Loading

ரோமியோ-8

 

கண்கள் அவளை விட்டு நகர மறுத்தது….. அவளுக்கு அங்குள்ள வைத்தியர் மூலம்…. அவள் தோள்பட்டையில் உள்ள குண்டை நீக்கும் பொருட்டு… அவள் மேல் ஆடையை சற்றே விளக்கி…. அவள் தேகத்தை கீறி ரத்தம் வடிய அந்த குண்டை அப்புற படுத்தினார் வைத்தியர்…

அந்த குடிலுக்குள் அவனும் அவளும் மற்றும் அவளுக்கு சிகிச்சை பார்க்கும் வைத்தியரை மட்டுமே அனுமதித்து இருந்தான்… ஆயுதம் சுற்றி இருந்த அறையில் நடுநயமாக இருக்கும் அந்த மெத்தையில் அவளுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க… அதையும் திடமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சாம்பல் விழியான்…

வைத்தியர் அவனை பார்க்க…

என்னாச்சு முடிஞ்சுருச்சா இல்ல உயிர் இருக்கா என்று அவன் கேட்ட கேள்விக்கு… இல்ல பாய் உயிர் இருக்கு….

ம்ம்ம்ம்… கட்டு போட்டு விட்டுட்டு கிளம்புங்க… மத்ததை நான் பார்த்துகிறேன்…

சரி பாய் என்று அவன் கூறியதை செய்து முடித்தவர்…அமைதியாக அவனிடம் உத்தரவு வாங்கி கொண்டு வெளியே சென்றார்…

தோளில் கட்டுடன் உறங்கும் அவளை வெறித்தவன்…. வெறி கொண்ட வேங்கையாய் வெளியே சென்ற மறு நொடி…. இடுப்பில் சொருகி இருந்த பிஸ்டலை எடுத்து என்னவென்று சுதரிக்கும் முன் தவானின் தோளில் சுட்டு இருந்தான்…

தவானுக்கு தோட்டாவின் வலியை விட….. இனி அவன் என்னவெல்லாம் செய்வானோ என்று நினைக்க நினைக்க மனம் பதறியது….

சாம்பல் விழியன் ஒரு பார்வை பார்க்க… அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன்… தன் தோளில் வடியும் குருதியை கூட பொருட்படுத்தாது… என்ன மன்னிச்சுருங்க பாய்… அந்த பொண்ணு அந்த நேரத்துல உங்க அறையில இருந்து வரதை பார்த்து எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு…அதான் யோசிக்காம சுட்டுட்டேன் என்று தலை குனிந்து கூற…

சாம்பல் விழியனோ…அமைதியாக அந்த வைத்தியரை பார்க்க…அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து தவான் அருகில் சென்று அவனுக்கு கட்டிட்டார்….

என் அனுமதி இல்லாமல் இங்க யாரும் ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது…என்று மீண்டும் குடிலுக்குள் செல்ல… அனைவரும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்….

வலியிலும் நிற்க முடியாத சோர்விலும் தவான் மயங்க…. அவனை தூக்க கூட யாரும் அவன் அருகில் செல்லவில்லை… அப்படி ஒரு பயம் கலந்த மதிப்பை அவன் மீது வைத்திருந்தனர் அந்த தீவிரவாதிகள்…

உள்ளே வந்தவன்… அங்கிருக்கும் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அடிக்க… அவளோ அசைந்த பாடில்லை… மீண்டும் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அழுத்தி அடிக்க… மெதுவாக கண் விழித்தாள் அமிர்தா….

அவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் இருக்க… அதன் பின்னே அந்த அறையை பார்த்து அது அவளது வில்லனின் அறை என்று தெரிந்து கொண்டாள்…

ஐயோ… பின் கண்களை சுழற்றி பார்க்க….. அவள் எதிரே அவன் பிஸ்டலோடு தாடியை தடவிக் கொண்டே அவளை பார்த்தான்.பி..

