Loading

எனதழகா – 47 ❤️

உள்ளே நுழைந்த அபியை முறைத்தாள். ஆனால் அவனோ அவளைப் பார்த்து, காதல் கொஞ்சம், மோகம் கொஞ்சம், கேலி கொஞ்சம், நக்கல் கொஞ்சம் என்று வதனத்திலேயே அனைத்தையும் காண்பித்தான்.

ஆனால், இவள் கோபத்தை மட்டுமே தத்தெடுத்துக் கொண்டாள். அவனுக்கு சரி சமமாக சளைக்காமல் இவளும் நயனத்தில் கோபக் கனல்களை கக்கி கொண்டிருந்தாள்.அவனும் முடிந்தளவு இவளை இலகுவாக்கும் பொருட்டு முயற்சி செய்தான். இவளும் போராடினாள். ஆனால் , முடியவில்லை ஏனென்றால் அவன் ஒரு விடாகொண்டன் .

வேலை பளுவின் காரணமாக மனதிற்குள்ளேயே திட்டி விட்டு ” என்ன வேணும்? எதுக்கு இப்படி வந்து உட்காந்திருக்க ? உன்னை யாரு உள்ளே விட்டது? ” என்று எரிச்சலை முகத்தில் அப்பட்டமாக காட்டினாள்.

அதற்கும் பதிலளிக்காமல் அவளை சைட் அடிப்பதே தலையாய கடமை போல் அமர்ந்திருந்தாள். இவள் மேலும் முறைத்து விட்டு, தன் வேலையில் மூழ்கினாள். இல்லை முயன்றாள். ஆனால் முடிய தான் இல்லை. அத்தகைய கடுப்பில் பி.ஏவை அழைத்து யார் இவரை உள்ளே வருவதற்கு அனுமதி கொடுத்தது?

” மேம் மறந்துட்டிங்களா ? இவரோட ப்ராஜெக்ட் நம்ம பண்ணிக்கிட்டு இருக்கோம் ” என்று அவன் கூறிய பின்னரே இவளுக்கும்  அதன் நியாபகம் வந்தது.

வேறு வழியில்லாமல் அவரை அனுப்பி விட்டு, இப்பொழுது எந்நிலையில் உள்ளது என்ற நிலவரத்தை அவனிடம் அனைத்தையும் விலாவாரியாக காட்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவனின் பார்வை மொத்தமும் அவளின் நயனத்தில்தான் பதிந்திருந்தது. அது போல் அவன் கவனம் வேறு எங்கோ இருந்தது. அதில் லேசாக எரிச்சல் வந்து விட்டது .

ரியா”ஹலோ சார்! நான் ஒன்னும் உங்களை மாதிரி வெட்டியா இங்க இல்லை. நீங்க செஞ்ச நல்ல காரியத்தினால் இங்க எவ்ளோ வேலை பாக்கி இருக்கு தெரியுமா? “

அபி ” அந்த நாளுக்கு அப்புறம் வேற எதுவுமே எம் மனசுல பதியல ரியா !😢நீ ஏன் இவ்வளவு பிடிவாதத்தில் இருக்க? வா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ” என்று அவன் கண் கலங்கி கூறினான்.

அவனைப் பார்த்து  இவளுக்கும் கண் கலங்கியது. அந்நாள் நினைவலைகளாக தோன்றியது இருவருக்கும்.

ஆருஷி ஆர்பாட்டம் செய்த நாளன்று, ரியாவை அபி தனியாக அழைத்து சென்று கார் பார்க்கிங்கில் நிறுத்தினான். அதில் கோபமடைந்து கை ஓங்க முற்பட்டாள்.  ஆனால், சுற்றுபுறம் கருதி தன்னைக் கட்டுபடுத்தி கொண்டு செல்ல முயல, அவளின் கையை மறுபடியும் பிடித்தான்.

அதில் அவள் உடல் நடுங்கியது. அவளின் கையை விடுத்து விட்டு இவன் திரும்பி தலை முடியை அழுந்த கோதி தன்னை சமன்படுத்திக் கொண்டான். பின்பு, அவள் சென்றிருப்பாள் என்று எண்ணி அவளிடம் பேசியே ஆக வேண்டும்  என்கின்ற வேகத்தில் அவள் அவ்விடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு ஒரு நிமிடம் உலகையே வென்றது போல் ஒரு பிரம்மை .அவளிடம் பேச முற்படுகையில் கையை காண்பித்து அவனின் பேச்சை நிறுத்தி “போய் எனக்கு காபி வாங்கிட்டு வா ” என்று கூறினாள்.

