Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 27

ஆதி மற்றும் கயலின் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. தனக்குள்ளும் காதல் இருந்தாலும் இன்னும் அதை உணர்ந்து முழுமனதாக ஏற்றுக்கொள்ள கயலுக்கு மனம் வரவில்லை… அதனாலேயே என்னவோ அவனின் அனைத்து முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது இருந்தும் கயலை பொக்கிஷமாக பார்த்து கொண்டான். அவளை கல்லூரி அழைத்து செல்வது அது முடிந்து நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு அழைத்து வருவது மற்றும் வெளியில் அழைத்து செல்வது காதல் பார்வை வீசி பேதை பெண்ணை கிறங்கடிப்பது என காதல் மன்னனாக சுற்றி கொண்டு இருந்தான் ஆதி. கயலுக்கும் அவனை பிடிக்கும் அவனின் காதலில் மெய்மறந்து போனது என்னவோ உண்மை தான்… ஆனால் தனக்குள்ளும் அதே அளவு காதல் இருக்குமா என்ற கேள்விக்கு இன்றும் விடை தெரியாமல் தான் சுற்றி கொண்டு இருக்கிறாள்.

நேரம் யாருக்கும் நிற்பது இல்லை… கடந்து கொண்டே இருந்தது… அனைவரும் இறுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்தனர். இந்த வருடத்தோடு கயல், சிவா, திவ்யா அனைவருக்கும் கல்லூரி வாழ்க்கை முற்று பெற போகிறது… அதனாலே என்னவோ ஒரு சோகம் அனைவரிடமும்… இருக்கும் நிமிடங்கள் அனைத்தும் அனைவரும் பொக்கிஷமாக சேமித்தனர் மனதில். முடிந்த அளவுக்கு நேரத்தை செலவு செய்தனர். வெண்பாவும் இவர்களுடன் கலந்து கொண்டாள். அனைவரும் ஒன்றாக ஊரை சுற்றினர்.

திவ்யா அந்த நிகழ்விற்கு பிறகு சிவாவிடம் தேவை இல்லாமல் பேசுவதை நிறுத்திவிட்டாள். நண்பன் என்ற ஒன்றை மட்டும் பிடித்து கொண்டு அதில் மட்டுமே பயணித்தாள். காதல் பார்வை, வெட்கம், அவனின் ஸ்பரிசம் அருகாமை இப்படி எதையும் அவள் வெளிப்படுத்தவும் இல்லை எதிர்பார்க்கவும் இல்லை. இதனால் சிவாவின் குழப்பமும் முடிவுக்கு வரவில்லை. தன்னை மறந்து விட்டாளா?… இனிமேல் தன்னை பார்க்க மாட்டாளா?.. நினைக்க கூட விருப்பம் இல்லையா?… காதல் பார்வை இல்லையா?… என ஏகப்பட்ட கேள்விக்கு விடை தேடிக்கொண்டு இருந்தான். நாம் தான் மறந்துவிட்டு வேறு கல்யாணம் பண்ணிக்க சொன்னோம் என்ற அவன் பேசிய வார்த்தையை மறந்துவிட்டான் போல. இவனின் பார்வைக்காக அவள் ஏங்குவது போய் இப்போது இவன் ஏங்க ஆரம்பித்துவிட்டான்.

காதல் இல்லை எதுவுமே இல்லை என சொல்லிவிட்டு இவனுக்குள் ஒளிந்து இருந்த காதல் இவனை பாடாய் படுத்தி கொண்டு இருந்தது. திவ்யா எதுவும் யோசிக்காமல் படிப்பு உண்டு தான் உண்டு என்று சுற்றிக்கொண்டு இருந்தாள். அவளுக்குள்ளும் மலையளவு காதல் இருக்கிறது. அதை வெளிப்படுத்தி இன்னும் அவனின் வெறுப்பையும் கோவத்தையும் சம்பாதித்து விடுவோமோ என விலகிவிட்டால் அவனை விட்டு, ஆனால் காதலை விட்டு விலக முடியாது. அந்த அளவிற்கு அவளின் மனதில் வேரூன்றி நின்று விட்டான் கள்வன். அவனை மறப்பது என்பது நடக்காத ஒன்று. இருந்தும் தன் மனவலியை தனிமையில் அழுது கரைத்துக்கொண்டாள். அவளின் தகப்பனும் ஓரளவுக்கு கணித்து விட்டார். இருந்தாலும் மகளே சொல்லட்டும் என அவளை எந்த தொந்தரவும் செய்யவில்லை.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யபட இருந்தது. கயலுக்கு கடந்த வருடம் நடந்த நிகழ்வு கண்முன்னே தோன்றி அவளுக்கு பெரும் வழியை கொடுக்க அதை ஓரம் கட்டி வைத்துவிட்டு நண்பர்களுடன் மகிச்சியாக அதற்கான ஏற்பாடுகளை கவனித்து கொண்டாள். அனைத்தும் முடிந்து நாளை விழா அது முடிந்து அனைவர்க்கும் தேர்வு தொடங்கிவிடும். கல்லூரி நாட்கள் நாளையொடு முடிய போகிறது என்ற ஏக்கம் அனைவரின் கண்களிலும் இருந்தது. ஒரு சோகத்துடன் அனைவரும் களைந்து சென்றனர்.

