Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 3

தன் நண்பனுக்கு ஆறுதலாக இருந்த ஆதிக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து போனது…
ஆதி படித்த கல்லூரியில் பழைய மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வருடா வருடம் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஆவலுடன் கலந்து கொண்டனர். வெளிநாடுகளிலும் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாத சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பல வருடங்கள் கழித்து தன் நண்பர்களை சந்தித்து பேசும் அந்த இனிமையான, அழகான பொக்கிஷங்களை நினைவுகளாக சேர்த்து வைக்க யாருக்கு தான் பிடிக்காது!

அலுவலகம் முடிந்தவுடன் அங்கே இருந்து இருவரும் நேராக விழாவிற்கு சென்று விட்டனர். வெண்பாவும் (ஆதியின் தங்கை) அதே கல்லூரியில் தான் படிக்கிறாள். இது பழைய மாணவர்கள் கூடும் விழா, ஆதலால் கல்லூரியில் பயிலும் சில மாணவர்களை தவிர அனைவரும் கிளம்பி விட்டனர். ஆதியும் கார்த்தியும் தனது நண்பர்களுடன் இணைந்து பேசி கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் நிகழ்ச்சியும் ஆரம்பித்து நன்றாக முடிந்தது. அங்கையே இரவு உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. அனைவரும் ஆங்கு ஆங்கே தன் நண்பர்களுடன் நின்று சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். ஆதியும், கார்த்தியும் இன்னும் சில நண்பர்களுடன் பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கே வந்தான் ரோஹன். ராகவன் என்ற ஆளுங்கட்சி எம்.பி-யின் ஒரே மகன். ஏகப்பட்ட சொத்துக்கள், தொழில்கள். மொத்தத்தில் பணத்தில் புரள்பவர்கள். ரோஹன் எப்போதும் யாரையும் மதிக்காமல், ஒரு திமிருடன் இருப்பவன். தகுதி பார்த்து பழக கூடியவன். ஒரு பொருள் மீது ஆசை பட்டால் எப்படியும் அதை அடைய வேண்டும் என்று எந்த எல்லைக்கும் செல்ல கூடியவன். அவனும் இதே கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்தவன். அவனை சுற்றி எப்போதும் ஜால்ரா அடிக்க சில நண்பர்கள் உண்டு. இவனுக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது (ஏன் அப்படினு அப்புறம் பாப்போம்). பெண்களே வேண்டாம் என்று தான் மெக்கானிக்கல் பிரிவையும் தேர்ந்து எடுத்தான் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இப்படிபட்டவன் தான் ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியம் போல் சுற்ற போகிறான் என்று இவனுக்கு யார் சொல்வது?…..(நான் சொல்ல மாட்டேன் பா….. நீங்களும் சொல்லாதீங்க) உஷ்….

இப்போது தன் தந்தையின் தொழிலை நேரம் கிடைக்கும் போது போய் பார்த்து கொள்வான். அதுவும் அவன் தந்தைக்காக. அவனுக்கு இருக்கும் ஒரே உறவு. இவனுக்கு தாய் இல்லை. ஆனாலும் தாய் இடத்தில் இருந்து இவனை வளர்த்தவர். தாய் இல்லாததால் கொஞ்சம் அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கபட்டவன். அதனால் தான் இப்படி ஆகி விட்டான் போல. கார் ரேஸிங் என்றால் இவனுக்கு மிகவும் பிடிக்கும். இவன் மிகவும் விரும்பி செய்ய கூடிய ஒரே விஷயம் இது தான். மத்தபடி நண்பர்களுடன் ஊரு சுற்றுவது, பப், டிஸ்கோ என பேச்சுலர் லைப்-ஐ என்ஜாய் பண்ணி கொண்டு இருந்தான். அவன் அப்பா எவ்வளவோ சொன்னாலும், “டேட், இப்போதா பேச்சுலர் லைப்-அ என்ஜாய் பண்ண முடியும், இந்த பிசினஸ்-ல கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ கூட உங்களுக்காக தான அப்போ அப்போ வந்து பாத்துக்குற அது போதும்… ப்ளீஸ் டேட்” என்று அவரை சமாதான படுத்தி விட்டு, ஊரை சுற்றி கொண்டு இருப்பவன். ரோஹனுக்கும் ஆதிக்கும் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டை இன்று வரை முடிவு பெறாத தொடர்கதையாக தொடர்கிறது. கல்லூரியில் எப்போது பார்த்தாலும் முட்டிக்கொள்வது அன்று முதல், இன்று வரை.

ரோஹன் தன் நண்பர்களுடன் அங்கே வந்து ஆதியை பற்றி தெரியாமல், வம்பை விலை கொடுத்து வாங்கி கொண்டு இருந்தான். ஆதியின் கோபம் ரோஹன்-ற்கும் தெரியும் எத்தனை தடவை பார்த்திருப்பான். இருந்தாலும் கெத்தை விடாமல் தன் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் “என்ன ஆதி… நீங்க எவ்ளோ பெரிய பிசினஸ் மேன், இங்க எல்லாம் வந்துருக்கீங்க….. அதுவும் நின்னுட்டே சாப்புடுறீங்களே…. நீங்க நின்னா எனக்கு கால் வலிக்கும். என்ன சார் நீங்க, சொல்லிருக்கலாம்ல. டேய் மச்சான் சார்-க்கு ஒரு ஷேர் போடுங்கடா பாவம் கால் வலிக்கும்ல” என்று தன் நண்பர்களிடம் கேலியும் கிண்டலும் கலந்து சொல்லி கொண்டு இருந்தான். ஆதி எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இவன் எல்லாம் ஒரு ஆளா என்ற அலட்சியமாக பார்த்து கொண்டு இருந்தான்.

