Loading

சமி தன் வீட்டில் அமர்ந்து ராம்குமாருடன் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஆம்புலன்ஸ் ஒலி கேட்க, இருவரும் யாருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வெளியில் வரும் பொழுது தான் பார்த்தனர் கங்கா பாட்டி ரிஷி மற்றும் அவனின் குடும்பத்தைப் பார்த்து ஏதோ கோவமாகக் கூறுவதை. இவர்கள் வீடு சற்று தொலைவில் உள்ளதால் அவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லை. ஆனால் அவரின் முக பாவனைகள் வைத்து அவர் கோவமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்டனர். சமி வேகமாக உள்ளே நுழைந்து தன் கைப் பேசியை எடுத்து சஞ்சய்க்கு அழைத்தாள்.

“சொல்லு சமி.”

“என்னாச்சு ஜெய்?? எதுக்கு ஆம்புலன்ஸ் வந்துருக்கு ஆர்த்தி வீட்டுக்கு??”

“ஆர்த்தி சூசைட் பண்ணிக்கிட்டா. அதான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறாங்க.”

“என்ன சொல்ற ஜெய்?? ஆர்த்தி இப்ப எப்படி இருக்கா??”

“தெரியல சமி. பயமா இருக்கு.”

“சரி கவலைப்படாத நான் அங்க வரேன்.” என்று கூறிவிட்டு ராமிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிஷி வீட்டுக்குச் சென்றாள்.

ரிஷியின் வீட்டில் அனைவரும் படத்தத்துடன் அமர்ந்திருந்தனர். ரிஷிக்கோ குற்றவுணர்ச்சியாக இருந்தது. அவன் கனவிலும் நினைக்கவில்லை ஆர்த்தி தற்கொலைக்கு முயற்சி செய்வாள் என்று. என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தனர். அனைவரின் பிரார்த்தனையும் ஆர்த்திக்கு ஒன்றும் ஆகாமல் வீடு வந்து சேர வேண்டும் என்று தான் இருந்தது.

சமி ரிஷி வீட்டுக்கு வந்தாள். நேராக ரிஷியிடம் சென்று,”நந்து என்னாச்சு??” சமியைப் பார்த்த ரிஷி அவளின் கையைப் பிடித்துக் கொண்டு,”எனக்குப் பயமா இருக்கு யுகி. ஆர்த்தி இப்படி பண்ணுவானு நான் கொஞ்சம் கூட யோசிக்கலை. அவகிட்ட நான் பக்குவமா விஷயத்தை சொல்லிருக்கனும். இப்படி போட்டி உடச்சுருக்க கூடாது. என்னால தான் அவ இப்படி பண்ணிக்கிட்டா. நான் பாவி.” என்று ஒரு மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டான். சமிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு,”நந்து இங்க பாருங்க, ஒன்னுமில்லை. ஆர்த்திக்கு எதுவும் ஆகாது. நீங்கப் பயப்பட வேண்டாம். ஆர்த்தியை எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கனு தெரியுமா??” இல்லை என்று தலை ஆட்டினான். அங்கு இருந்த எவருக்கும் ரிஷியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் உடைந்து போயிருந்தான். அப்பொழுது திடு திடுமென நான்கு காவல் துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.

“இங்கு ரிஷி நந்தன் யார்??” என்று ஒரு காவல் அதிகாரி விசாரிக்க அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

“நான் தான் சார்.”

“உங்களை நாங்க அரெஸ்ட் பண்றோம்.”

“சார் எதுக்கு என் பையனை அரெஸ்ட் பண்றீங்க??”

“ஆர்த்தினு ஒரு பொண்ண உங்க பையன் கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லி ஏமாத்திருக்கான். அந்த பொண்ணு பாய்சன் குடிச்சி ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கு. அந்த பொண்ணோட பாட்டி கம்ப்ளைன்ட் குடுத்துருக்காங்க. அதான் நாங்க கூட்டிட்டு போறோம். நீங்க வேற என்ன பேசுறதுனாலும் ஸ்டேஷன் வாங்க.” என்று கூறிவிட்டு ரிஷியை அழைத்துக் கொண்டு சென்றார் அந்து காவல் அதிகாரி.

“அப்பா சீக்கிரம் நம்ம லாயருக்கு கால் பண்ணுங்க.”

“சஞ்சய் அவர் நமக்கு உதவி பண்ண மாட்டார் பா.”

“என்ன பா சொல்றீங்க??”

“அவர் அந்த கங்கா அம்மா சொல்றது தான் செய்வார். அந்த அம்மாவோட ஆள் பா அவர். வா நாம வேற யாராவது லாயர் கிடைக்குறாங்களானு பார்த்துட்டு வரலாம்.”

