முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 19
கண்மூடி திறப்பதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது… கயலின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி தான்… என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தவள் போல இருந்தவளை அலங்கரிக்க வந்தனர் பெண்கள் சிலர். நடப்பது நடக்கட்டும் எல்லாம் கடவுள் சித்தம் என நினைத்து பொம்மை போல் அமர்ந்து விட்டாள். அவர்களை இழுத்த இழுப்பிற்கு சென்றாள். அலங்கரித்து கீழே அழைத்து வந்தவளை ஒரு தரம் பார்த்து விட்டு அனைவரையும் ஏற்றி கொண்டு அந்த வாகனம் கோவிலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தன் விதியை எண்ணி கலங்கி தவிக்கும் பெண்ணின் மனதிற்கு ஆறுதல் தான் கிடைக்கவில்லை.
செல்வம் மகளை எண்ணி கண்ணீர் வடித்து கொண்டு இருந்தார். அவருக்கும் என்ன செய்வது, மகளுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் நிகழ்வை எப்படி தடுப்பது என புரியாமல் கடவுள் மேல் பாரத்தை வைத்துவிட்டார். அருண் தன்னால் முடிந்ததை செய்து விட்டான். இனி நடப்பது நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான். இவர்களின் வேண்டுதல் பழிக்குமா…?? பாப்போம்.
கோவிலில், மணமேடையில் வெற்றிமாறன் ஒரு வெற்றி புன்னகையுடன் அமர்ந்து இருந்தான். அவன் ஆசைபட்டத்தை அடைய போகும் மகிழ்ச்சி அவன் முகத்தில் இருந்தது. எப்போது தன்னவள் வருவாள் என்ற ஏக்க பெருமூச்சுடன் ஐயர் சொன்ன மந்திரங்களை கடமைக்கு உச்சரித்து கொண்டு இருந்தான். மொத்தமாக ஒரு இருபது பெயர் தான் அந்த திருமணத்திற்கு அழைக்க பட்டு இருந்தனர். மிகவும் எளிதாக திருமணம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. மிகவும் ஆடம்பரமாக செலவு செய்யும் மனது சுமதிக்கு இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன…!!
செல்வத்தின் நெருங்கிய சொந்தம், சுமதியின் விளங்காத நண்பிகள், செல்வத்தின் நண்பர்கள், வெற்றியின் உற்ற தோழன் கதிர் அவ்வளவே. கதிருக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை. நண்பனுக்காக மட்டும் தான் வந்து அதுவும் ஓரமாக நின்று விட்டான். கதிருக்கு பூவரசி ஒரு உடன் பிறவா சகோதரி. அவளின் காதல், நேசம் எல்லாம் கதிருக்கு மிகவும் அதிசயமாக இருக்கும். இப்படி பட்ட காதல் கிடைக்க நண்பன் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என அடிக்கடி நினைத்து கொள்வான். ஆனால் அப்படி பட்ட காதலின் அருமை தெரியாமல் உதறிவிடும் நண்பனை என்ன சொல்வது என்று தெரியவில்லை. எத்தனை முறை சொல்லி பார்த்தும் கேட்காமல் இப்போது இங்கே வந்து நிற்கிறான். வெற்றியின் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. நண்பனிடம் மட்டும் உண்மையை சொல்லி அழைத்து வந்து இருக்கிறான்.
சிவப்பு நிற பட்டு உடுத்தி, அதற்கு ஏற்ற அணிகலன்களை அணிந்து மல்லிகை பூ தலையில் தவழ்ந்து இருக்க, மிதமான ஒப்பனையில் தேவலோக பெண்ணாக வந்தவளை இமைக்க மறந்து பார்த்து இருந்தான் வெற்றி. கயல் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பொம்மை போல் நடந்து வந்து அமர்ந்தாள். அவளின் கண்கள் தவறியும் கூட வெற்றியின் பக்கம் திரும்பவில்லை. ