Loading

 

அந்த கொட்டும் மழை இரவில் தன் உயிரை காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். மழைநீர் அருவிபோல் சலசலவென்று ஓட, வீடுகளின் கதவுகளும் அடைத்திருந்தது. தெருக்கள் வெறிச்சோடி இருக்க அந்த சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தான். எப்படியாவது இங்கிருந்து இன்னும் ஒரு கிலோமீட்டர் சென்று விட்டால் போதும் காவல்நிலையம் வந்துவிடும்.  ஆனால் அவன் அறியவில்லை, அவனின் எமன் அவனுக்கு முன்னால் நிற்கிறான் என்று. ஓடிக் கொண்டிருந்தவனின் கால்கள் மீண்டும் மற்றொரு பள்ளத்தில் இடறி கீழே விழ அவனுக்கு முன்னிருந்தவன் தன் இடையில் ஒளித்து வைத்திருந்த சைலண்சர் பொருத்திய கைத்துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டான். அவன் உயிர் மெல்ல அவனை விட்டு பிரிய, அதை பார்த்து ஆஆஆ என கத்தினாள் பெண்ணொருவள். அவளின் கைப்பேசி வெளிச்சத்தில் ஆடவனின் நீல நிற கண்கள் மட்டும் தெளிவாக மின்னியது அவள் விழிகளுக்கு. 

 

—— ******** ——

 

A.V என்ற பெயர் பொருத்தப்பட்ட அந்த அலுவலகம்  மிகவும் பரபரப்பாக இயங்கக் கொண்டிருந்தது. அந்த கம்பெனியின் எம்டி இன்று வெளிநாடு சென்று  திரும்புகிறார். அவரை வரவேற்க அனைவரும் காத்திருக்க, வந்தவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் “உங்களுக்கு வேற  வேலையில்லயா ஏன் கூட்டமா நிக்குறிங்க. கம்பெனிக்கு வந்த எனக்கு உள்ள வர தெரியாதா, இன்னும் ஐந்து நிமிடத்துல எல்லாரும் மீட்டிங் ரூம்ல இருக்கனும். இல்லனா வேற வேலை தேட வேண்டி இருக்கும். புரிஞ்சுதா எல்லார்க்கும் கெட் லாஸ்ட்” என கத்தியவன் தன் அறைக்கு விரைய, மற்றவர்களோ தப்பித்தோம் பிழைத்தோம் என அவரவர் இடத்திற்கு ஓடினர். இல்லையெனில் யார் அவனிடம் திட்டு வாங்குவது. வந்த முதல்நாளே அவன் கோவ முகத்தை பார்த்தவர்கள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர். “சரியான சிடுமூஞ்சா இருப்பான் போல, ஆள் பார்க்க தான் ஹேண்சம்மா இருக்கான். ஆனா கோவத்தை பாரு, இவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்குமா, இவன் கோவத்தை பார்த்தா அந்த பொண்ணு ஓடிடுமே, அய்யோ நாம சீக்கிரம் மீட்டிங் போகனும் இல்லனா அதுக்கும் கத்துவான்” என்று தங்களுக்குள் நினைத்தவர்கள் சீக்கிரம் மீட்டிங் ஹாலிற்கு விரைந்தனர்.

அபிமன்யூ கயல்விழி  என்ற பெயர்ப்பலகை அவனை வரவேற்க தன்னிருக்கையில் அமர்ந்தான் அபிமன்யூ. சில நிமிடங்களில் அவனது அறைக்கதவு தட்டப்பட, “எஸ் கமின்” என்றவனது குரல் கம்பீரமாக ஒலித்தது.  “சார் நான் உங்க பிஏ அகல்யா, மீட்டிங்க்கு டைம் ஆச்சி சார்,  நீங்க வந்தவுடனே ஆரம்பிச்சிடலாம்” என்றாள். அவளது குரலில் அவன் நிமிர்ந்து பார்க்க, அவளோ அவன் தோற்றத்தில் உறைந்து நின்றாள். அவனோ முதன்முறை பார்ப்பதுபோல் அவளை பார்த்துவிட்டு “வாங்க போகலாம் மிஸ் அகல்யா” என்றவன் அவள் முன்னே நடக்க ஆரம்பித்தான். அவளோ மனதிற்குள்இவனுக்கு நம்ம சுத்தமா நியாபகம் இல்ல போல. அதும் நல்லதுக்கு தான்என நினைத்தவள் அவனை பின் தொடர்ந்தாள்.

