Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 1

ஆதித்யா (கதையின் நாயகன்)

வெங்கட் – சீதா இருவரும் கல்லூரியில் இருந்தே காதலித்து பிறகு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் – ஆதித்யா மற்றும் வெண்பா. வெங்கட் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். ஏகப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் வேலை செய்கின்றனர். வெங்கட் மிகவும் அன்பான அதே நேரம் கண்டிப்பு மிக்கவர். கேட்கும் முன்னே தேடி போய் உதவி செய்யும் உன்னத மனிதர். சீதா அமைதியான, அன்பான பாசமிகு இல்லத்தரசி. இன்றுவரை காதலித்து என்றும் காதலர்களாகவே வளம் வரும் காதல் புறாக்கள் இருவருமே. ஆதி பி-ஆர்க் முடித்துவிட்டு தன் தந்தையின் தொழிற்கட்டுமான கம்பெனியை கடந்த இரண்டு வருடமாய் வெற்றிகரமாக நடத்தி அடுத்த நிலைக்கு உயர்த்தி, இளம் தொழிலதிபராக வலம் வரும் 27 வயது ஆண்மகன். அவனுடைய பள்ளி முதல் கல்லூரி வரையிலான நெருங்கிய ஒரே நண்பன் கார்த்திக். அவனும் இவனின் மேனேஜர் ஆக அதே கம்பெனியில் பணிபுரிகிறான். வெண்பா ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். துறு துறுவென எப்பொழுதும் ஜாலியாக இருப்பவள். இவள் செய்யும் அலப்பறையில் கிளாஸ்-க்கு வெளியிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் தான் இவளுக்கு பாதி நாட்களே கழியும். படிப்பும் சுமார் ராகம் தான் கேட்கவே வேண்டாம். இதில் இவளின் அப்பாவி நண்பர்களையும் கோர்த்து விடுவது வேறு ரகம்.

ஆதி, ஆறு அடிக்கும் குறைவில்லாத உயரம். கூர்மையான கண்கள், தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்மகன். தன் அழகிற்காகவும் பணத்திற்காகவும் பழகும் பெண்களை தன் கண் அசைவிலே தள்ளியே நிற்க வைப்பவன். பெண் தோழிகளும் உண்டு. பெண்கள் மேல் தனி மரியாதையும் வைத்து இருப்பவன். அவனுக்கும் ஒரு தங்கை உண்டல்லவா. தன் கண் அசைவிலே அனைத்து வேலையும் திறம்பட முடிக்கும் வல்லவன். தந்தையை போல உதவும் குணமும், தாயை போல அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் காட்டுபவன். ஆனால் கோவம் மட்டும் கட்டுக்கடங்காமல் வந்து விடும். வந்தால் அவ்ளோதான். அப்படி வந்தா என்ன ஆகும்னு போக போக தெரியும். கார்த்திக் ஆறு அடி உயரம், கூர்மையான கண்கள், பார்த்தால் சைட் அடிக்க தோன்றும் ரகம் (நம்ம கார்த்தியும் ஹீரோ தான் பா). எப்போதும் முகத்தில் ஒரு சிரிப்புடன் வளம் வருபவன். நண்பிகளும் உண்டு. ஆனால் எல்லாம் ஒரு எல்லை கோட்டிற்குள் நின்று விடும். தன் நண்பனுக்காக எதையும் செய்ய கூடியவன். ஆதியும் சளைத்தவன் அல்ல இவனுக்கு ஒன்று என்றால் அடித்து விட்டு தான் பேசவே தொடங்குவான். ஆனால் இருவரும் என்றுமே வெளிக்காட்டியது இல்லை. நட்பிற்கான இலக்கணத்தில் இதுவும் ஒன்று போல. சரி போதும் ஹீரோவ சைட் அடிச்சது. வாங்க ஹீரோயின்யும் கொஞ்சம் எட்டி பாத்துட்டு வருவோம்.

கயல்விழி ( கதையின் நாயகி)

