முடிவில்லா காதல் நீயே! – இறுதி அத்தியாயம்
ஆதியின் நிலைமையை பார்த்து சிரித்த வெண்பா… ஒருபக்கம் அவனை பார்க்க பாவமாக இருந்ததால்.. “அது வந்து டியர்… உங்க பெயர் என்ன… நீங்க என்ன படிக்குறீங்க… அப்படினு உங்கள பத்தி என்கிட்ட வந்து விசாரிச்சான்… வேற எதுவும் இல்லை…” என எப்படியோ சமாளித்து வைத்தாள். ஆதி அவளை நன்றி பார்வை பாத்துவைத்தான். ஆதிக்கு, “போன உசுரு திரும்பி வந்துடுச்சு… ” என்ற பாடல் தான் உள்ளுக்குள் ஓடியது. கயல் இன்னும் அவனை நம்பாத பார்வை பார்த்து வைக்க ஆதி, வராத போன்-ஐ தூக்கிக்கொண்டு வேலை இருக்கு என சொல்லிவிட்டு ஓடிவிட்டான். வெண்பா கல்லூரிக்கு கிளம்புறேன்… என பறந்துவிட இதுகளுக்கு எப்பவும் விளையாட்டு தான்… என சிரித்துக்கொண்டே சீதாவும் வெங்கட்டும் சென்றுவிட கயலுக்கு இன்னும் நம்பிக்கை இல்லை… ஏதோ இருக்கிறது என நினைத்துக்கொண்டு தந்தையை பார்க்க சென்றுவிட்டாள். அருண் எப்போதோ பள்ளிக்கு கிளம்பிவிட்டான். செல்வம் சீக்கிரமாக எழுந்தால் இவர்களுடன் உண்பார்… இல்லை என்றால் கயல் அவரின் அறைக்கே உணவை எடுத்து சென்றுவிடுவாள்.
பூவரசி எப்போதும் போலவே இருந்தாள். வெற்றிக்கு தான் மனம் நிலை இல்லாமல் தவித்து கொண்டு இருந்தது. அன்று பேசிய பிறகு அவள் அவனிடம் பேசுவதை அறவே குறைத்து கொண்டாள். தேவை என்றால் மட்டுமே அவனிடம் அதுவும் ஒருசில வார்த்தைகள் மட்டுமே. அவனின் தேவைகள் அனைத்தும் இவளே பார்த்துக்கொண்டாள். எல்லாமே ஒரு எல்லைக்கோட்டிற்குள் நின்றுவிடும்… அவளுக்கு அவனிடம் பேசி இன்னும் காயப்படுத்த விருப்பம் இல்லை. அவனை அவன் போக்கில் விட்டுவிடலாம் என நினைத்து ஒதுங்கிவிட்டாள். எப்போதும் மாமா மாமா என பின்னாடியே சுற்றி காதல் பார்வை வீசும் பெண்ணவள், இப்போது கண்டுகொள்ளாத போது எதையோ இழந்த உணர்வு… இது எந்த மாதிரியான உணர்வு என தெரியாமல் குழப்பத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான்.
கார்த்திக், ஆருவின் வீட்டிற்கு வந்த ஆதி, கயல் இருவரும் இரண்டு வாரத்திற்கான ஹனிமூன் பேக்கஜ் அடங்கிய கவரை இருவருக்கும் கொடுத்துவிட்டு, அத்துடன் இன்னொரு கவரையும் கொடுக்க அதை புரியாமல் வாங்கி பார்த்த கார்த்திக்கு கண்கள் கலங்கிவிட்டது. அது வேறு ஒரு கம்பெனியை அவனின் பெயருக்கு மாற்றி கொடுத்து இருந்தான். இனிமேல் அந்த கம்பெனி அவனுக்கு சொந்தம்… அதை திறம்பட நடத்தும் திறமை கார்த்திக்கு உள்ளது… அதனால் இதை திருமண பரிசாக கொடுக்க கார்த்திக் தாவி நண்பனை அணைத்துக்கொண்டான். வார்த்தைகள் வரவில்லை. ஆருவிற்கு இவர்களின் நட்பு வியப்பை தந்தது என்னவோ உண்மை. கயல் ஆருவை அணைத்து வாழ்த்தினாள். ஆதி ஒருவழியாக கார்த்திகை சமாதானம் செய்து அவர்களை வழியனுப்பி வைத்தான். புது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க.
