Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 21

வெண்பாவின் அறையில் நுழைந்த உருவம் தூங்கிக்கொண்டு இருந்தவளையே கண் இமைக்காமல் அருகே அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தது. எதேர்ச்சியாக முழித்த வெண்பா தன் அருகில் இருக்கும் உருவத்தை பார்த்து கத்த தொடங்கும் முன் உருவம் அவளின் வாயை பொத்தியது. இவள் ஒரு பயத்துடன் பார்த்து கொண்டு இருக்க முகமூடியை கழட்டிவிட்டு தன் முகத்தை அவளுக்கு காட்ட பயம் நீங்கி கோவம் தான் வந்தது. எதிரே ரோஹன் அவளை பார்த்து “ஹாய் டி பொண்டாட்டி…” என சிரித்து கொண்டே சொன்னான்.

“ஏய்… நீ இங்க என்ன பண்ற… எவ்ளோ தைரியம் இருந்தா இங்க, அதுவும் இந்த நேரத்துல வந்துருப்ப… இது மட்டும் என் அண்ணாக்கு தெரிஞ்சுது நீ செத்த… எதுக்குடா இங்க வந்த பொறுக்கி…” என திட்ட ரோஹன்க்கு கோவம் வந்தது. அவளின் கன்னங்களை கைகளில் பிடித்து.. “என்னடி ஓவர்ரா பேசுற… நான் உன் புருஷன்… நியாபகம் இருக்கட்டும்… அடிக்கடி மறந்துருவ போல… அதான் நியாபகம் படுத்திட்டு போலாம்னு வந்தேன்…” என பேசிக்கொண்டே அவளை விட்டு எழுந்து லைட்டை போட்டு அறையை சுத்தி பார்த்து “பரவாயில்ல ஏதோ ரூம் பாக்குற மாதிரி இருக்கு” என பேசிக்கொண்டே கண்களால் அளவு எடுத்தான்.

“அதெல்லாம் இருக்கட்டும்… ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் வந்தேன்… அதென்னடி அந்த சோடா பூட்டி கூட ரொம்ப தான் பேசுற… அதுவும் சிரிச்சு சிரிச்சு… என்னடி கொழுப்பா… அவனும் ஏதோ பெ-னு உன்னைய பாத்துட்டு இருக்கான்… இன்னொரு தடவை அவன்கூட உன்னைய பாத்த அவனுக்கு தான் அடி விழுகும்… புரியுதா…” என மிரட்ட அதெற்கெல்லாம் அசருபவளா வெண்பா. இன்னொரு தலையணையை தலைக்கு வைத்து சுகமாக உறங்க அதை பார்த்து, ‘இங்க ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன்… இவ பாட்டுக்கு தூங்குறா… இரு டி உனக்கு இருக்கு…’ என யோசித்து எதாவது கிடைக்குமா என சுற்றியும் தேட அங்கே ஒரு ஜக்-இல் தண்ணீர் இருக்க வில்லத்தனமான ஒரு சிரிப்பை உதிர்த்து, அதை எடுத்து முழுவதுமாக அவள்மேல் கொட்ட அடித்து பிடித்து எழுந்து அமர்ந்து அவனை பார்வையால் எரித்து கொண்டு இருந்தாள்.

“என்னடி பொண்டாட்டி… ஏன் ரொமான்டிக் லுக் விட்ற… புருஷன் பேசும்போது பொண்டாட்டி கேக்கணும்… அதை விட்டுட்டு தூங்குனா இப்படி தான் பனிஷ்மென்ட் கிடைக்கும்… புரியுதா… எங்க விட்ட” என மறுபடியும் யோசித்து பேச தொடங்க, சிறிது நேரம் கழித்து எந்த பதிலும் இல்லாமல் போக ‘என்னடா இது… எதுவும் பேச மாட்டேங்குறா… மறுபடியும் தூங்கிட்டாளா…’ என நினைத்து கட்டிலில் பார்க்க வெறும் கட்டில் மட்டும் இருக்க, ‘எங்க போய்ட்டா… இவ… அடியே மக்கு பொண்டாட்டி… அடியே ஹிட்லர் பேத்தி… எங்கடி போன…’ என மெல்லிய குரலில் தேடி பார்க்க அவள் தான் இல்லை. இவன் யோசித்து கொண்டு இருக்க திடீரென இவனின் மேல் ஐஸ்கட்டி மலை பொழிய, பதட்டத்துடன் திரும்பி பார்த்தால் வெண்பா கையில் பக்கெட் உடன் ஏளனமாக சிரித்து கொண்டு நின்றாள்.