அதிகாலை நேரம்… ஆதவன் தன் பணியை செவ்வென செய்ய வந்துவிட்டான். கயல் எழுந்து விழாவிற்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தாள். ஆதி இரவு வெகு நேரம் கழித்து வந்ததால் அசந்து தூங்கி கொண்டு இருந்தான். சிவப்பு நிற பட்டு உடுத்தி அதற்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து அப்சரஸாக தயாராகி இருந்தாள். தயாரானவள் தன் மொபைல்-ஐ தேட அது கட்டிலுக்கு அருகில் இருக்க அதை எடுக்க போகும்போது ஒரு கை அவளை அப்படியே பிடித்து இழுத்து கட்டிலில் தள்ள ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அருகில் பார்க்க ஆதி அவளையே குறுகுறுவென ஒரு மார்கமாக பார்த்து வைக்க வெட்கத்தில் சிவந்து போனால் பெண்ணவள்.

“ஆதி என்ன பண்றிங்க விடுங்க… நான் இப்போதான் ரெடி ஆனேன்… ஏன் இப்படி பண்றிங்க…” என பேச பேச ஆதியின் கைகள் அவளின் இடையில் ஊர்வலம் நடத்திக்கொண்டு இருந்தது. அவளுக்கு ஒரு மாதிரி ஆக வாயில் இருந்து வார்த்தை வரவில்லை… இமைக்க மறந்து இருவரும் பார்த்துக்கொண்டு இருக்க ஆதியின் ஒரு கை அவளின் இடையிலும் இன்னொரு கை அவளின் முகத்திலும் வீணை மீட்ட தொடங்க அதில் கிறங்கி தவியாய் தவித்து கொண்டு இருந்தால் பெண்ணவள். பிறை போன்ற நெற்றி, அதில் ஒற்றை கல் போட்டு, படபடக்கும் பட்டாம்பூச்சி கண்கள், லேசாக சிவந்து காணப்படும் கொழு கொழு கன்னங்கள், இயற்கையிலே சிவந்து காணப்படும் செர்ரி உதடுகள் என அவனின் கைகள் அவளை அளவெடுத்து கொண்டே இன்னும் கீழே இறங்க கண்மூடி வேறு ஒரு உலகத்தில் லயித்து இருந்தால் பேதை.

நெற்றியில் ஆரம்பித்த முத்தம் படிப்படியாக இறங்கி கழுத்தில் வந்து வாசம் பிடிக்க பெண்ணவளின் மேனியின் வாசம் இவனை பித்தம் கொள்ள செய்ய அவளின் கழுத்து வளைவில் தொலைந்தே போய்விட்டான்.
கயலின் நிலைமை இருக்க இருக்க இன்னும் மோசம் ஆக அவளின் கைகள் தானாக அவனை அணைத்து கொண்டது. அவளின் இதழ்களில் வந்து இளைப்பாற தொடங்கினான் கள்வன். கயல் அவனை அணைத்து அவனின் தலைமுடியை பிடித்து கொள்ள ஆடவனின் காதல் கட்டுக்கடங்காமல் பெருக பெண்ணவளை அள்ளி அணைத்துக்கொண்டான்.