மீட்டிங் முடிந்ததும் அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க அகல்யாவோ மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். “இவர மாதிரி தான அந்த கொலைகாரன் இருந்தான். ஆனா கண்ணு மட்டும் வேற மாதிரி இருக்கே, இவர்  ஆள பார்த்தா கொலை பண்றவன் போல இல்லையே” என குழம்பியவள் தன் அன்றாட வேலைகளை தொடர ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல அந்த கொலைகாரன் பற்றியே சிந்தித்தவள் அவள் அறியாமலேயே அபியை பின்தொடர தொடங்கினாள்.

அவன் இரவில் எங்கெங்கோ செல்வதை அறிந்த அவள், அவனை பின்தொடர்ந்து சென்றாள்ஒரு வளைவில் அவனை விட்டுவிட அவள் தேட ஆரம்பித்தாள். சிறிது நேரத்திலேயே ஒரு கார் அவளை தாண்டிச் செல்ல அதில் இருந்தவனின் கண்கள் அவளை தீண்டிச் சென்றது. அவள் மனம் மீண்டும் குழம்பியது. இவ்வாறாக நாட்கள் செல்ல அபி மனதிலும் அகல்யா மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன

முதலில் ஆராய்ச்சியாய் ஆரம்பித்த அகல்யா அறியாமலேயே அவனை விரும்பத் தொடங்கினாள். ஏனோ அபியை பார்க்கும் போதெல்லாம் அந்த நீல கண்களை அவள் மனம் தேட ஆரம்பிக்கும். அவள் அபிமன்யூவை பார்ப்பதை வைத்து அவளின் தோழிகளும் நண்பர்களும் அவளை கலாய்த்துக்கொண்டு இருக்க, அவ்வழியே சென்று கொண்டிருந்த அபியின் காதுகளில் அவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. இதை வளர விடக்கூடாது என மனதில் நினைத்தவன் அவளிடம் பேச வேண்டும் என நினைத்தான்.

இதை பற்றி அகல்யாவிடம் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர எண்ணினான் அபி. அவனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த அகல்யாவிற்கு மனஅழுத்தம் ஏற்பட இதை அவனிடமே கேட்டு விட முடிவு செய்தாள்

அபி அலுவலகத்தில் கோப்புகளை சரிபார்த்து கொண்டிருக்க, அகல்யா அவனை அழைத்தாள்

சர் கொஞ்சம் பேசனும்”

சொல்லுங்க அகல்யா”

கொஞ்சம் பர்சனலா பேசனும்”

நமக்குள்ள பர்சனலா பேச என்ன இருக்கு”

ப்ளீஸ் சர்”

சரி வாங்க பக்கத்துல இருக்க காபி ஷாப் போகலாம்” என்றவன் தன் கைபேசியில் யாருக்கோ தகவலை பரிமாறினான்

அகல்யா ஒரு முடிவுடன் தன் மனதில் இருக்கும் அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள்அபியோ கூலாகஒரு சின்ன டவுட் அகல்யா, க்ளியர் பண்றிங்களாஎன்றான். அவள் சரி என்பதுபோல தலையாட்ட, “நீங்க உங்க எம்டி லவ் பண்றிங்களா இல்ல அந்த கொலைகாரன லவ் பண்றாங்களாஎன்றான்

அவளோ இருவரும் ஒன்று தான ஆனா கண்ணு மட்டும் வேற மாதிரி இருக்கு, நான் கூட இவர ஃபாலோ பண்ணி பார்த்தேனே என்று யோசிக்க, “சொல்லுங்க அகல்யா” என்றான்