“என்னடா… எப்படி இருக்கு… இந்த குளிர்க்கு இதமா இருக்கா… இருக்கனும்-ல… ரொம்ப சில்லுனு இருந்துச்சா… ஐஸ்கட்டி தான் போடலாம்னு நினைச்சேன்… பட் பாரு தண்ணியே அப்படி தான இருக்கு… அதான் எதுக்குன்னு விட்டுட்டுடேன்… நீ எனக்கு பண்ண நான் உனக்கு பண்ணிட்ட… கணக்கு சரியா போச்சு… சும்மா என்னைய மொறச்சுட்டு இருக்கமா… கிளம்பு காத்து வரட்டும்…” என பேச இவன் அவளை கைகளில் ஏந்தி இருந்தான். இதை சற்றும் எதிர்பாக்காமல் இருக்க அவனின் கையில் துள்ள, “ஏன்டா பொறுக்கி… என்ன திமிரு இருந்தா என்னைய தொட்டுருப்ப… மொதல்ல கீழ விட்றா… பாவம் பாத்து எங்க அண்ணன் கிட்ட எதுவும் சொல்லல… எப்பவும் இப்படியே பாவம் பார்ப்பானு நினைக்காத… விட்ரா ஹிட்லர்… பொறுக்கி…” என பேசி கொண்டே செல்ல அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் திமிற திமிற அவளை அள்ளி பாத்டப்பில் போட்டான். இவனும் இறங்கிக்கொள்ள அந்த தண்ணீர் மிகவும் சில்லென்று இருக்க வெண்பாவினால் குளிர் தாங்க முடியவில்லை.

அவனை திட்டிக்கொண்டே எழ முயற்சி செய்து வழுக்கி அவன்மேலையே விழுக இடை வளைத்து பிடித்து கொண்டான் கள்வன். இரு இமைகளும் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருக்க, தண்ணீரில் நனைந்து ரோஜா மலரை போல இருந்தவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். வெண்பாவிற்கு இதுவரை இருந்த கோவம் போய் சட்டு என்று ஒரு வெட்கம் வந்து ஓட்டி கொள்ள, முகம் அந்த குளிரிலும், அவனின் ரசனையான பார்வையிலும் சிவந்து தான் போனது. வெட்கப்பட்டு விலகி போக முயன்றவளை கள்வனின் கைகளும் கண்களும் விட்டால் தானே. இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொள்ள வெண்பா உடலில் ரசாயன மாற்றங்கள் அவளை பாடாய் படுத்திகொண்டு இருக்க, அவனின் தேக சூடு தேவை பட்டது போல அவனுடன் இன்னும் ஒன்றி போக, இவனுக்கு தான் பெரும் அவஸ்தையாகி போனது.

ஒரு கையால் அவளின் இடையில் பிடித்து இன்னொரு கையால் முத்துக்கள் சிந்தி சிதறிய அவளின் முகத்தில் இதமாக வருட, மொத்தமாக உருகிவிட்டால் பாவை. கைகளும் நீண்டு அவளின் சிவந்த அதரங்கள் இடம் வந்து நிற்க, அவளின் கண்களை பார்த்து கொண்டே, குளிரில் நடுங்கிய அவளின் இதழுக்கு தன் இதழின் மூலம் வெப்பத்தை கடத்தி கொண்டு இருந்தான் கள்வன். மனைவி என்ற அதிகாரம் இருக்க அதையும் தாண்டி முதல் முத்தம் வேறு, முடியாமல் நீண்டு கொண்டே செல்ல தன்னவளின் மூச்சிற்காக சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் அவள் இதழிலே மூழ்கி போனான். நேரம் காலம் தெரியாமல் தொடர்ந்த யுத்தம், ரோஹனின் போன் சத்தத்தில் தான் முற்றுப்பெற்றது.

