Loading

மோதும் மேகங்கள்-10

       படப்பிடிப்பு இடத்திற்கு வந்த இசை நேராக அபினாஷிடம் சென்று  “அபி” என மெல்லமாக  அழைக்க, அவளைக் கண்ட அபி  “ஹேய் இசை வா வா. வந்து உட்காரு”  என அவன் அருகில் இருக்கும் நாற்காலியை போட்டு இசையை அமர வைத்தான்.

        “ஏன் இசை நீ இன்னிக்கு வரல? ஏன் இப்போ ஷூட் முடியற நேரத்துல வந்து இருக்க” என அபி கேட்டான்.

     “நான் இனிமேல் இங்க வர மாட்டேன் அபி. நான் வேலையை விட்டுட்டேன்”  என முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு இசை கூறினாள்.

      அவள் சோகமாக இருப்பதை கண்டு ஏன் வேலையை விட்டாய் என அவளை மேலும் துருவ வேண்டாம் என நினைத்தாலும்  “ஓ அப்ப நீ ஏன் இப்ப வந்த?  என தயங்கிக் கொண்டே அவன் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான் அபினாஷ்.

        “உனக்காக தான்.நேத்து உன்கிட்ட நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லிட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டேன்ல்ல. அதான் உன்ன பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அபி”  என அதுவரை தொங்கி இருந்த அவளது முகம் நிமிர்ந்து சிரித்த முகத்துடன் கூறினாள் இசை.

            “எதுக்கு தேங்க்ஸ்?”  என புரியாமல் வினவினான் அபி.

            ” நேத்து எதுவுமே தெரியாத புது இடத்தில ஒன்னுமே தெரியாம நான் நின்னுட்டு இருந்தப்போ, என் கூட வந்து பேசின முதல் ஆள் நீதான் .முன்னபின்ன தெரியாது எனக்கு பசிக்குதுன்னு சொல்லாமலே சாப்பாடு கொடுத்து,ஆதி எங்கே போனானு முழிச்சிட்டு இருந்தப்போ எனக்கு விசாரிச்சு சொல்லி எனக்கு நிறைய உதவி செய்திருக்க.இது எல்லாத்துக்கும் தான் தேங்க்ஸ்” என புன்னகை மாறாமல் பதிலளித்தாள் இசை.

            ‘இவ்வளவு நேரம் சோகமா உட்காந்திருந்தா,இப்போ ஈஈஈனு பல்ல காட்டிட்டு இருக்காளே.என்னாச்சு இவளுக்கு?’  எனக் குழம்பியவாறே “இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவ இசை?” என கேட்டான் அபி.

          “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன் தெரிவார்” என இசை தனது தமிழ்ப் புலவர் போல் திருக்குறளை எல்லாம் எடுத்துக்காட்டாக இழுத்து பேச  “நீ தமிழ் வாத்தியார்ன்னு  தெரியாம கேட்டுட்டேன் இசை”  என அபி சிரித்து கொண்டே கூற இசைக்கு சிரிப்பு வந்து வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

           இவர்கள் உரையாடல் நீண்டு கொண்டே போக இசை நார்மலான மனநிலையில் தான் உள்ளாள் என தெரிந்து கொண்டு  ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ஏன் இசை நீ வேலைய விட்ட?” என கேட்டுவிட்டான் அபி.

          சிரித்துக் கொண்டு இருந்த அவளது முகம் சுருங்கி விட்டதை கண்ட அபி உடனே, “உனக்கு சொல்ல பிடிக்கலான விடு இசை.அதுக்குனு முகத்த இப்படி வச்சிக்காடா.பாக்க முடியல” என சோகமாக கூறுவதை போல கூற, இசை சிரித்துக் கொண்டே, “உன்கிட்ட சொல்றத்துக்கு என்ன?அந்த ஆதி குரங்கு கிட்டலாம் மனுஷன் வேலை செய்வாங்களா?சரியான திமிருப்புடிச்சவன்.அதான் வேலைய விட்டுடேன்.ஆனா இன்னும் வீட்ல சொல்லவே இல்ல.புது வேலைய தேடிக்கிட்ட அப்புறம் தான் சொல்லனும்” என கூறும் போதே அவளது முகம் மறுபடியும் சுருங்கிவிட்டதை கண்ட அபி, இசையின் கையில் இருந்த அவளது கைபேசியை வாங்கி, கடவுச் சொல்லை(பாஸ்வர்ட்) போட்டு தருமாறு கூறினான்.

          இசை புரியாமல் அவளது சிறிய கண்களை விரித்து புரியாமல் முழிக்கவே,அபி “போடு இசை, சொல்றேன்” என  கூறினான்.

           இசையும் கடவுச்சொல்லை போட்டு தர,அவன் அவனது அலைப்பேசி எண்ணை அதில் சேமித்து,அவனுக்கு ஒரு மிஸ்ட் காலை விட்ட பிறகு அவளிடம் திருப்பி தந்துவிட்டான்.
 
               “ஹா உன்னோட நம்பர சேவ் பண்ணிக்கிட்டேன்.உனக்கு எதாவது என்கிட்ட பேசனும்ன ஆர் ஹெல்ப் வேணும்னா ஜஸ்ட் எனக்கு ஒரு கால் பண்ணு.இவ்ளோ தூரம் அலைய வேண்டாம்.அப்புறம் நீ வீட்டுக்கு போனதும் உன்னோட சிவிய(cv) அனுப்பு.என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி உனக்கு ஏதாச்சும் வேலை கிடக்குமானு பாக்குறேன்” என அபி கூறினான்.