ரெண்டு பேரும் ஒன்னு தான ஆனா கண்ணு மட்டும் தான் டவுட்டு இருக்கு சர். எனக்கு கொஞ்சம் க்ளியர் பண்றிங்களாஇதை யோசிச்சி யோசிச்சி பைத்தியம் ஆகிடுவேன் போல இருக்கு சர்” என்று அவள் சொல்ல, அவனோநீங்க தெளிவா சொல்லுங்க அகல்யா, அந்த கொலைகாரனை பார்க்காமல் என்ன பார்த்திருந்தா லவ் பண்ணி இருப்பிங்களா” என்று கேட்க அவள் மனம் குழம்பியது

அனிச்சையாய் அவள் இல்லை என  தலையசைக்க, அபி மெலிதாக சிரித்தான்.

அபி சிரித்துக்கொண்டே தன் கைபேசியில் ஒருவனை உள்ளே அழைக்க, உள்ளே வந்த அந்த ஒருவனை பார்த்து அகல்யா அதிர்ந்து போனாள். அபியை போலவே இருந்த அவனை பார்த்ததும் அவள் மனம் சற்று தடுமாறியது. “அப்போ இவன் வேற அபி சர் வேறையா, அப்ப நான் லவ் பண்ணது இவனையா இல்ல அபி சாரையா” என்று குழப்பம் தோன்ற அவள் தலையை பிடித்துக்கொண்டு அங்கிருந்த மேசையில் சாய்ந்தாள்.

அபி அவளைப் பார்த்துஅவன் தான் என் தம்பி விஜய், நீங்க பார்த்தது பழகுனது எல்லாமே இவனை தான், சோ நீங்க குழம்ப வேண்டாம்” என்று கூற, விஜய் அவன் அணிந்திருந்த லென்சை எடுக்க, அந்த நீல கண்கள் அகல்யாவிற்கு புன்னகை புரிந்தது. அபி சிரித்துக்கொண்டேஇனிமே இவன்கிட்ட எல்லாவற்றையும் கேட்டு தெரிஞ்சிகோங்க” என்றவன் அவர்களுக்கு தனிமையை தர எண்ணி அங்கிருந்து நாகரிகமாய் ஒதுங்கினான்.

அகல்யாவின் அருகில் அமர்ந்த விஜய்நான் விஜய் கயல்விழி, என்னடா இவங்க ரெண்டு பேரும் அம்மா பேரை பின்னாடி போட்டிருக்காங்கனு தோணுதா. ஏன்னா எங்கள தெரிஞ்ச எல்லாரும் கேக்குற முதல் கேள்வி அதுதான். அவங்க தான் எங்களை தத்தெடுத்து வளர்த்தவங்க, அம்மா பேரு கயல்விழி

எங்களை சுமந்த அம்மா பேரு லஷ்மி, பேர் ரொம்ப மங்களகரமா இருக்குல. ஆனா அவங்க வாழ்க்கை மங்களகரமா அமையல, யாரோ ஒரு பொறுக்கி தன் இச்சைய தீர்த்துக்க கல்யாணம் என்ற பேர்ல என் அம்மாவ பயன்படுத்தி இருக்கான். கொஞ்சநாள் போனதும் என் அம்மாவ விட்டுட்டு ஓடிட்டான். இது எதையுமே தெரியாம என் அம்மாவ தப்பா நினைத்து அவங்களை வீட்டைவிட்டு துரத்திவிட்டுடாங்க அவங்க வீட்டுல இருந்தவங்க. எதையுமே விசாரிக்காம எப்படி ஒரு பொண்ண அவங்களால தூக்கி கொடுக்க முடிஞ்சுது அவங்களால. நியாயமா பார்த்தா அவங்க தான் குற்றவாளி. ஏதோ சுமைய இறக்கி வைக்கிறது போல யாரோ ஒருத்தனுக்கு எங்க அம்மாவ 16 வயசுலயே கல்யாணம் பண்ணி வைத்து அவங்க வாழ்க்கைய நாசம் பண்ணிட்டாங்க. அப்போ எங்க அம்மாவ ஆதரித்து அடைக்கலம் தந்தவங்க தான் கயல்விழி அம்மா. அவங்களும் யாரோ ஒரு கயவனால ஏமாற்றப்பட்டவங்க தான்

