Loading

கோவை மாநகரில் அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் இரவு உணவுக்காக அனைவரும் டைனிங் டேபிள் மீது காத்திருந்தனர். தங்கள் வீட்டின் செல்லப் பிள்ளை ஹாஸினிகாக.

ஹாசினியின் அப்பா சந்திரன் அவரின் மனைவி ராசாத்தி. ராஜீவ் ஹாசனியின் அண்ணன் ஸ்ருதி ஹாசனியின் அண்ணி.

ரித்திக்கா ஹாசினியின் அண்ணன் மகள்  அந்த வீட்டின் செல்ல குட்டி மூன்று வயது இதுதான் அவர்களது குடும்பம்.

ஹாசினி food ப்ரோடுக்ட்ஸ்,  ஹாசினி ஷாப்பிங் மால்,  ஹாசினி பட்டு மஹால். ஹாசினியின் அப்பா,  ஹாசினியின்  அண்ணன்,  ஹாசினி  மூன்று பேரும் ஒவ்வொரு துறைகளை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பட்டு மஹால் பொறுப்பு ஹாசினி உடையது.

ஹாசினி பட்டு சென்டர் இன் ஹெட் ஆபீசில் இருந்து அப்போதுதான் வந்தாள்  சாரி… சாரி.. வந்து விடுகிறேன் என்று குளியல் அறைக்குள் நுழைந்தவள்  பத்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.

டைனிங் டேபிள் மீது வந்து அமர்ந்ததும்  எல்லாரும் சீக்கிரம் வந்துட்டாங்க நீங்க மட்டும் லேட் என்று கூறிய  ரித்திகாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் வந்து அன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஹாசினியின் அண்ணன் அண்ணி இருவரும்அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே என்று கூறி ஒரு அழகான காட்டன் சுடிதார் கொடுத்தனர்.

ஹாசனியின் அப்பா ஒரு பட்டு சேலை பரிசளித்தார். ஹாசனியின் அம்மா 2 வைர வளையல்களை கொடுத்தார்.

வளையலை ஏம்மா வாங்குறீங்க சத்தியமா இதெல்லாம் நான் போடவே மாட்டேன் என வாங்கிகொண்டாள்.

அத்தை  நீங்க எப்பவும் எங்க அப்பா கொடுத்த டிரஸ் தானே  போடுவீங்க என ஆமாண்டா பட்டு எங்க அண்ணன் என்னோட ஸ்பெஷல் ஆச்சே !….

எப்படி இருந்த பெண் துருதுருவென்று இருந்தவள் சமீபகாலமாய்  அமைதியாக இருப்பது மனது வலித்தது.

அனைவருக்கும் நன்றி கூறி விட்டு தனது அறையில் படுக்க சென்றாள்.

தனது டேபிள் மீது காட்டன் சுடிதார்,  பட்டு சாரி,  வைர வளையல் இவை அனைத்தை வைத்தவள்.

அங்கிருந்த ஜன்னல் கம்பி வழியே வெளியே தெரிந்த நிலாவைப் பார்த்து நிலாவிடம்  பேசிக்கொண்டிருந்தாள்.

காலை ஆறு மணிக்கு எழுந்து குளித்தவள் குளித்துவிட்டு வந்து தனது கப்போர்டினை  திறந்தவள் அதிலிருந்து ஒரு  மயில் கழுத்து கலரில் இருந்த பட்டுப் புடவையை எடுத்து பார்த்தவள்.

அந்த புடவை யிடம்  பேச ஆரம்பித்தாள். ஜீவா எனக்கு இன்னைக்கு பர்த்டே என்று கூறியவள். அந்த புடவைக்கு முத்தமிட்டாள்.

புடவை உடுத்தி  கண்ணாடி முன் நின்று பார்த்தாள். கிட்டத்தட்ட பத்து  வருடங்களாக இந்த ஒரு புடவைதான் பிறந்தநாள் என்று முதன்முதலில் உடுத்திக் கொள்வது.

அன்று செய்ய வேண்டிய வேலைகளை குறிப்பெடுத்துக் கொண்டு இருந்ததாள்.

அவளின் அறையின் கதவு தட்ட இதோ வந்து விட்டேன் என்று கூறியவள். புடவையை கழற்றிவிட்டு அண்ணன் வாங்கி கொடுத்த காட்டன் சுடிக்கு மாறினாள்.