ஐயோ அப்படி மட்டும் பண்ணாதீங்க… ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறி விட…

எந்திரி டி…….. என்று அவன் போட்ட சத்தத்தில் அலறி அடித்து எழும்ப… தோளில் அடிப்பட்ட இடம் வெகுவாய் வலித்தது…

ஐயோ அப்போ கனவு இல்லையா….ஐயோ  என்ன சொன்னேன்னு தெரியலையே…. இப்படியா வந்து இவன் கிட்ட மாட்டனும்…

ம்ம்ம்ம்…..சீக்கிறம்…

கையை ஊன்றி எழ முயற்சி செய்ய… முடியாமல் போனது…. அவனை பாவமாக பார்த்தவள்… சத்தியமா எந்திரிக்க முடியல என்று கூறியே விட…

சற்றும் மனம் இறங்காமல்… அவனது ஒற்றை கையால் அவள் கை பிடித்து விலுக்கென்று தூக்க…வலியில் உயிர் போனது அவளுக்கு…

கண்கள் கலங்க….அம்மா…….என்று கைகளை பிடித்து கொண்டு அவள் நிற்க…

இதெல்லாம் பழகிக்கனும்…. இதை விட பெரிய வலி எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு… இதுக்கே இப்படி சொன்னா எப்படி… நாளைக்கு காலையில சரியா ஆறு மணிக்கு தயாரா இரு….

இப்போது மணியை பார்க்க…அது நாலு என்று காட்டியது.. இனிமே தூங்குன மாதிரி தான் என்று தன் நிலைமையை நினைத்து நொந்தவள்…. சரி தயாரா இருக்கேன் என்று மெல்லிய குரலில் கூறியவள் அவன் அறையை விட்டு வெளியேற போக…

ஒரு நிமிஷம்….

என்னவென்று அவனை திரும்பி பார்த்தாள்…

கடைசியா போகும் போது என்ன கேட்ட …

முழி பிதுங்கியது அமிர்தாவுக்கு… நா..நான் என்ன கேட்டேன்….வார்த்தை பிசிரடித்தது….

ஏதோ முத்தம்னு என் காதுல விழுந்தது….

அது …. ஐயோ கேட்டுருச்சே…. என்ன பண்ணுவேன்… ஏதாவது சமாளி டி….. அது நாளைக்கு காலையில ஆறு மணிக்கு எந்திருக்கனும்… நான் போறேன் என்று அவன் பதிலை கூட எதிர் பார்க்காமல் அவள் குடிலுக்கு ஓடியே விட்டாள் அமிர்தா….

வெளியே வந்து பார்க்க…அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அனைவரும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்… அவர்களை கண் அசைவில் அப்புற படுத்தியவன்….. அனைவரும் போன பின்பு அமிர்தாவின் குடிலை ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே சென்று விட்டான்…

********

இந்த முறை இந்த பொன்னான வாய்ப்பை நம்ம விட கூடாது… இதுல இருந்து எப்படியாவது நம்ம நாட்டை மீட்டு தான் ஆகனும்…. என்று ஆதர்சன் உறுதியாக கூற..

சார் ஆனால்…இந்த மாநாடு தான் நமக்கு டார்கெட்டுன்னு எப்படி சொல்லுறீங்க…

மெலிதாக சிரித்தவன்…. இதுல கலந்துக்க போற முணு நாடும் ரொம்ப முக்கியமான நாடுகள்… பொருளாதாரத்தில ரொம்ப உயர்ந்த நாடுகள்… அப்போ அதை கைபத்துறதுல தப்பில்லையே….

அனைவருமே அதை ஆமோதித்தனர்… அந்த நாட்டை கைபத்துனா … அவங்க ஈஸியா மத்த நாடுகளை அவங்களோட கட்டுப் பாட்டுக்கு கொண்டு வந்துரலாம்…

எப்படி சார்…

ஏன்னா அந்த நாட்ல தான் மக்கள் தொகை அதிகம்… அனைத்து விதமான படைகளும் ஆயுதங்களும் மருந்துகளும் இருக்கு… சோ என் கெஸ் படி இந்த மாநாடு தான் அவன் டார்கெட்…

ஆனால் இந்நேரம் அவனுக்கு நம்ம இந்த மாநாட்டுல இருந்து அந்த நாடுகளை காப்பாற்ற நினைப்போம்னு கூட அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்… அதுனால அவன் வைக்கிற ஒவ்வொரு மூவும்…. ரொம்ப துல்லியமா இருக்கும்…

அப்போ இது நமக்கு பெரிய சவால் தான்…

இருக்கலாம்…. இதுல நம்ம யாரெல்லாம் உயிரோட திரும்புவோம்னு நமக்கே தெரியாது…  உயிரை தியாகம் பண்ணிதான் நாட்டை காப்பாற்றனும்னு ஒரு சூழ்நிலை வந்ததுனா … கொஞ்சம் கூட யோசிக்க கூடாது…

புரியது சார்… நாங்க அதுக்கு தயாரா இருக்கோம்….