ஒரு நிமிடம் தான் கேட்டது தவறோ என்று நினைத்து முழித்துக் கொண்டிருந்தான். அதன் பின்னரே அவள் பெரிய சாப்பாட்டு பிரியை என்கின்ற ஞாபகம் வந்து  ” நான் எவ்ளோ பெரிய விஷயம் பேச வந்தேன். நீ என்ன கேட்கிற? ” என்பது போல் அவளைப் பார்த்தான் .

அதனைக் கண்டுகொள்ளாமல் வெயில் படாதவாறு காரின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவன் வாங்கி வந்து கொடுக்க , ” காபி கேட்டால் காபி மட்டும் தான் வாங்கிட்டு வருவியா?” என்று கேட்டு காபியை மிடறினாள்.

அவன் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு வடையை வாங்கி அவளிடம் கொடுத்தான். அவளும் ஒன்றும் கூறாமல் உண்டு விட்டான்.அதன் பின்னரே, நிமிர்ந்து அவனைப் பார்க்க ” ஒரு பேச்சுக்காகவாது சாப்பிடியானு கேட்க மாட்டியா டி நீ? ” என்று அபி அவளை ஆயாசமாகப் பார்த்தான் .

ரியா” இப்போ அது தான் உனக்கு முக்கியமா? “

ஒரு பெருமூச்சு விட்டு “உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ரியா!” என்று அபி மெதுவாக ஆரம்பித்தான். பேசு என்பது போல் அவனைப் பார்க்க, “இங்க இல்லை. என் கூட வா” என்று கூற, ஒரு நொடி கூட யோசிக்காமல் அவனின் கார் கதவைத் திறக்க முற்பட்டாள்.

வருவாளோ மாட்டாளோ என்கின்ற பரிதவிப்பில் இருந்தவனுக்கு இவளின் செயலில் சுட்டெரிக்கும் வெயிலில் சில்லென்று காற்று வீசியது போல் இருந்தது. ஆனால் அது ஒரு நிமிடமே. எங்கிருந்து வந்தனரோ அனைத்து கார்ட்ஸும் ரியாவை காரில் ஏறாதவாறு மறைத்துக் கொண்டனர்.

இதற்கு தான் அவசரப்பட்டு ஏறினாயோ என்று அபி ரியாவைத் தான் முறைத்தான். ஆனால், ரியா சிறிதும் பதட்டப்படாமல் அவர்களிடம் ” அஜ்ஜு கிட்ட நானாதான் போறேன். போய்ட்டு கால் பண்ணுறேனு சொல்லுங்க ” என்று அவள் கூறிய பின்பும் அர்ஜுனுக்கு அழைத்து அனுமதியை வாங்கிய பின்னரே அவளை விட்டனர்.

இத்தகைய மணித்துளிகளில் அபி மனதிற்குள்ளேயே “வீரியத்தை விட காரியம் பெரிது ” என்று சங்கல்பம் போல் சொல்லிக் கொண்டான்.

அதனாலேயே அவனால் பொறுமையை காத்துக் கொள்ள முடிந்தது. ஒரு வழியாக அபியும் ரியாவும் காரில் பயணம் மேற்கொண்டனர். இருவருக்குமே அப்பயணம் மனதிற்கு இனிமையைத் தந்தது. கண்மூடி அதை அனுபவிக்கும் நேரம் கார் நிறுத்தியதில் கண் விழித்தாள் ரியா.

நிமிர்ந்து பார்த்த பொழுது அங்கு அழகான ஒரு பீச் ஹவுஸ் இருந்தது. அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்.

“ஹக்கும் …. பேசுறதுக்கே ஆயிரத்து எட்டு செக்யூரிட்டி .இதுல இந்த ஆசை வேற எனக்கு இருக்காக்கும். இந்தாமா இப்போ நீ சாப்பிட வேண்டிய மாத்திரை” என்று அவள் கையில் திணித்தான்.

