Loading

அத்தியாயம் – 1

 

 

“நந்தா!” என்ற கர்ஜனையில் கையில் இருந்த காகிதங்களை தவற விட்டிருந்தான்.

அருகே இருத்தவனிடம் அதை எடுக்க சொல்லி வேகமாக குரல் வந்த திசைக்கு ஓடினான்.

 

பயம் அத்தனை பயம் அந்த குரலுக்கு சொத்தகாரனான சாணக்கியன் மீது. நத்தாவிற்கு மட்டுமல்ல அந்த இடத்தில் இருந்த அனைவருக்கும் அவன் மீது அளவு கடந்த பயம்.

 

“சார்” என்று பம்பியவனை அழுத்தமாக பார்த்து,

“நேத்ரா எங்கே?” என்றான். எச்சில் விழுங்கி, “இன்னும் ஸ்பாட்டுக்கு மேம் வரல சார்”.

“வாட்” என்று அவன் எழுந்த வேகத்தில் அவன் அமர்த்திருந்த நாற்காலி பறந்தது.

 

நெற்றியை நீவி, “ஏன்?” என்றான் ஒற்றை வார்தையில்.

“நேத்து லேட் நைட் வர ஷூட்டிங் போனதால், இன்னைக்கு மதியம் தான் வருவாங்கலாம் .

 

“யார கேட்டு அவ இப்படி பன்றா? இப்போ அவ இங்க வரனும். இல்லை நீ அப்படியே பொட்டி படுக்கையை கட்டிட்டு ஊருக்கு போயிடு” என்றவன் நந்தாவின் பதிலை கூடகேட்காமல், நேத்ரா இல்லாமல் எடுக்க வேண்டிய சீனுக்கான பேக்கிரவுண்டை மாற்றுமாறு ஆர்ட் டீமுக்கு கட்டளையிட்டு கேரவனுக்கு போனான்.

 

சிங்கத்துகிட்ட இருந்து தப்பிச்சு புலிக்கிட்ட மாட்டின கதையாக, சாணக்கியனிடம் முடித்து நேத்ராவிடம் இப்போது வாங்கி கட்டிக்க உள்ளான் நந்தா. அவசரமாக நேத்ராவின் உதவியாளனுக்கு அழைத்து நடந்ததை கூறி எப்படியாவது நேத்ராவை அழைத்து வருமாறு கெஞ்சிஅழைப்பைத் தூண்டித்தான்.

 

சாதாரண நடிகர்களை போல அவளை அழைத்து விட முடியாது. அவள் நேத்ரா அதுவும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வருபவளை கட்டளையிட்டு அழைக்க இயலாது.

 

அவள் தந்தை விஸ்வநாதன் பிரபல தயாரிப்பாளர்களுள் ஒருவர், ஏன் இந்த படத்தை கூட அவர் தான் தயாரிக்கிறார். அம்மா சித்ராதேவி அந்தக் காலத்து பின்னணி பாடகி. திருமணம் அடுத்து அடுத்து குழந்தைகள் என்று முழுநேர இல்லதரசியாக மாறியவர் அவ்வப்போது சினிமா விழாகளில் மட்டும் பங்கேற்பார்.

 

அண்ணன் நித்திலன் வளர்ந்து வரும் இயக்குனர். அவன் எடுத்த ஏழு படமும் மெகா ஹிட் அடித்து அவனுக்கேன்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளான். தயாரிப்பாளராக தந்தை இருந்தும் அவரிடம் உதவி என்று நிற்காமல் சுயமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தான்.

 

தங்கை ஆத்விக்கா இப்பொழுது தான் விசுவல் கம்யூனிகேசன் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அண்ணனை போல இயக்குனர் ஆகவேண்டும் என்பது அவளது ஆசை. ஆனால் அவளது குடும்பத்திற்கு அவள் ஒரு பாடாகி ஆக வேண்டும். பிள்ளைகளில் யாராவது தான் விட்ட இசையை தொடர வேண்டும் என்பது சித்ரா தேவியின் ஆசை. அதற்கு ஏற்றவாறு மூவரில் குரல் வளமும் இசை ஞானமும் ஆத்விக்காவுக்கு தான் அதிகம்.

