Loading

அத்தியாயம் – 17

“எனக்கு ரொம்ப லோன்லியா இருக்குடா..” என்றாள் எங்கோ வெறித்தபடி.

அவளது பிரச்சனை என்னவென்று புரிந்தாலும், அதற்கான வேலையைச் செய்துவிட்டாலும்.. இப்பொழுது அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று ராகவுக்குப் புரியாத நிலை. எனவே எதுவும் பேசாது அவன் அமைதியாய் இருக்க, மணியே மேலும் தொடர்ந்தாள்.

“எனக்கு.. நான் பாட்டியை மிஸ் பண்றனோன்னு தோனுது. இதுவரைக்கும் அவங்கள விட்டுப் பிரிஞ்சு இருந்ததே இல்ல நான். இப்போ அவங்க இல்லாம இருக்கவும் மனசுக்குள்ள ஒரு மாதிரி பாரமா இருக்கு.

நான் அவங்ககிட்ட பேசலாம்னாலும், ஒன்னு டைமிங் செட் ஆகமாட்டீங்குது. இல்ல.. அவங்க என்கிட்டே பேசப் பிரியப்படலன்னு நினைக்கறேன்..” என்றால் குரல் கம்ம!

அவள் சோகத்தில் ராகவுக்கு மகிழ்ச்சி பிறந்தது!

அது அவள் பிரச்சனை ராகவுடன் தனித்திருப்பது அல்ல.. அவள் பாட்டியைப் பிரிந்திருப்பது தான் என்ற தெளிவில் பிறந்த மகிழ்ச்சி!

அவளுக்குத் தெரியாமல் முகம் திருப்பி ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியவன், “இல்ல மணி.. இப்போதைக்கு நீ பாட்டிகிட்ட எதுவும் பேசாம இருக்கறது தான் நல்லதுன்னு நான் நினைக்கறேன்..

ஏன்னா.. பேச்சு வாக்குல நாம் டைவரஸுக்கு அப்பளை செய்திருக்கறத பத்தி நீ ஏதாவது அவங்ககிட்ட சொல்லிட்டா.. அது பிரச்சனையாகிடும்.

எல்லாம் முடிஞ்சு ஒரு ரிசல்ட் வந்த பிறகு அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கறது தான் நல்லதுன்னு நான் நினைக்கறேன்.. அதுவரைக்கும் நீ பாட்டிகிட்ட பேசவேணாமே ப்ளீஸ்..” என்று அவன் கூறிய பதிலில் மணியின் இதயம் அதிர்ந்தது!

‘ஆமாம்.. இவனை டிவர்ஸ் செய்யப் போறேன்.. இவனை விட்டுப் பிரியப் போறேன்..’ என்ற நினைவே அவளது உடலெங்கும் அதிர்வைக் கொடுக்க, கண்களில் சுரந்த கண்ணீர், கீழே வடிந்துவிடாமல் கண் மூடியவள், அவன் தோள் மீதே தலை சாய்த்தாள்.

அவள் பாட்டியிடம் பேச வேண்டாம் என்று கூறியதற்குத் தான் இப்படி வருந்துகிறாள் என்று எப்பொழுதும் போலத் தவறாகப் புரிந்துகொண்ட ராகவோ.. உள்ளுக்குள் தவித்துப் போனான்.

சற்று நேரம் அவளைத் தன் தோளிலேயே சாய வைத்திருந்தவன், பின் மெதுவாக.. “எங்கயாவது வெளில போயிட்டு வரலாமா?” என்றான்.

அவன் தோளிலிருந்து மெல்லத் தலை தூக்கியவள், “எங்க?” என்றாள் மிருதுவாக.

அவளது மனநிலையை நேராக்கும் பொருட்டு.. தன் சோகத்தை.. அது கொண்ட கேவலை உள்ளுக்குள் புதைத்தவன்.. “ஃபோர் எ டேட்!” என்று சாதாரணமாகக் கூறிக் கண்ணடிக்க, ஒரு கணம் மிரண்டவள், பின்பு அவனது குறும்பு புரிந்து.. “ச்சே.. உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்..” என்று குறைபாட்டாள்.

ஆனால் அவனோ.. “ஹேய்.. இல்ல சீரியஸா தான் கேட்கறேன்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படிப் புருஷனும், பொண்டாட்டியுமா.. இல்ல ஒரு ஆணும், பெண்ணும் இப்படி சரசமா வெளில சாப்பிடப் போனா அது டேட் தான்.. தெரியுமில்ல?” என்று கேட்க, அவளுக்கோ தொண்டைக்குள் வார்த்தைகள் தந்தியடித்தன!

