Loading

  மோதும் மேகங்கள்-18💝       
          சாரா கோபமாக செல்லுகையில் அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் ஏதும் பேசாமல் அமைதியாகவே சாராவை நோக்கியவாறு நின்றுக் கொண்டிருந்தான்.

           சாரா  “என்ற பண்ற?” என வினவ,ராகுல்  அவனின் தோளைக் குலுக்கி, “நா ஒன்னும் பண்ணலியே” என அவனின் நக்கல் தோனி மாறாமல் கூறினான்.

            “அப்போ இது என்ன?”  என ராகுல் பிடித்து இருந்த கையை சுட்டிக்காட்டி சாரா கேட்டாள்.
        
            “என்ன சாரா எனக்கு கண்ணு தெரியலன்னு கண்டுபிடிச்சவங்களுக்கே கண்ணு தெரியலையா?” என மேலும் மேலும் அவன் சாராவின் கோபத்தை தூண்டும் விதமாக  வினவிக் கொண்டு இருக்க, சாராவின் முறைப்பையே பரிசாகப் பெற்றான்.

             “எப்பா என்ன பெரிய கண்ணு அப்படி முறைக்காதடி கண்ணு வெளியே வந்துறபோகுது” என ராகுல் இப்போது தான் அவனின் நக்கல் பேச்சில் இருந்து வெளியில் வந்து சாதாரணமாக பேசினான்.

        
              சாரா, “கைய விடு ராகுல்” எனக் கோபத்துடன் கூற, ராகுல்  “விடுறதுக்கா புடிச்சி இருக்கேன்” என இரட்டை அர்த்ததில் பதிலளித்தான்.

              அவன் எந்த அர்த்ததில் கூறுகிறான் என அறியாமல் அவனே முறைத்துக் கொண்டே, “விடுனு சொல்றேன்ல.விடுடா”   என கூறிக் கொண்டே ராகுலின் பிடியில் இருந்து சாரா தன் கையை உருவ முயல, ராகுலின் பிடி இறுகியதே தவிர, குறையவே இல்லை.

           
         ராகுல் எப்படியும் கையை விட மாட்டான் என அறிந்த சாரா அவன் கையில் இருந்த தன் கையை எடுப்பதை விடுத்து, அவன் கையினுள்ளே அவன் பிடித்தபடியே தன் கையை வைத்துக் கொண்டு   ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

               ராகுல் அவள் அமைதியாக இருப்பதை கண்டு “ஹே ஏன் ஸைலன்ட் ஆயிட்ட? எதாச்சும் பேசுடி. எப்பவுமே நான் ஸ்டாப் ரேடியோ மாதிரி பேசிட்டு இருந்துட்டு இப்ப திடீர்னு அமைதியா இருக்க? ஏதாச்சும் பேசுடி” என செய்வது அனைத்தையும் செய்துவிட்டு இப்போது கெஞ்சிக் கொண்டிருந்தான்.

              சாரா அவன் எவ்வளவு கெஞ்சியும் பேசாமல் சிலை போல அமைதியாக நிற்கவே ராகுலிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

“இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் என்னை ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி”

என அவன் காதலாக பாட, அது அவளுக்கு புரிந்ததோ என்னவோ தெரியவில்லை,உடனே அவள்,  “ரொம்பலாம் நடிச்சி சீன் போடாத.இதுல பாட்டு வேற.உன் கழுதை குரல வேற எனக்கு புடிச்ச சாங் கேவலமா ஆய்டிச்சி.தயவு செஞ்சி இனி உன் இனிய குரல பாடாத.காதுல இருந்து இரத்தம் வந்து அறுந்து விழுந்துறும் போல இருக்கு” என கலாய்த்தாள்.

சாரா கலாய்த்ததால் அவன் உருகி உருகிப் பாடிய அப்பாடலை வேண்டுமென்றே அவளது காதின் அருகே சென்று கத்தோ கத்து என்று கத்தி சாரா விளையாட்டாக காது அறுந்து விழும் என்று கூறியதை நிஜமாகவே நடந்து விடும் அளவிற்கு கத்தி தீர்த்து விட்டான்.

         “டேய் கத்தாதடா. நிஜமாவே காது வலிக்குது” என சாரா நோந்துவிட்டு அழுவதைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கூற  “அந்த பயம் இருக்கட்டும்”  என்று கூறிவிட்டு கத்துவதை நிறுத்தி விட்டான் ராகுல்.

       ஒருவழியாக இருவரும் சமாதனம் ஆகி விட்டு ஆதியின் வீட்டிற்குள் நுழையும்போது சாரா  “நான் எங்கேயும் ஓடிட மாட்ட, என் கைய தான் விடேன்” எனக் கூறிய போது தான் அவன் அவளது கையை அழுத்திப் பிடித்து இருப்பதை உணர்ந்தான்.