கார்த்திக், ஆரு இருவரும் திகட்ட திகட்ட காதலை பகிர்ந்துகொண்டு மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பிவந்து கார்த்திக் கம்பெனியை பொறுப்பெடுத்து கொள்ள, ஆரு எப்போதும் போல அவளின் காக்கியை அணிந்துகொண்டு கம்பீரமாக அவளின் பணியை தொடர்ந்தாள். வாழ்க்கை அனைவர்க்கும் தெளிந்த நீரோடை போல சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள் ஆதி அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது கயலிடம் இருந்து போன் வர சிரிப்புடன் அதை எடுத்து பார்க்க அந்த பக்கம் கயல் பதட்டமாக… “மாமா… சீக்கிரமா வீட்டிற்கு வாங்க…” என கூறி வைத்துவிட்டாள். ஆதி என்னமோ ஏதோ என பரபப்புடன் வர வீட்டில் யாரும் இல்லை. ஆதி இன்னும் பதட்டமாக மேலே அறைக்கு செல்ல அங்கே கயல் வானத்தை வெறித்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்ததும் தான் ஆதிக்கு மூச்சே சீராக வர, மெல்ல அருகில் வந்து… கண்ணம்மா… என அழைக்க கயல் வேகமாக திரும்பி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அழுக தொடங்க ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை.
பதட்டமாக, “என்னமா… என்னாச்சு… யாரவது எதாவது சொன்னாங்களா…” என பரிதவிப்புடன் கேட்க இல்லை என தலை ஆட்டிவிட்டு… ஒருவித நடுக்கத்துடன் அவனின் கையை எடுத்து அவளின் வயிற்றில் வைக்க முதலில் புரியாமல் இருந்தவனுக்கு இப்போது கண்கள் ஆனந்தத்தில் கலங்க தொடங்க தன் காதல் மனைவியை பார்த்து, நிஜமாகவா என கேட்க கண்ணீருடன் தலை ஆட்ட அவ்வளவுதான் இறுக்கி அணைத்து கொண்டான்.
கண்கள் முழுவதும் கண்ணீர்… தன் உதிரம்… தன்னவளிடம் என நினைக்க நினைக்க மகிழ்ச்சி தாளவில்லை. அவளின் வயிற்றில் முத்தமிட்டு இறுக்கி அணைத்து கொண்டவனின் மனநிலை கயலுக்கும் புரிய அவளும் ஆதராக அணைத்து கொண்டாள். இருவரும் பேச்சற்று நிற்க அவளின் இதழில் இதழ்தேனை பருகி முத்தங்களால் குளிப்பாட்டி கொண்டு இருந்தான். இதை அனைவரிடம் சொல்ல சீதாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி… அனைவரும் அவளை கொண்டாட ஆதி அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டான். வீட்டில் இருந்தே வேலையை பார்த்துவிட்டு அதிக நேரம் அவளுடன் இருந்தான். சீதா மகளுக்கு வேண்டியது எல்லாம் செய்ய கயலுக்கு தன் அம்மாவே தன்னுடன் இருப்பது போல ஒரு உணர்வு.
கார்த்திக், ஆரு, சிவா, திவ்யா என அனைவரும் வந்து பார்த்துவிட்டு செல்ல கயல் வெட்கத்தில் சிவந்தே போனாள். சில மாதங்களுக்கு பிறகு… அதிகாலை நேரம் கயல் கண்ணாடி முன்பு நின்று புடவை கட்ட வராமல் புலம்பிக்கொண்டு இருந்தாள். மேலே வந்த ஆதி… தன்னவளின் கோலத்தை பார்த்து சிரிப்பை அடக்கிக்கொண்டான். பாப்பா என்ன பண்ணுது… என கேட்டுக்கொண்டே வர… தன் நிறைமாத வயிற்றை சுமந்துகொண்டு… மாமா… இந்த புடவை கட்டவே வரமாட்டேங்குது… எனக்கு இதுவேண்டாம் மாமா… என அழுக தொடங்க… ஆதிக்கு அவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
செல்லம்… மாமா எதுக்கு இருக்கேன்…. நான் கட்டிவிடுறேன்… என பொறுமையாக தன்னவளுக்கு தகுந்த மாதிரி புடவை கட்ட கயல் அவனை வாய்த்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டாள். புடவை கட்டி அவளை அமர வைத்து அலங்காரம் செய்ய அவனின் அக்கரையில் உருகி போனால் பாவை… அவளை தயார் செய்து பார்க்க தாய்மையின் பூரிப்பில் அழகாக இருந்தால் கயல். தன்னவனை அணைத்து முத்த மழை பொழிய அதில் திணறி போனவன் அவளின் இதழை மென்று தின்ன தொடங்க இருவரும் கரைந்து உருக… தன்னவளின் நிலையை மனதில் கொண்டு அவளுக்கு விடுதலை அளித்தவன் அவளை பின்னேருந்து அணைத்துக்கொள்ள பேதை அவள் மயங்கிப்போனாள்.