அவனை ஆச்சர்யமாகப் பார்க்க, “ரொம்ப வாயை ஓபன் பண்ணாத. உன் கார்ட்ஸ் தான் தந்தாங்க. பின்னாடி தான் நிக்கிறாங்க ” என்று கூறியவுடன் “த்தூ….. ” என்று கூறிவிட்டு மாத்திரையை விழுங்கி விட்டு கீழிறங்கி சென்று விட்டாள்.

“எதே ” என்று ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டே இவனும் கீழ் இறங்கி சென்றான்.

உள்ளே நுழைந்தவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. முகத்தை மூடி அழுதே விட்டாள்.

எனதழகா – 48 ❤️

அவன் காரை பார்க் செய்து விட்டு வருவதற்குள் இவள் உள்ளே நுழைந்தாள். யாருடைய வீடாக இருக்கும் என்ற யோசனையில் வாசல் கதவின் அருகில் நிற்க, நடந்து வந்த அபி கதவைத் திறக்காமல் காலிங் பெல்லை அடித்தான்.

முகம் சுருக்கி அவனைப் பார்த்து கொண்டிருந்த பொழுது , கதவு திறந்தது. உள்ளே நிவானும் வெளியில் ரியாவும்  நேர்கோட்டில் நின்று கொண்டிருந்தனர்.

ரியா ஒரு நிமிடம் பயந்து அபியிடம் திரும்பி “என்னடா என்ன கொல்ல போறீங்களா? ” என்று கேட்டு விட்டு, பின்பு அவளே இருவரையும் பார்க்கும் படி திரும்பி நின்று கொண்டு “அஜ்ஜு கார்ட்ஸ் இங்க தான் இருக்காங்க . என் மேல கைப் பட்டுச்சு….ச்சீ….. ச்சீ…. என் மேல சின்ன கீறல் விழுந்தால் கூட உங்க இரண்டு பேரையும் கொன்னு புதைச்சுடுவான் ” என்று பேசிய பிறகு, அவளே நன்றாக மூச்சை உள்வாங்கி வாசனையை உள் இழுத்து கண் திறந்து இளித்து கொண்டே நிவானை தள்ளி விட்டு வீட்டிற்குள் அவள் நுழைந்த இடம் உணவருந்தும் அறைக்கு.

அவளின் அரை நிமிட பேச்சையும், செயலையும் கண்டு திகைத்து விட்டான் நிவான். திரும்பி அபியை கேவலமான பார்வை பார்த்து “வேற பொண்ணே கிடைக்கலையா உனக்கு ? ” என்று கூறிவிட்டு, ரியாவின் செயலைக் கண்டு “உன் வாழ்க்கை எப்பவும் ஜாலியா இருக்கும் ” என்று கூற , அபி சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான்.

ரியா  ஒவ்வொரு பதார்த்தங்களையும்  வாசனை செய்து பார்த்து கொண்டிருந்தாள். இவளின் அருகில் இருவரும் வந்தவுடன் வேகமாக ஒரு ஸ்பூனை எடுத்து சிக்கன் கிரேவியை கொஞ்சம் எடுத்து அபியின் கையைப் பிடித்து அதில் வைத்து சாப்பிட கூறினாள்.

அதில் அதிர்ந்தவன் ” அடிப்பாவி ” என்று கூறி அவன் பார்க்க, நிவான் “தெளிவு தான் ” என்று அவனும் கூற, வேகமாக அந்த கிரேவியை  அபியின் கையிலிருந்து டிஸ்யூவால் துடைத்து விட்டு, நிவானின் கையில் வைத்து உண்ண கூறினாள்.

நிவான் அதிர்ந்து “ரொம்ப தெளிவு தான் “என்று கூறி உண்ண , அபி சிரித்தே விட்டான். நிவான் உண்டு விட்டு முகம் ஒரு மாதிரி ஆகியது. அபியை ரியா பார்க்க, அபி பதறி “ஏன்டா, இப்படி முகத்தை வைக்கிற? நான் ஏதோ கலந்த மாதிரி பாக்குறா? ” என்றான்.

“மூதேவி உப்பு போடலை ” என்று கூறி துப்பி விட்டான் நிவான்.அபியும் ருசித்துவிட்டு உப்பை சேர்த்தவுடன் “எல்லாமே செக் பண்ணுங்க. கெஸ்ட்டுக்கு ஒழுங்கா வைக்கணும்னு தெரியாதா உங்களுக்கு ” என்று கூறி சட்டமாக அமர்ந்து கொண்டாள்.