 

‘காலேஜ் முடிச்சுட்டு நான் நல்லா யோசிச்சு சொல்றேன் அது வரை என் போக்குல விடுங்க!’ என்று அவள் கூறிவிட தங்களது அறிவுரைகளை நிறுத்திவிட்டனர்.

 

தானாக அடிபட்டு இந்த இடத்திற்கு வந்ததாலோ என்னவோ அவனுக்கு சற்று திமிர் அதிகம். ஒரு படம்தான் நடித்திருக்கிறாள். இந்த வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை பேர் நாயாக அலைகிறார்கள்.

 

 தானாக கிடைத்தால் இப்படி தான் என்று அவள் மீது வன்மத்தை உருவாக்கிக் கொண்டான். 

 

அனைவரையும் அதட்டி வேலை வாங்குபவன் இவளிடம் சற்று பொறுமையாக தான் நடந்துகொள்வான். காரணம் நித்திலன் தான். படத்தின் பூஜைக்கு வந்தவன் அவனை தனியாக அழைத்து, அவளது மரியாதையை பொது இடத்தில் கெடுத்து விடாதே என்று கூறி சென்றிருந்தான்.

 

நண்பன் தான் என்றாலும் அவ்வளவு சீக்கிரம் எதையும் யாரிடமும் கேட்டு பழகாத நித்திலன், தன்னிடம் கேட்டு சென்ற காரணத்திற்காக இன்று வரை அமைதியாக இருந்தான்.

சற்று வளைந்து கொடுத்தால் என்னவெல்லாம் செய்கிறாள் என்று அவள் மீது சினம் மேலும் அதிகரித்தது.

 

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே அது தான் இவர்களிடத்திலும் நடந்தது. தனது பத்தாவது படத்திற்கான கதையை எழுதி அவன் முடித்த சமயம் நேத்ராவின் அறிமுக படமான ருத்ரா பெரும் வெற்றியை பெற்றது.

 

உச்சி முதல் பாதம் வரை அனைத்திலும் அவளது நடிப்பு கட்டிப் போட்டது. முதல் படம் என்று யாராவது கூறினால் நம்ப முடியாது. அந்த அளவிற்கு நடிப்பு அரக்கியாக தனது திறமையை கொட்டியிருந்தாள்.

 

அவள் தந்தையிடம் கதையை கூற சென்றிருந்த நேரம் நித்திலனும் நேத்ராவும் அங்கு வந்திருந்தனர். மூவரிடமும் கதையை கூறி முடித்தவனுக்கு தெரியும் நிச்சயம் விஸ்வநாதன் அவனது படத்தை தயாரித்து தருவார் என்று.

 

அதே போல கதையை கேட்ட விஸ்வநாதன் தானே படத்தை முழுவதுமாக தயாரித்து தருவதாக கூறி அவனிடம் அட்வான்ஸ் செக்கை நீட்டினார்.

 

” ஹீரோ ஹீரோயின் முடிவு பண்ணிட்டியா சாணக்கியா?” என்ற நித்திலனிடம்,

“ஹீரோ நம்ப ஆத்ரேயன் தான். எழுதும் போதே அவன்கிட்ட பேசிட்டேன் அவன் பிரடியூசர் கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். ஹீரோயின் என்று நேத்ராவை பார்த்தவன்,

“கால் சீட் இருந்த நம்ப நேத்ரா மேடமையே போடறலாம்” என்றான் இயல்பாக.

 

ஏதோ போறப் போக்கில் தன்னை இணைத்தது போல நேற்றாவிற்கு தோன்றியது.

