Loading

 

வணக்கம் தங்கம்ஸ்.

 

மீண்டும் வந்துட்டேன்.

 

மீண்டும் உங்களின் ” வாத்தியார் வீட்டு மருமகள் ” கதையின் பாகம் 2 இப்பொது தயாராகி வரபோகிறது.

முதல் பாகத்தில் கொடுத்த வரவேற்பால் பாகம் 2 எழுதலாமென்று இருக்குறேன்.

 முதல் பாகத்தின் வாரிசை வைத்து தான் இரண்டாம் பாகம் கதை எழுத போகிறோம்.

ரம்யா கெளதம் – அஸ்வத், (விசாலாட்சி விஷால் )இரட்டையர்கள்.

 

வெண்ணிலா ராகுல் ராஜ் – ரஞ்சனா, ஆதித்யா, லோகேஸ்வரி.

 

இளங்கதிர் தேன்மொழி – அர்ஜுன், மகிழினி

 

ஆகாஷ் வீரேந்திரசிங் ரோஜா –   சந்தோஷ், இலக்கியா

 

விக்ரம் விஷாலி – அவிஷ்கா, துருவன்.

 

இவங்களை வைத்து தான் கதை ஜோரா போகப்போகுது.

***********************

மதுரையிலுள்ள அந்த பிரபல திருமண மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்தது.

 

எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள் மட்டுமே தென்ப்பட பட்டுபாவாடையை கையில் பிடித்து கொண்டு அந்த கூட்டத்திலும் தனது பிடிவாதத்தை விட்டு கொடுக்காமல் அதை செய்தே தீருவேன் என்று கண்ணீரோடு தந்தையின் கையை பிடித்து கொண்டே கண்ணீர் விட்டாள்  தேன்மொழி கதிரின் இளைய புத்திரி பன்னிரெண்டு அகவையான மகிழினி.

 

” அப்பா என் கையை வுடு  அந்த ஆதிய நான் இன்னைக்கி சும்மா வுட போறது இல்லை, அவன் என் பாவாடை சட்டையை புடிச்சி இழுத்து இழுத்து விளையாடறான்” என்று தனது தந்தை கதிரிடம் ஆதித்யாவை பற்றி புகார் வாசிக்க, அவளின் தந்தையோ, ” அச்சோ அப்படிலாம் சொல்ல கூடாது டா தங்கம், ஆதி உன்னைய விட பெரியவன்ல அதனால அவனை ஒன் டைம் மன்னிச்சு விட்டுட்டலாம் அவனுக்கு இன்னக்கி பொறந்தநாளு அதனால அடிக்க கூடாது அவனை ” என்று கூறியதும்,

 

” போப்பா உனக்கு என்மேல பாசமே இல்லை, எப்ப பார்த்தாலும் அவனுக்கே வக்காலத்து வாங்குற நீ, பொறந்தநாளு பையனை அடிச்சா என்னவாம், உடம்புல ரத்தம் வருமாம் என்ன?…. அவன் மண்டையை இன்னக்கி உடைக்கல நான் மகிழு இல்லை, இரு நிலா அத்தை கிட்ட போயி அவனை போட்டு கொடுக்கறேன் ” என்றவுடன் அவனின் கரத்தில் இருந்து தப்பித்து நேராக மேடையில் வேலைகள் பார்த்துக்கொண்டு இருந்த நிலாவிடம் சென்றாள்.

 

” அப்படியே அவ ஆத்தா மாதிரியே புத்தி என்ன புடிவாதம் புடிக்கிது பாரு, அச்சோ என் மண்டையை அவ ஆத்தாக்காரி உடைச்ச மாதிரி என் மருமவன் மண்டையை உடைச்சிட போறா, எனக்கு இருக்கறது ஒரே மருமவன் தான் ” என்று வடிவேல் பாஷையில் புலம்ப, இது அந்த வழியாக பழத்தட்டை எடுத்துக்கொண்டு சென்ற அவனவளின் செவியில் விழ, ” என்னா அத்தான் ஏதோ என்னைய போல என் மவளும் சொன்னிங்களா இப்ப, யாரு மண்டையை நான் உடைச்சேன் இப்ப? ” என்று சரியாய் கேட்க, அவனோ திரு திருவென முழித்து, ” அதுவந்து தேனும்மா நானு நிலா தங்கச்சியை சொன்னேன் நீ போ போயி வேலையை பாரு, நாழி ஆவுதுல ” என்றதும் தப்பித்தோம் பிழைத்தோமென்று அங்கிருந்து செல்ல, அவனின் மனையாளின் இதழ்களோ புன்னகையில் விரித்தது.

