Loading

இழையை அனைவரும் தேடிக்கொண்டிருக்க அவளோ மணமகள் அறையில் சாற்றியிருந்த கதவின் வழியே வசீகரனின் நடவடிக்கைகளை அவதானித்து கொண்டிருந்தாள்.

இங்கு மேடைக்கு வந்த மனைவியிடம், “என்ன கவி இங்க நிச்சயம் நாம தான் நடத்தி கொடுக்கணும் நீ என்னடான்னா சாவதானமா உட்காந்து அரட்டை அடிச்சிட்டு இருக்க?”

“என்னங்க அவங்க யாருன்னு தெரியாம பேசாதீங்க..”

“யாரும்மா அவங்க எனக்கு தெரியலையே..”

“ஏங்க நான் அடிக்கடி சொல்லுவேனே என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் அம்மூ அது அவ தாங்க…” என்று நாயகியை சுட்டி காட்டியவர்..,

“கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்போ தாங்க பார்க்கிறேன். தர்மபுரில நாங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு, சின்ன வயசுல இருந்து ஒன்னாதான் படிச்சோம்… பிங்கி பிஃப்த் படிக்கிறப்போ நடந்த பிரச்சனையில என்னை எங்கம்மா வீட்ல விட்டுட்டு நீங்க குவைத் போனீங்களே நியாபகமிருக்கா?”

“இருக்கு..”

“அங்க நான் ரெண்டு வருஷம் இருந்தப்போ எங்கம்மாக்கு உடம்பு முடியாம இருந்தது நியாபகமிருக்கா?”

“இருக்கும்மா.. நீ கூட பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப உதவினாங்கன்னு சொன்னியே நான் உங்களை கூட்டிட்டு போக வந்தப்போகூட எனக்கு அறிமுகபடுத்தி வச்சியே எல்லாமே நியாபகமிருக்கு”

“ஹ்ம்ம் அதாங்க சொல்ல வந்தேன் அங்க பக்கத்து வீடு இவங்களோடது தான்.. திரு அண்ணா மிலிட்டரில இருந்தவரு.. ரொம்ப பாசமானவர்… அன்னைக்கு எந்த ஆண் துணையும் இல்லாம நீங்களும் பக்கமில்லாம இருந்த எங்களுக்கு திரு அண்ணனும் அவரோட பிள்ளையும் கூட இல்லைன்னா அந்த ஒன்றரை வருஷம் எங்கம்மா என்கூட இல்லாம போயிருந்திருப்பாங்க அப்போ என்கூட பிறந்த பிறப்பாட்டம் எனக்காக கடைசிவரை கூடநின்னதே அவங்கதான்..” என்றவருக்கு இப்போதுமே அன்றைய நாளின் நினைவில் கண்களில் நீர் சுரந்தது.

பார்கவி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.. பெற்றோருக்கு ஒரே பெண்.. அவர் தந்தை இவரது சிறுவயதிலேயே தவறிவிட அவர் அன்னை அரும்பாடுபட்டு பார்கவியை படிக்க வைத்தார்..

ஒத்த வயதுடைய நாயகிக்கு திருமணமாகி வசீகரன் பிறந்த பிறகும்கூட பார்கவிக்கு சரியான வரன் அமையாது தள்ளி சென்று கொண்டே இருந்தது. அபிராமிக்கும் பசுபதிக்கும் நிச்சயமான பிறகே பார்கவிக்கு கைலாசத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டது.

ஒரே பெண்ணை திருமணம் செய்து கொடுத்த அவர் தந்தைக்கு அடுத்த சில வருடங்களில் உடல் நலக்கோளாறு ஏற்பட்டிருந்தது. அதேநேரம் பார்கவியின் புகுந்த வீட்டில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவும் பார்கவியும் இழையும் தருமபுரிக்கு வந்து சேர்ந்தனர்.

“எனக்கு ஞாபகமிருக்கு கவி.. இவங்க ஃபோன் நம்பர் தொலைச்சிட்டேன்னு தானே நீ ரொம்ப நாளா வருத்தபட்டுட்டு இருந்த? சரிம்மா முதல்லா நிகழ்ச்சியை முடிச்சிட்டு அவங்களை பார்த்து பேசலாம்” என்றவர் மனைவியோடு சேர்ந்து சாரதி ஆஷ்மியின் நிச்சயத்தை நல்லபடியாக முடித்தனர்.

அதன்பின் ரிசெப்ஷன் தொடங்கிட மெல்ல கூட்டம் மேடையை நோக்கி நகர பார்கவி கைலாசத்தோடு கீழே இறங்கியவர் மீண்டும் தோழியை தேடி சென்றார்.

