Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 5

கயல் வகுப்பில் காலடி எடுத்து வைத்ததும் வந்து விட்டால் அவளின் உயிர் தோழி திவ்யா . சில நேரங்களில் உயிரை வாங்கும் தோழியும் கூட….. (அது வேற டிபார்ட்மென்ட்…..)

“என்னடி என்னாச்சு, முகம் எல்லாம் டல்-அ இருக்கு….. எப்பவும் போல வீட்ல ப்ரோப்லமா?…” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே, “உன்னைய விட பெரிய ப்ரோப்லம் அவளுக்கு என்ன இருக்க போகுது…” என்றபடி வந்தான் சிவா… அவனை முறைத்து கொண்டே… “உனக்கு வேற வேலை ஏதுவும் இல்லையடா… மொக்கை போட்றதுக்குனே வந்தர வேண்டியது…. போடா போய் படிக்குற வழிய பாரு எருமை…” என்று கலாய்த்து கொண்டு இருந்தாள்….

இவர்களை பார்த்து சிரித்து கொண்டே வகுப்பிற்கு உள்ளே சென்றால் கயல்… இவர்களும் அவளின் பின்னே வந்தனர் சண்டை இட்டு கொண்டே… “அடியே போடலங்கா… நீ பேசுற பேச்சுல அவ பயந்து ஓடிட்டா பாரு… கொஞ்ச நேரம் பேசாம வரியா எப்போ பாத்தாலும் லொட லொடனு பேசிட்டே இருக்க… போண்டா…” என அவள் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் பேசி கொண்டே வந்தான் சிவா.

திவ்யா, ‘இவனுக்கு வேற வேலை இல்ல லூசு…’ என நினைத்து கயல் இடம் பேச சென்று விட்டாள். சிவா, ‘என்ன இவ நாம இவ்ளோ பேசுறோம் அமைதியா போறா… சரி இல்லையே… போடலங்கா எதோ பிளான் பண்ணிடுச்சு… உஷாரா இருக்கனும்…’ என நினைத்து விட்டு இவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்…

இவர்கள் தான் கயலுக்கு எல்லாமே… திவ்யா, சிவா, கயல் மூவரும் நெருங்கிய நண்பர்கள். அவளுக்காக எதையும் செய்ய கூடியவர்கள்… கயலின் கஷ்டத்திலும், கண்ணீரீலும் இருந்து அவளை மீட்டு கொண்டு வந்தது இவர்களின் நட்பு தான்… திவ்யாவும் சிவாவும் எப்போதும் சிரித்து கொண்டு ஜாலியாக இருப்பவர்கள். இவர்களை பார்த்து விட்டால் போதும் எப்படிபட்ட கஷ்டமும் பறந்து விடும் நம் கயலுக்கு.

பள்ளியில்……. கயல், அவளுடைய தாய் இறப்பதற்கு முன் ஒரு உயர்தர பள்ளியில் தான் படித்தாள். எப்பொதும் சுட்டியாக துறு துறு வென இருப்பதால் இவளை எல்லோருக்கும் புடிக்கும். நன்றாகவும் படிப்பாள். அங்கு இவளுக்கு ஒரு நெருங்கிய நண்பன் இருந்தான். இருவரும் ஒன்றாக விளையாடுவது சாப்பிடுவது எல்லாமே. அவனுக்கு படிப்பு சுமார் ரகம் தான். கயல் தான் கற்று தருவாள். அவனுக்கு இவள் தான் எல்லாமே. இவள் ஒரு நாள் வரவில்லை என்றால் இவனுக்கு நேரமே ஓடாது. அவளுக்கும் அப்படி தான். அப்படிப்பட்ட இவர்களின் நட்பிற்கு ஆயுள் குறைவு தான் போல. கயலின் தாய் இறந்ததும் அவளை வேறு பள்ளி மாற்றி விட்டார்கள்… எல்லாம் சுமதியின் வேலை தான்… கண்ணீருடன் தன் நண்பனை பிரிந்து வேறு பள்ளி சென்றாள் கயல். அவனுக்கு இருந்த ஒரு தோழியும் சென்ற சோகம் அவனின் கண்களில் கண்ணீரை கொடுத்தது.