“என்னங்க நீங்க வரும் போது ரிஷியோட தான் வரனும். என்னால என் பிள்ளை இப்படி கஷ்டபடுறதை பார்த்துட்டு இருக்க முடியாது.”

“நளினி அழாத. கண்டிப்பா ரிஷியை வெளில கொண்டு வந்துடலாம்.” என்று கூறிவிட்டு ப்ரகாஷ் சஞ்சயுடன் வெளியேச் சென்றார்.

சமி தன் மாமா ராமை அழைத்து விஷயத்தைக் கூறினாள். ராமும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றார். அவர் சென்ற நேரம் அங்கிருந்த காவல் அதிகாரி ரிஷியை அடிக்கப் போக, ராம் வந்து தடுத்து விட்டார்.

“யார்யா நீ?? எங்க கடமையைச் செய்ய விடாம பண்ணிட்டு இருக்க??”

“நான் இந்த பையனோட சொந்தம். எப்படி நீங்க எங்க வீட்டு பையன அடிக்க கை ஓங்கலாம்??”

“ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லி ஏமாத்திருக்கான் அவனை சும்மா விட சொல்றியா??”

“அவன் தான் ஏமாத்தினானு உங்ககிட்ட சாட்சி இருக்கா??”

“அதான் அந்த பொண்ணு பாய்சன் குடிச்சு சாக கிடக்குதே. வேற என்ன சாட்சி வேண்டும்??”

“யோவ் அந்த பொண்ணு எங்க வீட்டு பையனால தான் விஷம் குடிச்சானு உனக்கு தெரியுமா??”

“என்னயா மரியாதை தேய்யுது?? உன்னையும் உள்ள தூக்கி போடனுமா??” என்று அந்த காவல் அதிகாரி எகிற, ராம் நிதானமாக,”எவ்ளோ பணம் அந்த அம்மா தந்துச்சு??” என்று கேட்டார்.

“நானும் பார்த்துட்டு இருக்கேன் நீ பேசாம பேசிட்டே போற!!” என்று ராமையும் அடிக்க வர, அதுக்குள் அவருக்கு ஃபோன் வந்தது,”பேசிட்டு வச்சுக்குறேன் உன்னை.” என்று கூறிவிட்டு ஃபோனை எடுத்தார். அவர் பேசி முடித்ததும் ராமிடம் வந்து,”சார் என்னை மன்னிச்சுடுங்க. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். இந்த தம்பி உங்க வீட்டு பையன்னு எனக்குத் தெரியாது. தப்பு தான். என்னை மன்னிச்சுடுங்க.”

“ஓ கமிஷ்னர் பேசிட்டார் போல். இருக்கட்டும். நான் கேட்டதுக்கு இன்னும் பதில வரலை. அந்த அம்மா உனக்கு எவ்ளோ பணம் குடுத்துச்சு??”

“சார் அதலாம் இல்லை.” என்று திக்கி தெனறி கூற.

“ஒழுங்கா நீயே சொல்லிடு. நான் கண்டுபிடிச்சா உனக்கு வேலையே போயிடும்.” என்று ராம் கூற, நடுங்கிக் கொண்டே,”ஒரு லட்சம் தந்தாங்க சார். இந்த பையனை அடிச்சு அவங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு எழுதி வாங்கித் தரச் சொன்னாங்க சார்.” என்று எல்லாவற்றையும் கூற, ராம்க்கும் ரிஷிக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“உனக்குப் பணம் குடுத்துட்டாங்களா??”

“குடுத்துட்டாங்க சார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பாங்க டிரான்ஸ்பர் பண்ணாங்க.”

“பேத்தி உயிரைப் பத்தி யோசிக்காம இதலாம் செஞ்சுருக்காங்கனா சம்திங் ராங். அதை நான் பாத்துக்குறேன். இப்ப என்னோட பொறுப்புல நான் ரிஷியைக் கூட்டிட்டு போறேன். எங்க ஸைன் பண்ணனும்னு சொல்லு.” என்று கூறி ரிஷியை அழைத்துச் சென்றார். போகும் முன்,”நான் வந்து ரிஷியைக் கூட்டிட்டு போய்டதை அந்த அம்மாகிட்ட சொல்ல கூடாது. புரிஞ்சதா??” என்று சொல்லிவிட்டே சென்றார் ராம்.

ராம் வண்டியை ஓட்ட ரிஷி கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

“சியர் அப் மை பாய். இதுக்குலாம் நீ வருத்தப்படலாமா??”

