க என்றான் இருவரும் இணைந்து சிரித்தார்கள் சரி டா வா நாம் வெளியே போலாம் இல்லை என்றால் உன் அம்மா கத்துவாள் என்றார் சரி என்று கூறிக்கொண்டு  தனது பாட்டியின் தோளில் கை போட்டு கொண்டு அவரை அழைத்துக் கொண்டு வந்தான்

பாண்டியம்மாள் தனது பேரனை அழைத்துக் கொண்டு வருகிறாரா இல்லை பேரன் பாண்டியம்மாளை அழைத்துக் கொண்டு வருகிறானா என்று தெரியாத அளவிற்கு வைத்துக் கொண்டு வந்தான் பிறகு அங்குள்ள பெண்மணிகள் என்ன  அம்மா நீங்கள் அவனை அழைத்து கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டு  போனீங்க ஆன பேரன் உங்களை அழைத்துக் கொண்டு வருகிறான் என்று கேட்டார்கள்

நான் என் பேரனை அழைத்து கொண்டு வந்தால் என்ன இல்லை என் பேரன் என்னை அழைத்து கொண்டு வந்தால் என்ன என் பேரன் வந்து விட்டான் அல்ல என்று கூறி அங்கு உள்ள பெண்மணிகளை பார்த்து முறைத்துவிட்டு மணப்பெண் இருக்கும் அறைக்கு சென்று அதாவது அவரது பேத்தியின் அறைக்குச் சென்றார்

அங்கு தன் பேத்தியுடன் இன்னும் முன்று வானரங்கள் இருப்பதை பார்த்துக் கொண்டே சென்றார் என்னடி உங்களுக்கெல்லாம் இங்கு வேலை என்று கேட்டார் அந்த மூவரும் வேறு யாரும் இல்லை பாண்டியம்மாளின் பாட்டியின் மகள் வீட்டு பேத்திகள் மூன்று பேரும் அங்கு மணப்பெண்ணாக இருப்பது பாண்டியம்மாளின் மகன் வீட்டு பேத்தி என்று கேட்டுக் கொண்டே சென்றனர்

எப்படி இருக்கா பாட்டி  உங்க பேத்தி என்று கேட்டவுடன் அவர் அவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு அவரது கண்ணில் இருக்கும் மை எடுத்து அவளின் காதோரம் வைத்து விட்டு என் பேத்திக்கு என்ன  டி குறைச்சல் எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவளை கட்டிக் கொள்ள எனது பேரன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்

அவரை பாண்டியம்மாள் பாட்டியை பார்த்து மற்ற மூன்று மகள் வைத்து பேத்திகளும் சரி நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டார்கள் நான் என் பேத்தியை நலங்கு வைக்க அழைத்து செல்ல வந்தேன் என்றார் அதுக்கு தான் நாங்க மூணு பேரும் இருக்கோமே நீ எதுக்கு வந்திருக்கு நீங்க மூணு பேரும் இருந்து பார்த்து லட்சணத்தை தான் நான் பார்த்தேன் என்றார்.

அவளை சுற்றி நின்று கொண்டு பேசி கொண்டு அவளை ஓட்டி கொண்டு இருகிறீகளே  என்றார் முவரும் அவரை பார்த்து முறைத்தவுடன் சரி  நீங்களே அழைத்து கொண்டு  வாருங்கள் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன வேலை என்று விட்டு முன்னே நடந்து சென்றார்  அப்போது முதலில் கேட்ட அங்கிருந்த பெண்கள்  மாப்பிள்ளை கூட்டி கொண்டு வரேனு போனிங்க மாப்பிள்ளை உங்களை கூட்டிட்டு வந்தான் இப்ப என்னாடா நா மணப்பெண்ணை கூப்பிட்டு வரேன்னு போயிட்டு வெறும் கையோட வரீங்க என்று கூறி சிரித்தார்கள்..

அவர் அங்கிருக்கும் பெண்களைப் பார்த்து முறைத்துவிட்டு நான் ஏண்டி கூட்டி வருவேன் என் பேத்திக்கு மூணு நாத்தனார் இருக்கிறார்கள் அவர்கள் அழைத்த வருவார்கள் அப்போது அந்த மூன்று பெண்களும் தனது வருங்கால அண்ணியை அழைத்துக் கொண்டு வந்து அங்க போடப்பட்டிருக்கும் மேடையில் தனது அண்ணனின் அருகில் இருக்கும் சேரில் உட்கார வைத்தார்கள்

இதழினி  அங்கு உட்கார்ந்தவுடன் உதிரன் இதழினியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான் அவன் இதழினியையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் அந்த மூன்று பெண்களும் டேய் அண்ணா இங்க பின்னாடி மூன்று தங்கச்சி இருக்கும்போது இப்படி இவளை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கியே தனியா இருக்கும்போது என்னென்ன பண்ணுவாய்..

