Loading

 

“எதற்காக என் பின்னே வந்து 

கொண்டிருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் ?”வார்த்தைகள் கோபமாக வெளியே வரவில்லை தான்’ ஆனாலும் அவனுடைய விழிகள் வெறுப்பையும் கோபத்தையும் உமிழ்ந்தது. அந்த கண்களில் தெரியும் அதீத கோபத்தையும் வெறுப்பையும் பெண்ணும் உணர்ந்துதான் இருந்தாள்.

 

உங்ககிட்ட ஒன்னு கேட்க வேண்டும்.

 

என்ன கேட்க வேண்டும்? சிடு ….. சிடுத்தான் ஆடவன்.

 

அவனுடைய கைகள் இரண்டும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்க தலையை மட்டும் அவ்வப்பொழுது திருப்பி அவளிடம் பேசிவிட்டு அடுத்த நொடியே தலையையும் திருப்பிக் கொண்டு வேலையில் கவனம் பதிக்க ஆரம்பித்து இருந்தான்.

 

அவனுடைய செயல் பேதைக்கு எரிச்சல் அளித்தாலும் அவனிடம் இப்பொழுது தான் கேட்க வேண்டியதை கேட்க முடியாமல் தயங்கி படியே நின்று கொண்டிருந்தாள். “இவனிடம் பேசுவதற்கு பல நாட்களுக்கு முன்பே பேசி பயிற்சி கொண்டிருக்க வேண்டும் போல? எப்படித்தான் இப்படி எல்லாம் இவனால் மட்டும் பேச முடிகிறதோ?”

 

“என்ன வேண்டும்?” தலையை திருப்பாமல் இந்த முறை சற்று குரல் உயர்த்தி கேட்க,

 

அது….. அது வந்து

 

அவள் பேசி முடிக்கும் முன்னரே “எது வந்து? என்னவென்று ஒழுங்காக சொல்லிவிட்டு கிளம்பு. எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நீ யோசித்து கொண்டு தான் பேசுவாய் என்றால்? வெளியே சென்று பொறுமையாக யோசித்து விட்டு வந்து பேசு. நீ பேசு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது”.

 

இவன் என்ன மனிதனா? இல்லை கோபத்தாய்க்கு பிறந்த நெருப்பு முட்டையா? நினைத்தவள் சற்று தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை காட்டி ‘அங்கிருந்து எனக்கு நான்கு முட்டைகளை எடுத்து தருகிறீர்களா?’

 

“அது என்ன முட்டை?” அவள் கையை நீட்டிய பக்கம் தலையை திருப்பி பார்த்தவன் அவளை முறைக்க ஆரம்பித்திருந்தான்.

 

அவன் முறைப்பை உணர்ந்தவள் “அது வந்து எனக்கு சின்ன வயதில் இருந்து வளர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான்” தயங்கியபடியே கூற,

 

ஏன் உனக்கு இந்த கோழி முட்டை வாங்கி வைத்து கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் வராதா? பாம்பு முட்டை எடுத்து தான் பாம்பு வளர்க்க வேண்டும் என்ற ஆசை வருதோ? ஏன் இந்த ஊரில் உனக்கு வேற யாருமே கிடைக்கவில்லையா? என்னைப் போய் அந்த பாம்பு புற்றில் கையை விட சொல்கிறாய்? உனக்கு வேண்டுமென்றால் நீ போய் எடுத்துக் கொள். பாம்பு குட்டியை வளர்க்க வேண்டுமாம்! இன்னொரு முறை இந்த பக்கம் வராதே! பைத்தியம்’ திட்டிவிட்டு மீண்டும் தன்னுடைய வேலையில் கவனத்தை பதிக்க,

 

அவன் பாம்பு முட்டையை எடுத்து தர மாட்டேன் என்று கூறியதில் முகம் வாடியவள் அந்த புற்றையே பார்த்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
1
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment