
அத்தியாயம் 40
பகல் நேரத்து பரப்பு முடிந்து, இரவுக்கான அமைதித் தொடங்கும் அந்தி மாலைப் பொழுது அது…
அங்கே கூண்டை விட்டு வெளிவந்த பறவைகளை போல, பள்ளி முடிந்தும் வெளிவந்த பிள்ளைகளுக்கு இடையில் குந்தவையையும், சோழாவையும் தேடினாள் ஆனந்தி.
சில நிமிடத் தேடலில் சோழா மட்டுமே வர, குந்தவியை காணவில்லை.
சட்டென தொற்றிக் கொண்ட பரபரப்போடு இளையவனை நெருங்கியவள் “குட்டி… குந்தவி எங்க டா” எனக் கேட்க, உதட்டை பிதுக்கி அழும் குரலில் “அவள் என்னை விட்டுட்டு வந்துட்டா” என்றான்.
“விட்டுட்டு வந்துட்டாளா? எப்போ” எனக் கேட்டவளின் மனமோ அவசரமாக கூட்டத்தில் வந்த பிள்ளைகளை பார்வையால் அலசியது…
‘இல்லையே நான் கவனித்த வரைக்கும் அவள் வெளியில் வரவே இல்லையே?’ என நினைத்த அதே நேரம்
“ஒருவேளை நீ கவனிக்கலயோ?” என்ற மனதின் கேள்வியில் நெஞ்சம் விம்மி துடித்தது.
“எங்க போறேன்னு எதாவது சொன்னாளா?” படபடப்போடு கேட்டவள் சோழாவின் கைப் பிடித்தபடி குந்தவியைத் தேடினாள்..
“பிட்சா சாப்பிட போறேன் சொன்னா” அவளது பதட்டத்தில் பயந்த விழிகளோடு கூறினான்.
“தனியாவா?” எனக் கேட்டவள் சோழனின் கைப் பிடித்தபடி, பள்ளியிலிருந்து எட்டுனூறு மீட்டர் தொலைவிலிருந்த பிட்சா கடையை நோக்கி வேகமாக நடந்தாள்…
அடுத்த சில நிமிடங்களில் பிட்சா கடையை நெருங்கியிருந்தனர் இருவரும்… அங்கே, பிட்சா ஷாப்பினுள் குந்தவி இல்லாமல் இருக்க, அத்தனை தவித்துப் போனாள் பெண்.
அந்த தவிப்பு அவளது கண்களை நிறைக்க செய்தது… கண்களை சூழ்ந்த நீருடன் பிள்ளையைத் தேடினாள். அக்கணம் “குளோரி அங்க” என சோழா கைக் காட்ட, அவன் கைகள் காட்டும் திசையை பார்த்தாள் ஆனந்தி.
அங்கே யாரோ ஒரு வாலிபனுடன் பேசிக் கொண்டிருந்தனர் குந்தவியும் அவளது தோழியும். அவளைக் கண்டதும் தான் மூச்சே வந்தது இவளுக்கு… உப்பென்று காற்றை வாயில் நிரப்பி வெளியிட்டவளுக்கு இத்தனை நேரமிருந்த தவிப்பு கோபமாக உருமாறியது.
வேகமாக குந்தவியை நெருங்கியவள் அவளை தன் பக்கம் இழுத்து பட்பட்டென முதுகிலும், கன்னத்திலும் இரண்டடி வைத்தாள். அதில் பயந்த குழந்தை “குளோரி” என்று அடித்தவளையே கட்டிக் கொண்டு அழ, பிள்ளையின் அழுகையில் இவளது முகம் கனிந்தது…
பிள்ளையின் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே பக்கவாட்டில் நின்றிருந்த வாலிபனிடம் “எங்க பிள்ளைங்க தான் சார்…நான் பார்த்துக்கிறேன் தேங்க்ஸ்” என்றவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.