நாங்க ரெண்டுபேரும் பிறந்ததும் லஷ்மி அம்மா தவறிட்டாங்க. எங்கள கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குனது கயல்விழி அம்மா தான். அதனால தான் அவங்க பேரை எங்க பேர் பின்னாடி போட்டு இருக்கோம். இதுதான் நாங்க அவங்களுக்கு செய்யுற மரியாதை. எங்களை வளர்க்க அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு பொண்ணு தனியா இருந்தா அவங்கள இந்த சமுதாயம் வேற கண்ணோட்டத்துல தப்பான எண்ணத்துல தான் பார்க்குது. அதை சரிசெய்ய அவங்க ரொம்ப போராட வேண்டியிருந்தது

எங்கள வச்சிட்டே வேலை செய்வாங்க, நைட்ல சரியா தூங்க மாட்டாங்க, சின்ன வயசுல எதும் சரியா புரியல. ஓரளவு வளர்ந்ததும் எங்களுக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சது. அம்மா அப்போ தான் நைட்ல நிம்மதியா தூங்க ஆரம்பிச்சாங்க. நாங்க பள்ளி படிப்பை முடிச்சதும் லஷ்மி அம்மா பத்தி சொன்னாங்க

லஷ்மி அறக்கட்டளை கேள்விப்பட்டு இருக்கிங்களா, அதோட ஃபவுண்டர் எங்க அம்மா தான், சில வருடத்துக்கு முன்னாடி தான் அம்மா இறந்து போனாங்க. அவங்கள போல லஷ்மி ம்மா போல யாரும் பாதிக்கப்பட கூடாது, அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதாவது செய்யனும்னு ஆரம்பிச்சது தான் அந்த அறக்கட்டளை

தப்பு செஞ்சவங்களுக்கு என் கையால தண்டனை கொடுத்தே ஆகனும்னு ஒரு வெறி, அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சேன். என் கைக்கு வர கேஸ என் ஸ்டைல்ல முடிக்க ஆரம்பிச்சேன். அன்னைக்கு மழைல அவனை சுட்டது நான்தான், அவன் யாருனு தெரியுமா, அவனை ஏன் சுட்டேன்னு தெரியுமா” என்று கேட்டான்.

அவள் இல்லையென தலையசைக்கஅவன் நாலு பொண்ணுங்க வாழ்க்கைய நாசம் பண்ணவன். பணக்காரனா இருந்தா தான் நம்ம சட்டம் சீக்கிரமே வளைஞ்சிடுமே, அப்படி சட்டத்துல இருந்து தப்பிச்சவனை அந்த சர்வேஸ்வரன் கிட்ட அனுப்பிட்டேன்” என்றான் விஜய் சிரித்துக்கொண்டே

அவனை பார்த்து பயந்துகொண்டேஉங்கள போலிஸ் பிடிப்பாங்கனு பயமா இல்லையா, ஆனா எனக்கு பயமா இருக்கு. உங்களோட நூறு வருஷம் வாழனும்னு  எனக்குள்ள கோடி ஆசை கொட்டி கிடக்கு” என்று உணர்ச்சி வசப்பட்டு குறியவள் மெல்ல தன் தலையை குனிந்து கொண்டாள் அகல்யா

அவளை பார்த்து சிரித்தவன்என்னை எந்த போலிஸும் பிடிக்க மாட்டாங்க, ஏன்னா எந்த எவிடன்ஸ் இல்ல நான் எவிடன்ஸூம் விட்டு வைக்கல. நான் அசிஸ்டன்ட் கமிஷ்னர் விஜய் க்ரைம் ப்ரான்ச் இன்னும் மூனு மாசத்துல கமிஷ்னர் ஆகிடுவேன்என்று கூற, அதிர்ச்சியில் எழுந்து நின்றாள் அகல்யா.