 

” அத்தே உஉஉஉஉஉ உஉஉஉஉஉ அக்ஷ்” என்று அழுது கொண்டே அவளின் புடவை முந்தானையை பிடித்து இழுக்க, அதில் அவள் பக்கம் திரும்பி, ” என்னடா என் மகிழு தங்கம், ஏன் அழறீங்க அச்சோ மேக்கப்லாம் காணாம போயிடுச்சு  ” என்றதும், ” ஹான் நீ பெத்து வச்சிருக்கியே ஒரு சேட்டை புடிச்ச குரங்கு அது என் பாவாடையை புடிச்சி இழுத்துட்டே இருக்கு, வா வந்து என்னானு கேளு, அவனால என் மேக்கப்பு எல்லாம் போயிடுச்சு, அம்மாகிட்ட மருவடியும் போயி மேக்கப்பு போட்டு வுட சொன்னா அது என்னைய அடிக்கும், அதனால நீயே எனக்கு மேக்கப்பு போட்டு வுடு ” என்று நீண்ட விளக்கம் அளித்த மகிழை பார்த்து, ” அடியாத்தி என்ன வாயி பாரு, என் பொண்ணு கூட இப்படி பேச மாட்டாளே ” என்றதும்,  ” இந்தா அத்தே இப்ப நீ உன் மவனை கூட்டு அடிக்கல, பொறவு நான் ரகு மாமன் கிட்ட போயி சொல்லிடுவேன், அவனை கூட்டு அடிக்க சொன்னா நீ என்ன என் வாயை பார்த்து என்னா வாயின்னு கேட்கற? ” என்று விடாமல் அவளிடம் கேள்வி கேட்க, ” இந்தா அதோ போவுது பாரு நீ பெத்த குரங்கு புடிச்சி அடி அப்ப தான் நான் இங்கன இருந்து போவேன், இல்லை ரகு மாமன் கிட்ட சொல்லி அவனை அடிக்க சொல்லுவேன் “என்று அவளிடம் மீண்டும் அழுதுக்கொண்டே கூற, வெண்ணிலாவுக்கு தான்  ஐயோவென்று இருந்தது.

 

” சரி சரி அழாத நானே கேட்குறேன், பொறவு உன் ரகு மாமா கிட்டலாம் ஆதியை மாட்டி வுட கூடாது, என்ன சரியா ” என்றது மகிழினியோ சரியென மண்டையை ஆட்டி வைத்துவிட்டு, உள்ளுக்குள் ‘ இருடா உன்னைய உன் அப்பா கிட்ட சொல்லி அடிவாங்க வைக்கல என் பேரு மகிழு இல்லை ‘…

 

” இப்பவே அவனை கூட்டு அடி அத்தை ” என்றதும்,” சரி இரு டி மருமவளே ” என்று கூட்டத்தில் ஆதியை தேடினாள்.

 

ஆதியோ அர்ஜுனோடு விளையாடி கொண்டு இருக்க, மகிழினியோ, ” அத்தை அவன் அதோ அர்ஜு அண்ணா கூட விளையாடறான் புடிச்சி நல்லா பத்து அடி அடிச்சுட்டு வா, போ அத்தை, அவன் மறுபடியும் எங்கன ஓடி ஒளிஞ்சிக்க போறான் ” என்று அவனை அடிவாங்க வைப்பதிலே குறியாக இருக்க, வெண்ணிலாவோ,’ அடியேய் தேனு நீ இவளை பெத்தியா செய்ஞ்சியா டி, இப்படி என் கிட்டையே என் புள்ளைய அடிக்க சொல்றா என்னா வாயி, தனியா இருக்கு டி மவளே உனக்கு, பிரண்ட்ன்னு கூட பார்க்கமாட்டேன் ” என்று மனதுக்குள் தனது தோழியை வறுதெடுத்து கொண்டு ஆதி இருக்குமிடத்துக்கு வந்தாள் வெண்ணிலா.