அவள் உனக்கு தான் இன்னும் இரண்டு நாள் பொறு  அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி என்றார்கள் அவன் தனது மூன்று தங்கைகளையும் திரும்பி முறைத்து பார்த்துவிட்டு  அமைதியாக இருக்க மாட்டீங்களா என்றான் நீ விடும் ஜொள்ளில் இங்கு இருக்கும் மக்கள் எல்லாம் முழுகி விடுவார்கள் போலவே என்றால் கடைசி தங்கச்சி பகல் நிலா வாலு இரு உன் வாலை ஒட்ட நறுகிடுவேன் என்றான்

அவளும் தனது அண்ணனை முறைத்து பார்த்துவிட்டு பாட்டியை பார்த்து  இப்ப நழுங்க வைக்க நேரம் ஆகலையா என்று கேட்டாள் ஆமாம் டி நீங்க வர வரைக்கும் உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க என்று விட்டு பாண்டியம்மாவிற்கு அவர்கள் சொந்தத்தில் அவரைவிட மூத்ததாக இருக்கும் ஒரு சுமங்கலி பெண்மணியை அழைத்தார் அக்கா நீங்கள் வந்து நலங்கு வையுங்கள் என்று அவரும் சரி என்று கூறிவிட்டு  எழுந்து நின்று தனது புடவையை சரி செய்து கொண்டு முந்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு வந்து இதழினி உதிரன் இருவருக்கும் நழுங்க வைக்க வந்தார்

அப்பொழுது அவர் நழுங்க வைக்காமல் நின்றார் அந்த மூன்று வானரங்களும் ஏன் பாட்டி நின்னுட்டீங்க என்று கேட்டார்கள்  என்ன இப்படி பண்றீங்க முதலில் மாமன் நலங்கு வச்சி மாலை போட வேண்டாமா முதலில் இரண்டு வீட்டு மாமனையும் வர சொல்லுங்க என்றவுடன் பாண்டியம்மாள் ரத்தினவேல் என்று கத்தியவுடன் இதழினியின்  அப்பாவும் உதிரனின் தாய் மாமாவும் ஆன ரத்தினவேல் வேகமாக வந்தார்

என்னம்மா என்று கேட்டுக் கொண்டே டேய் வேலு வீட்டில் உள்ள அனைவரையும் வர சொல்லூடா நலங்கு வைக்க  என்றார் இரண்டு மாமனுங்களையும்  கூட்டிட்டு வந்தாச்சு என்றவுடன் அந்த மூன்று வானரங்களையும் சென்று அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தார்கள் பிறகு உதிரனுக்கு ரத்தினவேலும் இதழினிக்கு  உதிரனின்  தந்தை கந்தனும் மாலை அணிவித்தார்கள்

பிறகு அந்த பாட்டி இருவருக்கும் நலங்கு வைத்து கையில் வெத்தலை பாக்கு பணம் கொடுத்து நழுங்க வைத்து அவரது முதல் நலங்கை முடித்து வைத்தார் பிறகு பாண்டியம்மாள் வைத்தார் பிறகு ஊரில் உள்ள வரும் அனைவரும் வைத்த பிறகு வீட்டில் உள்ளவர்களும் வைத்தார்கள் அப்போது இதழினி அதுவரை தனது அண்ணனை காணவில்லை என்று பார்த்துக் கொண்டே இருந்தால் பிறகு என்னுடைய அண்ணன் எங்கே என்று பின்னாடி நீக்கும் மூன்று நாத்தனார்களையும் பார்த்து கேட்டால்

அந்த மூன்று வானரங்களும் இவளைப் பார்த்து சிரித்து விட்டு மாமா என்று கத்தினார்கள் பந்தி பரிமாறும் இடத்தை பார்த்து இந்த மூவரும் கத்தியை விட அவன் மூவரையும் முறைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான் இந்த மூணு வானரங்களும் ஒண்ணா சேர்ந்தா வீட்டையே இரண்டாக ஆக்கி ரணகள படுத்துகளே என்று எண்ணி விட்டு அவர்கள் மூவரையும் முறைத்துக் கொண்டு அங்கு இருக்கும் பாண்டியை நீ பார்த்துக் கொள்ளடா கொஞ்ச நேரம் என்று சொல்லிவிட்டு தனது வீட்டில் உள்ள அந்த  மூன்று வால் இல்லாத வானரங்களை முறைத்துக்  கொண்டே வந்தான்

அவன் வரும் அழகை மொத்த வீடும் திரும்பி ரசித்துப் பார்த்தது இப்படி தனது வீட்டின் தன்னுடன் வளர்ந்த தனது தங்கையின் திருமணத்திற்கும் தனது அத்தை மகனின் திருமணத்திற்கு ஓடி ஓடி வேலை செய்யும் இந்த அக மகிழன் தான் இந்த வீட்டின் ஆணிவேரே இப்பொழுது இந்த மொத்த குடும்பத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கும் ஆலமரமே இவன் தான்

இப்பொழுது இவன் அங்கு நலங்கு வைக்கும் இடத்திற்கு செல்லும் வேளையில் அங்கு என்னென்ன கூத்துகள் நடக்கும்..

அந்த மூன்று வாணரங்களும் என்ன என்ன செய்ய காத்து இருக்கிறார்கள்

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன் .

❣️தனிமையின் காதலி ❣️

கதையின் நகர்வு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் முதல்முறையாக ஒரு கூட்டு குடும்ப கதையை எழுத விரும்பி ஆரம்பித்திருக்கிறேன்.

என்னுடனே பயணித்து நீங்களும் இந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக வாழ விரும்புகிறேன்

வாசக நெஞ்சங்களான நீங்கள் தான் என் கதையை படித்துவிட்டு உங்களது நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்..

இந்த கதை சிறந்த எழுத்தாளர் விருதுகள் ஆறு போட்டிக்கான கதை

மிக்க நன்றி🙏

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்