அதன் பிறகு சுமதியின் செயலால் கயலின் இயல்பான குணம் மாறியது. எதற்கு எடுத்தாலும் பயப்பட ஆரம்பித்தாள். இதனாலயே தனக்கு என ஒரு சிறிய வட்டத்தை போட்டு கொண்டு அதை விட்டு வெளியில் வர மறுத்து விட்டாள். அவளின் பயந்த சுபாவம் கல்லூரி வரை தொடர்ந்தது. அதை உடைத்த பெருமை இந்த நண்பர்களை தான் சேரும். இப்போது எல்லாம் கயலிடம் பொறுமையும், எதிலும் யோசித்து முடிவு எடுக்க கூடிய திறனும் வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்து இருந்தது. எதற்கு எடுத்தாலும் அழுவதை நிறுத்தி இருந்தாள். எதையும் எதிர்த்து கேட்க கூடிய தைரியம் அவளுக்கு அதிகமாகி கொண்டே இருந்தது. அதை அவள் உணரும் நாள் தான் என்றோ!!!

திவ்யா கேட்டுகொண்டே இருந்தால், எதாவது நடந்ததா… என்று, அதற்கு கயல், “அதெல்லாம் இல்ல டி. எப்பவும் போல தான்…” என அவள் சொன்ன பிறகு தான் இருவருக்கும் மூச்சே சீராக வந்தது. பிறகு இவளை சுமதி எதாவது காயப்படுத்தி விட்டால் அதனால் தான்… சிவா தான் பேசி எப்போதும் போல சிரிக்க வைத்து கொண்டு இருந்தான்.

*******************************************

ஆதியும் கார்த்தியும் அலுவலகம் சென்று கொண்டு இருந்தனர். கார்த்தி எதையோ யோசித்து கொண்டே வந்தான். ஆதியும் அவனை பார்த்து கொண்டே வண்டி ஓட்டி கொண்டு இருந்தான். ஆதிக்கு தெரியாதா… அவன் என்ன யோசிப்பான் என்று இருந்தாலும் ஏதும் பேசவில்லை. கார்த்தி எதோ பேச வர ஆதி தடுத்து விட்டான். “நீ ஏதும் சொல்லாத… இந்த மாதிரி எதுவும் யோசிக்காம, எப்பவும் போல இரு…” என சொல்ல, “மச்சான் நான் சொல்ல வராத கேளு டா” என கதறி கொண்டு இருந்த கார்த்தியை மதிக்காமல் ஆதி காரில் இருந்து இறங்கி செல்ல இவனும் அவனின் பின்னே கத்தி கொண்டே சென்றான்.

ஆதி திரும்பி அவனை பார்த்து, “எனக்காக இந்த ஊர விட்டு போறது… வேற எங்கையாவது கண் காணாத ஊருக்கு போயிரலாம்னு யோசிக்கறது… எல்லாம் உன் நல்லதுக்கு தான் மச்சான், உன்னைய யாரும் ஏதும் சொல்ல கூடாது அதுக்காக தான்… நாம எங்க இருந்தாலும் நம்ம நட்பு தொடரும்…. இந்த டயலாக் எல்லாம் சொல்லாத. சாகுற வரைக்கும் நீயும் நானும் பிரிய மாட்டோம். என்ன நடந்தாலும் நீ என்னைய விட்டு போக கூடாது, போகவும் முடியாது புரியுதா. இந்த மாதிரி கேவலமான ஐடியா எல்லாம் யோசிக்கறத விட்டுட்டு போய் வேலைய பாரு. இன்னைக்கு கிளைண்ட் மீட்டிங் இருக்கு அதுக்கு ஏற்பாடு பண்ணு சீக்கிரம்…” என்று அவனை விரட்டி விட்டு ஆதித்யா எம்.டி என்ற அறையில் கம்பீரம் குறையாமல் நுழைந்தான் ஆதி. அவனின் பின்னே சென்றால் அவனின் பி.ஏ காவ்யா. பல பெண்களின் கண்கள் அவனை ஏக்கமாய் பார்ப்பதும், ஆசையுடன் அவனை பின்தொடர்வதும் நிற்கவில்லை.

