வாழ்க்கை
சுந்தரம் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டது, யாரென்று எழுந்து போய் பார்த்தார். வாசலில் கல்யாண தரகர் நின்று கொண்டிருந்தார்.
“அடடே தரகரே வாங்க வாங்க, உட்காருங்க”,
” சுந்தரம் சார் உங்க பொண்ணுக்கு வரன் பார்க்க சொன்னிங்களே, ஒரு அருமையான வரன் வந்திருக்கு”, என கூறினார் தரகர்.
“அப்படிங்களா ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை பற்றி சொல்லுங்க, அப்படியே அவங்க குடும்பத்த பத்தியும சொல்லுங்க”, என்றார் சுந்தரம்.
“மாப்பிள்ளை சிங்கப்பூர் ல வேலை பாக்குறாரு”, மாசம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்குறாரு, அவர் தான் வீட்டுக்கு முத்த பையன்.
” அவர் கூட பிறந்தது ரெண்டு தங்கச்சி, ரெண்டு பேருக்கும் அவரே நின்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு, அவர்க்கு வயசு முப்பத்தி ஒன்று, சொந்தமா வீடும் கட்டீட்டாரு, அவரோட அப்பா ரிட்டயர்டு அரசு அலுவலர், அம்மா இல்லத்தரசி, அவங்க வீட்ல ஜாதகம் பார்த்துட்டாங்க உங்க பொண்ணோட ஜாதகம் நல்லா பொருந்தியிருக்கு”, என மாப்பிள்ளைய பற்றி அனைத்தும் கூறி முடித்தார்.
“நீங்க ஒரு தடவை பார்த்துடீங்கனா, மேற்கொண்டு மற்றத பத்தி பேசலாம்”, தரகர்.
” சரி நீங்க மாப்பிள்ளையோட ஜாதகத்தையும், போட்டோவையும் கொடுத்துட்டு போங்க, நாங்களும் பாத்துட்டு சொல்றோம் ” என கூறிவிட்டு தரகரை அனுப்பினார்.
இந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் வீட்டினுள் இருந்து திருமண பெண் ராதா கேட்டுக்கொண்டிருந்தால். அவளுக்கு மாப்பிள்ளை வெளிநாடு என்பது பிடிக்கவில்லை.
மார்க்கெட் சென்றிருந்த ராதாவின் தாய் பரிமளம் உள்ளே வந்ததும், “பரிமளம் தரகர் வந்துட்டு போனாரு, ஒரு நல்ல வரன் சொல்லியிருக்காரு”, என தரகர் கூறிய அனைத்தையும் தன் மனைவியிடம் தெரிவித்தார்.
” சரிங்க நல்ல வரன் வேற சொல்றீங்க, நான் போய் காய்கறிகள வச்சுட்டு வந்திடுறேன், பக்கத்துல இருக்க ஜோசியர பார்த்து பொருத்தம் பார்த்துட்டு வந்திடலாம்”, என்றார் பரிமளம்.
உள்ளே நுழைந்து ராதாவிடம், “ராதா நாங்க பக்கத்துல போய்ட்டு வந்திடுறோம், இப்போ உன் தம்பி வந்திடுவான் சரியா”.
ராதா, ” சரிங்கம்மா “, ம்மா வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லாம் வேணாம்மா, இங்க பக்கத்திலயே பார்த்தீங்கனா அடிக்கடி உங்கள வந்து பார்த்துட்டு போவேன்ல,”.
அதற்குள் சுந்தரம் வந்து, ” ஏன் இத்தனை நாளா உன்ன கேட்டா உனக்கு தேவையானது எல்லாம் பண்ணோம், எங்களுக்கு தெரியும், நாங்க யார்க்கு கழுத்த நீட்ட சொல்றமோ அவனுக்கு கழுத்த நீட்டினா போதும் புரியுதா”,
“சரிங்கப்பா”,என்றால் ராதா,
ம் சரி, அதுவமில்லாம கல்யாணம் ஆகிட்டா மாப்பிள்ளை மட்டும் தான் வெளிநாட்டுக்கு மறுபடியும் வேலைக்கு போவாரு, நீ இங்க தான் உன் மாமனார், மாமியார் கூட இருக்கப்போற, அதுனால நீ எப்போ வேனாலும் நம்ம வீட்டுக்கு வரலாம் சரியா”, சுந்தரம்,
அதைக்கேட்டு ராதா அதிர்ந்து பார்த்தால், மானசீகமாக கடவுளிடம் கடவுளே ஜாதகம் பொருந்தக்கூடாது என வேண்டிக்கொண்டால்.