“தனியா பிட்சா சாப்பிடற அளவுக்கு வளர்ந்தாச்சா இரண்டு பேரும்…” எனக் கேட்க, அதற்கு பதில் இல்லை இருவரிடத்திலும்… இருவரின் அமைதியில் பல்லைக் கடித்தவள்
“உங்கப்பா, உங்கம்மா வரலையா ரக்சி?” குந்தவியின் தோழியிடம் விசாரிக்கவும் அவளது தந்தை இவர்களை நெருங்கவும் சரியாக் இருந்தது. அவரிடம் ரக்சியை ஒப்படைத்துவிட்டு, வீட்டிற்கு வர, அங்கே முற்றத்தில் அமர்ந்திருந்தான் அபி…
அன்னை அடித்ததும் தகப்பனைத் தேடி செல்லும் பிள்ளையாய் அபியை முற்றத்தில் பார்த்ததும் “அப்பா” என்ற அழுகையோடு அவனை நெருங்கினாள் குந்தவி.
அழுதுக் கொண்டே ஓடி வந்த பிள்ளையை சட்டென தூக்கி கொண்டவன் “என்னடா என்னம்மா” எனக்கேட்டு கொண்டே மகளின் கண்ணீரைத் துடைத்தவன் முகம், பிள்ளையின் சிவந்த கன்னத்தை பார்த்ததும் இறுகியது…
கோபத்தில் சிவந்த விழிகளோடு
ஆனந்தியை பார்த்தான். அவளோ அப்பனையும், மகளையும் அழுத்தமாக பார்த்துவிட்டு சோழாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர,
“ஆனந்தி நில்லு” அழுத்தமாக அழைத்தான். அவனது அழைப்பில் பின்னால் திரும்பி பார்த்தவள் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்பதைப் போல் கேட்டாள்.
“எதுக்கு பாப்பாவை அடிச்ச?” எனக் கேட்டவனிடம் “அவக்கிட்டையே கேளுங்க” என்றதும் இவனது பொறுமை பறந்தது.
“அவகிட்ட நான் கேட்டுக்கிறேன்…நீ எதுக்கு அடிச்சன்னு சொல்லு”
“தனியா பிட்சா சாப்பிட போயிருக்கா…” குந்தவியை முறைத்துக் கொண்டே கூறினாள்.
“இதுக்கு அடிப்பியா?” அடக்கி வைத்த பொறுமையோடு கேட்டான்.
“பின்ன, அடிக்காம கொஞ்சுவாங்களா? நீங்க கொஞ்சுங்க… நான் கொஞ்சவெல்லாம் மாட்டேன்…” என்றவள்
அபியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தையிடம் “இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் குந்தவி. இதுக்கு அப்பறம் பிட்சா சாப்பிட போறேன்.. அதை சாப்பிட போறேன், இதை சாப்பிட போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்தோ இல்லை தனியாவோ போன… இன்னைக்கு விழுந்த அடியை விட நாலு அடி சேர்த்து விழும்” என்றவள் அபியை முறைத்து விட்டு சென்றாள்.
குந்தவியை ஷோபாவில் அமர வைத்துவிட்டு ஆனந்தியை
வேகமாக நெருங்கியவன்
“கல்யாணம் பண்ணி மூணு, நாலு மாசம் கூட சரியா முடியல… அதுக்குள்ள என் பசங்களை சித்திக் கொடுமை பண்ண ஸ்டார்ட் பண்ணிட்ட” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கர்ஜித்தவனை ‘நீ அவ்வளவு தான்’ என்பதை போல் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
மங்கையின் பார்வையில், விட்ட வார்த்தைகள் புரிய, கண்களை இறுக மூடித் திறந்தவன் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே குந்தவியின் அருகில் சென்றான்.