அவள் கையை பற்றி அமர வைத்தவன்தப்பு பண்ணவன் சட்டத்துல இருந்து ஈசியா தப்பிக்கலாம் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. நான் இப்படி தான் எனக்கு சரினு பட்டா அதை கண்டிப்பா செஞ்சிடுவேன். உனக்காக தான் உங்க ஆபிஸ்க்கு அவன் பேர்ல உன்னை பார்க்க வந்தேன். உனக்கு என்ன பிடிச்சிருக்குனா சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாம். பிடிக்கலனாலும் பரவால்லை நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நீ என்னை அப்புறமா லவ் பண்ண ஆரம்பி. எப்படி நடந்தாலும் எனக்கு ஹேப்பி தான்” என்று மெலிதாக சிரித்தான் விஜய்.

அகல்யா விஜயின் கைகளில் தன் கையை வைத்துஎனக்காக நீங்க ஒன்னு செய்யனுமே” என்றாள். அவனோசொல்லு உனக்காக என்ன வேணாலும் செய்யலாம் ஏன்னா நீ என் சரிபாதி ஆக போற” என்று கூற, அவளோஇப்ப நீங்க செய்யுற வலைய எக்காரணம் கொண்டும் விட்டுடாதீங்க, தப்பு பண்ணவன் தப்பிக்கவே கூடாது. நீதிமன்றத்துல கூட நீதி விற்கப்படுது கொஞ்ச காலமா. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்னா அதை செய்யுறதுல தப்பே இல்ல” என்று அவள் கூற அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

விஜய் அவள் கண்களை துடைத்து விட, அப்போது கதவை தட்டினான் அபி. அப்போது அபியுடன் ஒரு பெண் உள்ளே வரஷைலுஎன கத்திக்கொண்டே அவளை  அணைத்துக் கொண்டாள் அகல்யா. ஷைலு அகல்யாவின் நெருங்கிய தோழி. “நீ எப்படி ஷைலு இங்க” என்று கேட்க, அவள் அபியின் கையோடு தன் கையை கோர்த்தாள்.

அகல்யா கோவமாய் தன் முகத்தை வைத்துக்கொண்டுஏன்டி என்கிட்ட சொல்ல” என்று கேட்க, ஷைலு பதிலுக்குநீயும் தான சொல்லல, சோ ரெண்டுக்கும் சரியா போச்சு” என சிரித்தாள்

விஜய் அபியிடம்நம்ம அறக்கட்டளை ஹோம்லயே நம்ம ரெண்டு பேர் திருமணத்தையும் நடத்திடலாம் அபி, உனக்கு இது ஓகே தான” என்று கேட்க, அவனோமுதல்ல இவங்க ரெண்டு பேர் கிட்டயும் தான் கேட்கனும் விஜய்” என்றான். பெண்கள் இருவரும் சம்மதம் சொல்ல அடுத்து வந்த ஒரு நன்னாளில் விஜய் தன்  தன்மனம் கவர்ந்த அகல்யாவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டினான். அதுபோல அபி தன் மனங்கவர்ந்த ஷைலுவின் கழுத்தில் மங்கள நாண் அணிவித்து தன் உரிமையை நிலைநாட்டினான். விஜய் காதலனாகவும் காவலனாகவும் தன் கடமையை சிறப்பாக செய்தான் என வாழ்த்தி விடை பெறுவோம் 

 

___ முற்றும்

 

தியா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  2. அட விஜய்தான் அபி மாதிரி ஆபிஸ்க்கு வந்திருக்கான்….ஒரே ஆள்தான்னு நினைச்சேன்..ட்வின்ஸ் ஆ எதிர்பார்க்கல..பெண்களை சீரழிப்பவர்களை விஜய் வேட்டையாடிக் கொல்வான்…நைஸ் சிஸ்.. வாழ்த்துக்கள் 💐