          அப்போதும் பிடித்த அவளது கையை விடாமல் தனது இறுக்கத்தை மற்றும் தளர்த்திவிட்டு அவளது கை விரல்களில் தன் விரல்களை கோர்த்துக் கொண்டு முன்னால் நடக்க,சாரா அவனையே பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

            “என்ன லுக்கு?நா அவ்ளோ அழகாவ இருக்கேன்.என்னயே வச்ச கண் எடுக்காம பார்க்குற” என கண்ணடித்துக் கேட்க,  “துரைக்கு அந்த ஆசை வேற இருக்கா?” எனக் எதிர் கேள்விக் கேட்டாள் சாரா.

              “ஆமா இருக்கு.அதுக்கென்ன இப்போ?”  என ராகுல் கேட்டான்.

                “வாய்ப்பில்ல ராஜா,வாய்ப்பில்ல.அதுவும் என்கிட்டலாம் எதிர்ப்பார்க்காத” என முகத்தில் அறைந்தாற் போல் கூறினாள் சாரா.

                “அப்போ எதுக்குடி என்ன பார்த்த?” என ராகுலும் விடாமல் கேட்க, “ஹா கழுதைய பார்த்த யோகம் வரும்னு சொன்னாங்க.அதான் பார்த்தேன்.போதுமா விளக்கம்?” என சாராவும் ராகுலுக்கு சளைத்தவள் இல்லை என்பதைப் போல பதிலளித்தாள்.

                 “நானும் பார்த்துட்டே இருக்கேன். காலையிலிருந்து என்ன கழுத கழுதன்னு சொல்லிட்டே இருக்க. உனக்கு இருக்குடி” எனக் கூறிவிட்டு அவளை அடிக்கத் துரத்தினான் ராகுல்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தானே தன் கையை ஏன் பிடித்திருக்கிறாய் எனக் கேட்ட பிறகும் அவன் விடாமல் பிடித்து இருந்தது சாராவிற்கு மகிழ்ச்சியே அளித்தது. இருந்தாலும் அவனிடம் உண்மையை கூறாமல் தனது கெட்டை மெயின்டெயின் செய்து கொண்டு அவனை வெறுப்பேற்றி கொண்டிருந்தாள்.

                   
                    சாரா ராகுலிடம் சிக்காமல், “முடிஞ்சா என்ன பிடிச்சுக்கோ”  என கூறிக்கொண்டே அவளும் அவன் துரத்தத் துரத்த விடாமல் ஓடினாள்.

                 இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் தெரியாமல் வருந்திக் கொண்டு அந்த தருண், அவர்களிருவரும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து “இவங்க குழந்தையே ஓடிப் பிடிச்சு விளையாடுற வயசு வந்துருச்சு. இன்னும் இதுங்க ஓடிட்டு இருக்கு. ஆண்டவரே”  என மேலே பார்த்தவாறே மூச்சை இழுத்து விட்டான்.

               ராகுலிடம் பின்னால் திரும்பியவாறு பேசிக் கொண்டே ஓடிக்கொண்டிருந்த சாரா முன்னாள் பார்க்காமல் சென்று ஆறடி  உயரமுள்ள மனிதன் மேல் மோதி நின்றாள்.

                  அந்த ஆறடி மனிதனை கண்ட தருண்  ‘அப்பாடா நமக்கு ஒரு கம்பெனி கிடைச்சிருச்சு’  என மனதில் நினைத்துக் கொண்டு  “வாடா ஆதி”  என அழைத்தான்.

                மூவரும் நல்ல மனநிலையில் இருக்க ஆதி மட்டும் இசை செய்த வேலையால் கடுப்பாகி இருந்தான். அந்த கடுப்பை எல்லாம் இவர்கள் மீது காட்ட விரும்பாதவன், சாராவை ஒதுக்கி விட்டு முதல் தளத்தில் இருக்கும் தனது அறைக்கு செல்லலானான்.

                  ஆதி நடவடிக்கையில் வித்தியாசம் தெரிய கண்டு அவன் கோபமாக உள்ளான் என கண்டறிந்த சாரா  “ஆதி”  என அழைத்துக் கொண்டு ராகுலை மறந்து அவன் பின்னாலே செல்ல போக,  “சாரா”  என ராகுல் அழைத்தான்.

            சாராவின் எண்ணமெல்லாம் ஆதியின் மீது இருந்ததால் அவள்  ராகுலின் அழைப்பை கவனிக்கவில்லை. சாராவின் இச்செயலால் கோபமான ராகுல் அவளை ஒரு முறை தீப்பார்வை பார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

              மறுநாள் காலையில் காரியத்தில் கண்ணாய் இருக்கும் கண்ணாயிரம் இசைப்பிரியா ஏழே முக்கால் மணிக்கே ஆதியின் வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டு இருந்தாள். இசையின் மனதில் இருந்த ஏதோ ஒன்று அவளை உள்ளே செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இசை இவ்வாறு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்க அங்கே வீட்டிற்குள் ஆதி அவளுக்காக காத்திருந்தான்.

       
             
   
           

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்