அதேநேரம் வசீகரனுக்கு அழைத்த சாரதி, “மச்சி எங்கடா இருக்க?” என்றான்.

“மண்டபத்துல தான்டா இருக்கேன் ஏன் கேட்கிற?”

“ஒரு நிமிஷம் ஸ்டேஜ்க்கு வா..” என்றழைக்கவும் மேடையேறியவனிடம் விஷயத்தை கூறி “கொஞ்சம் எமெர்ஜென்சிடா வேற யாரை கேட்கிறதுன்னு புரியலை தப்பா எடுத்துக்காத மச்சான்”

“டேய் எதுக்கு தயங்கற? ஒன்னும் பிரச்சனையில்ல நான் பார்த்துக்குறேன் விடு” என்றவன் உடனே தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

இங்கு பார்கவியையும் கைலாசத்தையும் கண்டதும், “எப்படிம்மா இருக்க பார்கவி..?” என்றவாறு முன்னே வந்தார் திருவேங்கடம்..

“ரொம்ப நல்லா இருக்கேண்ணா… நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க?” என்றவர் கணவரையும் அவர்களுக்கு அறிமுகபடுத்த பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்து ஆண்கள் அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்க ஜித்துவையும் பிரணவையும் நெருங்கிய பார்கவியிடம்,

“இவன் என் பையன் சர்வஜித். இவன் ப்ரணவ் கவிக்கா. உங்களுக்கு நியாபகம் இருக்கா?”

“ஜித்துவை எப்படி மறப்பேன் அபி..? பிங்கியும் இவனும் ஒரே செட் இல்லையா? ரெண்டு பேரும் ஸ்கூல் போறது ஹோம் வொர்க் செய்றதுன்னு எப்பவும் ஒண்ணா தானே சுத்திட்டு இருப்பாங்க… அதுவும் இந்த சின்னகுட்டி என் வீட்ல தானே பாதி நேரம் இருப்பான் ஆனா இவங்களுக்கு என்னை நியபகமிருக்கான்னு தெரியலையே”

“என்னத்தை பேசுறீங்க உங்களை எல்லாம் மறக்க முடியுமா..? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு உங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தேன் ஆனா முடியலை… ஆமா பிங்கி எங்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா? என்னை எல்லாம் நியாபகம் வச்சிருக்காளா இல்ல மறந்துட்டாளா?”

“இரு உன் ஃபிரெண்டையே கூப்பிடுறேன் நீ அவகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ” என்றவர் இழைக்கு அழைத்தார்.

“அச்சோ அம்மா வேற கூப்பிடுறாங்களே கண்டிப்பா அவரை அறிமுகபடுத்ததான் இருக்கும்… ஆனா எப்படி அவர்கிட்ட சகஜமா பேச..? பேசாம கால் சுளுக்குன்னு சொல்லிடலாமா..?” என்று படபடத்து போனாள்.

“என்ன விஷயமுன்னு தெரியாம எதுக்கு இழை பயப்படற ஒன்னும் நடக்காது தைரியமா வெளில போ.. ஒரு ஹாய் சொல்லு ஏதாவது பேசினா உனக்கு செலெக்டிவ் அம்னீஷியான்னு சொல்லிடு” என்று மனசாட்சி எடுத்து கொடுக்க..,

“பொய் சொல்லனுமா..?”

“அது உன் விருப்பம்” என்று மனசாட்சி விலகிக்கொள்ள மெல்ல அறையில் இருந்து வெளியேறினாள் இழையாள். அவளை கண்ட நாயகிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

“என் தங்கம்” என்று ஓடிசென்று அணைத்து கொண்டவருக்கு மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்மியது..

“ஆன்ட்டி..” என்று இழை புரியாமல் நிற்க, “பிங்கி அவங்க தான் உன்னோட அம்மூ அத்தை..” என்ற பார்கவி அனைவரையும் அறிமுகபடுத்தவும் இழை முகத்திலும் பெருமகிழ்ச்சி தாண்டவமாடியது.

“அதான் எனக்கு உங்களை ஏற்கனவே பார்த்த ஃபீல் இருந்ததா அத்தை” என்று தானும் நாயகியை கட்டிக்கொண்டவள் “எப்படி இருக்கீங்க அத்தை.. நீங்க அபித்தை?” என்று இருவரையும் நலம் விசாரித்தவளை தன்னருகே அமர்த்தி கொண்ட நாயகிக்கு அதீத மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று புரியாமல் அவள் முகத்தையே மெளனமாக பார்த்திருந்தார்.