செல்வா – ஹேமா தம்பதியரின் ஒரே மகள் தான் கயல்விழி. இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். செல்வா தன் நேர்மையிலும், உழைப்பிலும் முன்னேறி துணிகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரு கம்பெனியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். எதிர்பாராத விதமாக கயலின் 10-வது வயதில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் ஹேமா. பிரிந்த சொந்தங்கள் ஹேமாவின் இறப்பில் தான் இணைந்தன. ஹேமாவின் பெற்றோருக்கு தன் மகளை இப்படி ஒரு நிலைமையில் பார்க்க வேண்டி வரும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. ஹேமா-விற்கு ஒரு தங்கை உண்டு சுமதி (சித்தி மகள்). சுமதிக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. பல்வேறு தடங்கலுக்கு பிறகு தான் ஒரு மகன் பிறந்தான் அருண் 2 வயது. சுமதியின் கணவருக்கு கேன்சர் இருந்தது. கடைசி நேரத்தில் தான் கண்டு பிடிக்க பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. 1 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுமதி தன் மகனுடன் தாய் வீட்டிலையே நிரந்தரமாக தங்கிவிட்டார். சுமதி-க்கு எப்போதும் பணத்தின் மீது மோகம் உண்டு. அதிக சொத்து இருக்கும் என நம்பி திருமணம் செய்து, போனபிறகு தான் தெரிந்தது அது எல்லாம் பொய், அப்படி எதுவும் இல்லை என. இதற்காக பல நாட்கள் கணவருடன் சண்டை இட்டதும் உண்டு. கணவர் இறந்த பிறகு இது தான் வாய்ப்பு என்று தன்னுடைய வீட்டிலேயே இருந்து விட்டாள்.

தன் அக்காவின் இறப்பிற்கு வந்து இங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் எல்லாம் அவளை வேறு திட்டம் போட வைத்தது. கயலும் எப்பொழுதும் அம்மா, அம்மா என்று அழுதுகொண்டே இருந்தது சுமதிக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. கயலை நான் பத்திரமாக பாத்துக்குறேன் என்று தன் வீட்டார் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எப்படியோ அவர்களை எல்லோரையும் சமாளித்து இங்கையே தங்கி விட்டாள். கயல் முதலில் இவளிடம் ஒட்டவில்லை ஆனால் சுமதி விடாமல் முயற்சி செய்து போலியான அன்பை காட்டி கயலை தன் வசப்படுத்தி கொண்டாள். செல்வாவும் இவளின் சுயரூபம் அறியாமலேயே போய்விட்டார். தன்னால் தான் தன் மனைவி இறந்து விட்டால் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவருக்கு தெரிந்து இருக்கும் வாய்ப்பும் குறைவு தான். இன்னும் எத்தனை நாட்களுக்கு சுமதி இங்கு இருக்க முடியும். மற்றவர்கள் தவறாக பார்ப்பதற்கும் பேசுவதற்கும் முன்னால் இதற்கு எதாவது முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்து வந்தனர் அவளின் பெற்றோர். செல்வாவிடம் பேசி அழைத்து செல்ல பார்த்தால் கயலின் பிடிவாதமும் கண்ணீரும் அவர்களுக்கு தடையாக இருந்தது. சுமதி தான் கயலை நன்றாக வசிய படுத்தி இருந்தாளே. இறுதியாக வேறு வழி இல்லாமல் கயலுக்காக என்று இவர் நினைத்து எடுத்த முடிவால் தன் மகளின் வாழ்வு தடம் மாற போகிறது என்று தெரியாமல் சுமதியை மகளுக்காக மணந்து கொண்டார். அவள் போட்ட திட்டமும் வெற்றிகரமாக நடந்து கயலின் சித்தியாக அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். அந்த நேரத்தில் மிகவும் சந்தோசமாக இருந்தது கயல் தான். இனிமேல் தன் வாழ்வில் கண்ணீர் மட்டுமே தனக்கு துணை என்று அறியாமல் போனது தான் விதியோ!!!

காதல் தொடரும்!

மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    10 Comments

    1. Achoo pavam kayal chithi kitta maatiru ena enna agha poghutho…. Rmba nalla iruku sis ud….. All the best….

    2. அருமையான அழகான ஆரம்பம் சகி சூப்பர்😊
      ஆதித்யா கார்த்திக் நட்பின் மேலோட்டமே ரொம்ப ஆழமா இருக்கு ஆர்வத்தையும் தூண்டுது செம சுமதியோட சுயத்தை உணராம கயலோட வாழ்க்கையை பணயம் வைச்சிட்டாங்க இதுனால எவ்ளோ கஷ்டங்களை சந்திக்க போறாளோ😥😥😥

    3. வெண்பாவோட துரு துரு புடிக்குது..ஆதி அண்ட் கார்த்திக் நட்பு வேற லெவல்…ஹைய்யோ இந்த சுமதியோட சூழ்ச்சி தெரியாம செல்வா மேரேஜ் பண்ணிட்டாங்களே….சுமதி தாயில்லா புள்ளையை அவ வலையில் விழ வைச்சிட்டாளே😠😠😠🙂…இனி கயலோட நிலைமை மோசம்தான்

      1. Author

        Thanks sister👍👍👍😍😍😍🥰🥰🥰

      2. அருமையான ஆரம்பம் சகி.நாயகன் நாயகியை அறிமுகம் செய்து விட்டீர்கள். சிறப்பு..

    4. அடுத்த அன்னை என நினைத்த சித்தியிடம் அடிமையாகி போனோளோ கயல்…