அபியும் நிவானும் அனைத்து பதார்த்தங்களையும் ருசி பார்த்துக் கொண்டிருக்க, “நிவான் எனக்கு ஜூஸ் வேணும் .ஜூஸ் போட்டு கொண்டு வா!” என்று கூறி போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதே !” என்று கூறி அபியை முறைக்க, அபி செல்ல முற்படுகையில், “நான் எந்திரிச்சு வெளியில் போயிடுவேன். நிவான் தான் போடனும் ” என்று நிமிராமலே கூறினாள்.

“மச்சான் லவ்வு மச்சான். ப்ளீஸ் கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்திருக்கேன் ” என்று அபி கெஞ்ச, தலையை அழுந்த கோதி ரியாவை முறைத்து கொண்டே ஜூஸ் போடச் சென்றான்.

“ஏண்டி ” என்று நிவான் சென்றபின், ரியாவை பார்த்து அபி கேட்க, ” அப்போ போக வா” என்று ரியா கேட்டாள்.அதன் பின் வாயைத்திறக்க அபி என்ன முட்டாளா. அமைதியாகி விட்டான்.

நிவான் லெமன் ஜூஸ் கொண்டு வந்தான். அதை வாங்கியவுடன் ரியா”லெமன் ஜூஸா “

நிவான் ” ஆமா! சுகர் இருக்கா உனக்கு சர்க்கரை பதிலா உப்பு போடனுமா “

ரியா ” சொல்லுற அளவுக்கு நல்லா இல்லை. இருந்தாலும் நாளைக்கு சிரிக்கிறேன் “

அபி ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான். இவள் மட்டும் எப்படி தான் புதிதாக பழகுபவர்களிடம் எளிதாக பழக முடிகிறது என்று ஆச்சர்யப் பட்டான். இருந்தாலும் தனது மச்சானையும் கேலி செய்கிறாளே என்று மனதிற்குள் ஒரு ஆனந்தம் இருந்தது அபிக்கு.

ரியா ” ஃபூல்! நீ தான் பெரிய வில்லனாச்சே .எல்லா டீடெயில்ஸும் கைக்கு வந்திருக்கும் இல்லையா. எனக்கு தான் முடியலைனு தெரியும்ல. ஜூஸில் ஐஸ் போட்டிருக்க ? “

நிவான் அவளின் உடல்நிலைக் கருதி ஐஸ் இல்லாமல் பழச்சாறு கொண்டு வந்தான்.

ரியா”ஞாபக மறதினு நினைச்சா முட்டாள் பயலா நீ ! லெமனுக்கு சளி பிடிக்கும்னு தெரியாதா ? என்ன ஸ்கூல் படிச்ச நீ? “

நிவான்  ஆப்பிள் ஜுஸ் கொண்டு வந்தான் .

ரியா ” அய்யோ ! ஆப்பிள் ஜுஸா எங்க வீட்டில் இப்போலாம் அது மட்டும் தான் தராங்க. இதுலாம் வியாதிகாரங்க சாப்பிடுறது . உவக்க் ….என்ன நோயாளி மாதிரி பாக்குற? ” என்று  அழும் நிலையில் கூற, நிவான் வேறு வழியில்லாமல் மாதுளம் பழச்சாறு கொண்டு வந்தான்.

அதை வாங்கும் பொழுதே ரியா ஏதோ கூற வர, “நீ குடிக்க வேணாம். வெளியே போ முதல ” என்று நிவான் கிளாசைத் தூக்க,  படக்கென்று வாங்கி சத்தமில்லாமல் குடித்து விட்டு ” என்னை தொந்தரவு செஞ்சதுக்கு பழிக்கு பழிடா ” என்று வாயிற்குள்ளேயே முணுமுணுத்தாள்.

அது நிவான் செவிக்கும் எட்டியது. திரும்பி கொண்டு சிரித்துக் கொண்டே அபியின் அருகில் சென்றான். இவள் குடித்து விட்டு தட்டை திருப்ப” இந்தாடி! நான் உன் கிட்ட பேசணும்னு சொன்னேன்” என்று அபி எகிறினான்.

