Loading

இளஞ்சிவப்பு கதிர்களைக் கொண்டு பூமியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தார் , அக்னி தேவன்…… அந்த காலை வேலையைப் பார்க்கவே ….. அமைதியும் ……. , மகிழ்ச்சியும் குடிக்கொண்டிருக்கும் பார்ப்பவரின் உள்ளத்தில்……அந்த காலை வேலையில் , சூரியனோ தன்னைப்போன்றே பூமியை அழகாக்கியே தீருவேன் என்ற எண்ணம் கொண்டு….., இந்த பூமியை தன்னுடைய கதிர்களைக் கொண்டு தங்க பூமியாக மாற்றிக்கொண்டிருந்தது சூரியன்…….

 

 

           காலங்கள் கடந்தாலும்

                   கதிரவா உந்தன்

         கடமை மாறாது

                   கால் முளைத்த பூவாய்

        பூமி உன்னைச் சுற்ற

                  பார்வையாளனாய் நான்

 

 

      எங்கும் பசுமையைக் கொண்டு , அந்த ஊரே அழகாக காட்சியளிக்க……..  

 

 

        நான் மட்டும் இந்த வீட்டில் தனியா வேலைப்பாக்கனும்னு என் தலையில எழுதி வச்சுட்டானா , இந்த கடவுள்….. இல்ல எங்க அப்பா ,அம்மா தான் இந்த வீட்டுக்கு வேலை செய்யுனு தத்து கொடுத்துட்டாங்களா?……. நான் மட்டும் இந்த சமையல் கட்டுல நின்னு தனியா கஷ்டப்படுறேனே , யாருக்காவது அக்கறை இருக்கா?…… இந்த வீட்ல யாராவது இருக்கீங்களா ?…… என்று கத்திக்கொண்டே பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தார் கண்ணம்மா……. பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டும் ஒருவரும் பதில் கூறவில்லை….. பக்கத்து அறையில் இருந்த ஒரு ஜீவன் அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்தார்….. அவர் அமைதியாக டீ குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்த ஜென்மத்தில் இனிமே டீ குடிக்க முடியாது போலவும் , இன்று தான் அந்த டீக்கு கடைசி நாள் போன்றும் இருந்தது…… 

 

         பக்கத்து அறையில் இருந்து எதாவது வார்த்தைகள் வாயில் இருந்து வரும் என்று எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தார் கண்ணம்மா….. 

         அந்த அறையில் இருந்து காற்று விடும் சத்தம் மட்டுமே கேட்டது……. அந்த அறையில் இருந்தவரே என்ன நடந்தாலும் வாய் மட்டும் திறக்கவே கூடாது…… நமக்கு சூடு சுரனை- என்ற ஒன்று இப்பொழுது நமக்கு இல்லவேயில்லை…… கொஞ்ச நேரத்திற்கு தன்மானத்தை மறந்துட்டு கல்லு மாதிரி இருக்கனும்…… காசா…? பணமா….? இருப்போம்…… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ,… அமைதியாக உட்கார்ந்து இருந்தார்…… 

அடேய் வேலப்பா…! உனக்கு கொஞ்சுண்டு கூட வா உப்பு போட்ட சாப்பாட்டை சாப்பிடல?….. உன் தன்மானத்தை அடகு வெச்சுட்டு இங்கு செவிடன் மாதிரி உட்கார்ந்து இருக்க?……

என்று அவருடைய மனமே அவருடன் சண்டைக்கு நிக்க…… வேலப்பனோ அமைதியா தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருக்க… — அவருடைய மனமோ ” அடேய், கிராதகா….” உனக்கு மனச்சாட்சியே இல்லையாடா?….. உனக்கு மனச்சாட்சியா இருப்பதிற்கு பதில் “அதோ தெருவில் படுத்துக்கொண்டு இருக்க நாய்க்கு இருந்திருக்கலாம் போல, “…… “அடேய்!…. என்னால ஒன்னு மட்டும் தாங்கிக்க முடியல ….?….. இப்படி எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்து இருக்கியே அதைப் பார்க்கும் பொழுது .,….. எங்கையாவது ஒடி போயிடலாமானு இருக்கு……