கதவு தட்டும் ஓசையில் இருவரும் சிரித்துக்கொண்டே தங்களை செரிசெய்துகொண்டு அவளை வெளியில் அழைத்து வர அனைவரும் அவர்களை பார்த்து சந்தோசம் அடைந்தனர். கயலை அமரவைத்து அவளுக்கு அனைத்து சடங்குகளும் செய்ய, இறுதியாக ஆதி வந்து தன்னவளுக்கு, மஞ்சள்… பூச பெண்ணவள் சிவந்தே போனாள். எல்லோரும் ஆதியை ஓட்ட வெட்கத்துடன் அவன் குனிந்துகொள்ள அங்கே சிரிப்பு அலை மட்டுமே.
சில வருடங்களுக்கு பிறகு…
ஆதி, முன்பை விட இன்னும் கம்பீரமாக அழகாக மாறி இருந்தான். அந்த கண்களில் உள்ள திமிரும் கோவமும் சற்றும் குறையாமல் போன்-இல் வீட்டின் வாயிலில் நின்று பேசி கொண்டு இருந்தான். “அப்பா…” என ஒட்டுமொத்த அன்பையும் வாரி இறைத்து கொண்டே ஓடிவந்தாள் ஒரு குட்டி தேவதை. ஆதி, கயலின் ஆருயிர் மகள்… தியா குட்டி… ஆதி, சந்தோசத்துடன் திரும்பி பார்க்க, அங்கே பாட்டுபாவாடை போட்டு தைய தக்க நடந்து வந்தது ஒரு குண்டு பால்கோவா. அவளின் உயரத்திற்கு அமர்ந்து அவளை வாரி அணைத்து கொண்டான் ஆதி… “பாப்பா… அழகா இருக்கீங்க… செல்லம்” என கொஞ்சி கன்னத்தில் முத்தமிட… அந்த பிஞ்சு மொட்டும் சிரித்து கொண்டே… பா… மா உங்கள்..ல குப்பித்தாங்க… என கொஞ்சும் தமிழ்ல் பேச அவளை தூக்கி கொஞ்சி கொண்டே சென்றான் ஆதி.
கயல் தன் 6 மாத வயிற்றை தடவிக்கொண்டே மெதுவாக தயாராக ஆதி, தியா குட்டியை அமரவைத்துவிட்டு அவளை தயார் செய்ய கயலுக்கு அவனை பார்த்ததும் கோவம் வேறு… “டேய் மாமா… உன் பொண்டாட்டி எவ்ளோ நேரம் கஷடப்படுவா… சீக்கிரமா வந்து அவளை ரெடி பண்ணாம அங்க என்னடா உனக்கு வேலை…” என மூக்கு விடைக்க பேச ஆதி உடனே சரணடைந்தான். “சாரி பொண்டாட்டி… அதுக்குள்ள ஒரு போன்… அதான்… ஈ…” என எப்படியோ சமாளிக்க தியா இருவரிடம் வந்து தகப்பனை தூக்க சொல்ல அவனும் தூக்கி கொண்டான். “பா…. தம்பி… எப்ப வடும்…” என கேட்டு வைக்க ஆதி, “செல்லம் சீக்கிரமா தம்பி வரும்… அப்புறம் பாப்பா அவன்கூட விளையாடலாம்… சரியா…” என கேட்டு வைக்க அந்த பால்கோவாவிற்கு ஒரே மகிழ்ச்சி… தகப்பனுக்கும் தாயிற்கு முத்தத்தை வாரி இறைக்க இருவரும் சிரித்து கொண்டே, அவளுக்கு திருப்பி கொடுக்க… அந்த குடும்பம் முழுமை அடைந்த உணர்வு.