 

” டேய் ஆதி கண்ணா, எதுக்கு டா மகிழு பாவாடையை புடிச்சி இழுத்து விளையாடுற, அவ அழுவுறா பாரு ” என்றதும்,

 

” அம்மா அது பொய்யி புளுகுது, என்னைய அடி வாங்க வைக்கிறதுலே இருக்கும், டேய் அர்ஜு வா டா போயி பிரியாணி சாப்பிட்டு வருவோம் ” என்று சமையல் கூடத்தை நோக்கி செல்ல, ” ஆதி நில்லு எங்கே போற ” என்று குரல் வந்த திசையை பார்த்தான் அவன்.

 

அங்கு அவனின் தந்தை ராகுல் நின்று இருந்தான்.

 

” சாப்பிட போறேன் ப்பா, பிரியாணி வேற செம வாசனையா வருது, அதான் ” என்றவனின் முதுகில் ஒரு அடியை வைத்து, ” கூருக்கெட்ட கூமூட்ட, முதல்ல கேக் வெட்டிட்டு பொறவு சாப்பிட போ டா வா எல்லாரும் வந்துட்டாங்க பாரு ” என்றதும், ” போப்பா எனக்கு பசி எடுக்குது சாப்பிட்டு வந்து கேக் கட் பண்றேன் ” என்றவனின் கையை இறுக்க பிடித்து வலுக்கட்டமாக இழுத்து கொண்டு மேடைக்கு வந்தான் ராகுல்.

 

தந்தையின் இறுக்கமான பிடியில் தப்பித்து ஓட முடியாமல் வலியில் அவனின் கண்கள் கலங்கியது.

 

” அப்பா ப்ளீஸ் என்னைப் விடுங்கப்பா எனக்கு கை வலிக்குது ” என்று கெஞ்சும் குரலில் கூறும்  மகனை விடாமல் இழுத்து கொண்டே சென்றான் ராகுல்.

 

கலங்கிய  கண்களோடு தந்தையின் பின்னாலே சென்றவனை கண்ட மகிழின் முகத்தில் அத்தனை புன்னகை..

 

பெயரனின் கலங்கிய கண்களுக்கு காரணமான மகனை முறைத்து பார்த்துக்கொண்டே அருகில் வந்தார் நம் வாத்தியார்.

 

”  ஏண்டா அவன் அழுவுறான் பொறந்த நாள் அதுவுமா அவன அழ வைப்ப ” என்று மகனிடம் கேட்க, ராகுலோ தந்தையை சிறு முறைப்போடு கடந்து மேடைக்கு வந்தான்.

 

” ஆதி கீப் குய்ட், இன்னைக்கு உனக்கு பர்த்டே சோ நீ பண்ண சேட்டைக்கு இன்னும் நான் உன்னை அடிக்காம இருக்கேன். ஏன் டா நீ அடங்கவே மாட்டியா டா பங்ஷன் முடிஞ்சதும் வீட்டுக்கு வா உனக்கு இருக்குது, ” என்று மகனை கேக் இருக்கும் மேஜையின் அருகில் நிற்க வைத்து, கண்களால் மனைவியை தேடினான்.

 

அவனின் மனைவியோ மகிழினியிடம் இருந்து தப்பித்து வந்தவர்களை வரவேற்று கொண்டு இருக்க, மனைவியின் கைபேசிக்கு அழைப்பு விடுவித்தான்.

 

இடுப்பில் சொருகி வைத்திருந்த கைபேசி அதிர, அதை எடுத்து யார் என்று பார்க்க தன்னவன் தான் அழைக்கிறான்  என்று தெரிந்தும் அவனை மண்டபத்தில் சுற்றுமுற்றும் தேடினாள்..

 

 கடைசியில் அவளின் பார்வை மணமேடைக்கு செல்ல அங்கு ராகுலோ அவளை இங்கே வா என்று சைகையால் அழைக்க அவளும் அருகே சென்றாள்.

 

” என்ன மாமா ஏன் கூப்பிடுறீங்க? ” என்று கேட்டு  பார்வை அவனின் அருகில் நின்றிருந்த மகனின் மீது பதித்தது.

 

கலங்கிய கண்களோடு நின்றிருக்கும் மகனை பரிதாபமாகப் பார்த்து என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டாள் தாயானவள். 

 

 மனைவி பார்வை செல்லும் இடத்தில் ராகுல் கவனித்துக் கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளிடம் ” சீக்கிரமா  வா மணி ஆயிடுச்சு அவனுக்கு கேக் கேட்கணும்” என்று மனைவி கரத்தை பிடித்து ஆதிநிற்கும்  இடத்திற்கு வந்தான் ..

 

 மகனின் அருகில் வந்த தாயானவள் அவனின் தலை கோதி கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து ” ஹாப்பி பர்த்டே டூ யூ மை ஸ்வீட் ஹார்ட் ஆதித்யா ” என்று கூறியதும், தாய் கொடுத்த முத்தத்தை ஏற்று அவனின் உள்ளம் ஆனந்தம் கொண்டது…

 

 தாயையும் மகனையும் முறைத்து  பார்த்துக்கொண்டிருந்தார் ராகுல்..

 

 தன்னவன் முறைக்கிறான்  எனத் தெரிந்தும் அவனை  கண்டுகொள்ளாமல் தேனுகதிர் மகிழினி அர்ஜுன் ரஞ்சனா வாத்தியார் அவரின் துணைவி மீனாட்சி ஆகியோர் மேடைக்கு வந்ததும் தனது பெற்றோரின் கரத்தைப் பிடித்து அழகாக கேக்கை வெட்டினான் ஆதித்யா.

 

 ராகுவிற்கு மகன் செய்த சேட்டை கண்டு மிகவும் கோபம் தான் வந்தது ஆனால் அவன் உள்ளத்தில் எனது மகன் ஆதித்யா  என்கின்ற கர்வம் மேலோங்கியது ஏனென்றால் ஆதித்யா பிறந்த பிறகுதான் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வர,  அவனுக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது தற்போது விடுமுறையில் இருக்கும் ராகுல், குடும்பத்தோடு நேரம் செலவழிப்பதாக இந்தியா வந்தவன் கையோடு மகனின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு நாளை இரவே சிங்கப்பூர் கிளம்பிவிட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான்  ..

 

 கேக் வெட்டிய பிறகு ஆதித்யாவின்  கரத்தால் குடும்பத்தினர் அனைவருக்கும் கேக் ஊட்டிய பிறகு மகிழினியின் பக்கம் வந்ததும்  அவளை அனலாக முறைத்து பார்த்து அவளின் கரத்தில்  கேக்கை வைத்துவிட்டு அவளை முறைத்து”கருவாச்சி” என அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக காதருகே சென்று கூறியவன் அவளைப் பார்த்து கேலியான ஒரு சிரித்து விட்டு தாயோடு அருகில் வந்து நின்று கொண்டான்..

 

 அவனின் கருவாச்சி என்ற சொல்லில் அழுகையே வந்தது அவளுக்கு.அருகில் நின்றிருந்த தந்தை கதிரை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

 பிறந்தநாள் சிறப்பாக முடிந்து விட்டு அனைவரும் கொடுத்த பரிசை வாங்கியவனின் வயிறோ மிகவும் பசியில் இருந்தது.  தாயிடம் திரும்பியவன் ” பசி எடுக்குதும்மா நான் போயிட்டு சாப்பிட்டு வரேன் ப்ளீஸ்மா அப்பாகிட்ட நீ கொஞ்சம் சொல்லுறியா ” என்று கெஞ்சும் கண்களால் கூறும் மகனை கண்டு சிரித்தாள் நிலா.