ஓகே நாளைக்கு காலையில பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு… அதுல நம்ம எந்த மாதிரி மூவ் பண்ணுறதுன்னு உங்களுக்கு சார்ட் ரெடி பண்ணி தரேன்…

ஓகே சார் என்று அனைவரும் பணிவுடன் கேட்டுக் கொண்டனர்…

அறையில் இருந்து வெளியே செல்ல போனவன்…. திடீரென நின்று… காய்ஸ்…. அந்த மாநாட்டுக்கு முன்னாடி என்ன வேணாலும் எப்ப வேணாலும் எது வேணாலும் நடக்கலாம்… Be ready to face the war….  என்று அறையில் இருந்து வெளியேறினான்…

அதேநேரம் அங்கு சாம்பல் விழியன் ….. அதே போல் மாநாட்டிற்கு முன்பு நடத்த போகும் X1 திட்டத்தை வெற்றிகாரமாக செய்து முடித்தான்…

அது என்ன திட்டம் …எப்போது நடக்க போகிறது… எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை….

இன்னைக்கு வரட்டும் அவருக்கு இருக்கு… என்று மெத்தையில் அமர்ந்து முனங்கி கொண்டிருந்தாள் மிளிர்மதி….

அவள் கண் விழித்து பார்க்கையில் அவன் அருகில் இருக்கும் மேஜை மீது ஒரு காகிதத்தில் அவசர மீட்டிங்… சீக்கிரம் வரேன் மதி மா…. நீ ரெஸ்ட் எடு என்று எழுதி இருந்தது….

அவள் முழித்து ஒரு மணி நேரம் ஆகி விட்டது… இன்னும் அவன் தான் வந்த பாடில்லை…

அவள் சோகமாக அமர்ந்திருக்க… அப்போது தான் உள்ளே நுழைந்தான் ஆதர்சன்… மதி மா… எழுந்துட்ட போல… சாரி டா எனக்காக ரொம்ப நேரம் வெய்ட் பண்ணிட்ட போல என்று பேசிக் கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் நெத்தியில் முத்தம் வைக்க.. அந்த காமமில்லாத முத்தத்தில் தான் எத்தனை காதல்…

கண் மூடி அந்த முத்தத்தை உள்வாங்கி கொண்டவள்…. இருந்த கோவம் இடம் தெரியாமல் போனது…

ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு….

அது ஒர்க் டென்ஷன்…. நீ அதை பத்தி யோசிக்காத….வா சாப்பிடலாம்…

இங்க உட்காருங்க… என்று அவன் முகத்தை நேராக பார்த்து கேட்க..

அதெல்லாம் சொல்ல கூடாது மதி… இது டிப்பார்ட்மெண்ட் ரகசியம்…

ஒர்க் டென்ஷன் மாதிரி தெரியலை…ஏதோ பெருசா இருக்கு என்று அவன் முகத்தை பார்த்தே அவள் சரியாக கணிக்க… தன் மனைவியின் புரிதலில் வியந்தவன்…அப்படியே அவள் மடியில் தலை சாய்த்தான்…. மதி மா கொஞ்ச நேரம் அப்படியே இரு…என்று அவள் மடி தந்த சூட்டில் அவன் இதமாக உணர…. சரியாக பத்து நிமிடம் கழித்து அவள் மடியில் இருந்து எழுந்தவன்…. பெரிய மூச்சை வெளியிட்டு அவளை பார்க்க ….

இப்போ ஓகே வா…

ரொம்பவே ஓகே… என்னமோ தெரியல டி…உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு …..