புடவை எடுத்து தனது கப்போர்டில் வைத்தவள் ஜீவா நீ எங்க இருக்க?  என் ஞாபகம் இருக்குமா? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க? உன்னை  நான் விரும்புகிறேன் என்றது எப்ப தெரியுமா ஜீவா நான் உணர்ந்தேன்?..

எனக்கு கல்யாணம்  பண்ணனும்னு கூறி மாப்பிள்ளை போட்டோ எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க.

ஜீவானா  ரொம்ப பிடிக்கும். ஆனால் ஜீவா என்னுடைய கணவனா ,  காதலனா  நான் உணர்ந்தது அப்பதான் ஜீவா.

அப்பதான் யாரையுமே பிடிக்கல அப்பதான் தெரிஞ்சது என் மனசு புல்லா நீதான் இருக்கேன்னு சொல்லி ஐ லவ் யூ ஜீவா என்று கூறி புடவைக்கும் முத்தமிட்டு அவள் தனது பீரோவில் வைத்து மூடினாள்.

டேபிள் முன்பு நின்றவள் தலைவாரி  ஒரு ஒப்பனையும் இன்றி தனது பிடித்து தாழம்பூ குங்குமத்தை எடுத்து நெற்றியில் கீற்றாக வைத்தாள்.

கீழே வந்தவுடன் அனைவரும் வாழ்த்து சொல்ல பெற்றோர் அண்ணன் அண்ணி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

உணவு சாப்பிட்டபின் அத்தை உங்களுக்கு எத்தனை வயசு ஆகுது என பட்டுக்குட்டி அத்தைக்கு 24 வயசு ஆயிடுச்சு டா என்று கூறிக்கொண்டிருந்தாள்.

போன் வர ஹலோ சார் மீட்டிங் அரேஞ்ச் பண்ணியாச்சா?  இன்னுமா வரல நான் வந்துடுவேன் என்று கூறி போனை வைத்தாள்.

சந்திரன் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருக்க ராசாத்தி அவரின் தோலின் மீது கைவைத்து 24 வயசு ஆயிடுச்சு.

உனக்கு கல்யாணம் பண்ணி இருந்தா பேரனோ பேத்தியோ பார்த்திருக்கலாம் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டார்.

நம்ம கடையில ஒரு நாளைக்கு 20 முகூர்த்த புடவைக்கு மேல வியாபாரம் ஆகுது?  ஆனா என்னோட பிள்ளைக்கு ஒரு கல்யாணத்துக்கு ஒரு முகூர்த்த புடவை எடுக்க முடியலையே என்று அழ ஆரம்பித்தார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு   புடவை சேல்ஸ் ஆகும் என்று பாத்துட்டு இருக்கீங்க என்று கூறி சிரித்தாள்.

22 வயசு ஆயிட்டாலே   இன்னும் கல்யாணம் பண்ணல அப்படின்னு கேட்பாங்க.

எல்லாரும் கேட்கிற கேள்விக்கு என்னனால  பதில் சொல்ல முடியல என்று கூற

ஐயோ அப்பா எனக்கு கல்யாணத்துலே  விருப்பமே இல்லை என்று கூறினாள்.

உனக்கு கல்யாணம் பண்ணிட்டு நான் மேரேஜ் பண்ணி இருந்திருக்கணும் குட்டிமா என்று ராஜீவ் கண்கலங்க!…..

அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் யோசிச்சு சொல்றேன் என்று கூறியவள்.

அண்ணா நான் மலை கிராமத்திற்கு போறேன் சர்ச்சுக்கு போய் ஃபாதர் பார்த்துட்டு வரேன் என்று கூறியவள்.

அந்த மலை கிராமத்திற்கு நுழைந்தவுடன்தனது சிறுவயதில் நடந்த விஷயங்கள் அனைத்தும் கண்முன் வந்து சென்றது ஹாசினி  சர்ச்சுக்கு வந்தாள்.

விஷ் யு ஹாப்பி பர்த்டே மை சைல்ட் என்று பிளஸ் பண்ணினார் ஃபாதர்.

அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கெட், பழங்கள் வாங்கி வந்திருந்தாள் அங்கிருந்த குழந்தைகள், சிறுவர்களுக்கு  அதை கொடுத்தாள்.