‘இப்போ நாம புருஷன், பொண்டாட்டியா.. சரசமா டேட் போறோமான்னு இவன்கிட்ட எப்படிக் கேட்கறது?’ என்று அவள் தயங்கினாலும் வெளிப்படையாக..

“ஹ்ம்ம்.. இப்படியெல்லாம் காமெடி பண்ணித் தான் என் மனநிலையை நீ மாத்தணும்னு இல்ல.. சும்மாவே வெளில போய்ச் சாப்பிட்டுட்டு வரலாம்னு சொன்னாலே நான் வந்துடுவேன்..” என்று கூற, ராகவ் சிரித்தான்.

“ஆமாமா.. சாப்பாடுன்னு சொன்னா போதுமே.. மேடாமோட முகம் பளிச்சுன்னு எரியுமே..” என்று கலாய்த்தாலும், தான் கூறுவது உண்மையாகவே இவளுக்குப் புரிகிறதா.. அல்லது அந்தப் பேச்சைத் தவிர்க்க எண்ணி.. நாம் இருவரும் பிரிவது தான் நல்லது என்பதை மறைமுகமாகக் கூறும் பொருட்டு இவள் இந்தப் பேச்சை இப்படித் தவிர்க்கிறாளா என்று ராகவுக்குப் புரியவே இல்லை.

அவன் குழம்பியபடியே இருக்க.. மணி, “நான் போய் ரெடியாகிட்டு வரேன்.. நீயும் சீக்கிரம் ரெடியாகு..” என்று கூறிவிட்டு அவள் முன்னே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும், கீழேயே இருந்த விருந்தினர் அறையில் அவன் தயாராகிக் கொண்டு வந்தான்.

கருநிற பார்ட்டி ஷர்ட்டும், அதே கருநிறத்தில் ஜீனும் அணிந்து அவன் தயாராகி வர, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளி வந்தவளைப் பார்த்து மூச்செடுக்க மறந்தான் ராகவ்!

முழுதான கருமையில், ஒற்றைக் கை மட்டும் நீண்டிருக்க, தோளிலிருந்து மற்றொரு கை வெறுமையாய் இருக்க, முட்டிவரை இறுக்கிப் பிடித்திருந்த உடை, அந்த உடைக்குப் பொருத்தமாக நீளமான வெண்கற்கள் மின்னிய காதணியும், ஒற்றைக் கையில் மின்னிய அவளுக்கு மிகவும் இஷ்டமான.. கூடவே பொருத்தமான கருநிறக் கற்கள் பதித்த வெள்ளைத் தங்கக் கைக்கடிகாரமும் என ராகவின் காதலை மிகவுமே சோதித்தது.

அவளுக்கு முகம் திருப்பி ஒரு கணம் கண்களை இறுக்க முடித்த திறந்தவன், ‘அடியேய் மஞ்சக்கிழங்கே.. இத்தனை அழகெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எங்கடி ஒளிச்சு வச்சிருந்த?’ என்று உள்ளுக்குள் நொந்தபடி.. “உஃப்ப்ப்ப்..” என்று இதழ் குவித்து ஊதிக்கொள்ள, அதைக் கவனிக்காத மணியோ.. “எப்படி இருக்கு என் ட்ரெஸ்?” என்று கேட்க, அவனோ அவள்புறம் திரும்பாமலேயே..

“ஹ்ம்ம்.. எல்லாம் நல்லா தான் இருக்கு.. கிளம்பு போலாம்..” என்று கூற.. ‘அதைத் திரும்பிப் பார்த்தது சொன்னாத் தான் என்னவாம்..’ என்று தனக்குள் கூறிக்கொண்டு பழிப்புக் காண்பித்தாள் அவள்.

இருவரும் ஒன்றாய் காரில் சென்று, அவளுக்குப் பிடித்த உணவகத்துக்குச் செல்ல, அங்கு ஏற்கனவே ராகவ் டேபிள் ரிசர்வ் செய்திருந்ததால், உடனேயே போய் டேபிளில் அமர்ந்துவிட.. அந்த அறையிருளில் மணியை விட்டுப் பார்வையை விலக்க முடியவில்லை ராகவால்.