“ஓகே சார். ஒரு ரெண்டு நாள் நல்லா யோசிச்சுட்டு சொல்றேன்” என்று சாதாரணமாக கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றாள் நேத்ரா.

 

விஸ்வநாதனும் நித்திலனும் சற்று யோசனை ஆக செல்லும் நேத்ராவை பார்த்தனர். மனதில் வியப்பும் சற்று கோபமும் சாணக்கியனுக்கு எட்டிப் பார்த்தது.

‘என் படத்தில் நடிக்க எத்தனையோ பேர் லைன்ல காத்துக்கிட்டு இருக்காங்க. இவ என்ன யோசிச்சு சொல்றேன்னு சொல்றா?’ என்று நினைத்தான்.

 

அவள் நிராகரித்ததுக்கு ஒரு காரணம் இருக்கும், அவரவருக்கு ஒரு கருத்து இருக்கும் என்பதை அந்த இயக்குனர் மறந்து விட்டான்.

பின் படம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பேசி தேர்வு செய்துவிட்டு அவன் அலுவலகத்திற்கு கிளம்பினான். 

 

நேத்ராவின் வீட்டிற்கு வந்த உதவியாளன் ரிதேஷ் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டான். அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்று கணினி குரலில் கூற 

படபடப்பானான்.

 

கையை பிசைந்து நின்று கொண்டிருந்தவனை மேலே இருந்து பார்த்த நித்திலன் உள்ளே அழைத்தான்.

 

“ரித்தீஷ் என்ன ஆச்சு? ஏன் இப்படி டென்ஷனா இருக்க?”

 

“சார் நேத்ரா மேடம் போன ஆப் பண்ணி வச்சிருக்காங்க. தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணா ரொம்ப கோபப்படுவாங்க. ரூமுக்கும் இப்போ போக முடியாது. இன்னைக்கு காலையில மேடமுக்கு செட்யூல் இருக்கு. சாணக்கியன் சார் வேற அங்க எரிமலை கொதிச்சிட்டு இருக்காரு. இப்ப மேடம் மட்டும் அங்க போகலைன்னா ஏ.டி நந்தாவை வேலையை விட்டு தூக்கிருவேன்னு செம டோஸ் கொடுத்து இருக்காரு.” என்று படபடவென ஒப்பித்தான்.

 

“நீ வெளியில வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்தில நேத்ரா வருவா” என்று அவள் அறைக்கு விரைந்தான்.

அவனும் ஒரு இயக்குனர் அல்லவா? படத்தின் நாயகி இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்பதை நன்கறித்தவன். எதுவும் தெரியாதவர் இதை செய்தாலே ஏற்கமாட்டான். தனது குடும்பத்திலேயே இந்த தவறு நடந்தால் அதை ஏற்றுக் கொள்வானா என்ன?

 

“நேத்ரா கதவ தொற!” என்று அவன் தட்டிய தட்டில் பக்கத்து அறையில் இருந்த ஆத்மிகா கூட வெளியே வந்து விட்டாள். வரவேண்டியவளோ பொறுமையாக வெளியே வந்து, “என்ன அண்ணா?” என்றாள்.

 

“மணி என்ன? ஷூட்டிங் போகாம இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”

 

“ம்ப்ச் மூணு மணிக்கு தான் நேத்து ஷூட்டிங் முடிஞ்சுது. கொஞ்சம் கூட ரெஸ்ட் வேண்டாமா? இதுக்கு தான் படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னேன். நீயும் அப்பாவும் ஏதேதோ சொல்லி அவன் கிட்ட கோர்த்து விட்டுட்டீங்க. எப்படி நிக்கணும் சிரிக்கணும்னு இருந்து எப்ப தூங்கணும் எந்திரிக்கணும்னு டைம் டேபிள் போட்டு என்னை சாவடிக்கிறான். என்னால முடியாது நான் இன்னைக்கு லஞ்ச் டைம் தான் போவேன்” என்று தர்க்கம் செய்தாள்.