இருவரும் ஒருவித மோனநிலையில் இருக்க ஆதியின் போன் அடித்த சத்தத்தில் இருவரும் தன்னிலை வர அவனை பார்க்க வெட்கப்பட்டு ஓடிப்போய் குளியலறையில் புகுந்து கொண்டாள் பெண்ணவள். ஆதிக்கு வந்ததே கோவம் யாரு என்று எடுத்து பார்க்க வேற யாரு கார்த்திக் தான் அழைத்து இருந்தான். அவனிற்கு போன் பண்ணி இன்னும் கழுவி ஊத்த கார்த்திக் அசடு வழிந்து கொண்டே “சாரி மச்சி… நான் தப்பான டைம்ல கால் பண்ணிட்டேன் போல… பாய் மச்சி…” என போன்-யை வைக்க போக, “அதான் கெடுத்து விட்டுட்டியே… சாத்தியமா சொல்றேன்டா என் சாபம் உன்னைய சும்மா விடாது…” என பல சாபங்களை அள்ளி இறைத்து விட்டு கேட்டான் “எதுக்கு போன் பண்ண..?” என… “அது ஒன்னும் இல்லை மச்சி முக்கியமான மீட்டிங் இருக்கு… நீ தான் நியாபகம் படுத்த சொன்னியே அதான் கால் பண்ணேன்…” என சொல்ல, “ஓகே நான் வரேன்” என வைத்துவிட்டான். கயல் வெளியில் வந்ததும் அவன் தயாராக போய்விட கயல் கலைந்த புடைவையை சரி செய்து மறுபடியும் தயாராகி அவன் வருவதற்குள் ஓடிவிட்டாள்.

ஆதிக்கு நிம்மதியாக குளிக்க கூட முடியவில்லை… அவனின் செல்ல கண்ணம்மா அவனை தொந்தரவு பண்ண, ‘இவ வேற… மனுஷனை படுத்துறா… டேய் ஆதி… அடக்கி வாசிடா…’ என தனக்கு தானே மனதை திடப்படுத்தி கொண்டான். இவனும் தயார் ஆகி கீழே வர சாப்பிட்டு கயலையும் வெண்பாவையும் அழைத்து கொண்டு கிளம்பினான். வெண்பா இருப்பதால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்வையிலே களவாடி கொண்டு இருந்தனர். கல்லூரி வர ஒரு ஏக்க பெருமூச்சை விட்டு அவளை கண்களால் கைது செய்து சிவக்க வைத்து அனுப்பி வைத்தான்.

விழா நல்ல முறையில் நடக்க அனைவர்க்கும் ஒருவித மகிழ்ச்சி, பிரிவின் துயரம் என வெவ்வேறு மனநிலையில் சுற்றி கொண்டு இருந்தனர். எல்லாம் முடிந்து கிளம்ப இரவு ஆகிவிட்டது. வெண்பா ஏற்கனவே கிளம்பிவிட்டாள். கயலுக்கு துணையாக சிவா திவ்யா இருக்க ஆதிக்கு போன் பண்ண அவன் எடுக்கவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க அங்கே கார்த்திக் காரில் வந்தான். கயலிடம், ஆதி முக்கியமான மீட்டிங்க்ல இருக்கான் மா… அவன் இருந்தே ஆகணும் அதான் என்னைய கூட்டிட்டு போக சொல்லி அனுப்பிவிட்டான்… என சொல்ல கயலுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் நண்பர்களிடம் பிரிவின் சோகத்தை பகிர்ந்து கொண்டு கிளம்பினாள்.

இருவரும் செல்லும் போது நார்மலாக பேசி கொண்டு இருந்தனர். கயலுக்கு அப்போது தான் நியாபகம் வர கார்த்திக் இடம் கடத்தப்பட்ட அன்று என்ன நடந்தது என கேட்க அவனும் சொல்ல ஆரம்பித்தான்.

கதிரவனின் ஆட்கள் கயலை பின்தொடர்வது தெரியாமல் வெளியில் வந்து ஆதிக்கு அழைக்க முயற்சிக்க அந்த நேரம் அவளின் அருகில் யாருமே இல்லை. இது தான் சமயம் என கடத்திவிட்டனர் கயலை. அவளின் போன் அதே இடத்தில் விழுது நொறுங்கி விட்டது. ஆதி திரும்ப அவளுக்கு முயற்சிக்க லைன் கிடைக்கவில்லை. உடனே தன்னுடைய ஆட்களை அனுப்பி பார்க்க சொல்ல அவர்கள் சொன்ன பதிலில் ஆதியின் இதய துடிப்பே நின்றுவிட்டது. கயலின் போன் சாலை ஓரத்தில் கிடக்க ஆதிக்கு ஏதோ தவறாக தோன்ற கார்த்திகை அழைத்து கொண்டு அங்கு சென்று பார்க்க எதுவும் கிடைக்கவில்லை.