ஆனால் அவளை வெளிப்படையாகப் பார்ப்பதும் தவறாகிப் போய்விடுமோ என்று அவளைப் பார்ப்பதை சிரமத்துடன் தவிர்த்தவன், உள்ளுக்குள்.. ‘சொந்தப் பொண்டாட்டிய கூடச் சுதந்திரமா சைட் அடிக்க முடியலையே.. இந்த நிலைமை எந்தப் புருஷனுக்கும் வரக் கூடாதுடாப்பா..’ என்று எண்ணியவன், வேறு வழியின்றி போனுக்குள் புகுந்து கொண்டு, அவ்வப்பொழுது ரகசியமாக அவளைப் பார்வையால் தழுவிக்கொண்டிருந்தான்!

ஒருகட்டத்தில் அவன் பார்ப்பதை மணியும் பார்த்துவிட, களவு செய்து மாட்டிக்கொண்டவனைப் போலத் திகைத்துத் திருத்திருத்தவன், பார்வையைத் தழைத்துக்கொள்ள..

“என்ன பார்க்கற?” என்று குரலில் உணர்ச்சியின்றி தனது புருவங்களை ஏற்றி இறக்கி அவள் கேட்க, ராகவின் தலை இன்னமும் தாழ்ந்தது.

அவனைப் பார்த்துக் கைகளைக் கட்டிக் கொண்டு மீண்டும் அவள் அதே கேள்வியைக் கேட்க.. அவளை நிமிர்ந்து நேரடியாகப் பார்த்தவன்..

“உன்ன தான் பார்த்தேன் போதுமா?” என்று சற்று குரலை உயர்திக் கூற, மணியோ அவனைப் பார்த்தது திகைத்து விழித்தாள்.

அவளது பார்வையில் மீண்டும் தலை குனிந்தவன்.. “என்ன செய்யறது.. என்னால முடில.. நிஜமா இது தான் எனக்கு நரகமா இருக்கு..” என்று கூற, அதற்குப் பதிலாய் மணி ஏதோ கூறும் முன்..

“இல்ல மணி.. என்னால இனி இங்க இருக்க முடியாது.. வா கிளம்பலாம்..” என்று கூறி அவளைப் பார்க்காமலேயே எழுந்து செல்ல.. அவனுக்கு என்னவானது.. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எதுவும் புரியாத குழப்பத்தில்.. “ராகவ்.. ராகவ் நில்லு ஒரு நிமிஷம்..” என்றபடி அவனை மணி பின்தொடர, அவளைத் திரும்பியும் பார்க்காது வேகவேகமாகச் சென்றவன், காருக்குள் ஏறி அமர்ந்து தன் இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்தபடி மணி வந்து சேருவதற்காகக் காத்திருந்தான்.

மணி அருகில் அமர்ந்ததை உணர்த்தும், அடுத்த நொடியே அவன் காரைக் கிளப்ப, அந்த உயர் ரக பென்ட்லியோ, அவன் கிளப்பிய வேகத்தில் மூன்று நொடிகளுக்குள் தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டியது!

“ராகவ் என்னாச்சு உனக்கு?” என்று மணி மீண்டும் மீண்டும் கேட்டதற்கு ஒரு முறை கூடப் பதில் கூறவில்லை அவன். அவள்புறம் திரும்பியும் பார்க்காது அவன் புயல் வேகத்தில் காரைச்செலுத்திக் கொண்டிருக்க, மணிக்கோ அவனது இந்தக் கோபமுகம் கண்டு உள்ளுக்குள் உதறல் எடுத்தது!

‘இப்போ என்ன ஆச்சுன்னு இவன் இவ்வளவு கோபத்தோட இருக்கான்? நான் என்ன செய்தேன் இவன?’ என்று உள்ளுக்குள் குழம்பியபடி கார் சீட் பெல்ட்டை போட்டுகொண்டு பயத்துடன் அமர்ந்திருந்தாள் மணி.

வீட்டுக்கு வந்ததும் காரை ஷெட்டில் நிறுத்தியவன், வேகமாக வீட்டுக்குள் செல்ல, அவன் பின்னாலேயே விரைந்த மணியோ, ராகவின் சட்டைக் காலரைப் பிடித்திழுத்து நிறுத்தினாள்.

“ராகவ்.. நில்லு! உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் இப்படி பிஹேவ் பண்ற?” என்று அவள் கேட்க.. அதற்கு மேல் பொறுக்க முடியாதவனோ.. “எனக்கு நீ தாண்டிப் பிரச்சனை?” என்று அந்த வீடே அதிரும்படி இரைந்தான்!