இதழ்கள் ஒன்றில் ஒன்று உரசி கொள்ளட்டும்… குளிரில் நடுங்கும் தேகத்திற்கு ஆறுதலாக….
உன் உதட்டு வரி பள்ளத்தில் விழுந்துவிட்டேன்… ஆயுள் கைதியாக… என்றுமே விடுதலை வேண்டாம்…

வெண்பா எழுந்து அவனை பார்க்கும் திராணி அற்று வெளியில் ஓடிவிட, சின்ன சிரிப்புடன் இவனும் பின்தொடர்ந்தான். தண்ணீரில் முழுவதும் நனைந்து போய் இருக்க, குளிர் நின்ற பாடு தான் இல்லை இருவருக்கும். ஈரம் சொட்ட சொட்ட கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு வெட்கத்தில் திரும்பி நின்றவளை பார்த்து இவனின் கண்கள் அனுமதி இல்லாமலே அவளை அங்குலம் அங்குலமாக ரசிக்க தொடங்க, ‘டேய்… ரோஹன்… இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்த… அவ்ளோதான்… முதல்ல கிளம்புடா… லூசு…’ என தன்னை தானே திட்டி கொண்டு அவளை திரும்பியும் பாராமல் “நான் கிளம்புறேன்…” என சொல்லிவிட்டு தன் போன்யும் எடுத்து கொண்டு சிட்டாக பறந்து விட்டான்.

வெண்பா அந்த மயக்க நிலையில் இருந்து வெளியில் வந்த பாடு தான் இல்லை. ஏதோ ஒரு உடையை அணிந்துவிட்டு படுத்து விட்டாள். தூக்கம் தான் வரவில்லை. எப்படி வரும்….!!! இங்கே ரோஹன் ஒருவித மயக்கத்திலே எப்படி வீட்டிற்கு வந்தோம் என்றே தெரியாமல் வந்தவன் தன் அறைக்கு சென்றதும் படுத்துவிட்டான். வரும்போது உடை ஓரளவிற்கு காய்ந்து விட்டது. ஆனால் அவனுள் இன்னும் தன்னவளின் வாசம் அவனுக்கு ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த பல போராட்டத்திற்கு பிறகு உறங்கி போனான்.

இங்கே ஒருவன் உறக்கம் வராமல் தன் கனவு காதலியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் திண்டாடி கொண்டு இருந்தான். அவளை நேரில் பார்க்க வேண்டும்… கனவை எல்லாம் நினைவாக்க வேண்டும்… கை பிடித்து காதல் செய்ய வேண்டும்.. தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும்… அவளின் வாசம் வேண்டும் என அவனின் அடிமனம் விடாமல் தொல்லை செய்ய இவனும் அதற்கு என்ன பண்ணலாம் என யோசித்து களைத்து போய் ஒரு கட்டத்திலில் தூங்கியும் போனான் கார்த்திக்.

தன் பணியை செவ்வென செய்ய வந்துவிட்டது ஆதவன். அனைவரும் எழுந்து தன் வேலையை செய்து கொண்டு இருந்தனர். ஆதி வீட்டில் தூக்கம் களைந்து ஆதி எழ முற்பட அது தான் முடியவில்லை. ஏதோ பாரம் அழுத்த நன்றாக போர்வையை விளக்கி பார்க்க அவனின் மனையாள் அவன் நெஞ்சின் மேல் தலைவைத்து இதமாக தூங்கி கொண்டு இருந்தாள். பலநாள் கழித்து நிம்மதியான தூக்கம் தழுவ தூக்கத்தில் உருண்டு தலையணை என நினைத்து தன்னவனின் மார்பில் தஞ்சம் புகுந்து இருந்தாள்.