பிறகு அங்கிருந்த பாதாம் மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்தவள். அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு தூரே தெரிந்த மலையினை பார்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து பாதரிடம் கூறிக்கொண்டு கிளம்பியவள் கோவை மாநகரம் ஹாசினி டெக்ஸ்டைல்ஸ் ஆபீஸில் உள்ளே நுழையும்போது மேனேஜர் எல்லாம் ரெடியா என்று கேட்டாள்.

ஸ்டாஃப் மீட்டிங் ரெடியா என்று ஜூலிஇடம்  கேட்க அவளோ ரெடி மேடம் என்றாள் .

அவள்  இருக்கையில் சென்று அமர்ந்த உடனே  அவள் ஜூலியை  பார்த்து ஒரு புன்னகை புரிந்தாள்.

ஹாசியினை பார்த்துக்கொண்டிருந்தாள் ஜூலி.

பால் வண்ண நிறம்,  முட்டைகள் கண்கள்,  காதுகளில் சிறிய வைரத்தோடு,  மெல்லிய செயின்,  பிரேஸ்லெட் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் அமர்ந்திருந்தாள்.

மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா?  என்று கேட்டவள் போன் ஒலித்தது போனை பார்த்தாள்.  அவளது காலேஜ் பிரின்சிபால் மேடம் போன் பண்ணியிருந்தார்.

ஹாசினி நெக்ஸ்ட் வீக் காம்படிஷன் என்று கூ ற ok மேடம் நான் எடுத்துட்டு வர்றேன் என்று கூறி போனை வைத்தாள்.

ஜூலி நான் டிசைன் பண்ண சாரில ஒரு ஐந்து மாடல் சாரி எடுத்துட்டு வர சொல்லுங்க என்று கூறனாள்.

தறி நெய்யும் இடத்திற்கு போன் செய்து மேடம் தற்போது போட்ட 5 மாடல் புடவை ஒரு செட் வேண்டும் என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.

  மீட்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா  பட்டு சாரீஸ்  கட்டிடுப் போனால்  கசகசன்னு ரொம்ப ஹாட்டா இருக்கும் எப்படா வீட்டுக்குப் போய் இந்த சாரியை மாற்றலாம் என்று நிறைய லேடிஸ் பீல் பண்ணுவாங்க சோ  அவங்களுக்காக

நாம இந்த தடவை ஆர்கானிக் சாரீஸ் ரெடி பண்ண போறோம் என்று கூறியவள். ஆர்கானிக் சாரி கட்டுனா ரொம்ப கூலா இருக்கும் ரொம்ப கசகசன்னு இருக்காது  ரொம்ப பிரீயா பீல் பண்ணுவாங்க என்று கூறினாள்.

ஏதாவது ஐடியா இருந்தா என்கிட்ட சொல்லுங்க என்று கூறினாள்.

ஒரு வாரம் ஓடியது.

அவள்  டிசைன் செய்த சாரி எடுத்துக்கொண்டு சத்யபாமா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் என்ற காலேஜுக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததும் அவளது ஜூனியர் விஜி ஹனி அக்கா என்று அவளைக் கட்டிக் கொண்டாள். ஹாசினி ஷார்ட்டா  ஹனி என்று தான் கூப்பிடுவாள் விஜி.

விஜி  இந்த அஞ்சுமே நான் ரெடி பண்ண மாடல் எப்படி இருக்கு என்று கேட்க அக்கா செம்மையா இருக்க்குகா என்று கூறினாள்.

சரி இந்த ஐந்துல ஒன்னு செலக்ட் பண்ணு நான் போய் காம்பெடிஷன் நடக்கிற இடத்தில் வைத்து விட்டு வந்துவிடுகிறேன் என்று கூறினாள்  ஹாஸினி.

காலேஜ் விழா கோலம் பூண்டிருந்தது. காம்பெடிஷன் நடக்கும் இடத்தில் ஒரு புடவை எடுத்துக் கொண்டு  வந்தவள் அங்கு சென்று அனைவரும் வைத்திருந்த புடவையுடன் தன்னுடைய புடவையும் வைத்துவிட்டு வந்தாள்.

விழா ஆரம்பிக்க ஒரு பத்து நிமிடம் இருக்க அதற்குள் ஒரு ஜூனியர் பொண்ணு அக்கா அக்கா ப்ளீஸ் வந்து சாரி எனக்கு கட்டி விடுங்கள் என்று கூற  அவளுக்கு சாரி கட்டி விட்டுக்கொண்டிருந்தாள்.

விஜி அக்கா நான் போறேன் சீக்கிரமா வாங்க என்று கூறி அவள் விழா நடக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

சத்யபாமா காலேஜ் பிரின்சிபால் அவர்கள் பிசினஸ்மேன் மற்றும் ஒரு மோட்டிவேஷன் கொடுக்க ஐ.பி.எஸ் ஆபீஸர்  ஒருவரையும் வரவழைதத்து இருந்தார்.

தனது காரில் இருந்து இறங்கியவன் ஐ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவன்  இறங்கியவுடன் சாரி மேடம் என்னால் வரமுடியாத சூழல் ஆயிடுச்சு.

ஒரு பைவ் மினிட்ஸ் தான் தப்பா எடுத்துக்காதீங்க ரொம்ப எமர்ஜென்சி  என்று கூற என்ன ஜீவானந்தம் நீங்க வரேன்னு சொன்னதே  பெரிய விஷயம் என்று சிரித்துக் கொண்டே அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஃபார்மல் பேண்ட் சர்ட்டில் வந்திருந்தான்  போலீஸ் கட்டிங், முத்து போன்ற  பற்கள். ஹைட் அண்ட் வெயிட்  என்று கம்பீர தோற்றத்துடன் தலையை கோதிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவனையே அங்கிருந்த காலேஜ் பெண்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க. தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கெத்தாக நடந்து சென்று தன் சீட்டில் அமர்ந்தான். ஜீவானந்தம். சுந்தரம் பட்டு சென்டர் இன் எம்டி.

இரண்டு நிமிடங்கள் பேசினாலும் நச்சென்று பேசினான்.

ஜீவா சார் உள்ள காம்படிஷன் காண சாரி எடுத்து வச்சு இருக்காங்க. அதுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணி கொடுத்துட்டு போங்க என்று கூற வேகம் வேகமாக நடந்தான் உள்ளே சென்றவன்.

ஹாசினியின் புடவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  இட்ஸ் வெரி நைஸ்… ரொம்ப சூப்பரா இருக்கு…. டிசைன் ரொம்ப அழகா இருக்கு…. ரொம்ப ரசிச்சு பண்ணியிருக்காங்க என்று கூறியவன் நான் விஷ் பண்ணேன் கண்டிப்பா சொல்லுங்க என்று கூறி அவசரஅவசரமாக  கிளம்பி வெளியேறினான்.

அப்பொழுதுதான் வந்து விஜி அருகில் அமர்ந்தாள்  ஹாசினி.  போங்கக்கா மிஸ்பண்ணிட்டீ ங்க எவ்வளவு சூப்பரா பேசினார் என்று கூற அதுக்குள்ள பங்க்ஷன் முடிஞ்சிடுச்சா? அவருக்கு ஏதோ அவசரமான வேலையாம்.

இரண்டு வார்த்தை பேசினாலும் சூப்பரா பேசினார் தெரியுமா?  அப்போது அவள் அருகில் பக்கத்தில் இருந்த இரு பெண்களும் செம ஸ்மார்ட்டா எவ்வளவு அழகாக பேசினார் என்று கூற.

நான் சொன்னா  நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவங்களும் என்ன சொன்னாங்க பாத்தீங்களா என்னமோ சொன்னாரே.

பெண்கள் தைரியமா இருக்கணுமாம்  நம்மளால முடியும் நினைக்கனும்மாம். ம் ம் ம் அந்த தாழம்பூ எந்த இடத்தில் வைத்தாலும் வாசமா இருக்கும் அதுபோல பெண்கள் இருக்கிற இடம் எப்பவுமே சிறப்பா இருக்கன்னு ம் அப்படின்னு சொன்னார் க்கா என்று கூற.

அதனை கேட்டவள்  அப்படியே சேரில் அமர்ந்தாள். கண்களில் கண்ணீர் வந்தது  பேரு என்ன விஜி சொன்னாங்க என்று கேட்க, அவருடைய பெயர் ஜீவானந்தம் கா சுந்தரம் பட்டு மஹால் எம்டி என்று கூறினாள் விஜி.

வாசம் வீசும்🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
6
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஆரம்பம் அருமையாக உள்ளது மா