 

வேலப்பனோ சிரித்துக்கொண்டே, அட என் மனசே ” இங்க பாருங்க” …… உங்களை யாருக் கிட்ட அடகு வெச்சேன் , என் மனைவிகிட்ட தானே” ….. அதற்கு நான் ஏன் வெட்கம்படனும்…… சந்தோசம்தான் படனும்…… அவ இப்ப கொஞ்ச கோவத்துல இருக்கா , அதனால தான் இப்படி கத்துறா?…… உனக்கே அவளைப் பற்றி தெரியும் தானே….! அவளுக்கு நான் தான் உசுரு……. 

 

       அவருடைய மனமோ, “எப்படியோ போ ” நான் போறேன் என்று மறைந்தது……

சிறிது நேரம் கழித்து தன்னுடைய மனைவியின் கோவம் குறைந்ததா ?….. என்று பார்க்க எண்ணி தன்னுடைய தலையை சிறிது அறையின் வெளியே நீட்டிப்பார்க்க….. ஒரு கத்தரிக்காய் எங்கிருந்தோ அவரை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தது…… சில நொடிகளில் தன்னை சுதாரித்துக்கொண்டு , தன்னுடைய தலையை பின்னே இழுத்துக்கொள்ள……, நூலிழியில் தப்பியது அவருடைய தலை….. கத்தரிக்காய் வந்த வேகத்தில் சுவற்றில் மோதி வெடித்து சிதறியது….. அதைப் பார்த்த வேலப்பனுக்கோ , மனதில் சற்று பதட்டம் ஆரம்பம் ஆனது….. அப்பொழுது தான் தன் மனைவியின் கோபத்தை உணர ஆரம்பித்தார்…… தன்னுடைய மனதிற்குள் “டேய் வேலப்பா , நல்ல வேலையா சுதாரித்துக்கொண்டாய்”… நீ கதாரித்துக்கொண்டதால் , உன்னுடைய தலை தப்பியது”,…. இல்லை என்றால் கத்தரிக்காய்க்கு வந்த நிலைமை தான் உனக்கும் “…..என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்…… அவருடைய மனமோ “_சரி அதை விடு,…. இப்ப கண்ணம்மாவை எப்படி சமாதனம் பன்ணுவ?….. என்று கேட்க… — அவரோ அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற….. அவரின் மனமோ ” என்னமோ பண்ணு. ஆனால், எனக்கு எந்த சேதாரமும் ஆககூடாது என்று கூறி மறைந்தது…….

 

வேலப்பன், இவளை எப்படிதான் சமாதானம் பண்றதுனு தெரியிலையே…?… நாம வேணா வெளியே போயிடலாமா…?…. நம்ம வீட்டுக்குள்ள இருந்தா இன்னும் கோவம்படுவா….. கொஞ்ச நேரத்திற்கு நாம வேணா வெளியே போயிடுவோம்….. என்று நினைத்துக்கொண்டு மெதுவாக எழுந்து சத்தம் வராதபடி “பூனை நடையிட்டு, ” அந்த அறையை விட்டு வெளியே வந்தார்…… தனக்குள்ளே சமாதானம் செய்யும் பொருட்டு” வேலப்பா, நீ இந்த சமையல் கட்டை தாண்டி போயிட்டா போதும்” ….. என்று ஒவ்வொரு அடியாக கீழே குனிந்து காலின் செயல்களை கவனித்துக்கொண்டே நடக்க….. – அவரின் எதிரே இரண்டு கால்கள் அவரை நோக்கி நின்றுக்கொண்டிருந்தனர்….. யாருடைய கால் இது என்று பார்க்க வேண்டி , தன்னுடைய தலையை நிமிர்ந்து பார்க்க …. “அங்கே கோவமே உருவான தன் மனைவி , தன்னைப் பார்த்து முறைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாலே சற்று பயமாக இருந்தது….. ஆனாலும் சற்று தைரியத்தை வர வைத்துக்கொண்டு , தன்னுடைய மனைவியின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தார்…… கண்ணம்மா ,ஏதோ சொல்ல வாய்திறக்க போக ….. வீட்டின் உள்ளே அந்த வீட்டின் பெரிய மனுஷி கமலம் வந்தார்…… வந்தவர் இருவரையும் பார்த்தவிட்டு ….. இதுங்க நிக்கிறதே சரியில்லையே …. என்று நினைத்தவர் பேசத்தொடங்கினார்….