தியாவை ஆதி தூக்கி கொள்ள ஒரு கையில் கயலை பிடித்து கொண்டு அந்த மணடபத்திற்கு வந்தனர். சிவா வெட்ஸ் திவ்யா என இருக்க அங்கே அவர்களை பார்த்ததும் தன் பையனை தூக்கி கொண்டு அங்கே வந்தனர் கார்த்திக், ஆரு தம்பதியினர். ஆரு தியாவை வாங்கிக்கொள்ள கயலை ஒரு ஓரமாக அமரவைத்து மாப்பிளையை சிறப்பாக கவனிக்க சென்றுவிட்டனர். எங்கே இருந்தாலும் ஆதியின் கண்கள் தன்னவளை ரசித்துக்கொண்டே கவனித்துக்கொண்டே இருந்தது.
சிவா எப்படியோ கஷ்ட்டப்பட்டு படித்து பலமுயற்சி செய்து இப்போது ஒரு புகழ்பெற்ற சிபிஐ அதிகாரி. இந்த இடைவேளை அவனின் காதலை உணர்த்த தன்னவளுக்காக முழுமுயற்சியும் செய்து அதில் வெற்றியும் கண்டவன் தன் குடும்பத்துடன் திவி வீட்டில் பேச அவர்களும் சந்தோசமாக ஒத்து கொள்ள இதோ திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. அனைவரும் ஒன்றாக நின்று அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்ய திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
பூவரசியும், வெற்றியும் தங்களின் 6 மாத குழந்தையுடனும் வந்து இருந்தனர். பூவின் காதல் அவனை கரைத்து அவளிடமே அவன் சரணடைய அந்த ஒப்பற்ற உன்னத காதலுக்கு பரிசாக இதோ இருவரும் 6 மாத குட்டி வெற்றியை தூக்கி கொண்டு வந்தனர். அந்த மண்டபம் முழுக்க ஒரே சந்தோசம் மட்டுமே. அங்கு அங்கே அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்க பெரியவர்கள் அனைவரும் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தனர். வெண்பா நன்றாக மூக்கு விடைக்க சாப்பிட்டு விட்டு போய் கொண்டு இருக்க ஒரு கை திடீரென அவளை இழுக்க பதறி போய் பார்க்க ரோஹன் நின்று இருந்தான். பல நாட்கள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் அவளை மேல் இருந்து அளந்தவன்… அவளின் கழுத்து வளைவில் வாசம் பிடிக்க பெண்ணவள் அவனை தடுக்க முயன்றும் முடியாமல் போக அவனுடன் ஒன்றி போனாள். முகம் முழுவதும் முத்தமழை பொலிந்தவன் அவளின் இதழில் இளைப்பாற முடியாத தொடர்கதையாக தொடர்ந்தது. அவள் புடவை கட்டியதால் அவனுக்கு இன்னும் வசதியாக போக அவளின் இடையில் அவனின் விரல்கள் நர்த்தனம் ஆட தொடங்கியது.
சிறிது நாட்களுக்கு முன்பே இருவருக்கும் கல்யாணம் நடக்க… காதல் மனைவியின் பின்னால் சுற்றியவன் அதற்குள் வெளிநாட்டில் முக்கியமான வேலை இருக்க கல்யாணம் முடிந்த 10 நாட்களில் அவளை பிரிந்து சென்றவன் இப்போது தான் திரும்பி உள்ளான். அவளும் அவனை பிரிந்து ஏக்கத்தில் இருக்க அவனின் திடீர் வருகை அவளுக்கு அதிர்ச்சியாக இருக்க பிரிவின் வலி இருந்தாலும் அவனின் மேல் கோவம் இருக்க அவனை தவிர்க்க நினைத்தவளுக்கு முடியவில்லை. எவ்வளவு நேரம் இல்லாத கோவத்தை இழுத்து பிடித்து வைத்து இருக்க. பென்னவளும் அவனுடன் ஒன்றி போக அங்கே இதழ் போர் முடியாத தொடர்கதையாக தொடர்ந்தது.