அங்கு இருந்த கேமரா-வை பார்க்க யாரோ கயலை கடத்துவது தெளிவாக தெரிந்தது. அந்த காரின் எண்ணை குறித்து விசாரிக்க அது போலியான எண். ஆதிக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனின் யோசிக்கும் திறன் அனைத்தையும் இழந்து இருந்தான் இந்த நேரத்தில். எதுவுமே தோன்றவில்லை. கார்த்திக் எண்ணப்படி ஆதியின் எதிரியை அனைவரையும் அடித்து துவைக்க ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லோருமே நாங்க எதுவும் பண்ணவில்லை என்று சொல்ல அவர்கள் கண்களில் பயமும் உண்மையும் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு இடமாக தேடி அலைந்தனர்.

எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே ஆதி பித்து பிடித்தவன் போல அலைந்து கொண்டு இருந்தான். வீட்டில் இருந்த அனைவரும் அவளை பற்றி கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தன்னவளை தொலைத்துவிட்டு அவன் படும் வேதனை சொல்லில் அடங்காது. கண்களில் இருந்து நிற்காமல் வலிந்து கொண்டு இருந்த கண்ணீர், வேதனை, அவனின் துடிப்பு அனைத்தும் சொன்னது இவனின் காதலை. அவளை பத்திரமாக பார்த்து கொள்ளாமல் விட்டதால் தான் இப்படி நடந்து விட்டது என தன் மேலையே பயங்க கோவம், இயலாமை எல்லாம் அவனை ஒன்றும் யோசிக்க விடவில்லை. ‘கயல்… கயல்… எங்கடி இருக்க… என்கிட்டே வந்துரு… நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி…. எனக்கு நீ வேணும் கண்ணம்மா…’ என நடு ரோட்டில் அவன் கதறிய கதறல் இன்னும் காதுக்குள் ஒலித்து கொண்டு இருக்கிறது.

கார்த்திக் அப்போது பொறுமையாக யோசிக்க தொடங்க அவனின் மூளையில் மின்னல் வெட்ட அவன் சொன்ன பெயர் தான் கதிரவன். உடனே ஆதி அவனின் லொகேஷன் எங்கே என பார்க்க சொல்லி அதை குறித்து கொண்டு பறந்தனர் அந்த இடத்திற்கு. அந்த இடத்தை நெருங்க நெருங்க ஆதியின் படபடப்பு பயம் தன்னவளுக்கு ஏதோ ஆபத்து என்று உணர்த்த விரைவாக அங்கு சென்று பார்த்தனர். கதிரவனின் ஆட்களை அடித்து துவைத்து எடுத்துவிட்டு உள்ளே பார்க்க கதிரவன் கயலை நெருங்கும் சமயம் இரும்பு ராட் ஒன்றை எடுத்து அடித்தே விட்டான். அதன்பிறகு மருத்துவமனையில் அவன் துடித்த துடிப்பு, அவள் கண்விழிக்கும் வரை அவளை விட்டு நீங்காமல் கண்ணம்மா கண்ணம்மா என்று பிதற்றியது முதல், இப்போது இவள் மேல் வைத்து இருக்கும் அளவு கடந்த காதல் வரை அனைத்தையும் சொல்ல கயலுக்கு கண்ணீர் நிற்காமல் வலிந்து கொண்டு இருந்தது.

தன்னவன் தன்னை இந்த அளவுக்கு காதலித்தானா என்ற எண்ணமே அவளுக்கு அவளின் காதலை உணர்த்த கட்டுப்படுத்த முடியாமல் அழுது தீர்த்தாள். கார்த்திக் அவளின் மனநிலை புரிய எதுவும் பேசாமல் அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட அழுது கொண்டே சென்றுவிட்டாள். சீதா அவளை பார்த்து அழைக்க அதெல்லாம் கருத்தில் பதியாமல் உள்ளே சென்றுவிட்டாள். பிறகு கார்த்திக் தான் அவருக்கு புரியவைக்க அவருக்கு தன் மகளின் வேதனை புரிந்தது. கார்த்திக் சென்று விட ஆதியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான். ஆதிக்கு உடனே தன்னவளை பார்க்க தோன்ற இதோ வந்துவிட்டான் தன்னவளை தேடி.