“அக்கா தம்பு சொன்ன மச்சமும் தழும்பும் இழைக்கு இருக்கு கவனிச்சியாக்கா..?” என்று அபி நாயகியின் காதை கடிக்க,

ஆம் என்பதாக சந்தோஷக் கண்ணீருடன் தலையசைத்தவர், “எல்லாம் கடவுள் சித்தம் அபி! என் பிள்ளைக்கும் எனக்கும் பிடிச்ச பொண்ணு நம்ம பிங்கி.. நம்பவே முடியல.. கடவுள் எப்படி முடிச்சு போட்டிருக்கார் பாரு”

“அப்புறம் என்னக்கா கவிக்கா கிட்ட பேசு”

“இருடி கிணத்து தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சிட்டு போகபோகுது.. கல்யாண விஷயம் எடுத்தேன் கவுத்தேன்னு பேசிட முடியாது மெதுவா பேசிக்கலாம் இப்போ என் மருமகளை ரசிக்க விடு” என்றவர் மெளனமாக இழையை பார்த்திருந்தார்.

எவ்ளோ நேரம் குழந்தையை பார்த்துட்டே இருப்பீங்க என்றவாறே அங்கே வந்த திருவேங்கடத்தையும் பசுபதியையும் கண்ட இழை “எப்படி இருக்கீங்க மாமா..?” என்றவாறு அவர்களிடம் ஆசி பெற இழையை தன்னருகே அமர்த்திய திரு, “நான் நல்லா இருக்கேன்டா பிங்கி குட்டி நீங்க எப்படி இருக்கீங்க..?”

“ரொம்ப நல்லா இருக்கேன் மாமா.. அம்மா ஃபோன் நம்பர் தொலைச்சதால திரும்ப உங்களை எல்லாம் பார்க்க முடியாம ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா? முக்கியமா உங்களோட இடியாப்பம் அத்தையோட கொழுக்கட்டை.., அபி அத்தையோட ஸ்வீட்ஸ் எல்லாமே ரொம்ப மிஸ் பண்ணினேன்…”

“நாங்களும் தான்டா நீ இருந்த வரை வீட்ல பெண் குழந்தை இல்லங்கிற ஏக்கமே இல்லாம இருந்தோம் நீ கிளம்பின பிறகு ஏதோ ஒரு வெற்றிடம்… அடிக்கடி நினைச்சுப்போம் அப்போலாம் அம்மூக்கு கவி மேல தான் கோபம் திரும்பும்…”

“பிங்கி அதான் சோஷியல் மீடியா அது இதுன்னு இருக்கே எதுலயாவது எங்களை கண்டுபிடிக்க முயற்சி எடுத்திருக்கலாமே… எங்களுக்கு தான் உங்கப்பா பேர் தெரியாது ஒரு ரெண்டு மூணு முறை ஜித்து கவி அப்புறம் பிங்கின்னு உன் பேரை தேடி பார்த்தான் ஆனா எங்களுக்கு கிடைக்கலை..” என்றார் அபி.

“அச்சோ அத்தை அதை ஏன் கேட்கறீங்க முதல்ல எனக்கு சோஷியல் மீடியா அக்கவுன்ட்டே கிடையாது. அப்பப்போ நான் என் பிரெண்ட்கிட்ட சொல்லி ஜித்து நேம்ல சர்ச் பண்ணி இருக்கேன், ஆனா எனக்கு கிடைக்கலை. அதேபோல திரு மாமா, பசுபதி மாமா பேருலயும் தேடினோம், ஆனா கிடைக்கலை.”

“இல்லம்மா எங்களுக்கும் தனிப்பட்ட எந்த அகவுன்ட்டும் இல்ல… பிசினஸ் அகவுன்ட் மட்டும்தான். அதுகூட ஜித்துவே பார்த்துப்பான்” எனவும்,

“ஏன் ஜித்து உன்னோட அகவுன்ட் எதுவுமே எனக்கு காட்டலை” என்று நண்பனை கேட்க…

“பிங்கி, என்னோட சோஷியல் மீடியா அகவுன்ட் எல்லாமே சர்வான்னுதான் இருக்கும். வீட்ல கூப்பிடற பேரை வச்சு நீ தேடினா எப்படி கிடைக்கும். சர்வா இல்ல சர்வஜித் ன்னு தேடி இருக்கலாமே…”

“அச்சோ எனக்கு உன்னை ஜித்துன்னு மட்டும் தான்டா தெரியும்… ஃபுல் நேம் தெரியாது…”

“ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆனா முழு பேர் தெரியாதா? நம்ப முடியலையே” என்று பிரணவ் கேட்க…

“அப்பு நானும் பிங்கியும் ஒரே ஸ்கூல், ஒரே ஸ்டாண்டர்ட், ஆனா வேற வேற செக்ஷன். ஸோ பிங்கிக்கு என்னோட ஃபுல் நேம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று சர்வஜித் தோழிக்காக பேச…

“அப்படியும் யோசிச்சு ஒருமுறை டாக்டர் விஷ்வஜித்னு ட்ரை பண்ணி இருக்கேன்டா, ஆனா இந்த நேம் எனக்கு நியாபகமே வரலை தெரியுமா?”