அதிகாலை ஒளியில், அன்று அலர்ந்த மலராக இருந்தவளை தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். அவளின் உச்சி வட்டில் ஒரு முத்திரையை பதிக்க தோன்ற அதை கட்டுப்படுத்தி கொண்டு அவளை விட்டு மெதுவாக விலக தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள். ஆதி, ‘ஆக மொத்தம் எதாவது ஒன்னை கட்டிபிடுச்சு தான் தூங்குவியா அழுமூஞ்சி பாப்பா…’ என நினைத்து சிரித்து கொண்டே தயாராகி சென்று விட்டான். தாயிடம் அவளை எழுப்ப வேண்டாம் அவளே வரட்டும் என சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிவிட்டான். நிம்மதியாக தூங்கி எழுந்து நேரத்தை பார்க்க அதுவோ 9 என காட்ட அடித்து பிடித்து தயாராகி கீழே வர சீதா, “என்னமா நல்லா தூங்குனியா… சரி இந்தா காபி…” என அவளிடம் நீட்ட தயக்கத்துடன் வாங்கி கொண்டாள். “சாரி மா… லேட்டா எழுந்து வந்ததுக்கு… இனிமேல் இப்படி நடக்காது…” என ஒருவித பயத்திலும் பதட்டத்தில் சொல்ல சீதா அருகில் வந்து, “நான் உனக்கு அம்மா தான்… சரியா… இது நம்ம வீடு… உனக்கு பிடித்த மாதிரி நீ இருக்கலாம்… இனிமேல் அம்மா கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது… அப்புறம் புனிஷ்மென்ட் கிடைக்கும்…” என கறாராக சொல்ல இதுவரை இருந்த சிரிப்பு மறந்து, ஒருவித பயத்துடன் “என்ன புனிஷ்மென்ட்…?” என திக்கி திணறி கேட்க… “அதுவா முத்தம் குடுக்கணும்…” என கன்னத்தை தொட்டு காட்ட, கயல் சிரித்து கொண்டே “அப்போ இனிமேல் நிறைய முத்தம் கிடைக்குமே… தயாரா இருங்க அத்தைமா…” என கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் இட சீதா இது எதுக்கு என கேட்டு வைக்க சூப்பரான காபிக்கு, என சொல்லிவிட்டு ஓடிவிட சீதா சிரித்து கொண்டே வேலையை தொடர கயல் தன் அறைக்கு சென்று எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு தந்தையிடம் பேசிவிட்டு கீழே வந்து சீதாவுடன் ஒன்றி போனாள். இருவரும் பேசிக்கொண்டே சமைக்க வாசம் பிடித்து கொண்டே வந்தார் வெங்கட்.

“என்னடி பட்டு, சமையல் வாசம் ஆள தூக்குது… நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே…” என பேசிக்கொண்டே வந்தவர் கயல் இருப்பதை பார்த்து அசடுவழிந்து சிரித்து கொள்ள சீதா அவரை முறைத்து இருந்தார். “அது… தண்ணி குடிக்க வந்தேன்…” என சமாளித்து விட்டு ஓடிவிட்டார். கயலுக்கு சிரிப்பை அடக்க தான் பெரும்பாடாகி போனது. இருவரும் ஒருவழியாக சமையலை முடிக்க அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். வெண்பா வெகுநேரம் கழித்து தான் இறங்கி வந்தாள். இரவு நடந்த சம்பவங்கள் அப்படி. வந்தவுடன் எல்லோரும் செல்லம் கொஞ்சி விட்டு கயலை பரிமாற வைத்து சாப்பிட தொடங்க அதே நேரம் ஆதியும் வந்துவிட அனைவரும் காலை உணவை முடித்தனர். கயல் ஆதி பக்கத்தில் போகவே இல்லை. சீதா தான் வற்புறுத்தி அனுப்பி வைத்தார். ஒருவித பதட்டத்துடன் பரிமாற அவன் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டான்.
கயலுக்கு தான் ஒரு மாதிரி ஆனது, ‘நல்ல இருக்குனு சொல்லிருக்கலாம்…’ என யோசித்தாலும் எதுவும் வெளியில் காட்டவில்லை. ‘உன்னையே அவருக்கு புடிக்கல… ஏதோ அம்மாக்காக உன்னைய கல்யாணம் பண்ணிகிட்டாரு… இதுல நீ சமைச்சாலும் ஒன்னு தான் இல்லைனாலும் ஒன்னு தான்’ என நினைத்து அதை விட்டுவிட்டாள். வெங்கட்டும் வெண்பாவும் புகழ்ந்து தள்ளிவிட்டனர். சீதாவும் கயலை நினைத்து பெருமிதம் கொண்டார்.