 

 

கமலம், டேய் வேலப்பா!!..– இங்க என்ன நடக்கிறது…. எதுக்கு டா …?…. இப்படி என் மருமக கோவமா நிக்குறா….?….. நீ என்ன பண்ணி தொலைச்ச ….?…. அவ அதிகமா கோபப்பட்டா , அவளுக்கு தான் உடம்பு சரியில்லாமல் போகும்னு தெரியும் தானே…… அப்பறம் எதுக்கு டா இப்படி நடந்துக்கிற……. அவளை கோபபடுத்தாம என்ன பிரச்சனையோ !! அதை பேசி தீர்த்துக்கொள்ளுற வழியை பாருங்கா ….. என்று கூறி தன் மகனைப் பார்க்க…. அவரோ என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்….. சில மெளனங்களுக்கு பிறகு பேசத்தொடங்கினார்……

 

வேலப்பன், “அம்மா” நான் என்ன செய்வது , நீங்களே தானே பார்த்துக்கொண்டு இருக்கீங்க….. நான் எப்பவாவது இவகிட்ட சண்டை போட்டு இருக்கேனா ?…… இல்லா நம்ம வீடு தான் இத்தனை வருஷத்தில் இவ்வளவு சத்தமா இருந்திருக்கா…..?….. இவ வேணும் சொல்றா….. நான் பெத்தது வேணானு சொல்லுது….. இருவருக்கும் இடையில் நான்தான் மாட்டிக்கொண்டு முழிக்கின்றேன் ….. என்ன பண்றதுனு நீங்களே ஒரு வழியைக் கூறுங்கள்….. என்னால என் மனைவியையும் விட்டு தரமுடியாது அதுக்குனு என்னுடைய மகளின் ஆசையையும் நிராகரிக்க முடியாது…… நான் இப்போது ஒரு நல்ல கணவனா முடிவு எடுக்காமல், ஒரு மகளின் தந்தையாக தான் என்னால முடிவு எடுக்கத்தோணுது….. நான் என்ன பண்றது…..நான் எடுக்கும் முடிவு இவளுக்கு சந்தோசம் இல்லையினு எனக்கு தெரியும்….. அதனால் தான் அமைதியாக இருக்கேன்…… நீங்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க….. என்று தன் தாலை பார்க்க….. அவரோ என்ன சொல்வது என்று தெரியாமல், ” இதுக்கெல்லாம் காரணம் “, அந்த இராட்சசி தான்….. எந்த முடிவு நீங்க எடுத்தாலும் எனக்கு சரிதான் ….. என்று கூறிவிட்டு, தன் வாய்குள்ளே தன்னுடைய பேத்தியை திட்டிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்…… சில நிமிடங்கள் கழித்து கண்ணம்மாவும் வேகமாக தனது அறைக்கு சென்று கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டார்…..

 

வேலப்பன், கோவமாக போகும் தன் மனைவியைப் பார்த்து மனதிற்குள் புன்னகை செய்துக்கொண்டார்…. தன்னுடைய மகளை எண்ணி மனதிற்குள் உற்சாகம் கொண்டார்…… தன்னுடைய மனதிற்குள் இந்த பெண்களை எப்படி சமாளிக்கிறது தெரியவில்லையே ….. என்று தன்னையே பரிதாபமாக கேட்டுக்கொண்டார்…..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்