“இல்லை அங்கிள் ஸ்டேஷன் வந்ததால எனக்கு வருத்தம் இல்லை. ஆர்த்தி இப்படி பண்ணிட்டானு தான் வருத்தமா இருக்கு அங்கிள்.”

“நீ அதை நம்புறியா??”

“எதை அங்கிள்??”

“ஆர்த்தி பாய்சன் சாப்பிட்டானு நீ நம்புறியா??”

“அங்கிள் என்ன சொல்றீங்க??”

“எனக்கு சந்தேகமா இருக்கு ரிஷி. அப்படி நிஜமாவே ஆர்த்தி பாய்சன் சாப்பிட்டா அந்த அம்மா அவங்க பேத்தியை பத்தி கவலைப்படுமா உன் மேல கம்ப்ளைன்ட் குடுத்துருக்க மாட்டாங்க.”

“அங்கிள் நீங்க என்ன சொல்றீங்க?? ஆர்த்திக்கு இப்படி ஆயிடுச்சுனு உடனே அவங்களுக்கு என் மேல கோவம் வரது சகஜம் தான.”

“சகஜம் தான் ரிஷி. ஆனால் உன் மேல அவங்க கம்ப்ளைன்ட் மட்டும் பண்ணலை உன்கிட்ட ரிட்டன் ஸ்டேட்மெண்ட் கேட்டு வாங்க சொல்லிருக்காங்க. அதான் எனக்கு டவுட்டே.”

“அப்ப ஆர்த்தி பாய்சன் சாப்பிட்டுருக்க மாட்டானு சொல்றீங்களா அங்கிள்??”

“அது தெரியல ரிஷி. ஹாஸ்பிட்டல் போய் அங்க இருக்குற நிலைமை பார்த்தா தான் தெரியும். உன்னை நான் வீட்டுல இறக்கிவிட்டு போய் பார்க்கிறேன்.”

“அங்கிள் நானு வரட்டுமா?? எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியனும் அங்கிள்.”

“சரி பா வா. ஆனால் உன் வீட்டுல எல்லாரும் பயந்துட்டு இருப்பாங்களே.”

“உங்க ஃபோன தாங்க அங்கிள் நான் வீட்டுல பேசிடுறேன்.”

“அதுவும் சரி தான்.” என்று கூறி அவர் மொபைலை தந்தார். ரிஷி தன் அப்பாவிற்குக் கால் செய்து பேசிவிட்டு வைத்தான். ப்ரகாஷிற்கு நிம்மதியாக இருந்தது. அவர் பார்க்க போயிருந்த லாயர் வேற கேஸ் விஷயமாக பிஸியாக இருப்பதாக சொல்லியதால் யாரைப் பார்ப்பது இப்பொழுது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது தான் ரிஷி இவருக்கு அழைத்தான். பேசி முடித்ததும் நிம்மதியாக உணர்ந்தார். ரிஷி தன் அப்பாவிற்குப் பேசிய அந்த இடைவெளியில் ராமும் ஹாஸ்பிட்டல் வந்து விட்டார்.

இருவரும் உள்ளே வந்து ரிசப்ஷனில் கேட்கப் போகும் பொழுது ஒரு மருத்துவர் ராமிடம் வந்து,”நீங்க யாமினியோட அண்ணா தான??”

“ஆமா நீங்க??”

“என் பேரும் ராம் தான் அண்ணா. நான் யாமினியோட கிளாஸ் மேட். யாமினி கல்யாணத்துக்குக் கூட வந்திருக்கேன் அண்ணா.”

“அப்படியா பா. ஓ சாரி நான் மறந்துட்டேன்.”

“அய்யோ இருக்கட்டும் அண்ணா. சாரிலாம் வேண்டாம். சரி வாங்க என் ரூமுக்கு போய் பேசுவோம்.” என்று கூறி அழைத்துச் சென்றார்.

“அப்புறம் சொல்லுங்க அண்ணா என்ன விஷயமா இங்க வந்தீங்க?? யாராவது சொந்தகாரங்க இங்க இருக்காங்களா??”

“அது இங்க ஆர்த்தினு ஒரு சூசைட் கேஸ் அட்மிட் பண்ணிருக்கீங்கள??”

“அய்யோ அண்ணா அதைப் பத்தி கேட்காதீங்க. இதைச் சொல்லகூடாது தான். ஆனால் நீங்க தெரிஞ்சவர் தான அதுனால சொல்றேன்.”

“என்னாச்சு பா??”