சுந்தரம்-பரிமளா தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், மூத்தவள் கவிதா, இரண்டாவது ராதா, கடைசியில் அருண்.
கவிதாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது, அவளின் கணவன் தனியாக நூல் கம்பெனி வைத்து நடத்துகிறான்,
அருண் தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்து கொண்டிருக்கிறான், நம் நாயகிக்கு தான் இப்போது மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு மணி நேரம் கழித்து ஜாதகம் பார்க்க சென்றவர்கள் திரும்பி வந்து, ஜாதகம் பொருத்தம் இருப்பதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வர சொல்லி இருப்பதாகவும் கூறினர்.
அதைக்கேட்ட ராதா அமைதியாக சென்றுவிட்டால்.
ஞாயிற்றுக்கிழமை காலை அனைவரும் ராதா வீட்டில் கூடினர்.
மாப்பிள்ளை வீட்டினர்க்கு ராதாவை மிகவும் பிடித்துவிட்டது. மாப்பிள்ளையான ஆனந்த்திடம் ராதாவை வீடியோ காலில் பேச வைத்தனர்.
மாப்பிள்ளை இரண்டு வருடத்திற்கு ஒரு மாத விடுமுறையில் வருவதால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமண நாளும் வந்தது ஆனந்த் ராதாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவள் ஆக்கிக்கொண்டான்.
திருமணம் முடிந்தவுடன் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வலது கால் எடுத்து வைத்து பூஜை அறையில் விளக்கேற்றி, சிறிது நேரம் ஓய்வெடுக்க ராதாவை அனுப்பினர்.
பிறகு நல்ல நேரம் வருவதற்கு முன் ராதாவை இரவு சடங்கிற்கு தயார்படுத்தினர்.
ஒருவித பயத்தோடு அவன் இருக்கும் அறைக்குள் நுழைந்தால், ஆனந்த் கட்டிலில் அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் ராதாவை பார்த்ததும், ” வா ராதா இப்படி வந்து உட்காரு, ஏன் இவ்ளோ டென்சனா இருக்க, என்ன பார்த்தா அவ்ளோ பயமாவ இருக்கு, இல்லயே தாடியக்கூட சேவ் பண்ணிட்டேனே, பின்ன ஏன் நீ பயப்படுற “,
அவன் கூறியதைக் கேட்டதும் ராதா சிரித்து விட்டாள். “, ம் இப்படி தான் எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கனும் சரியா”, ஆனந்த்.
” சரி இப்போ நாம நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்குறது முன்னாடி சில விஷயங்கள் சொல்லிக்கிறேன்., நான் இப்போ வெளிநாட்டுல ஐந்து வருஷமா வேலை பார்க்குறேன், இரண்டு வருஷத்துக்கு ஒரு மாசம் தான் லீவ்ல வருவேன் “,
” வீடு கட்டினதுக்கும், தங்கச்சிக கல்யாணத்துக்கு வாங்கின கடன்களையும் பாதி அடச்சுட்டேன், இனி நமக்கு கொஞ்சம் பணம் சேர்த்துட்டு, அடுத்த இரண்டு வருஷதுல இங்கயே வந்து ஏதாவது வேலை பார்த்துக்குவேன் சரியா ” என்றான்
அதைக் கேட்ட ராதா, “சரிங்க”, என்றாள்.
சிரித்துக்கொண்டே அவள் கூறியதைக் கேட்டு, அவனும் சிரித்துக்கொண்டே அடுத்தகட்டமாக அவர்களின் வாழ்க்கையை தொடங்கினர்.
இப்படியே ஒரு மாதமும் ஆன நிலையில் ராதாவின் மாதவிடாய் நாள் தள்ளிப்போனது. மெடிக்கலில் பிரகனன்சி டெஸ்ட் ஸ்டிரிப் வாங்கி பார்த்தால், பாசிட்டிவ் என காட்டியது.
அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அடுத்த நாளே ஆனந்த் கிளம்ப வேண்டியதானது.
ரூமிற்குள், “இங்க பாரு ராதா அழுகாத, இந்த மாதிரி நேரத்துல நீ அழுக கூடாது, நான் டெய்லி உன்கிட்ட வீடியோ கால் பேசுவேன், நீ உன் உடம்ப பார்த்துகோ சரியா”, என அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.
ராதாவும் அவனை அனுப்பிவிட்டு மிகவும் அழுதுகொண்டே இருந்தால்.