 

“கொஞ்சமாச்சும் டெடிகேஷனோட இரு நேத்ரா. அங்க இருக்கவங்களுக்கு மட்டும் தூக்கம் வராத டையட் ஆகாதா? ஈஸியா கிடைச்சனால் உனக்கு அந்த வெல்யூ தெரியல.”

 

“இப்போ நீ எதுக்கு இதல்லாம் பேசிட்டு இருக்க. உனக்கு கால் பண்ணானா?

” எனக்கு ஒன்னும் அவன் பேசல. நந்தா ரித்தீஸ்கிட்ட பேசிருக்கான். உன் போன் ஆப்ல இருந்தனால ரித்தீஸ் வீட்டுக்கு வெளிய நின்னுட்டு இருந்தான். “

 

“ஓ….. சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும் நான் பொறுமையா போய்கிறேன்.”

 

“ஏய் லூசு! உன்னால அங்க ஒருத்தனோட வேலை ஊசலாடிட்டு இருக்கு. ஒழுங்கா கிளம்பி போ. அவன் ஒரு கிறுக்கன் அப்பறம் கிடைக்கிற நேரம் எல்லாம் உன்னை வச்சு செய்வான் பார்த்துக்கோ. என்கிட்ட வந்து நிற்க கூடாது, நான் எதுவும் கேட்க மாட்டேன் அவன்கிட்ட”

 

“அடேய் உன் பிரண்டு நல்லவன், வல்லவன். அவன் படத்துல நடிச்சா நல்ல ஸ்கோப் இருக்கு. என் கேரியருக்கு அது முக்கியம். நம்ம ப்ரொடக்ஷன்ல வேற நானே நடிக்கலேன்னா அது ஒரு பெரிய நியூஸா மாறும்னு, என்னென்னமோ சொல்லி அந்த சைக்கோ கிட்ட கோர்த்து விட்டுட்டு, உன்கிட்ட வரக்கூடாதுன்னு வேற சொல்லுவியா?”

 

“பத்து நிமிஷத்துல கிளம்புனா அப்பா கூட போய் எஸ்கேப் ஆகிடலாம். அவ்ளோதான் நான் சொல்லுவேன்” என்று நகர்ந்தான்.

 

“நான் என்ன சின்ன பொண்ணா, அப்பா பின்னாடி ஒளிஞ்சுட்டு போக. அவனுக்கு எல்லாம் அவ்வளவு சீன் இல்ல. நான் கரெக்ட் டைம்க்கு போகணும்னா, அவன் சரியா என்ன விட்டு இருக்கணும். இப்ப போறேன் அதுவும் அவனுக்கு பயந்துட்டு இல்ல என்னால நந்தா வேலை போய்ட கூடாதுனு தான் போறேன்” என்றவள் பத்து நிமிடத்தில் கிளம்பி பூகம்பத்திடம் சென்றாள்.

 

செல்லும் அவளைப் பார்த்த ஆத்விகா, “அண்ணா என்ன ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இன்னைக்கு கூட்டிட்டு போறியா?”

சந்தேகமாக அவளைப் பார்த்தவன், “என்னவாம்?” என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

 

“அக்கா போற வேகத்துக்கும் அவர் அங்க இருக்க கோபத்துக்கும் ஒரு நல்ல சீன் இருக்குன்னு என் பட்சி சொல்லுது. எனக்கு வேற நாளைக்கு ஸ்கிரிப்ட் சப்மிட் பண்ணனும். ஏதாவது சீன் கிடைச்சா அதை டெவலப் பண்ணி எழுதிருவேன்.” என்றவளை வெட்டவா குத்தவா என்ற பார்த்தான்.

 

“உன் போதைக்கு அவங்க ஊறுகாயா? ஒழுங்கா போய் காலேஜ் கிளம்புற வேலைய பாரு” என்று அவள் தலையில் கொட்டி அனுப்பி வைத்தவன், அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்