Loading

அத்தியாயம் 8

 

அகல்யாவைத் தேடி  சென்றாள்.. அவள்  எங்கேயும்  இல்ல,..  கல்லூரிக்கு வர வில்லை.. அதனால் மெர்லினா சோகத்தில்  தனியாக அமர்ந்திருக்க,..சாதனாவும்  ப்ரீத்தியும் மெர்லினாவைப் பார்த்து அவள்  தனியாக தான் அமர்ந்திருக்கிறாள்… அவளை  இன்னும்  குழப்பி விட்டால் கண்டிப்பாக அகல்யாவை வெறுத்து விடுவாள்…

 

சாதனாவும்,ப்ரீத்தியும் அருகில் சென்று,அகல்யா இரு  நாட்களாக  கல்லூரிக்கு வரவில்லை…இன்னிக்கு வரவும்  மாட்டாள்.. அவள்  பாரின்  போகிறதுக்கு சில ஏற்பாடுகள்  பண்ணிட்டு இருக்கிறாள்..

 

உனக்கு  தெரிந்தால்  நீயும்  பாரினுக்கு வரனும் என ஆசைப்படுவாய்.. அதனால்  அகல்யா உன்னிடம் சொல்லவே இல்ல.  .என்று குழப்பி விட்டு சென்றார்கள்..

 

மெர்லினாவுக்குத் தன்னுடைய அகல்யாவின்  மேல்  உள்ள நம்பிக்கையை இழந்தாள்… மீண்டும் ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தாள்.. . 

 

ஆனால் அகல்யா  வேறோரு  விஷயமாக தான்  சென்றிருக்கிறாள் என்பது மெர்லினாவுக்குத் தெரியாமல் போய்  விட்டது… 

 

அகல்யா, எப்போதும் போல  மெர்லினாவைப் பார்க்க வந்தாள்.. அப்போது  கோபமாக இருந்த மெர்லினா,.. நீ   ஒரு  நம்பிக்கை துரோகி.. இனிமேல்  என்னிடம் பேசாதே.. எங்கிட்ட  ஒரு  உண்மையை மறைச்சுட்டியே பேசாதே அகல்யா.. 

 

இரு  நாட்களாக, எங்க  போன.. நேற்று  ஏன்  வரவில்லை… உனக்கு பாரின் போகிறதுக்கு வாய்ப்பு கிடைத்த சந்தோஷமான விஷயத்தை  என்னிடம்  ஏன் சொல்ல வில்லை..உனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை விட சந்தோஷப்படுவது நானாக தான்  இருப்பேன்… 

 

மெர்லினா அது  வந்து.  நீ  கொஞ்சம்  தனியாக வா… உங்கிட்ட  எல்லாத்தையும்  சொல்றேன்..வேண்டாம்.. நீ  எதுவுமே சொல்ல வேண்டாம்.. உன் மேல  நம்பிக்கை வைச்சதுக்கு.. எனக்கு நல்லா பாடம்  கத்துக் கொடுத்துட்ட…. . இனி உனக்கும்  எனக்கும் எந்த ஒரு  உறவு இல்லை.. இன்று  முதல்  நீ யாரோ.. நான்  யாரோ.. என  கோபத்தோடு பட பட பேசி விட்டு அகல்யா சொல்ல வருவதை கேட்காமலும்,அவளது கையைத் தட்டி விட்டு சென்று  விட்டாள்… 

 

இறுதியாக சாதனாவும், ப்ரீத்தியும் அவளை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டு சென்றார்கள்… 

 

அகல்யாவுக்கு சாதனாவும், ப்ரீத்தியும் சிரித்ததைப் பார்த்து சந்தேகம் ஏற்பட்டது.. இவுக தான் நான்  இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி அவளை நல்லா  குழப்பி விட்டுருக்காங்க,,.. நம்ம  மெர்லினாவுக்கு எங்க போச்சு புத்தி… இவங்க சொல்றத  எப்படி நம்பினால்.. அகல்யா அப்படி செய்தால் ஏதாவது காரணம் இருக்கும் என்று நம்பிக்கையோடு மெர்லினா சொல்லியிருக்கனும்.. 

 

ச்சே!.. மெர்லினா எம்  மேல  உள்ள நம்பிக்கையை இழந்துட்டாள்… அதான்  நான்  என்ன  சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளவே  மாட்டிக்காளே… அவளுக்காக தான்  நானே சென்னையில்  பல்கலைகழகத்துக்குச் சென்று  வந்தேன்… 

 

அவளிடம் சொன்னால், நீ  போக வேண்டாம் என்றுசொல்லி,  ஏதாவது பேசி பாரினுக்குப் போக வச்சுடுவா.. அதனால் தான் அங்க போய்  சார்கிட்ட எல்லாரிடமும் கூறிவிட்டு வந்தேன்… எப்படியாவது மெர்லினாவை தனியாக சந்தித்து பேசியே ஆகனும் என்ற முடிவோடு இருந்தாள்… 

 

அகல்யா மறுநாள் மெர்லினாவைச் சந்தித்து நடந்த  விபரத்தைச் சொல்வதற்காக சென்றாள்.. ஆனால்  ஹாஸ்டலில் கூட அவங்க இருவரும் அருகிலேயே இருந்தார்கள்… 

 

மெர்லினாவை சந்திக்க வந்த அகல்யாவை அவளிடம் பேச விடாமல் தடுத்தனர்… அகல்யா அவங்க இருவரையும் சத்தம் போட்டாள்… ஒழுங்காக ரெண்டு பேரும்  தள்ளி போங்க இல்லையெனில் நல்லா திட்டி விட்டுருவேன் என சத்தம்  போட.. 

 

கோபமாக வந்த மெர்லினா, முதலில் நீ  இங்கிருந்து போ,.. உன்  முகத்தைப் பார்த்தாலே  எரிச்சலாக உள்ளது.. இவங்க ரெண்டு பேரும்  என்னுடன் தான்  இருப்பார்கள்..அவங்கள திட்டுவதற்கு எந்தவொரு  அதிகாரமும்  இல்லை என்று  அவளை  வெளியே தள்ளி கதவைச் சாத்தினாள்..

 

அகல்யா மெர்லினா இப்படி நடந்துகிட்டதை நினைச்சு வருத்தமடைந்தாள்… பிறகு ஒவ்வொரு நாள்களும் அகல்யாவைப் பார்த்து பேசாமல்  சென்றாள்… வாலிபால்  போட்டிகள்  பலமுறை வந்தது.. அதில் அகல்யாவுடன் கலந்து கொள்ள விருப்பமில்லை  என்று  சொல்லி விட்டாள்… 

 

வருணிகாவும்  சொல்லி முடித்தாள்… 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்