அறையில் அழுது கொண்டு இருந்தவளை ஆதியின் கண்ணம்மா என்ற அழைப்பு நிகழுலகத்திற்கு கொண்டு வர அவனை பார்த்ததும் பொங்கி வந்த காதலை அடக்க வழி தெரியாமல் ஓடி போய் அவனை இறுக்கமாக அணைத்து கொண்டு தன் கண்ணீரை கரைத்து அவனிடமே ஆறுதல் தேடி கொண்டு இருந்தாள். அவனும் அவளுக்கு ஆறுதலாக மாறி போக முகம் முழுவதும் முத்தங்களால் அவனை குளிப்பாட்டி கொண்டு இருந்தாள். அவளுக்குள்ளும் இருந்த காதல் இன்று அணை உடைத்த வெள்ளம் போல பெருக அதை அவனிடம் கொட்டியும் விட்டாள்.

“எனக்காக இவ்ளோ பண்ணிங்களா ஆதி… அந்த அளவுக்கு புடிக்குமா?… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… நான் தான் ரொம்ப லக்கி தெரியுமா… சாரி ஆதி உங்க அன்பை புரிஞ்சுக்காம விளையாட்டா இருந்துட்டேன்… லவ் யு மாமா…” என சொல்ல ஆதிக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை… “ஏய் என்ன சொன்ன… மாமாவா இன்னொரு தடவை சொல்லுடி செல்லம்…” என கேட்க முடியாது என ஓடிவிட்டாள்… ஆதியும் விடாமல் கேட்க அவனின் கண்னை பார்த்து “மாமா ஐ லவ் யு…” என கத்த ஆதி அவளை தூக்கி கொண்டான். சாப்பிட கூட இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர் விடிய விடிய. மனதிற்குள் பொத்தி வைத்த காதல் முத்தங்களாலும், பார்வையிலும், கண்ணீரிலும் சில நேரத்தில் வார்த்தையிலும் பரிமாறி கொண்டனர். இந்த இரவை இருவரும் பொக்கிஷமாக சேர்த்து கொண்டனர். ஆதிக்கு சொல்ல வார்த்தையே இல்லை. எத்தனை நாள் ஏக்கம் அந்த வார்த்தையை கேட்க… அவன் திகட்ட திகட்ட அதற்கான பரிசுகளை முத்தங்களாக அள்ளி தந்தான். அவளும் சலிக்காமல் பெற்றுக்கொள்ள பேசி பேசியே நேரத்தை போக்கினர்.

விடிய விடிய பேசி விடிந்து தூங்கி எழுந்து கொஞ்சி கெஞ்சி ஒருவழியாக இருவரும் கீழே வர அதை பார்த்து அனைவர்க்கும் மகிச்சியாக இருந்தது. ஒன்றாக பெரியவர்கள் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கி கொள்ள சீதா மகிழ்வுடன் தன் செல்ல மகளை அணைத்து கொண்டார். சீதா உடனே இருவரிடமும், “ஒரு வழியா எல்லாம் பிரச்சனையும் முடிவுக்கு வந்துருச்சு… இனிமேல் நீங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருக்கனும் எப்பவுமே… அப்புறம் முக்கியமான விஷயம்…” என நிறுத்த அனைவரும் கேள்வியுடன் பார்க்க “சீக்கிரமா எனக்கு பேரனும் பேத்தியும் பெத்து கொடுத்துருங்க… அது போதும்” என்க முதலில் புரியாமல் முழித்தவள் புரிந்தவுடன் ஆதியை பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான்.. உடனே வெட்கப்பட்டு போங்க அத்தைமா… என ஓடிவிட்டாள் சமையல் அறைக்கு… ஆதிக்கும் வெட்கம் வர, “அம்மா எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்…” என அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பறந்து விட்டான்… அனைவர்க்கும் இவர்களை பார்த்து ஒரே சிரிப்பு… கயல் மாட்டிக்கொள்ள அவளை வெச்சு செய்து கொண்டு இருந்தனர்.

வெண்பாவிற்கு ஏன் என்று தெரியாமல் ரோஹனின் நினைவு வந்து ஓட்டி கொள்ள அவளின் முகத்தில் வெட்க சிதறல்கள்… அதை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு கயலை வைத்து செய்து கொண்டு இருந்தாள். அந்த இடம் முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்தது…

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அப்பாடா ஆதி கயல் லவ் அஹ் சொல்லிக்கிட்டாங்க… 😍

      கார்த்திக், ஆரு… லவ் எப்போ சேரும்?

      ரோஹன், வெண்பா விஷயம் எப்போ எல்லாருக்கும் தெரியும்…?

      சிவா, திவ்யா லவ் எப்போ ஓகே ஆகும்?

      நைஸ் எபி dr… ❤