 

” இருடா ஆதி நாம்ம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம் ” என்றதும் ” ம்மா எனக்கு இப்போவே பசி எடுக்குதுமா அர்ஜு கூட்டிட்டு போறேன் நீங்க பொறாமையா வாங்கம்மா” என்றான் அவன்.

 

 மகனின் அவசரத்தை  கண்டு “டேய் ஆதி பையா  பிரியாணி சாப்பிடணும் தானே உனக்கு ஆசையா இருக்கு, சரி இரு நானும் வரேன் ” என்றவாறு கணவரிடம் கூறிவிட்டு மகிழினி  அர்ஜுன் ரஞ்சனா ஆகியோரை அழைத்துக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு சென்றாள்…

 

ஒருவழியாக பிறந்தநாள் விழா நல்லபடியாக முடித்து அனைவரும் வீட்டுக்குத் திரும்ப மணியோ பத்தாயிற்றது.வீட்டுக்கு வந்தவன் நேராக  அவனின் மகன் உறங்கும் அறைக்கு சென்றான். ஆதியோ அளவுக்கதிகமாக பிரியாணி உண்ட  மயக்கத்திலே  உறக்கத்தில் இருக்க,அவனின்  முதுகில் ஒன்று போட்டான் தந்தையானவன்.

 

” ஹா அம்மா  வலிக்குது ” என்று அழுதுக்கொண்டே உறக்கத்தை விட்டு எழுந்து அமர அவனின் விழிகளில் தென்பட்டது என்னவோ  கோபமாக நின்றிருந்த அவனின் தந்தை ராகுல் தான்.

 

 தந்தையின் முகத்தை கண்டு அச்சம் கொண்ட அந்த பதினேழு வயது சிறுவனின் முகமோ வியர்வால் நனைந்தது..

” டேய் ஆதி என்னடா நினைச்சுட்டு இருக்க நீ உன் மனசுல, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் கொஞ்சம் கூட பெரியவங்க பேச்சை  கேட்கிறதே கிடையாது, ஏண்டா அந்த அங்கிள் பிடிச்சு தள்ளிவிட்ட பாவம்டா, பசியோடு வந்திருப்பாங்க உன்னை பார்த்தது சாப்பாடு கேட்டு இருப்பாங்க ஆனா நீ அவங்க  பிச்சைக்காரன் நினைச்சு  வெளியே தள்ளிவிட்டு இருக்கிற,  உனக்கு எவ்வளவு  நெஞ்சழுத்தம் இருக்கும், அவங்க குணத்தில்  பிச்சைக்காரர் இல்லடா மனுஷங்க. இனிமே இந்த இந்தியா பக்கம் வரவே கூடாது டா நீ, பிளஸ் டூ முடிச்சதும் உன்னை  அமெரிக்காக்கு பிலைட் ஏத்தி அனுப்புறேன்,அங்க போயிட்டு டாக்டர் படிச்சிட்டு அங்கேயே செட்டில் ஆகுற வழியப்பாரு ” என்று மகனை திட்டிவிட்டு வெளியே வர மொத்த குடும்பமும் ராகுலில் வார்த்தையில் சினம் கொண்டது.

வாத்தியாரோ நிலாவிடம் திரும்பி, ” மருமவளே என் பேரனை என்ன எந்த இடத்தில் படிக்க வைக்கிறது எப்படி படிக்க வைக்கறதுனு இந்த வாத்தியாருக்கு தெரியும்   யாரும் அக்கறைபட்டு, அவசரப்பட்டு என் பெரனை  அடிச்சு கொடுமை படுத்த வேண்டாம். அவன் எந்த அமெரிக்காவுக்கும் பேரிக்காவுக்கும் போவ மாட்டான், சொல்லி வை ம்மா மருமவளே உன் புருஷன் கிட்ட “. எனவும் அழுது  கொண்டு இருந்த ஆதியின் கையை பிடித்து அழைத்து சென்றார் வாத்தியார்.

 கலிபோர்னியா அமெரிக்கா.