அவளோ “குளோரியை ஏன் திட்டினீங்க ப்பா…நான் தனியா போனது தப்பு தானே. அம்மான்னா தப்பு பண்ணா அடிப்பாங்க தானே? அப்ப குளோரி பண்ணது தப்பில்லையே” விழிகளை உருட்டி கூறிய மகளை, அடிப்பாவி என்ற ரீதியில் பார்த்தவன் “தப்பில்லைமா” என்றான்..
“அப்ப,குளோரி கிட்ட சாரி கேளுங்க ப்பா” என்றவள் ஆனந்தி சென்ற திசையை நோக்கி நடந்தாள்.
செல்லும் பெண்ணரசியை இமைக்காமல் பார்த்தவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியாத நிலை தான்.
‘அவர்கள் சரியாக தான் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். நீ தான் இடையில் புகுந்து சித்தி கொடுமை எனும் அளவிற்கு பேசிவிட்டாய்’ என்றது மனது.
கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனுக்கு சற்று முன்னர் பார்வையாலேயே காரித் துப்பிவிட்டு சென்ற மனைவியின் நினைவு வந்தது…
“வேற வழியில்லை… சமாளிச்சு தான் ஆகணும்” என நினைத்துக் கொண்டவனுக்கு எப்படி சமாளிப்பது என்று தான் தெரியவில்லை….
அக்கணம் அவனது மனமோ ‘எனக்கு தெரிஞ்சு உங்கப்பன் உனக்கு விட்ட சாபம் தான்டா இப்ப பழிக்குதுன்னு நினைக்கிறேன்…’ கேலி செய்தது.
மனதின் கேலியில் மெல்லிய சிரிப்பு கூட வந்தது… உண்மை தான்,
பல தடவை தந்தையிடம், தாயை பற்றி குற்றப் பத்திரிக்கை வாசித்துவிட்டு,அவருக்கு திட்டையும் வாங்கிக் கொடுத்துவிட்டு
‘எனக்கும், அம்மாவுக்கும் நடுவுல வராதீங்க ப்பா’ என்பான். இதோ இன்று அதுவே இவனுக்கு நடக்க, எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாத நிலை தான் அவனுக்கு.
நீண்ட நெடிய பெருமூச்சுடன் மனைவியின் அறையை நோக்கி நடந்தான்..
அதே நேரம் அங்கே, குந்தவியின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு “இனிமே இப்படி பண்ண கூடாது சரியா… உங்களுக்கு என்ன சாப்பிட தோணினாலும் என்கிட்டையோ அப்பாக்கிட்டையோ இல்லை பாட்டிங்ககிட்டையோ கேட்கணும். நாங்க உங்களுக்கு வாங்கி தருவோம்” என்றதும் குந்தவியோடு சேர்ந்து சோழாவும் தலையாட்டினான்.
“அதே மாதிரி தெரியாதவங்க கிட்ட பேச கூடாது… நானோ, அப்பாவோ உங்களுக்கு இன்ட்ரோ பண்ணி வைச்சுருந்தா அவங்க கிட்ட பேசலாம்… ஆனால் தெரியாதவங்க கிட்ட பேசவே கூடாது” என்றாள் கண்டிப்போடு
“ஏன்…” என்ற கேள்வி இருவரிடத்திலும்..
“ஏன்னா.. அவங்க பூச்சாண்டியா இருப்பாங்க… பூச்சாண்டி என்ன பண்ணும்…” எனக் கேட்க.
“அழகான பாப்பா, தம்பி எல்லாரையும் தூக்கிட்டு போயிடும்” பயந்த குரலில் கூறினான் சோழா…
“ம்ம்… ஆமா” கண்களை உருட்டிக் கூறியவளின் பேச்சு மேலும் தொடர்ந்தது…
அதே நேரம் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அபியின் மனமோ ஒருவித குற்ற உணர்ச்சியில் தவித்தது… கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன் அங்கிருந்து நகர்ந்தான்.