“எதார்த்தமா அந்த பக்கம் போனேன் அண்ணா அப்ப தான் இந்த விஷயமே தெரிய வந்துச்சு. அந்த பொண்ணு பாய்சன் சாப்பிட்டது என்னமோ உண்மை தான். ஆனால் அந்த பொண்ணு பாய்சன் குடிக்குறதுக்கு முன்னாடியே எங்க ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் அவங்க வீட்டுக்குப் போயிடுச்சு. அந்தப் பொண்ணும் ரொம்ப கம்மியா தான் பாய்சன் சாப்பிட்டுருக்கு. அந்த பொண்ணு இப்ப ரொம்ப நல்லா இருக்கு. ஜாலியா ஐ.சி.யு.ல ஜூஸ் குடிச்சுட்டு இருக்கு. ஆனால் வெளில என்னமோ உயிருக்கு ஆபத்து மாதிரி சீன் போட்டுட்டு இருக்காங்க. இதை எங்க போய் சொல்றது??” இதைக் கேட்டதும் ரிஷிக்கு மிகுந்த கோவம். விட்டால் அவர்களைக் கண்டிப்பாக எதாவது செய்திருப்பான். ஆனால் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

“இதை எப்படி பா உங்க ஹாஸ்பிட்டல்ல அலோ(allow) பண்ணாங்க??”

“எல்லாம் காசு செய்ற வேலை அண்ணா. இப்பலாம் காசு தான பேசுது.”

“அதை சொல்லு. சரி இப்ப அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்லைல??”

“இல்லை அண்ணா. நான் இப்ப வேற பேஷண்ட்ட செக் பண்ண போயிருந்தேன். அப்ப அந்த பொண்ணு அங்க கால் ஆட்டிகிட்டு ஜூஸ் குடிச்சுட்டு இருந்தா. எனக்குப் பயங்கரமா கோவம் வந்துருச்சு.”

“ஓ அப்படியா. சரி பா. அப்ப நாங்க கிளம்புறோம். ஒரு நாள் நீ உன் ஃபேமிலியோட கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வரனும் சரியா.”

“கண்டிப்பா அண்ணா. ஆமா வந்ததுல இருந்து பார்க்குறேன் தம்பி எதுவும் பேசலை?? உங்க பையனா அண்ணா??”

“இல்லை ராம். இவன் சம்யுக்தாவோட ஃபரண்ட்.”

“சம்யுக்தா??” யார் என்பது போல் கேட்டார்.

“யாமினியோட பொண்ணு தான் ராம்.” என்று ராம் கூற டாக்டர் ராமிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன அண்ணா சொல்றீங்க?? யாமினியோட பொண்ணு எதோ விப…” அவரை இடைமறித்து ராம் வேகமாக,”அவ இப்ப சென்னைல தான் படிக்கிறா. இன்ஜினியரிங் படிக்கிறா. நம்ம வாசு கம்பெனியை அவ தான் டேக் ஓவர் பண்ண போற.”

“ஓ சரி அண்ணா. நீங்களும் வீட்டுக்கு வாங்க அண்ணா. அண்ணியையும் கூட்டிட்டு வாங்க.”

“கண்டிப்பா. சரி பா நான் வரேன்.” என்று விடை பெற்றுச் சென்றார். ரிஷியும் அவரிடம் கூறிவிட்டு ராமின் பின்னால் சென்றான்.

“அங்கிள் அந்த டாக்டர் ஏதோ யுகியைப் பத்தி சொல்ல வந்தாரே. என்னமோ வி னு ஸ்டார்ட் பண்ணாரு!!”

“அது ஒன்னுமில்லை ரிஷி. அவர் சமியை ஆறு வயசில பார்த்திருக்கலாம். அதைச் சொல்லிருப்பார்.”

“இல்லை அங்கிள் வி னு ல ஸ்டார்ட் பண்ணார்.”

“அதுவா சமிக்கு ஆறு வயசு இருக்கும் போது யாமினி வாசு சமிலாம் எங்க சொந்த ஊர் விருத்தாசலத்துக்கு போனாங்க. மே பி அப்ப பார்த்திருக்கலாம். சரி அதை விடு. நான் சொன்னது சரியா போச்சு பார்த்தியா?? அந்த அம்மா பிளான் பண்ணி தான் எல்லாத்தையும் பண்ணிருக்கு.”

“ஆமா அங்கிள். சை நானும் உண்மைன்னு நம்பி ஆர்த்திக்காக ரொம்ப வருத்தப் பட்டேன்.”

“விடு ரிஷி. அதான் உண்மை தெரிஞ்சுடுச்சுல இனிமே நாம பார்த்துக்கலாம். அந்த அம்மாவ வச்சு செய்வோம். நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காத சரியா.”

“சரி அங்கிள்.” என்று ரிஷி கூறினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்