முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 20
கழுத்தில் தாலியுடன் கண்களில் கண்ணீருடன் நின்றாள் கயல். இந்த ஒரு நாள் அவள் வாழ்க்கையை திசை மாற்றி விட்டதாய் தோன்ற அடுத்து என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் பொம்மை போல நின்று கொண்டு இருந்தாள். அவளுக்கு ஆறுதலாக வேண்டியவனோ யாரிடம் ஆறுதல் தேடுவது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கும் போது இவளுக்கு எப்படி ஆறுதல் கிடைக்கும். கோவிலில் அனைத்து சடங்குகளும் முடித்து அனைவரும் வீட்டிற்கு கிளம்ப கயல் தகப்பனை கட்டி கொண்டு அழுக சீதா ஆறுதல் சொல்லியும் அவள் அழுகை நிற்கவில்லை.
அருண்ற்கு அக்காவை பிரிய மனமில்லை தாயை போல தன்னை தாங்கிய அக்கா இனிமேல் நமக்கு இல்லை என்று நினைக்கும் போது அவனால் அழுகையை நிறுத்த முடியவில்லை. கயலின் இடுப்பை இறுக கட்டிக்கொண்டான். இவளுக்கு இனிமேல் தகப்பனுக்கும், தம்பிக்கும் யாரு இருக்கிறார்கள் என்ற எண்ணம் கண்ணீராய் மாறி இருக்க பரிதவிப்புடனும், இயலாமையுடனும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அதை பார்த்த ஆதி செல்வத்திடம் வந்து “மாமா… நீங்க என் மச்சான் ரெண்டு பெரும் வீட்டிற்கு போய் உங்களுக்கு தேவையானது எல்லாம் எடுத்துட்டு ரெடியா இருங்க… நாங்க மறுவீடு வரும்போது கயல் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு எல்லோரும் நம்ம வீட்டுக்கு போயிரலாம்… இனிமேல் நீங்க அங்க தான் இருக்க போறீங்க…” என சொல்ல செல்வத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் பெண் வாழப்போகும் வீட்டில் தான் எப்படி இருப்பது… என யோசிக்க அவரின் யோசனையை ஆதி அறிந்து, “நீங்களும் எனக்கு அப்பா மாதிரி தான்… என்னைய உங்க பையனா நெனச்சுக்கோங்க… இனிமேல் அது நம்ம வீடு அதை மட்டும் யோசிங்க… ” என சொல்ல செல்வத்திற்கு பெருமை தாங்கவில்லை. சீதாவிற்கு மகனை நினைத்து பெருமிதமாக இருந்தது. சீதா, வெங்கட் எல்லோரும் சொல்ல ஒத்துக்கொண்டார்.
அருணுக்கு ஏக சந்தோசம்… “அப்போ சீக்கிரமா வீட்டுக்கு போலாம்…” என துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டான். கயலுக்கு இதுவரை இருந்த ஏதோ ஒரு பயம் விலகிய உணர்வு மனம் சற்று இளகியது சிறிது சந்தோசம் எட்டி பார்த்தது. ஆதியை நன்றியுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள். வெண்பா துள்ளிக்குதித்து கொண்டு இருந்தால் “ஹே… நம்ம டியர் இனிமேல் நம்ம வீட்ல தான் இருக்கும்… செம ஜாலியா இருக்கும்… என்கூட விளையாட ஒரு குட்டி பையனும் இருக்கான்…” என திவ்யாவிடம் சந்தோசமாக சொல்லிக்கொண்டாள். திவ்யாவிற்கும், சிவாவிற்கும் இனிமேல் தனது தோழியின் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இந்த கலவரத்தில் அனைவரும் நண்பர்களாக ஆகிவிட்டனர். குறிப்பாக வெண்பா சிவா கார்த்திக் எல்லோரும்.
கயல் கிளம்ப போக திவ்யா கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். ஆறுதல் படுத்தி அவளை அனுப்ப சிவா தன் உடன்பிறவா சகோதரியை ஆதியின் கைகளில் ஒப்படைத்தான். கயல், “என்னடா கடைசில வந்து எங்க கூட பேசிட்ட போல… உனக்கு கொழுப்பு டா… துரை நாங்க பேசுனா கூட பேச மாட்டீங்க… லூசு…” என சிவாவின் தலையில் தட்டிவிட்டு “ஒழுங்கா என் அமுல் செல்லத்துக்கு ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ… வேற யாரையாவது கல்யாணம் பண்ணனும்னு நெனச்ச… ஆள வெச்சு தூக்கிருவோம்… புரியுதா…” என கேட்டு வைக்க திவ்யாவிற்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது. சிவா ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தான். பின் அனைவரிடம் பேசி அவர்கள் கிளம்ப கார்த்திக் அனைவரையும் ஏற்றி அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு செல்வத்தை இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வருவதாக சொல்லிவிட்டு சென்றான்.