அந்த இரைச்சலில் அதிர்ந்து விழித்த மணியோ.. “ராகவ்.. நான் தான் உன் பிரச்சனை இல்ல? ஆமா.. எனக்குத் தெரியும்.. நான் தான் உன்னோட பிரச்சனை..” என்று வேறு விதமாகப் புரிந்து கொண்டு தன்னையே நொந்தபடி கூற, தலை குனிந்தபடி நின்றிருந்தவளை, கன்னத்தை வன்மையாகப் பிடித்து நிமிர்த்தினான் ராகவ்.

“என்ன தெரியும் உனக்கு? என்ன தெரியும் உனக்கு?

ஆமா.. என் பிரச்சனை நீ தான்.. ஆனா உன்னால எனக்குள்ள என்னென்ன பிரச்சனைன்னு தெரியுமா?

உன்மேல எனக்கே தெரியாம.. எப்போ உருவாச்சுன்னே தெரியாத காதல் தான் பிரச்சனைன்னு உனக்குத் தெரியுமா?” என்று அவன் மீண்டும் கத்த.. நிச்சயமாய் அதிர்ந்து தான் போனாள் மணி.

“ராகவ்.. நீ..” என்று அவள் கூறுவதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவன், மேலே தொடர்ந்தான்.

“உன்ன பக்கத்துலயே வச்சுக்கிட்டு, நன்றாக வேதனையோட உன்கிட்ட இருந்து விலகி இருக்கேன். உன்ன பார்க்கத் துடிக்கற கண்களையும், அணைக்கத் துடிக்கற கைகளையும் கட்டுப்படடுத்த முடியாம தவிச்சுட்டு இருக்கேன்.

ஆனாலும்.. உனக்காக.. உனக்கே உனக்காக உன்ன விட்டுப் பிரியவும் முடிவெடுத்துட்டேன்.. இத்தனையும்.. இத்தனையும் செய்தும் கூட.. இதோ நீ என் கூட இருக்கப்போற இந்தக் கொஞ்ச நாளை என் மனசுக்குள்ள விதை போட்டுப் பாத்தி கட்டி வளர்க்க ஆரம்பிச்சுருக்கேன்..

ஆனா உனக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது.. உனக்கு உன்ன பத்தி மட்டும் தான் அக்கறை.

அன்னைக்கு நீ கேட்ட இல்ல? உன்ன பிடிக்காம நான் எதுக்கு உன்ன கல்யாணம் செய்யச் சம்மதிச்சேன்னு.. அது தப்பு.. நான் உன்ன பிடிச்சதால தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.

எஸ்.. ஐ.. லவ்.. யூ.. ப்ளாடி இடியட்..

உன்ன அணுஅணுவா காதலிக்கறேன்.. அந்தக் காதலால தான் உன்னை விட்டுப் பிரியவும் முடியாம.. உன்கிட்ட என் மனச சொல்லவும் முடியாம தவியா தவிக்கறேன்..

நாம பிரியப் போறோம்ன்ற நிதர்சனத்தை ஏத்துக்க முடியலடி என்னால.. ஆனா எனக்காக உன் சந்தோஷத்தைக் கெடுக்கவும் என்னால முடில..

என் கூடவே காலத்துக்கும் இரு, உன்ன நான் என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறேன்னு கெஞ்சத் துடிக்குது என் மனசு.. ஆனா உனக்கு விருப்பமில்லாத உறவுக்கு உன்ன கட்டாயபப்டுத்த முடியல என்னால.. ச்சே.. நிஜமா நன்றாக வேதனைன்னா அது இது தான்..” என்று அவன் அத்தனை நாட்கள் மனதில் சுமந்திருந்த அழுத்தமெல்லாம் உடைப்பெடுக்கக் கூற, அவனையே கண்கள் கலங்கப் பார்த்திருந்தவள்..

“இது எனக்கு விருப்பபமில்லாத உறவுன்னு யார் சொன்னா?” என்று கேட்டாள் நிதானமாக!

அவளது கூற்றில் ராகவ் அவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்க்க.. மணியே மேலும் தொடர்ந்தாள்..

“சொல்லு ராகவ்.. டிவோர்ஸ் பத்தி முதல்ல யார் பேச்செடுத்தா? நீயா? இல்ல நானா?” என்று அவள் கேட்க, ராகவ் அதிர்ந்தான்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
17
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்