Loading

“பச்சை பசேலென இரு புறமும் மரங்கள், நடுவில் நீளமான சாலை, இதமான தென்றல் காற்று, அருகில் தன் மனம் கவர்ந்த நாயகன் இதை விட வேற எண்ண வேண்டும் அஞ்சலிக்கு“,

“அந்த ரம்மியமான சூழலை கண் மூடி இரசித்தவாரே தன்னவனுடன் கைக்கோர்த்து நடந்தாள், ஏதேதோ பேசினால்,
கண்களாலே காதல் செய்தால், நாணம் கொண்டால், சிரித்தால், அவனை சிரிக்க வைத்தால், இருவரும் சேர்ந்து டூயட் பாடும் நேரம்,

” பெண்ணவளின் மீது ஜில்லென்று எதோ விழ திடுக்கிட்டு கண் விழித்தவள் கண்டது என்னவோ,
கையில் வாளியுடன் தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் தன் தாயை தான்”.

அப்போது தான் உணர்ந்தால் தான் இவ்ளோ நேரம் கண்டது எல்லாம் கனவென்று.
அசடு வழிய சிரித்தவள்,தன்னை கண்களாலே பொசுக்கி கொண்டிருக்கும் தன் தாய் சாவித்திரியை,

சமாளிப்பதற்காக பொய்கோபம் கொண்டு ம்மா என்னம்மா, காலங்காத்தாலே இப்படி என் மேல பச்ச தண்ணியை ஊத்திட்ட, எழுப்பி விட்டா எழுந்துக்க போரேன் அதுக்கு எதுக்கு தண்ணீய ஊத்துற போமா என்று பொய்யாய் சலித்துக்கொள்ள,

மேலும் அவளை முறைத்த சாவித்திரி யாரு? நீ எழப்புனா எழந்துக்குவ அரை மணி நேரமா ஓயாம கத்துறன், எருமை மாடு மாதிரி தூங்கிட்டு ஏன் தண்ணீய ஊத்துனேனு கேள்வி வேற கேக்கரவ,

“நைட்டே உங்கிட்ட என்னடி சொன்னன் காலையில சீக்கிரமா எழுந்துக்கோ நிறைய வேலை இருக்குனு சொன்னேனா இல்லையா அப்பறம் என்னடி இந்த தூக்கம் தூங்குற போடி போய் முகம் கழுவிட்டு சீக்கிரம் வா, நான் கீழ போறேன்”.

“தன் தாய் சென்றதும் முகம் கழுவி கீழே வந்தவள் கண்டது என்னவோ அரை தூக்கத்தில் காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்த தன் தந்தையைத் தான்”.

“என்ன தந்தையாரே! உங்களையும் உங்க தர்மபத்தினி எழப்பி விட்டுடாங்களா,

“ஆமாடா அஞ்சுமா உங்கம்மா நாலு மணிக்கே எழுப்பி விட்டுடா, ஏன் தூக்கமே போச்சி என்று புலம்பினார்அவளது தந்தை கனகராஜ்“.

“எல்லாம் அவனால வந்ததுப்பா, சார் பாரீன்ல இருந்துதான வராரு எதோ ஒலிம்பிக்ல தங்கம் வாங்கிட்டு வந்த மாதிரி இந்த அம்மா ஓவரா தான் பில்டப் கொடுக்கறாங்கா ஷப்பாாாா.. என்னால முடியல”,(  அவளுக்கு டூயட் பாட முடியலங்கற கடுப்பு)

“மெதுவா பேசு அஞ்சுமா நாம பேசுறது உங்க அம்மா காதுல மட்டும் விழுந்து அவ்ளோதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சுடுவா”,

“அதனால உன் அண்ணன் வர வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருடா தங்கம்”

“நீங்க சொல்றதும் சரிதான்பா என்றவள் அவள் அம்மாக்கு சமையலில் உதவி செய்ய கிச்சன்கு சென்றுவிட்டால்”.
———————————————————————

ஏய்! இந்தாடி நிலா பொழுது விடிஞ்சு எம்மா நேரம் ஆவது இன்னும் வயசு புள்ளக்கு என்னடி தூக்கம்,

இப்டி போர இடத்துல தூங்குனா உன் மாமியாகாரி என்னதான் குறை சொல்லுவா, புள்ளைய வளர்த்து வச்சிருக்கா பாருனு,

இப்டி புலம்பி கொண்டிருக்கும் தன் மனைவியை நோக்கி வந்த ராசு,
ஏன்டி சரசு என்னத்துக்கு இப்படி காலையிலே என் மவளே வையரவ,

சத்த நேரம் தூங்குட்டுமடி போர இடத்துல இப்படியெல்லாம் தூங்க முடியுமோ முடியாதோ? இங்க இருக்க வரைக்கும் அது இஷ்டம் போல இருக்கட்டும்.

“அத தான்யா நானும் சொல்றன் இங்க இப்படி தூங்கி பழக்கிட்டா அப்புறம் உடம்பு சுகம் கத்துக்கும், போர வீட்டிலயும் இப்படி தூங்க தான் தோனும் அதான் இப்பவே அவள வேரசா எழுந்துக்க பழக்கி விடுறேன்”.

இன்னைக்கு ஒருநா விட்டுடு சரசு புள்ள தூங்கட்டும், நான் வயக்காடு வரைக்கும் போய்டு வாரன் என்றவர் வயலுக்குச் சென்றுவிட்டார்.

சரசும் தன் மகளை எழப்பாது, வீட்டு வேலை செய்ய சென்றுவிட்டார். இவர்களது சம்பாஷைணைகள் எதுவும் தெரியாத அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்
——————————————————————————-

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்