ஆதி சாப்பிட்டு மேல செல்ல சீதாவும் கயலும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு கயலை மறுவீடு செல்ல தயராக சொல்லி அனுப்பிவைத்தார். கயல் அறையில் சென்று பார்க்க ஆதி இல்லை. எங்க போனாரு இவரு என யோசித்து கொண்டு இருக்க, “என்ன பண்ற…?” என திடீரென கேட்ட குரலில் பயந்து திரும்பி பார்க்க ஆதி நின்று இருந்தான். பதட்டத்துடன், “அது ஒன்னும் இல்லை… சும்மா தான்” என ஏதோ சொல்லி மழுப்பி விட்டு ஓடிவிட்டாள். பின் இருவரும் தயாராகி கீழே வந்து சீதாவிடம் சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினர். வெண்பாவை அழைக்க அவள் மட்டும் இருவருடன் கிளம்பினாள். மௌனமாக தொடர்ந்தது பயணம். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெண்பா போன்-இல் மூழ்கி போனாள்.

செல்வத்தின் வீடு வாசற்படியில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தால் திவ்யா. தாய் ஸ்தானத்தில் இருந்து அவளே எல்லாம் பார்த்து கொண்டாள். கயலுக்கு ஆனந்த கண்ணீர் வர திவ்யாவை அணைத்து கொண்டாள். அங்கே திவ்யா, சிவா, கார்த்திக் என அனைவரும் இருக்க இவர்களும் அவர்களுடன் கலந்து கொண்டனர். முதல் முதலில் கணவனுடன் காலடி எடுத்து வைத்த கயலுக்கு தாயை நினைத்து அழுகை வர அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துக்கொண்டாள். திவ்யா நேரமே இங்கே வந்து சமைத்து செல்வத்திற்கு தேவை ஆனது எல்லாம் செய்து பார்த்துக்கொண்டாள். சிவாவும் திவ்யாவும் சேர்ந்து தான் சமைத்தனர். திவ்யாவிற்கு ஓரளவுக்கு தான் சமைக்க வரும் அதனால் சிவா உதவி செய்ய இருவரும் சேர்ந்து முடித்தனர். கார்த்திக் சொல்லியும் இருவரும் அவனை அடிப்படியில் அனுமதிக்க வில்லை. தன்னவன் தன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வே அவள் ரெக்கை இல்லாமல் பறக்க செய்ய அவனை சைட் அடித்து கொண்டே வேலை செய்தாள். அதை கண்டும் காணாமல் இருந்து விட்டான் சிவா. கயல் ரொம்ப நாள் கழித்து சந்தோசமாக இருந்தாள். மதியம் நன்றாக உண்டுவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

மாலை மயங்கிய நேரம், அனைவரும் செல்வத்தையும், அருணையும் அழைத்து கொண்டு கார்த்திக் ஒரு காரில் கிளம்ப ஆதி அந்த வீட்டிற்கு ஒரு ஆளை நியமித்து விட்டு கிளம்பினர். சிவா திவ்யாவை விட்டுவிடுவதாக சொல்ல தன் தோழியை அணைத்து பிரியா விடைபெற்றால் கயல். திவ்யா கயலை தனியே அழைத்து இருவரும் ஏதோ பேச, கயல் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் இருக்க திவ்யா அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சிவாவுடன் கிளம்பிவிட்டாள். கயலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்துடனே இருந்தாள். ஆதியும் அவளை கவனித்து கொண்டான் ஆனால் எதுவும் கேட்கவில்லை. பிறகு பார்த்து கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டான். அனைவரும் அவர் அவர் வீடுகளுக்கு செல்ல கயல் ஒரு குழப்பத்துடனே தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள்.

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்