நாட்கள் உருண்டோடியது. ராதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தினமும் ஆனந்த் வீடியோ காலில் மனைவியிடமும், மகனிடமும் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
ராதாவின் தம்பி அவர்களுடைய வீட்டை இடித்து புதிதாக பெரியதாக வீட்டை எடுத்துக் கட்டி அனைவரையும் கிரகபிரவேசத்திற்கு அழைத்திருந்தான்.
ராதா தன் மகனை அழைத்துக்கொண்டு அவர்களுடைய காருக்கு ஒரு ஆக்டிவ் டிரைவரை வரவைத்து விஷேசத்திற்கு சென்றால்.
பரிமளா, “வாடியம்மா உனக்கு வர்ற நேரமா இது அதான் கார் வச்சிருக்கிங்கள, நீ சீக்கிரமா வந்தா என்ன, ” என்றார்.
“ஏன் மாமியார், மாமனார் இன்னொரு விஷேசத்திற்கு கிளம்பிட்டு இருந்தாங்க, அதான் அவங்களையும் அனுப்பிட்டு வர லேட் ஆகிடுச்சு, ” என ராதா,
“சரி வா உள்ள யாகம் ஆரம்பிக்க போறாங்க”,
ராதாவின் அம்மா பாலை காய்ச்சி எடுத்து பூஜை அறையில் வைத்தார், ஜயர் அவர்களிடம், ” குடும்ப ஆட்கள் வந்து உட்காருங்கோ “,
சுந்தரம்-பரிமளா,, கவிதாவும் அவளுடைய கணவனும் அமர்ந்தனர், ராதா தன்னுடைய மகனுடன் யாகத்தில் அமர்ந்தால்.
கவிதாவின் மாமியார் ராதாவிடம், ” அம்மா ராதா இந்த யாகத்துல தம்பதியினரா தான் உட்காரனும் இப்போ உன் புருஷன் தான் இங்க இல்லயே நீ உட்கார கூடாதமா, ஏன்னா இது உன் தம்பி பிற்காலத்தில தம்பதியினரா வாழ போற வீடு அதான் மா “, என்றார்.
அதைக் கேட்ட ராதா , ” ம் சரிங்க அத்தை” என யாகத்தில் இருந்து எழுந்துவிட்டால்.
அருண், “அக்கா அதெல்லாம் நீ எந்திருக்க வேணாம் உட்காரு”.
” இல்ல அருண் பெரியவங்க சொன்னா ஏதாவது காரணம் இருக்கும், பரவாயில்லை நான் அந்த பக்கம் நிற்குறேன் “, என சென்றுவிட்டால்.
விஷேசம் முடிந்தவுடன் அனைவரிடமும் கூறி விட்டு கிளம்பிவிட்டால் ராதா.
வரும் வழியிலே குழந்தை தூங்கி விட்டான். வீட்டினுள் வந்ததும் அவனை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, உடை மாற்றுவதற்கு வந்தால்,
சிறிது நேரம் கண்ணாடியில் அவளுடைய பிம்பத்தை பார்த்தால், புதிய பட்டு புடவை, கழுத்தில் நகைகள், கார், பெரிய வீடு என சகல வசதிகளும் இருக்கிறது, என நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது போன் அடித்தது.
ஆனந்த் தான் அடித்து இருந்தான், ” ராதா உங்க வீட்டு விஷேசத்துக்கு போய்ட்டு வந்துட்டியா “,
” ம் இப்போ தான் வந்தேன் “ராதா,
” சரி ராதா இப்போ என்ன சொல்ல வந்தேனா, எங்க கம்பெனியில அடுத்த ஆறு மாசத்துக்கு வேலை அதிகமாக இருக்கும் ,ஓவர் டைம் எல்லாம் அதிகமா கிடைக்க போகுது, ஏன்னா புதுசா ரெண்டு பிராஜெக்ட் வந்திருக்கு, அதுனால நான் அடுத்த இரண்டு வருஷம் வேலை பார்க்குறதுக்கு அக்ரிமெண்ட போட்டுருக்ககேன் உனக்கு சரிதான,
“சீக்கிரமே நாம கடன் எல்லாம் அடச்சுட்டு நம்ம பையனுக்கு சேர்த்து வச்சுட்டு, அடுத்த இரண்டு வருஷத்திலே ஊருக்கு வந்திடுறேன் சரியா”,
ராதா பெருமூச்சு விட்டு, “ம் சரிங்க “
(முற்றும்).
மனிதர்களிடம் ஆசை என்றுமே மாறாதது, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.