*****
பகலின் மொத்த இரச்சல்களும் அடங்கியிருக்க, இரவு பூச்சிகளின் ரீங்காரமும், காற்றின் சத்தமும் மட்டுமே விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
அங்கே, அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த ஆனந்தியின் கவனம் முழுக்க கருமேகங்களுக்குள் இடையே ஒற்றை புள்ளியாய் வலம் வந்து கொண்டிருந்த நிலவின் மீது தான் இருந்தது.
அவளது கண்கள் அதன் பாட்டிற்கு கலங்க, அதனை துடைக்கக் கூட மனமில்லாமல் நின்றிருந்தவளின் தோளில் முகம் புதைத்தான் ஆடவன்.
“சாரி…” என்க, பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடித் திறந்தாள்.
“சாரி டி முட்டைகோஸ்” மீண்டும் மன்னிப்புக் கேட்க, அதற்கும் அவளிடத்தில் பதிலில்லை.
“ஹேய் சண்டையாவது போட்டுடு டி… இப்படி அமைதியா இருக்காத…” கெஞ்சலாக வந்தது அவனது வார்த்தைகள்.
“சண்டையா? உங்ககிட்ட சண்டை போடற உரிமை இருக்கா எனக்கு?” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டாள்.
*ஹேய் முட்டைகோஸ் ஏதோ கோபத்துல பேசிட்டேன்” தவித்து போனான்.
“எனக்கு பயமா இருக்குங்க. உங்ககிட்ட உரிமையா சண்டை போட பயமா இருக்கு… நான் ஏதாவது சொல்லப் போய் என்னால உங்களுக்கு நிம்மதியில்லாம போயிடுச்சுன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருக்கு…” கலங்கிய குரலில் கூற, இன்னும் இன்னும் தவித்து போனான் ஆடவன்..
“ஹேய் அப்படியெல்லாம் இல்லை டி.. ஏதோ தெரியாம பேசிட்டேன்…” சாமதான குரலில் கூறினான்.
“தெரியாம பேசல நீங்க… நல்லா சுயநினைவோட தான் சொன்னீங்க.. ஆழ் மனசுல இப்படியொரு எண்ணம் இருக்கு உங்களுக்கு” அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்…
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் முழுக்க முழுக்க மனதிலிருந்து வருபவைகள் தானே… ஏதோ ஓர் மூலையில் என்றோ ஓர் நாள் அழுத்தி வைக்கப்படும் எண்ணங்கள் தானே கோபத்தில் எகிறி குதித்து வெளிவந்து விடுகின்றன… இதோ இன்றைக்கும் அப்படியான ஒரு எண்ணம் தான் அவனையும் அறியாமல் வந்துவிட்டது…
கண்களை இறுக மூடித் திறந்தவன்
“மன்னிச்சிக்க டி…”
அவனது மன்னிப்பை துளியும் பொருட்படுத்தாமல் “இதுவே உங்களோட அம்மு இப்படி நடந்திருந்தா? அவங்களையும் இதே போல பேசி இருப்பீங்களா?…” எனக் கேட்க, பதில் இல்லை அவனிடத்தில்…
நீண்ட நெடிய பெருமூச்சுடன்
“இரண்டாம் தாரமா வந்தா, எந்த உரிமையும் எடுத்துக்க கூடாதா? பசங்களை அடிக்க கூடாதா? பொசுக்குன்னு என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே சும்மா தான் இல்லையா?”
“உன் மேல எனக்கு காதலும் இல்லை காமமும் இல்லைன்னு சொல்லும் போதே நான் யோசிச்சு இருக்கணும். இது வெறும் உடல் ஈர்ப்புண்ணு… அப்ப எனக்கு புரியல… புரிஞ்சு இருந்தா இந்த பேச்செல்லாம் இன்னைக்கு வாங்கி இருக்க மாட்டேன்…”
“எவ்வளவு ஈசியா சித்தி கொடுமை பண்றேன்னு சொல்றீங்க. அப்படியான ஒரு கொடுமையிலிருந்து வந்தவங்க நான்… அதோட வலி என்னனு எனக்கு நல்லாவே தெரியும்… அந்த வலியை” என் பசங்களுக்கு என்ற வார்த்தையை சொல்ல வந்தவள் அதனை சொல்லாமல் “உங்க பசங்களுக்கு கொடுப்பேனா?” எனக் கேட்க, மனம் முழுக்க வலியோடு பாவையை பார்த்தான்.
