Loading

  • தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய எனது கருத்துகள்- 2023

தமிழ் உயிர் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். உயிர் எழுத்துகளின் வரி வடிவங்களைச் சீராக்க வேண்டும். அப்போதுதான் அவை இனிவரும் தலைமுறையினருக்கு எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கும்.

தமிழில் மொத்தம் 12 உயிர் எழுத்துகள் உண்டு. அவையாவன:

அ,ஆ, இ,ஈ,உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றுள் “ஈ” யையும் “ஊ” வையும் “ஒள”வையும் மாற்ற வேண்டும்.

——————————————————————————-

1)

“இ” னாவுக்கு நெடிலான “ஈ” யன்னாவை

என்று மாற்றினால் இயல்பான நெடிலாக இருக்கும்.

காரணம்:

அ- ஆ , எ- ஏ, ஒ- ஓ போல “இ”யும் ஒத்த வடிவமாக இருக்க வேண்டும். மாத்திரை அளவு மட்டுமே வேறுபட வேண்டும். அவ்வாறு வந்தால் தேவையற்ற குழப்பங்கள் இரா.

——————————————————————————-

2)

“உ” னாவுக்கு நெடிலான “ஊ” வன்னாவை

என்று மாற்றினால் இயல்பான நெடிலாக இருக்கும். தனியாக “ள”(கொம்புக்கால்) போன்ற எழுத்துகள் தேவையில்லை.

காரணம்:

முதலெழுத்துகளான உயிரெழுத்துகள் எந்தக் கூட்டெழுத்தும் இல்லாது தனித்து இருத்தலே சிறப்பு. அதுவே உயிரின் தன்மை. உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்து போல உள்ளதால் மேலே காட்டிய நெடில் நல்லதொரு

மாற்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

——————————————————————————-

3)

“ஒள”காரத்தை

என்று மாற்றினால் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காரணம்:

உயிரெழுத்தானது இரண்டு தனித்தனி எழுத்துகளாக இருப்பதால் உச்சரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டு:

(ஒளவையார் – ஒ,ளவையார்)

என்று சிலர் வாசிக்க வாய்ப்பு உள்ளது. கொம்புக்கால்(ள) ஆனது “ள”கரம் போலவே இருப்பதனால் குழப்பம் ஏற்படுகிறது.

ஆகையால், மேலே காட்டியது போல் ஒரே வடிவமாக மாற்றிவிட்டால் குழப்பம் இராது.

——————————————————————————-

ஒளகார உயிர்மெய் வரிசை:

ஒளகாரத்தை உயிர்மெய்யாய் மாற்றுவதில் சிறு குழப்பம் இருக்கிறது.

  • ள்+எ= ளெ (குறில் – ஒற்றைக்கொம்பு)
  • ள்+ஏ= ளே ( நெடில் – இரட்டைக்கொம்பு)
  • ள்+ஐ=ளை( ஒரே நெடில் – இணைக்கொம்பு)
  • ள்+ஒ= ளொ (குறில் – ஒற்றைக்கொம்பும் துணைக்காலும் இணைந்து வந்துள்ளன)
  • ள்+ஓ=ளோ(நெடில் – இரட்டைக்கொம்பும் துணைக்காலும் இணைந்து வந்துள்ளன)
  • ள்+ஒள= ளெள ( ஒரே நெடில்- ஆனால், ஒற்றைக் கொம்பும் கொம்புக்காலும் இணைந்து வந்துள்ளன)

—————————————————————————–

குழப்பம் என்னவென்றால்

(ள்+ஒள= ளெள)

இதை எப்படி உச்சரிப்பது?

ஐகாரம் போன்ற ஒரே நெடிலான ஒளகாரத்திற்கும் இணைக்கொம்பு வருவதே முறையாகும். மற்ற குறில் உயிர்மெய்களுக்குப் பயன்படுத்துவது போல ஒளகாரத்திற்கு ஒற்றைக்கொம்பைப் பயன்படுத்துவது தவறான முறை என்றே தோன்றுகிறது.

விளக்கம்:

(ள்+ஒள= ளெள) ஆனது,

(ள்+ஒள= ளைள) என்று மாற வேண்டும்.

ஒளகாரத்தின் வடிவத்தை மேலே சொன்னபடி மாற்றிவிட்டால் கொம்புக்காலான “ள”வுக்குப் பதிலாகத் துணைக்காலையே பயன்படுத்தலாம்.

எப்படி என்றால்,

என்று மாறும்.

இப்படியே மற்ற 17 மெய்களுக்கும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக,

என்றும்,

கௌரி என்பதை

என்றும் எழுதிவிடலாம்.

குறிப்பு:

இவை என் தனிப்பட்ட கருத்துகள். இவை சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். இவற்றைப் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்கவும்.

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்