அது ரோஹனுக்கு இன்னும் கோவத்தை ஏற்படுத்த, எப்படி இவனை அவமானபடுத்துவது என்று தெரியாமல் கார்த்தியை பார்த்து “ஓ, நீ இன்னும் இவன் கூட தா இருக்கியா….. அதனா பாத்த இவன விட்டா நீ எங்க போக முடியம். ரெண்டு பேரும் அவ்ளோ நெருங்கிய நண்பர்கள் ஆச்சே…. ஆனா உன்னைய பாராட்டியே ஆகனும் கார்த்தி. நீ யாரு? உன் அம்மா எவனுக்கு உன்னைய பெத்து போட்டுட்டு போனானு கூட தெரியாம ஒரு அனாதையா இருந்துட்டு, இவ்ளோ தூரம் முன்னேறி இருக்க பாத்தியா, உன்னைய பாராட்டாம எப்படி… நல்ல பணக்கார பசங்களா பார்த்து பேசி பழகி, அவங்க காசுலையே படுச்சுட்டு, அவங்க கம்பெனிலையே வேலையும் செய்ற பாத்தியா… சொல்ல வார்த்தையே இல்ல…..” என்று கேலி செய்து சிரித்து கொண்டு இருக்கும் போதே, ஆதி அவனை பாரபட்சம் பார்க்காமல் அடி வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான். “யாரை பார்த்து என்ன வார்த்தைடா சொன்ன. அவன் என் நண்பன். அவனை பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. இன்னைக்கு உன் சாவு என் கைலதா, செத்தடா….” என்று அவன் முகம் முழுதும் வீங்க வைத்து கொண்டு இருந்தான். அதற்குள் கார்த்தியும் அவன் நண்பர்களும் அவனை பிரித்து வேறு இடம் கூட்டி சென்றனர்.

ஆதிக்கு கோவம் மட்டும் குறையவே இல்லை. “டேய், ஏன்டா என்னைய கூட்டிட்டு வந்த விடுடா இன்னைக்கு அவனுக்கு கடைசி நாள்…” என்று கத்தி கொண்டு இருக்க அவனை அழைத்து சென்று காரில் ஏற்றினர். டிரைவர் இருக்கையில் அமர்ந்த கார்த்திக் காரை எடுத்தான். ஆதியின் சிவந்த கண்களே சொன்னது அவன் கோவத்தின் அளவை. அமர முடியாமல் திணறி கொண்டு இருந்தான். கார்த்திக், “மச்சான் விட்றா அவன் எல்லாம் ஒரு ஆளுனு. அதெல்லாம் பெருசா எடுத்துக்காத மச்சான்… நான் நார்மலா தான் இருக்கேன்…” என்று கலங்கிய தன் கண்களை அவனுக்கு காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டு கொண்டு இருந்தான். ஆதி அறியாததா… இருந்தாலும் ஏதாவது கேட்டு இன்னும் அவனை காய படுத்த மனம் வரவில்லை. அமைதியாக கழிந்த பயணம் கார்த்தியின் வீட்டில் முற்றுப்பெற்றது.

கார்த்தியை இறக்கி கொண்டு இவன் முகத்தை கூட பார்க்காமல், “மச்சான் டயர்ட்-அ இருக்கு நான் போய் தூங்குறேன்… நீயும் நேரா வீட்டுக்கு போற… வேற எங்கையாவது போனனு தெரிஞ்சது அவ்ளோதான். நான் போன் பண்ணுவ பாத்துக்கோ… நேரா வீட்டுக்கு போடா” என்று தன் நண்பனை எச்சரிக்கை செய்து விட்டு இவன் சென்று விட்டான். பாவம் அவனும் எவ்வளவு நேரம் தான் கண்ணீர் துளிகளை மறைப்பான். இன்னும் சிறிது நேரம் இருந்தால் கண்டு புடித்து விடுவான் என்றே வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டான். ஆதி அறியாததா தன் நண்பனை பற்றி. அவனின் சிறு கண்ணசைவு வைத்தே புரிந்து கொள்பவனுக்கு இது புரியாமல் போய் விடுமா என்ன…. அவன் சென்று விட்டானா என்று பார்த்து விட்டு காரை எடுத்தான். ஆதியின் கோவம் அவன் காரின் வேகத்தில் தெரிந்தது. கார் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் அவனின் கல்லூரிக்கு சென்றது….. (செத்தாண்டா சேகர்..)

இனி என்ன ஆகும்……. அடுத்த எபில பாக்கலாம்.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நண்பர்களை சந்திக்கறதே தனிசுகம்…இந்த ரோஹனுக்கு பொண்ணுங்கள பிடிக்காதா🙄🙄…கார்த்தி பாவம் ரோஹன் ரொம்ப ஓவரா பேசிட்டான்.. கார்த்திக் அழுதிருக்கான்..இருக்கு ஆதிகிட்ட அவனுக்கு..

      1. Author

        Thanks sis😍😍😍iruku avanuku paathukalam 😁😁🤣🤣

    2. Achacho Rohan jodi yarun nu kandupiduchuttene…. Nenga Vera yar kittayum sollathinga nu sollirunga…. Ipo enna Panna…. Sari unga kitaye solliruren… Athu venba Thane….. Eeeee….. Nan yar kitayum sollala😁😁😁😁😁…. Nengalum ularirathinga…. Readers ku surprise ah irukattum ….. 🤣🤣🤣🤣 Ud usual semma…. Acho pavam Rohan third hero knjm adiya kammiya kuduka sollunga….

      1. Author

        Thanks sis🥰🥰🥰 super Guess 😅😊🥰🥰👏👏👏👍👍

    3. ஆதி கார்த்திக் friendship… 😊

      ரோஹன்… 😡