            ‘பார்த்து ஒரு நாள் தான் ஆகிறது அதற்குள் தனக்கு இவ்வளவு செய்கிறானே’ என மனதில் நினைத்துக் கொண்டு,  “ரொம்ப தேங்க்ஸ் அபி” என மானதார அவனுக்கு நன்றி கூறினாள் இசை.

           “தேங்க்ஸ்லாம் சொல்றத இருந்த என் கூட பேசவே பேசாத” என முகத்தை திருப்பிக் கொண்டான் அபி.

           “அச்சோ சாரி அபி, இனிமேல் சொல்ல மாட்டேன்” என இசை கூற அவளை திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு,மறுபடியும் முகத்தை திருப்பி கொண்டான்.

        “என்ன அபி இது? குழந்த மாதிரி பண்ணிட்டு.சரி சரி  நோ சாரி நோ தேங்க்ஸ் ஒகே.இப்பாவது திரும்பு” என இசை கூற அப்போது தான் அபி திரும்பினான்.

            இசை வருத்தமாகி,உணர்ச்சிவசம் ஆகுவதாலே,அவன் அவளை மாற்றும் பொருத்து குழந்தைப் போல் செய்தான்.சிறிது நேரம் பேசிய பிறகு, “சரி இசை,நா ஒன்னு கேட்டா சொல்லுவியா?” என ஏதோ மனதில் வைத்துக் கொண்டு கேட்டான்.

         “கேளு அபி” என இசை கூறவே,அபி “உனக்கு ஏன் ஆதி சார பிடிக்கல?அவர பிடிக்காதவங்கள இப்போ தான் முதன் முதலா பாக்குறேன்.அவரு அவ்ளோ சிவீட் கேரக்டர்.எல்லாருமே அவரு கிட்ட பேசனும்னு ஆசப்படுவாங்க.நீ மட்டும் ஏன் வித்தியசமா இருக்க?” என கேட்டான்.
இசை ” அவன் சிவீட்டுனா அப்படியே எடுத்து சாப்டுறு.என் கிட்ட அவன பத்தி என் கிட்ட பேசாத.நா போய்டு வரேன்.பாய்” என கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

        ‘நல்லா தான் பேசுற,ஆனா ஆதி சார பத்தி ஏதாச்சும் பேசுன மட்டும் இப்படி கோப வந்துறடே’ என நினைத்துக் கொண்டே,பிறகு பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

          அதுவரை போன் பேசுவதுப் போல்,இவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டு இருந்த ஆதி, ‘எவ்ளோ திமிரு இவளுக்கு.என்ன பத்தியே நா இருக்கற செட்டுக்கு வந்தே குறை சொல்ற.இவள ஏதாச்சும் பண்ணனுமே’ என அவளை மனதில் அர்ச்சித்துக் கொண்டே என்ன செய்யாலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

       அவனுக்கு நேற்று இசை அவனது வீட்டில் சண்டையிடாமல் பேசிவிட்டு சென்றதே ஏதோ செய்தது.அவளது கண்ணீரை கண்டவுடன் இனி அவளிடம் சண்டையிட வேண்டாம் என முடிவு செய்து இருந்தான்.இன்று அவனது செட்டில் அவளை கண்டவுடன்,’இவ ஏன் இப்போ இங்க வரா?’ என சந்தேகத்துடன் எழுந்து நின்றவனுக்கு,ஏமாற்றமே மிஞ்சியது.இருந்தும் அவள் எதற்கு வந்து இருப்பாள் என தெரிந்து கொள்ளும் ஆவலில் போன் பேசுவதைப் போலவே அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு  அவர்களின் உரையாடல் அனைத்தையும் கேட்டான். அவனது மனசாட்சி அவனிடம் “அவ கிட்ட நா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமான்னு பில்டப் விட்டுட்டு இப்படி  சில்லற தனமா ஒட்டு கேக்குற வேலை செய்யிறேடா” என அவனிடம் கேள்வி கேட்க,  “அவ என்ன பத்தி பேசுறா சோ நா அத கேட்குறேன். இதுலாம் ஒட்டு கேக்குற லிஸ்டில வராது” என அவனது மனசாட்சியை தட்டி குட்டி அடக்கினான்.

            பார்ப்பவர்களுக்கு அவன் நிஜமாகவே யாரிடமோ பேசிக் கொண்டு தான் இருக்கிறான் என நம்பும் அளவுக்கு கேமரா இல்லாமலே நடித்துக் கொண்டிருந்தான் அந்த நடிகன்.இசையின் பேச்சில் கோபமானவன் யாருக்கோ அழைத்து எதையோ தையார் செய்யுமாறு கூறிவிட்டு அவனிடத்திற்கு சென்றான்.

         அங்கே ஒரு ஜீவனிடம் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு சென்றவன் அரை மணி நேரம் கழித்தே வந்தான் ஆதி. படத்தின் கதாநயாகன் ஆயிற்றே,எதுவும் கூற முடியாமல் அமைதியாக அவனுக்காக காத்திருந்தார் உதவி இயக்குநர்.

          ஆதி வந்தவுடன், “கொஞ்சம் லேடா ஆய்டுச்சி,சாரி.எத பத்தி பேசிட்டு இருந்தோம்?” என கூறிக் கொண்டே அவனது இருக்கையில் அமர்ந்தான். ‘என்ன கொஞ்சம் நேரமா?’ என மனதில் நினைத்துக் கொண்டே வெளியில் சிரித்து கொண்டே, “பரவல்ல சார்” என கூறிவிட்டு விட்ட கதையை தொடர ஆரம்பித்தார்.ஆதி எப்போது இவர் முடிப்பார் என சலித்துக் கொண்டே உம் கொட்டிக் கொண்டிருந்தான்.அவர் முடித்தவுடனே அவசர அவசரமாக போனில் பேசிய நபரை பார்க்க விரைந்தான் ஆதித்யன்.

               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்