“அபி எனக்கு டயட் டயட்னு சொல்லி உப்பு சப்பில்லாத சாப்பாடா கொடுத்து கொன்னுட்டாங்க. ஐ ஆம் டோட்டலி டயர்ட்.ப்ளீஸ் ” என்று ரியா சாதாரணமாக கூறினாலும், இருவரின் மனதிலும் நெருஞ்சி முள்ளாக குத்தியது.

நிவான் வேகமாக அனைத்து பதார்த்தங்களையும் எடுத்து வைக்க, ரியா இன்னும் இரண்டு தட்டுகளை வைத்து அவர்களையும் அமரச் சொன்னாள்.

நிவான் ” இல்லை நாங்க அப்புறம் சாப்பிடுறோம். இப்போ நீ சாப்பிடு ” என்று வேகமாக வைத்தான்.

ரியா ” ஏன்டா, இதுல விஷம் வச்சிருக்கிங்களா ? ” என்று தன் தட்டை இழுத்தாள்.

நிவான் “எது டாவா?”

ரியா “ஆமா!எனக்கு டவுட்டாவே இருக்கு. நீங்க எதாச்சும் கலந்து கொடுத்து எனக்கு மயக்கம் வர வைச்சு வேற எங்கையாச்சும்  கண்னை தோண்டி பிச்சை எடுக்க விட்டுட்டா? ” என்று பதார்த்தில் ஒரு பார்வையும் இவர்களை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டே கூறினாள்.

அபி “பிச்சையா? ” என்று குழம்பி போய் கேட்டான்.

நிவான் “மேடம் குழந்தையாம் ” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினான்.

அபி “ஆமா ஆமா சைஸ்ல அப்படித் தான் இருக்க . ஆமா உனக்கு இவ்ளோ பேச தெரியுமா? ” என்று  உணவுகளை மூவருக்கும் பகிர்ந்து வைத்துக் கொண்டே
ஆச்சர்யமாக கேட்டான்.

ரியா ” ஏன்? ” என்று வாய் நிறைய பிரியாணியை வைத்துக் கொண்டே கேட்டாள்.

“தெரிஞ்சு இருந்தால் உன் பக்கமே வந்து இருக்க மாட்டான் இல்லையா அதான் கேட்குறான் ” என்று நிவான் நக்கல் செய்தாலும் அவளுக்கு தண்ணீர் குவளையில் இருந்து தண்ணீரை கிளாசில் வைத்தான்.

ரியா  சாப்பிட்டுக் கொண்டே “என்னையே இப்படி சொன்னால் ஆகாஷ் , ஆதிரா கிட்ட பேசினால் என்னென்ன சொல்லுவீங்க ” என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு  நிவான் உண்டான். அதை அபி கவனித்துவிட்டு வேறு வேறு பேச்சினுள் நுழைந்தான். நிவானும் புரிந்துக் கொண்டு அமைதியாக உண்டான்.

நிவானின் அமைதி ரியாவிற்கு ஏதோ போல் இருக்க “நிவான் உன்னை ஏன் சாப்பிட சொன்னேன் தெரியுமா? ” என்று கேட்க, ஏன் என்பது போல் நிவான் பார்க்க,

“நீ எனக்கு எடுத்து வைக்கிறேனு சொல்லி கொஞ்சமா வச்சிட்டினா ?” என்று ரியா புருவம் உயர்த்தி கேட்க, நிவான் கடுப்பாகி  வாயில் கை வைத்து காண்பித்து “கொஞ்சம்  வாயை மூடிட்டு சாப்பிட்டு தொலை ” என்று கூற , “ச்சீ….. போடா போண்டா மூக்கா…. அபி என்ன பேசனும் வா ” என்று கூறி கை கழுவ சென்று விட்டாள்.

அபி தான் சிரித்துக் கொண்டே அவளை கலை நயமாக மாற்றிய ஒவ்வொரு ஓவியத்தையும் காண்பிப்பதற்கு அவனின் ஓவிய அறைக்கு கூட்டிச் சென்றாள்.

பார்த்து பிரமித்தவள் கண்கள் கலங்கி முகம் புதைத்து அழுதாள். ஆனால், அது ஐந்து நிமிடமே . அடுத்து ஒரு கேள்வி கேட்டாள். அதில் ஆடிப் போய் விட்டான் அபி.

கீர்த்தி ☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்