இங்கு கார்த்திக் அதே இடத்தில் வேரூன்றி நின்று விட்டான். அவன் நினைத்ததை தான் அவன் மூச்சு விடாமல் சொல்லி விட்டு சென்று விட்டானே. இதற்கு மேல் இவனிடம் பேசவும் முடியாது…. எல்லாம் விதி என்று இவனும் தன் வேலையை பார்க்க சென்று விட்டான். அவனை பார்த்து ஒரு மர்ம புன்னகையை சிந்தி விட்டு காவ்யாவிடம் மீட்டிங் சம்மந்தமாக பேசிவிட்டு மீட்டிங்க்கும் கிளம்பி காவ்யாவுடன் சென்றான். எல்லா ஏற்பாடும் கார்த்தி ஏற்கனவே முடித்து விட்டான். கிளைன்ட் எல்லோரும் வந்து விட்டார்கள். கார்த்தியும் இணைந்து கொண்டான். ஆதியும் தன் ஆளுமையிலும், கம்பீரத்திலும் அனைவரையும் கவர்ந்து, அவனின் பேச்சு திறமையால் ப்ரொஜெக்ட் இவர்களுக்கே கொடுத்தும் விட்டார்கள். அதற்கு ஆதியின் உழைப்பும் நேர்மையும் மிகவும் முக்கியமானதும் கூட.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. கார்த்திக் , ஆதி ரெண்டு பெரும் அருமையான நண்பர்கள் . ரோஷன் நீ பேசுனது எவ்ளோ பெரிய தப்புன்னு ஒரு நாள் புரியும் . யாரு பின்னாடி அலைய போற ……ஆதி தங்கச்சி பின்னாடியா இல்ல வேற யாராவதா . கார்த்திக் உனக்கு செமையா ஒரு லைப் கிடைக்க போகுது பாரு. உன்னோட நண்பன் இருக்க எதுக்காக தூரமா போகணும்னு நினைக்கிற .
      கயல் ரொம்ப பாவம் . சின்ன வயசுல தெரியாம அவளே அவளுக்கு கஷ்டத்த ரெடி பண்ணிக்கிட்டா . கயல் பிரிண்ட்ஸ் சூப்பர் .

      இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

      1. Author

        Thanks sis😍😍😍😍😍🥰🥰🥰

    2. 1. ஆதி , கார்த்திக் நட்பு தான் இந்த கதையோட ஹைலைட்டே. இப்படி ஒரு நட்பு நமக்கு இல்லையேன்னு ஏங்க வைக்குது.

      2. கயல் ரொம்ப பாவம். கயலோட வலிகளை ஆழமா சொன்ன விதம் நல்லா இருந்தது.

      3. கதை, கதை நடை , கதை மாந்தர்கள் ன்னு எல்லாமே தரமா இருக்குற கதை தான் முடிவில்லா காதல் நீயே….

      குறைன்னு பார்த்தா

      1. கொஞ்சம் ஸ்பெல்லிங் எரர்ஸ்

      2. புள்ளி, மேற்கோள், கமா மாதிரியான பிழைகள்

      3. ரெகுலர் யூடி குடுக்குறது இல்ல.

      இதை தவிர குறைன்னு சொல்ல எதுவுமே இல்ல….

      1. Author

        Thanks sis🥰kuraiya niraiyaakikura sis 👍☺️🥰

    3. ‘முடிவில்லா காதல் நீயே’ நட்பையும், உணர்வுகளையும் அழகாக் காட்டுற கதை.
      இதோட பாசிட்டிவ்ஸ்,
      1. கயலோட கேரக்டர் செம நேச்சுரலா இருக்கு. சித்தி கொடுமைய அனுபவிச்சு வளர்ற பொண்ணு, எப்படி இருப்பான்னு அப்டியே காட்டுற மாதிரி இருக்கு.
      2. சிவா, திவ்யா ஃப்ரெண்டுக்காக யோசிக்கிறது, கேஷுவலா கயல நார்மலாக்குறது ரொம்ப நல்லாருக்கு.
      3. ஆதி, கார்த்திக்காக என்ன வேணா செய்றது, வேற லெவல்.
      நெகட்டிவ்ஸ்னா,
      1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் அங்கங்க இருக்கு.
      2. பன்க்சுவேஷன் மார்க்கிங் சரியா இல்லப்பா. அது கொஞ்சம் கன்ஃபியூஸ் பண்ணுது.
      3. சுமதி பண்ற வேலையெல்லாம் அப்டி இருக்கு. ஒருநாள் கயல் செமத்தியா திருப்பிக் குடுத்தா நல்லாருக்கும்.
      ஓவர் ஆலா ஸ்டோரி வேற லெவலா இருக்கு. கேஷுவலா, அதேநேரம் எமோஷன்ஸ அழகா வெளிப்படுத்துற மாதிரி இருக்கு.

      1. Author

        Thanks sis🥰 pilagail illama kuduka muyarchi edukiren sis👍☺️ thanks for your valuable comments 😍