 

 நள்ளிரவு நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பெரும் அதிர்வுடன் கேட்டது அந்த காரின் மின்னல் சத்தம்…

 

 வீட்டின் முன்னால் வந்து நின்ற காரை கண்டவள்,அதிலிருந்து இறங்கியவனை ஓடி சென்று நாலடி அரைய வேண்டும் என்று இருந்தது மெர்லினுக்கு…

 

 ஆனால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவனருகே சென்றாள்.

 

” ஜெகா வாட் இஸ் திஸ் டெய்லி குடிச்சுட்டு தான் வருவியா ஏன் இப்படி பண்ற உன்னை நம்பி வந்த என் லைஃப் என்ன ஆகிறது ” என்று கூறிய மனைவியை கண்டு கொள்ளாமல் வீட்டின் உள்ளே சென்றான்..

 

 அங்கே கூடத்தில் ஷோபாவில்  கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருந்த அவனின் நண்பன் கௌதமை கூட   கண்டுகொள்ளாமல் நேராக மாடிக்கு செல்ல  முயற்சிக்க, ” ஸ்டாப் இட் ஜெகன் ” என்றவன் அவனை நோக்கி சென்ற,  கௌதமின்  ஐந்து விரல் தடம் ஜெகனின்  கன்னத்தை பதம் பார்த்தது.

 

 இது தினமும் நடப்பது தானே என  தினம் அடிக்கும் நண்பனை கூட நிமிர்ந்து பார்க்காமல்  அவன் ஏன் என்னை அடித்தான் என்று இதுவரைக்கும் யாரிடமும் கேட்காமல் நேராக அறைக்கு சென்றவன்  சுவற்றில் மாலையோடு இருக்கும் அவன் காதல் மனைவி பிரியாவை பார்த்து உள்ளுக்குள்ளே கண்ணீர் வடித்தான்….

 

” சாரி பிரியா சாரி சாரி சாரி விஷ்வா உன்னை என்னால மறக்கவே முடியல. அந்த மெர்லின் யாரு என்கிட்ட  வந்து உன்னுடைய இடத்தில் இருக்கிறது, உன்னுடைய இடத்தில் வேறு எந்த பொண்ணையும் என்னால் நினைச்சி கூட பார்க்க முடியாது, ஐ அம் சோ சாரி லவ் யூ டி மை டியர் , எல்லாம் அந்த கௌதம சொல்லணும் கல்யாணமே பண்ணிக்காம இருந்த  என்னை கட்டாயப்படுத்தி அவன் செத்துடுவான்ன்னு பிளாக்மெயில் பண்ணி இந்த மெர்லின தலையில கட்டி வெச்சுட்டான். இப்போதான் எல்லாரும் நிம்மதியா இருக்கிறாங்க.  ஏன் என்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரமா போன உனக்காக நான் இங்கே எவ்வளவு தவிச்சிட்டு இருக்கேன் தெரியுமா தினமும் உன்னையே தான் நினைச்சுட்டு இருக்கேன். விஷ்வா நீ போன இடத்துக்கு என்னையும் கூட்டிட்டு   போயிடு டி ” என்று கதறிய நண்பனை கண்டு உள்ளுக்குள் மிகவும் நொறுங்கி தான் போனான் கௌதம்..

 

 மெர்லினோ தினமும் நடப்பதுதானே என்று அதை பெரிது படுத்தாமல் கையோடு கொண்டுவந்த இரவு உணவை ஜெகனின் அருகில்  எடுத்துவைக்க அவனோ மெர்லினை ஏறிட்டுப் பார்க்காமல், தட்டில் இருந்த உணவை உண்டு விட்டு அமைதியாக படுத்து கொண்டான்.

 

ஆனால் படுத்தவனுக்கு உறக்கம் தான் வரவில்லை. இருபது வருடங்கள் முன்னால் இறந்த அவனின் காதல் மனைவி விஷ்வாவை நினைத்து கண்ணீரோடு விழிகளை திறந்து இருந்தவன் விடியலில் தான் உறங்கி போனான்.

 

சில வருடங்களுக்கு பிறகு.

அடுத்த எபில பார்க்கலாம் டாட்டா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்