அங்கே கதவின் அருகில் வந்து கயல்… அடியே வெண்பா போதும் வெளிய வாங்க… போட்டோ எடுக்கணுமா… யாரவது வந்தாரா போறாங்க… என சொல்ல இருவரும் அசடு வழிந்து கொண்டே வெளியில் வர கயல் கையை கட்டிக்கொண்டு பார்க்க வெண்பா ஓடிவிட்டாள். ரோஹன் திருதிருவென விழிக்க கயல் ஒரு நமட்டு சிரிப்புடன் நகர்ந்துவிட அங்கே வந்த ஆதி, கார்த்திக் அவனை ஒட்டி எடுத்துவிட்டனர். இந்த இடைப்பட்ட நாட்களில் அனைவரும் நண்பர்களாக மாறி இருந்தனர். ரோஹன் மனதார கார்த்தியிடம் மன்னிப்பு வேண்ட அவனும் ஏற்றுக்கொண்டனர்.
அனைவரும் மேடையில் இருக்க அவர் அவர் குடும்பம் குழந்தையுடன் சிரிக்க அந்த நிமிடம் புகைப்படங்களாக சேமிக்கபட்டது. இன்று போல அவர்கள் என்றும் இருக்க வாழ்த்தி விடைபெறுவோம்….
முற்றும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.
அழகான காதல் கதை😍❤️😍❤️
ஆதிகயல்
ஆரூ கார்த்திக்
ரோஹன் வெண்பா
வெற்றி பூவு
திவ்யா சிவா
எல்லாருமே ரொம்ப அழகு 🥰தாயில்லாத ஒரு பெண்ணோட கஷ்டத்தை சொல்லியிருக்கீங்க..சித்தியின் கொடுமையையும் தாண்டி வந்த பொண்ணுக்கு அழகான காதல் வாழ்க்கை கிடைக்கபெற்ற கயல் ஆதியோட கதை தான் முடிவில்லா காதல் நீயே கதை 🤩
🥳இன்பத்திலே திளைக்கும் ஒருவனும் துன்பத்திலே தவிக்கும் ஒருத்தியும் கல்யாணத்தில் இணைந்து கல்யாணத்திற்க்குபின் அவர்களுக்குள்ளே மலரும் காதலும்
சூப்பர்.
🥳கனவிலே காதல் கொண்டு கனவுகாதலியை நேரில் கண்டதும்
தொபுக்கடீர் என்று காதல்வலையில் விழுந்து காவல்நிலையத்தில் காதல் காவல் இருந்து காவலரையே கரம்பிடித்த கார்த்திக்கின் காதல்.
🥳பெண்களையே வெறுத்தவன் திருமண பந்தத்தில் எதிர்பாராது பழிவெறியினால் வீழ்ந்து அவளின் பின்னால் பித்து பிடித்து அலைந்து அவளை காதலோடு கரம்பிடித்தவனின் காதல் கதை..
🥳இலட்சித்திற்காக காதலை ஒதுக்கியவன் அவன் இலட்சியத்தை அடையும் வரை காத்திருந்து அவன் காதலை அடைந்து திருமண பந்தத்தில் இணைந்தவளின் காதல் கதை.
🥳 ஒருத்தி மேல் கொண்ட பிடித்தத்தை காதல் என நினைத்து அவளோடு கல்யாணத்தில் இணைய வந்தவனின் விதி வேறாக விளையாட
அவனுக்காக காத்திருந்தவளின் கழுத்தில் முடிச்சிட்டு பின் காதலை உணர்ந்து அவளோடு இணைந்தவனின் காதல் 🤩
இந்த ஐந்து காதல் ஜோடிகளோட அழகான முடிவில்லா காதல் கதை தான் மீயாழ் நிலாவோட காதல் கதை.
பணத்தாசை பிடித்த சுமதிக்கு தண்டனை பலமாகவும் இரண்டாம் திருமணத்திற்கு பின் செல்வா பொண்ணு மேல கொஞ்சம் கேர் எடுத்து பாத்திருந்திருக்கலாம்.
சீதா வெங்கட்டின் பாசமான அணுகுமுறையும் அவர்களின் வழிநடத்ததுதலும் அருமை. வெற்றியோட கதை அவன் கல்யாணம் நின்னப்பவே முடிஞ்சிருக்கலாம்.அவனுக்கும் ஒரு ஜோடி குடுத்தது சூப்பர். ஆனா சொல்ல வந்த கருத்தை அழுத்தமா ஆழமா சொல்லியிருந்திருக்கலாம்.