“டேய் ப்ரோ நீ டாக்டரா சொல்லவே இல்ல?” என்று பிரணவ் சிரிக்க…

“விஷ்வஜித்கூட ஓகே, டாக்டர் ன்னு எதுக்கு பிங்கி போட்ட?”

“டேய் நீதானே டாக்டர் ஆகறது உன்னோட ஆம்பிஷன்னு சொல்லுவ. அதான் அப்படி போட்டு தேடினேன்.”

“சரி சரி விடுங்க. அதான் இப்போ எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டோமே. அப்புறம் என்ன வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம்” என்று கைலாசம் அழைக்க அனைவரும் கிளம்பினர்…

“ஆமா தம்பு எங்க நான் பார்க்கவே இல்ல” என்று பார்கவி கேட்கவும்…

“இங்க தானே இருந்தான்” என்று திரு மண்டபத்தை அலச, “இருங்க நான் அண்ணாக்கு போன் பண்றேன்” என்ற பிரணவ் உடனே வசீக்கு அழைக்க அவனோ அழைப்பை துண்டித்திருந்தான்.

“அண்ணா பிஸியா இருக்காங்க போல. நீங்க முன்னாடி போங்க, நான் அவரை கூட்டிட்டு வரேன்” என்றவன் வசீக்காக காத்திருக்க தொடங்கினான்.

“என்னங்க நீங்க அம்மூ, அபி, அண்ணனை எல்லாம் கூட்டிட்டு போங்க. நான் வந்துடுறேன்” என்ற பார்கவி அர்ஜுனுடன் செல்ல, டைனிங் ஹால் நோக்கி சென்று கொண்டிருந்த திருவேங்கடத்திடம்,

“ஹ்ம்ம் உன் பையன் பல வருஷமா பிங்கியை மனசுல நினைச்சுட்டு இருந்திருக்கான்னு சொல்றேன். அதை நம்ம கிட்ட சொல்லாம வேணும்னே இத்தனை வருஷம் பெண்ணை தேட வச்சு என்னை சுத்தல்ல விட்டிருக்கான்னு சொல்றேன். ஏதோ இப்போ தான் அவளை பார்த்ததும் உடனே பிடிச்ச மாதிரி ஒரு கதை சொல்றான்னு சொல்றேன் புரியுதா?..” என்றார் பல்லை கடித்து கொண்டு.

“என்னங்க பிங்கி தான் தம்பு சொன்ன பொண்ணு, கவனிச்சீங்களா?” என்றார் நாயகி.

“என்னம்மா சொல்ற பிங்கியா?” என்ற திரு, திரும்பி தன் பின்னே சர்வஜித்தோடு பேசியவாறு வந்து கொண்டிருந்த இழையின் முகத்தை உற்று பார்த்தவர்,

“அட ஆமா! அப்போ தம்பு பிங்கியை ஏற்கனவே…” என்று யோசனையினூடே ஆரம்பித்தவர் ஒரு கணம் நிதானித்து, “ஆனா அந்த பொண்ணு பேர் ஸ்வேதா தானே… இதுல பிங்கி எப்படி?” என்றவரின் நெற்றி சுருங்கி விரிந்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இரு குடும்பத்தாருக்கும் நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகானதொரு சந்திப்பு.

    குடும்பம் மொத்ததையும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிட்டு வசி எங்கேயோ கிளம்பி போய்விட்டானே.

    “தழும்புக்கு சொந்தக்காரி தங்கள் பிங்கி தான் என்றறிந்து, அவளை மனதில் வைத்துக்கொண்டு தான் வசி திருமணத்தை தள்ளி போட்டு தங்களை சுத்தலில் விட்டானோ?” என்ற குழப்பத்தில் திருபா. ஸ்வேதா என்ற பெண்ணின் பெயரில் சிறு குழப்பமும் கூடுதலாக.

    எல்லோரும் அவளை வலை வீசி தேட அவளோ மணப்பெண் அறையினுள் பதுங்கிவிட்டாள்.

    சிறுபிராயத்தில் புனைபெயர் கொண்டே அழைத்து பழகி, நிஜ பெயர் நினைவில் இல்லை எவருக்கும்.

  2. இடையில ஏதோ ஸ்வேதா ட்ராக் போகுதே … குடும்பமே பொண்ணை பார்த்திடுச்சு … மாப்பிள்ளை மட்டும் தான் இன்னும் பொண்ணை பார்க்கணும் …