ஆதி வீட்டில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் கயல். விளக்கு ஏற்ற சொல்லிவிட்டு, பாலும் பலமும் கொடுத்தனர். இருவரும் அவர்கள் சொன்னதை மட்டும் செய்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளவில்லை. பிறகு தனி தனி அறையில் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு சென்றனர். ஆதி அவன் அறைக்கு சென்று விட்டான். கயலை கீழே இருக்கும் ஒரு அறையில் விட்டு துணைக்கு வெண்பாவையும் கூட இருக்க வைத்தனர். வெண்பா இருந்தது கயலுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்க இருவரும் பேசி கொண்டு இருந்தனர். கயலை தூங்கி ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெண்பாவை சீதா அழைத்து சென்றார். கயலும் ஏதேதோ யோசித்து ஒரு கட்டத்தில் தூங்கியும் விட்டாள்.
செல்வாவிற்கும் அருணுக்கும் துணையாக கார்த்திக் அவர்கள் வீட்டில் இரவு இருந்து கொண்டான். யாரும் இல்லாத கார்த்திக்கு செல்வா ஒரு தகப்பனாகவும், அருண் ஒரு தம்பியாகவும் மாறி போயினர். அருண் தனக்கு இத்தனை நண்பர்கள் கிடைத்ததில் ஏக சந்தோஷத்தில் இருந்தான். ஆதி வேண்டாம் என்று சொல்லியும் இரவு சடங்கிற்கு தயராக சொல்லிவிட்டு சென்றார் சீதா. கயலை குளிக்க சொல்லி அலங்கரித்து கொண்டு இருந்தால் வெண்பா. அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க, அதை ரசிக்கும் மனநிலையில் கயல் இல்லை. மனம் முழுக்க கலக்கம் மட்டுமே… இதுல இதுவேறையா என்று தான் இருந்தது. இருந்தாலும் மற்றவர்ககளுக்காக எதுவும் சொல்லாமல் அப்படியே ஏற்று கொண்டாள். ஆதி தன் அறையில் தயராகி காத்திருந்தான்… இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும்.. என அவனின் நினைவுகள் கல்யாணம் நடந்த நிகழ்வுகளை திருப்பி பார்த்தான்.
சீதா, “அண்ணா என் பையனுக்கு உங்க பொண்ண குடுப்பிங்களா… அவளை என் பொண்ணு மாதிரி பாத்துக்கிறேன்….” என உரிமையாக கேட்க ஒரு நிமிடம் உறைந்து விட்டார் செல்வா. ஆதி தான் இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்க கயல் உறைந்தே விட்டாள்.
அண்ணா, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க… எனக்கு கயலை புடிக்கும்… அவளை இந்த நிலமைல பார்க்க கஷ்டமா இருக்கு… அதையும் தாண்டி எப்படியும் இதுக்கு மேல அவளுக்கு ஒருத்தர பாத்து கல்யாணம் பண்ணிவைப்பிங்க அண்ணா… ஆதியும் நல்ல பையன் தான்… அவன் நல்லா பாத்துப்பான்… அவ எனக்கு பொண்ணு மாதிரி அவளை நான் நல்லா பாத்துக்குறேன்…” என எதிர்பார்ப்புடன் கேட்க செல்வத்திற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கயலிடம் கேட்க, “அப்பா நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சரி தான் பா…” என்று சொல்லிவிட்டாள்.
ஆதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளை ஒரு தடவை பார்த்து இருக்கிறான். மனதில் ஏதோ ஒரு தடுமாற்றம்… யாரு மேலும் வராத ஒரு நெருக்கம், பல நாட்கள் பழகிய உணர்வு… அவளை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள நினைத்தான்… தெரிந்தும் கொண்டான்… ஆனால் காதல் உண்டா? என்று கேட்டால் பதில் இல்லை.. இனி வாழ்க்கையே அவள் மட்டும் தான்… என யோசிக்க, அவனின் மனதில் ஏதோ ஒருவித படபடப்பு… காதலித்து கல்யாணம் செய்யும் ஆசை இனிமேல் அவ்வளவுதானா…? எல்லா கேள்விகளும் அவனின் மனதை போட்டு அழுத்த என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
சீதா ஆதியை அழைக்க நினைவு திரும்பியவனின் முகத்தை தான் அனைவரும் பார்த்தனர் என்ன சொல்ல போகிறான் என… ஆதி கயலை பார்க்க அவள் மட்டும் தரையை பார்த்து கொண்டு இருந்தால், கண்களில் வழியும் கண்ணீருடன்… அவளின் கண்ணீர் அவனை அசைத்து பார்த்தது. அவளை இந்த நிலைமையில் பார்க்க ஏனோ கஷ்டமாக இருந்தது. கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு சீதாவை பார்த்து சம்மதம் சொன்னான். ஆனால் இனி என்ன ஆனாலும் இவள் தன்னவள்… எந்த நிலைமையிலும் கைவிடாது இதயத்தில் பொத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து தான் தாலியை கழுத்தில் கட்டினான்.