கதை அழகா இருந்தது.. வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி 🤩🤩
Thanks sis🥰🥰🥰😘😘😘 next time innum better a kuduka try pandren g👍👍😁😁😊😊😍😍😍
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Thanks sis🥰🥰😘😘😘 kandipa dr
முடிவில்லா காதல் நீயே! – மீயாழ் நிலா.
இன்னொரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி. அதுனால அழுத்தமன கதை களம் எல்லாம் கேக்க கூடாது.. அப்படியே ஜாலியா படிச்சிட்டு போய்டனும்
ஆதி – கயல்விழி, வெண்பா – ரோஹன், ஆரூத்ரா – கார்த்திக், திவ்யா – சிவா, வெற்றி – பூவரசி ன்னு ஒரு பட்டாளத்தையே கதைல இருக்கிருக்காரு ரைட்டரு.
இது நல்ல ஃபேமிலி லவ் ஸ்டோரி. நிறைய பாசிட்டிவ் கேரக்டர்ஸ் வச்சிருந்தாலும் கதை போரடிக்காம போச்சு
(நிஜமா 4 hrs ல கதைய முடிச்சிட்டேன்..)
காலேஜ், பிரண்ட்ஸ், அண்ணன் தங்கை சண்டை, குறும்பு, போட்டி, பொறாமை, வன்மம்ன்னு எல்லாமே கதைல இருந்தது..
எனக்கு வெண்பாவோட குறும்பு ரொம்ப புடிச்சிருந்தது. அதும் அந்த கடத்தல் சீன் அவ்வா என்ன பொண்ணுடா இதுன்னு யோசிக்க வச்சுருச்சு.
அதியோட லவ், கார்த்திக் கோட கனவு காதலி எல்லாமே செம்ம..
ஒவ்வொரு பொண்ணுக்கும் லைஃப்ல சில கருப்பு பக்கங்கள் இருக்கும் அத மட்டும் தைரியமா கடந்துட்டா லைஃப் கண்டிப்பா சக்சஸ் தான்.
எந்த கதைல எல்லாருமே ஹீரோ ஹீரோயின்ஸ் தான் ஏன்னா எல்லாரும் ஏதோ ஒரு இடத்துல மனச தொட்டுட்டாங்க.
கதைல வில்லனும் கொஞ்சம் இருக்காங்க அவங்க ஒரு ஓரமா இருக்கட்டும்.
கதைல இன்னொன்னு ரொம்ப புடிச்ச கேரக்டர் சீதாம்மா ரொம்ப அன்பா இருந்தாங்க. நமக்கு இப்படி ஒரு மாமியார் அமைய கொடுத்து வைக்கலன்னு ஃபீல் பண்ண வச்சிட்டாங்க.
வாயில போட்டா கரையும் குலாப் ஜாமுன் மாதிரி ஸ்வீட் ஸ்டோரி
வாழ்த்துகள் மீயாழ் நிலா
அழகான ஒரு இல்லையில்லை பல காதல் கதைகளை சேர்த்து ஒரு கதையாக உருவாக்கிய சகிக்கு வாழ்த்துகள்..
நட்பு, காதல், குடும்ப பாசம் என கலவையாக கதை அமைந்திருந்தது. நல்லவர்களுக்கு எப்போதும் நல்லது நடக்கும் ஆனால் சில காலம் எடுக்கும். அது போல கயலின் வாழ்விலும் நிகழ்ந்து விட்டது.
காதலால் முடியாதது இந்த உலகில் ஏதுமில்லை. அதுதான் ரோஹன் போன்ற ஒரு முரடனையும் மாற்றி நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து விட்டது.
நல்லதொரு நட்பு அமைந்து விட்டால் வாழ்வின் எந்த சூழலையும் எதிர் கொள்ளும் துணிவு வரும். இது கதை மாந்தர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
மொத்தத்தில் நட்பினை துணையாக கொண்டு ஊற்றி வளர்க்கப்பட்ட இவர்கள் அனைவரின் காதலும் முடிவிலியாக நீளும் வாழ்வியலே முடிவில்லா காதல் நீயே…
வெற்றி பெற வாழ்த்துகள் சகி…
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அழகான காதல் கதை….
கயல்…. பாவப்பட்ட ஜீவன்… அறியாத வயதில் அன்னையை இழந்து… சித்தி கொடுமை அனுபவிக்கிறது போதாதுனு…. அவ சந்தோஷமா இருக்குறது காலேஜ்ல மட்டும் தான் அங்கும் தப்பான ஃபோட்டோ வந்து அவள் பக்க நியாயம் கேட்காமலே தீர்ப்பு வழங்கி…. ( இந்த ஃபோட்டோ அனுப்புனவன் யாருனு தெரியலே) அது அவ சித்திக்கு தெரிந்து அவ வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது….
ஆதி….. முதல் சந்திப்பிலே கயல் மேல் ஒரு ஈர்ப்பு….. அவளை பற்றி முழுதும் விசாரித்து அறிந்து கொண்டவன்….
காதலித்து தான் கல்யாணம் முடிப்பேனு சுத்திக்கிட்டு இருந்தவன திடீர்னு திருமண வாழ்க்கையில் இணைத்தாலும் கூட தன்னவளுக்காக அவன் செய்யும் ஒவ்வொன்றும்👌
தேவா… … தப்பா பேசி தப்பான தீர்ப்பு வழங்கியதால் கயல் தான் தன் மனைவி இந்த வீட்டு மருமகனு சொல்லி தந்தையிடம் கோபமாக பேசி அவளை மனதில் நினைத்தவன்……
வெற்றி….. கயலை விரும்புகிறான் கட்டுன இவள கட்டனும்டானு காத்திருப்பவன்….. ஆனால் இவனையே உயிராய் நினைத்து இவனுக்காகவே காத்திருப்பவள் பூவரசி….
கார்த்திக்….. இவன ஹீரோனு அறிமுகப்படுத்திட்டு நல்லா வச்சி செய்திட்டீங் ஆசிரியரே….. பாவம் அவன் சிவனேனு கனவுல கிராமத்து மணம் கமல கமல கதாலித்துக்கிட்டு இருந்தவன.. கனவுக்காதலிய நிஜத்துல இப்படி எதிர்பார்க்கவே இல்ல😂
ரோஹன்…. என்ட்ரி என்னமோ வில்லன் மாதிரி நல்லா தான் இருந்தது ஆனால் கடைசியில் ரோமியோவா வெண்பா பின்னாடி கெஞ்ச வைச்சிட்டீங்களே… வெண்பாவ பின்னாடி அலைய வைக்கிறேனு இவன் தான் அலையோ அலைனு அலைந்தது….
கார்த்திக் ஆதி…… கயல் சிவா திவ்யா….. இவங்க நட்பு வேற லெவல்😍😍😍😍
ஆதியின் ஈர்ப்பு காதலாக மாறியதா🤔
தேவா சொன்ன மாதிரி கயல்லை திருமணம் செய்தானா 🤔
வெற்றியின் காத்திருப்புக்கு கயல் கிடைத்தாலா🤔
( இப்ப என்ன தான் சொல்ல வாரீங்க கயல் யாருக்கு moment)
கயல் வாழ்க்கையை புரட்டி போடுற அளவுக்கு அவ சித்தி என்ன பண்ண🤔 ஆதியின் திடீர் கல்யாணம் எதனால்🤔
வெற்றியையே நினைத்து இருந்த பூவின் நிலமை என்ன🤔
கார்த்திக்கின் கனவு காதலி யாரு🤔 அதிரடியா வந்தவகிட்ட காதலை சொன்னான…. கனவு காதல் நிறைவேறியதா🤔
ரோஹன் என்ன ஆனான்🤔
இப்படி கொஞ்சமே கொஞ்சம் நம்மல டென்ஷன் பண்ணி… கொஞ்சம் நகைசுவை கலந்து ரசிக்க கூடிய வகையில் காதல் கலந்த குடும்ப கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ஹாப்பி எண்டிங்… 🥰🥰
ஆதி – கயல்…. 😍
கார்த்திக் – ஆரு…😍
ரோஹன் – வெண்பா… 😍
சிவா – திவ்யா… 😍
வெற்றி – அரசி… 😍
எல்லாருமே லவ்லி couples… 🥰😍😍
என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்… 🥰🥰
ஸ்டார்டிங் ல இருந்து அப்டியே அழகா போச்சு… 😊
A feel good story… ❤
A the best for all your upcomming novels dr… 🥰🤝
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.