ஆஹான் அதெல்லாம் இருக்கட்டும்…. என்ன குத்த வந்தவன் உயிரோட இருக்கானா….வில்லத்தனமாக சிரித்தான் ஆதர்சன்…

அவன் சிரிப்பில் எதையோ உணர்ந்த மதி… ஓஹோ அப்போ உயிரோட மட்டும் தான் இருக்கான் என்று கேட்டு வைக்க…அவள் கன்னத்தை தட்டி விட்டு அவளுக்கான உணவை தயாரிக்க சென்றான்… போகும் அவனையே ஒரு வித யோசனையோடு பார்த்து வைத்தாள் மிளிர்மதி…

******

மணி ஆறாக….அந்த குளிருக்கு….அருகில் நெருப்பு மூட்டி இருக்க….. இதமாக அந்த கம்பலியை போற்றி கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் அமிர்தா…

அவள் குடிலுக்கு வெளியே நின்றவன்….அவனது பிஸ்டலை எடுத்து வானத்தை நோக்கி சுட…. அவ்வளவு தான்…. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு… ஐயோ நான் இல்லை.. ஐயோ நான் செத்துட்டேன்..என்ன சுட்டுட்டாங்க என்று பதறி கொண்டு எழுந்தாள் அமிர்தா…

உடம்பெல்லாம் வேர்த்து விட…. அப்போது தான் வெளியே அந்த சத்தம் கேட்பதை உணர்ந்து தன் கை வலியுடன் வெளியே சென்று பார்க்க…. கையில் பிஸ்டலை வைத்து வழக்கம் போல் தாடியை தடவிக் கொண்டு இருந்தான் சாம்பல் விழியன்…

இன்னும் விடிய கூட இல்லை..இவனுக்கு மூக்கு வேர்த்துருச்சு…. என்று தன் நிலைமையை நினைத்து நொந்தவள்…அந்த கம்பலியை போற்றி கொண்டு வெளியே வர….

இந்த குளிர் எல்லாம் நீ இனிமே பழகிக்கனும்…என்று அவள் போர்வையை இழுக்க….

ஐயோ… என்று பதறினாள் அமிர்தா…

என்ன….

இல்ல நைட்டு அந்த ட்ரஸ்ல ரத்தம் வாடை வந்துச்சு… அதான் கழற்றி போட்டேன்… இப்போ வேற சட்டை இல்ல… மேலே போர்வை மட்டும் தான் போத்தி இருக்கேன்…. என்று தலையை குனிந்து கொண்டு கூறினாள்….

உடனே தன் குடிலுக்கு சென்றவன்…. அவளுக்கு என்று  கொடுத்த அந்த ஆடைகள் உள்ள பையை அவள் அங்கேயே தவறவிட்டு இருக்க…. அதை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்…

அதை வாங்கி கொண்டு உள்ளே சென்றவள்… அவன் கொடுத்த சட்டையையும் பேண்ட்டையும் போட்டு கொண்டு வெளியே வர….

Not bad என்று அவன் முன்னே செல்ல…

அவன் பின்னால் அந்த குளிரில் உதடு டைப் அடிக்க நடந்து சென்றாள் ..

மீண்டும் அதே நதிக்கரை…. அதே சூரிய வெளிச்சம் அவன் மீது பட…. அதில் ஆண் அழகனாய் தெரிந்த அவன் முகத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளுக்கு…

அவள் கையில் ஒரு கத்தியை கொடுத்தவன்…. மம்ம்ம்ம்.. என்ன குத்து என்று கூற..

எது…..என்று விழி விரிய பார்த்தாள் அமிர்தா…. ஒரு மனமோ அவன் தீவிரவாதி ஒரேடியாக போட்டு தள்ளி விட்டு நாட்டிற்கு நல்லதை செய் என்று கூற…. மற்றொரு மானங்கெட்ட மனமோ… அவன் உன்னுடைய வில்லன்…என்று சித்து விளையாட்டு காட்டியது ..

ம்ம்ம்ம்…ரெடி..

அட்டாக் பண்ணு….

கைகளை தூக்கி அவனது குத்த வந்தவள்…. பின் மெதுவாக கைகளை இறக்கினாள்…

என்ன….என்று அவன் குரல் கர்ஜனையாக ஒலிக்க…

விடு அமிர்தா …எப்படியும் போக தான் போகுது…போற உயிர் எப்படி போனா என்ன… என்று பெரும் மூச்சை விட்டவள்… சலனமே இல்லாமல் அவன் கண்களை பார்த்து …சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு….

I….  LOVE…. U ……. என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக …அதே சமயம் அழுத்தமாகவும் கூறினாள் சாம்பல் விழியனின் அம்மு💝

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்