“அம்மான்னா இப்படி தான் கேர் பண்ணி பார்த்துப்பாங்க, அம்மான்னா தப்பு செஞ்சா அடிப்பாங்கன்னு பசங்களுக்கு நல்லவே தெரியும்… அவங்களுக்கு நான் சித்தியா தெரியறது இல்லை. உங்களுக்கு தான் அப்படி தெரியுது… ஏன்னா நீங்க என்னை காதலிக்கவே இல்லை… ஜஸ்ட் லைக் தட் ரிலேஷன்ஷிப்ல தானே நம்ம இருக்கோம்” என்றவள்அபியிடம் திரும்ப அங்கே அவன் இல்லை…
கண்களை இறுக மூடித் திறந்தவள் அங்கிருந்து நகர, பார்க்க அவளால் துளியும் நகர முடியவில்லை.. ஏதோ ஒன்று கால்களை இறுக்கி பிடித்திருக்க, சட்டென கீழே குனிந்து பார்த்தாள்…
சாட்சாத் தொழிலதிபர் அபிநயன் தான் தனது மனைவியின் காலில் விழுந்து கிடந்தான். “ஐயோ என்னங்க பண்றீங்க.. முதல்ல எழுங்க” பதட்டத்தோடு கூறினாள்.
அவனோ மங்கையின் காலை விடாப்பிடியாக பிடித்து “இதை விட்டா எனக்கு வேற எப்படி மன்னிப்பு கேட்கிறதுன்னு தெரியல டி… தப்பு தான்.. உன்னை பத்தி தெரிஞ்சும் நான் அப்படியொரு வார்த்தையை விட்டிருக்க கூடாது தான். ஆனாலும் புத்திக் கெட்டு சொல்லிட்டேன். சாரி…” என்க, இதழ்களை கீழாக வளைத்து அழுதாள்.
அவனோ இன்னும் அவளது காலை இறுக்கி பிடித்து “ஆரம்பித்துல உன்மேல எனக்கு காதல் இல்லைங்கிறது உண்மை தான்.. ஆனால் இப்ப மனசு முழுக்க நீ தான் டி இருக்க… எப்படி என்னால அனிதா காதலை யாருக்கும் விட்டு தர முடியாதோ… அப்படி தான் உன்மேல எனக்கு இருக்கிற காதலும்…”
“உன்னைப் பார்த்த கொஞ்ச நாள்லையே எப்படி இப்படியான ஒரு காதல் வந்துச்சுன்னு தெரியல… ஆனால் ரொம்ப காதலிக்கிறேன். நீ அழுதா, உன் கண்ணீரை பார்த்தா கால்ல விழுந்தாவது உன் அழுகையை நிறுத்தனும் என்கிற அளவுக்கு காதலிக்கிறேன். ” என்றவன் நொடி நேர அமைதிக்கு பிறகு
“நீ என் வாழ்க்கையோட இன்பினிட்டி டி.. என்னோட முடிவில்லா முடிவானவளே நீ தான்…”
எனக் கூறியவனை பார்த்து அழுகையோடு சிரித்தாள் பெண்.
அக்கணம் “அப்பா, குளோரி” எனக் கத்தியபடி வந்தனர் பிள்ளைகள் இருவரும்..
“ஏங்க.. எழுங்க பசங்க வர்றாங்க…” இவள் பதற, அவனோ “நீ இன்னும் என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லல” என்றான் பிடிவாதமாக.
