Loading

 

வேலைக்கு செல்ல தயாராகி வீதியில் நடக்க தொடங்கினாள் சுகன்யா.
எல்லோரும் அவளை விசித்திரமாக பார்க்க,
‘நான் விசித்திரமானவள் இல்லை’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.
வயது இருபத்திரண்டை தொட்ட பாவை.
பால் நிறம் கொண்ட மேனி. அவளை கடந்து செல்லுபவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் அழகை கொண்டவள்.
அதனாலே என்னவோ அவளுக்கு தன் அழகின் மீது சற்று கர்வம் என்றே சொல்லலாம்.
இது எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பு வரை தான் ஆனால் இப்போது வீதியின் சதியால் அவள் முகம் மாறி போனது.
ஒரு விபத்தில் சிக்கியதால் அவள் கன்னத்தில் ஏற்பட்ட காயம் அவளின் அழகை மாற்றியது.
எந்த முகத்தை கொண்டு கர்வமாக நிமிர்ந்து நடந்தாலோ இன்று அதே முகத்தால் தலை குனிந்து செல்லுகிறாள்.
அவளை கடந்து செல்பவர்கள் இப்போதும் திரும்பி பார்க்கிறார்கள் ஆனால் அந்த பார்வையில் ஒரு வேறுபாடு இருந்தது.
மெல்ல தான் பணிபுரியும் கம்பெனியில் நுழைந்தாள்.
எதிரே வந்த அவள் தோழி தேவிகா “வா சுகன்யா எப்படி இருக்கே ” என்று நலம்
விசாரிக்க,
எத்தனை முறை இவளை காயப்படுத்தி இருக்கிறேன் ஆனால் இவள் ‘ என் முகத்தை எந்த தயக்கமும் இல்லாமல் பார்த்து பேசுகிறாளே’ என்ற குற்றவுணர்வில் பதில் கூறாமல் நிற்க
“என்ன பா. எதுவும் பேசாமல் இருக்கிறாய்”
“என்னை மன்னித்து விடு தேவி” என்று கண்கள் கலங்க கூற
“ஏய் எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய், நீ என்ன தவறு செய்தாய்”
“தெரியாத மாதிரி பேசுகிறாயே. உன்னை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன் ஆனால் நீ அதை எல்லாம் மறந்து என்கிட்ட இயல்பாக இருக்கிறாய்”
“நான் உன்னுடைய தோழி. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்” என்று கூறி அவளை அணைத்து கொண்டாள்.

இந்த விபத்தும் நல்லதுக்கே இதனால் தான் என் கர்வம் அழிந்து இருக்கிறது என்று மனதில் மகிழ்ந்தாள்.

நன்றி…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. நல்ல அருமையான கதை. வாழ்த்துக்கள். விறு விறுப்பாக இயல்பாக இருந்தது வார்த்தைகள். வாழ்த்துக்கள்..

  2. தேவிகாவைப் போல தோழி கிடைப்பது வரம்..கர்வம் அழிவின் ஆரம்பம்..நல்ல படைப்பு சிஸ்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