Loading

தன் முன்னால் ருத்ரகாளியாக நிற்கும் அவளிடம் சாந்தமான குரலில் சொன்னான், சொன்னா புரிஞ்சுக்கோ நிலா, அவன் கூட உன்னால கடைசி வரைக்கும் சந்தோஷமா வாழ முடியாது, உன் வாழ்க்கையே நரகம் ஆகிடும் நான் சொல்றது கேளு,

அவன் சரியான முரடன், குடிக்காரன் அதோட பொம்பள பொறுக்கி……..

என்றவனை போதும் என்பது போல் கையை உயர்த்தி சைகை செய்தவல்,
இனி ஒரு வார்த்தை என் மாமன பத்தி தப்பா பேசுன அவ்வளவு தான் உனக்கு மரியாதை என்றவள் அவனை சிறிதும் சட்டை செய்யாது சென்றுவிட்டால்.

செல்லும் அவளையே இயலாமையோடும் காதலோடும் பார்த்துக்கொண்டிருந்தன் ஜீவா.
…………………..‌………………………………………………………
தன் முன்னால் கண்ணீரோடு நிற்கும் அவளை பார்க்க பார்க்க இன்னும் இன்னும் கோபம் தலைக்கேறியது அவனுக்கு,

ஏய்! நிறத்துடி எதுக்குடி இப்போ ஒப்பாரி வைக்குற,

அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்குது மாமா

அதுக்கு நான் என்னடி பன்றது, உனக்கு புடிச்சுருந்தா உங்க அப்பன் பார்த்த மாப்பிள்ளைய கட்டிக்க யாரு வேணானு சொன்னா, அத விட்டுட்டு இங்க வந்து எதுக்கு ஒப்பாரி வைக்குற,

இன்னொறு வாட்டி இப்படி இங்க வந்து ஒப்பாரி வச்ச உன்ன என்ன பன்னுவேனு எனக்கே தெரியாது ஜாக்கிரதை என்று ஒரு விரலை நீட்டி எச்சரித்தவன்  கட்டுகடங்காத கோவத்தோடு சென்றுவிட்டான்.
…………………………………………………………………………..
தன்னறைக்கு வந்தவனுக்கு அவளது கலங்கிய முகமே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவனை இம்சை செய்தது.

கண்ணாடி முன்பு நின்றவன் தனது சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை கழட்டி அவனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கும் நிலா என்ற பெயரை வருடி கொடுத்தவனின் கண்கள் அவனையும் மீறி கண்ணீரை சுரந்தது.

அதை புறங்கையால் துடைத்தவன், எல்லாம் உன் நல்லதுக்குதான் புள்ள இப்ப புரியாது போக போக புரிஞ்சுப்ப என்றவன் படுக்கையில் சரிந்தான், அவன், யாழ்குமரன்.
…………………………………………………………………………..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்