“நீ என் இன்னொரு அம்மா ம்மா லெவலுக்கு பேசனதெல்லாம் கூட ஓகே தான்.. அந்த ஃபைனல் டச் டைட்டீலுக்கு மேட்ச் பண்ற மாதிரி பேசறன்னு பேசனதை தான் என்னால தாங்கவே முடியல. கொஞ்சம் கூட மேட்ச் ஆகல…” என்றவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன் பட்டென எழுந்து
“போடி இவளே” என்று சொல்லிவிட்டு செல்ல, அவனை பின்னோடிருந்து அணைத்துக் கொண்டாள்.
அதே நேரம் மேலே வந்த பிள்ளைகள் இவர்களை பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக் கொள்ள, மகனின் குடும்பத்தை சந்தோஷ சிரிப்போடு பார்த்த சீதா அவசரமாக கடவுளிடம் இவர்களின் மகிழ்ச்சி இதேபோல் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.
***
நாமும் இதே போல சண்டையும், சாரி சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிட்டிட்டு போலாமா ப்பா..
முடிஞ்சு கதை..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
50
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஒரு வழியா கதை தலைப்புக்கு நியாயம் பண்ணீட்ட டா 😝😝😝😝 அருமையான கதை 💞💞 நிறைவான முடிவு 💞💞
நியாயம் செய்யலைன்னா nallaa இருக்குமா😝😝😝 ரொம்ப நன்றி
“அப்பாவி அபலைப்பெண் ஆனந்தியும், ஆபத்தான ஆண்டிஹீரோ அபியும்”
மூச்சை நிறுத்திக்கொண்ட முன்னாள் காதல் மனைவியின் நினைவைக் கடக்க இயலாமல், அவளுடன் கனவுகளில் காதலாகி கசிந்துருகியபடி, குழந்தைகளுக்கான கடமையைக் கூட கவனிக்க மறந்து, தொழில் முன்னேற்றத்தையே முழுமூச்சாகப் பற்றிக்கொண்ட நாயகன்.
“தொழிலில் அதீத தீவிரமும் கூட அவனது அதீத காதலின் விளைவே”.
நாயகன் மறந்துவிட்ட அவனது குழந்தைகளின் பொறுப்பை வேலைக்காக என்று முதலில் ஏற்று, பிறகு விரும்பியே தோள்களில் ஏற்றுக்கொள்ளும் அன்னை, தந்தையற்று அண்ணன் மற்றும் அண்ணியின் ஆதரவில், அத்தியாவசிய ஆசைகளை மட்டுமே அளவாய் அறிந்த நாயகி.
“தான் இழந்த அரவணைப்பை அந்தக் குழந்தைகள் இழக்காதபடி காக்கும் உறுதி அவளுள்”.
இளம்வயது ஈர்ப்பும், அதில் தொலைந்த சிறு உள்ளங்களின் பொறுப்பற்ற செயல்களும் அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களை நம்பி உலகில் உதித்தவர்களுக்கும் எத்தகைய இழப்புகளையும், வேதனைகளையும் வாரி வழங்க வல்லது என்பதனை சம்பட்டியால் அடித்ததைப்போன்ற எழுத்துகளால் பதித்துவிட்டார் எழுத்தாளர். ❤️🔥
“அவன் கனவில் வாழ, அவள் நிஜத்தை தாங்கினாள்”.
“அவன் விலகி ஓடிய இடத்தில், அவள் நிலைத்து நின்றாள்”.
சிறுக சிறுக அந்த ஆபத்தானவனும்(!) தோற்க ஆரம்பித்தான், அவளது அப்பாவித்தனமான(!) சிரிப்பினில். 😉
அழுத்தமான விடயத்தை ஆழமான உணர்வுகளுடன் அழகாக பதிந்துள்ளீர்கள் எழுத்தாளரே.
வாழ்த்துகள் 👏🏼👏🏼❤️
ரொம்ப நன்றி சிஸ்டர் 😍 மிக்க மகிழ்ச்சி 😍😍😍