யோசனையில் இருந்தவனை பின்னால் ஒரு கொலுசு ஒலி கலைக்க திரும்பி பார்த்தான். கயல் லாவெண்டர் நிற சேலையில், எளிமையான ஒப்பனையில் ஆளை அசரடிக்கும் அழகில் வந்து நிற்க ஆதி ஒரு நிமிடம் மூச்சு விட மறந்தான். ஆதியின் பார்வையில் கயலுக்கு அடிவயிற்றில் ஒரு இனம்புரியா உணர்வு. பயத்தில் கண்கள் படபடக்க ஆதி அப்போது தான் சுயநினைவை அடைந்தான். ஆதி அவளின் அருகே வர இவளுக்கு கை கால் எல்லாம் நடுங்க கண்கள் பயத்தில் கலங்கியே விட்டது. ஒருவித பயத்துடன் பார்க்க ஆதிக்கு அவளை பார்த்து சுவாரஷ்யம் ஆனது.
கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளையும் அமர சொல்ல விட்டால் விழுந்து விடுவது போல அமர அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு, முகத்தை கடுமையாக வைத்து, “நல்லா உட்காரு மா… நான் ஒன்னும் கடித்து தின்ற மாட்டேன்…” என சொல்ல எழுந்து நன்றாக அமர்ந்தாள் ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. “சரி என்ன ஆரம்பிக்கலாமா…” என ஒரு மாதிரி குரலில் கேட்க கயல் நெற்றியில் புருவ முடுச்சுடன்.. “என்னது..?” என கேட்க ஆதி, “என்னமா இப்படி கேக்குற… இன்னைக்கு நமக்கு முதலிரவு.. சோ அதுக்கு நீயும் நானும்… சேர்ந்து…” என பேசிவிட்டு பாதியில் நிறுத்த பயத்தில் எழுந்தே விட்டாள்.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க… எனக்கு பயமா இருக்கு… ப்ளீஸ்..” என கெஞ்சலாக பேசி ஒரு கட்டத்தில் அழுதே விட்டாள். ஆதி இதுவரை அடக்கி வைத்து இருந்த சிரிப்பை வாய்விட்டே சிரிக்க ஆரம்பிக்க கயல் அவனை புரியாமல் பார்க்க அவளை அமர சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தான். “பயப்படாத… சும்மா தான் சொன்னேன்…” என சொல்லவும் தான் கயலுக்கு மூச்சே சீராக வந்தது.
நம்ம ஒரு தடவை தான் பாத்துருக்கோம்… அதுவும் நீ மயக்கத்துல இருந்த… எதிர்பாக்காதது எல்லாம் நம்ம லைப்ல நடந்துருச்சு… கல்யாணம் இப்போ இது எல்லாம்… முதல்ல நம்ம ஒருத்தர ஒருத்தர் பேசி புருஞ்சுக்குவோம்… பிரிஎண்ட்ஸ்-அ இருப்போம்… அதுக்கு அப்புறம் என்னனு அப்போ பாத்துக்கலாம் சரியா… அதனால பயப்படாத… நான் உன்னைய ஒன்னும் பண்ண மாட்டேன்…” என்க அவளும் தலை ஆட்டிவைத்தாள். சரி தூங்கு… என அவன் ஒரு ஓரமாக படுத்துக்கொள்ள இவளுக்கு தான் கணவன் ஆனாலும் ஒரே கட்டிலில் படுக்க ஒரு மாதிரியாக இருந்தது.
நின்று கொண்டே இருந்தவளை என்னவென பார்க்க ஒரு வித தயக்கத்துடன்… நான் கீழ படுத்துக்கட்டுமா… என திக்கி திணறி கேட்க “எங்க வேணாலும் படுத்துக்கோ… ஆனா எனக்கு AC இல்லாம தூக்கம் வராது… தரை ரொம்ப சில்லுனு இருக்கும்… காலையில பாக்க பிரிட்ஜ்-ல வெச்ச ஐஸ் கட்டி மாதிரி ஆயிடுவ… பரவாயில்லைனு தோணுச்சுனா படுத்துக்கோ… என்க ‘என்னது ஐஸ் கட்டியா…’ என வாயை பிளந்து விட்டு கட்டிலில் ஏறி கொண்டாள். ஆதி சிரிப்பை அடக்கி கொண்டு அவளை பார்க்க பேந்த பேந்த விழித்தவள் அவனை பார்க்க குட் நைட்… என சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டான்.
ஏண்டி கயலு… பெரிய இவ நீ… கீழ படுத்துப்பீங்களா மேடம்… காலைல குளிர்ல செத்துடுவ டி… அதனால இங்கையே படுத்துரு… இவரை பாக்க கொஞ்சம் நல்லவர் மாதிரி தான் இருக்கு… பயப்படாத சரியா… என தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டே ஒரு கட்டத்தில் தூங்கியும் போனாள். ஆதி இவளை திரும்பி பார்க்க எந்த கள்ளம் கபடும் இல்லாமல் குழந்தை போல தூங்குபவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை… ஆவுன்னா அழுதுறா… அழுமூஞ்சி… என சிறிது நேரம் ரசித்து விட்டு தூங்கி போனான்.
வெண்பா தூங்கி கொண்டு இருக்க, அவளின் அறையில் கருப்பு முகமூடி அணிந்த உருவம் ஒன்று எகிறி குதித்தது….!! யாரு அது பார்ப்போம்…??
காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.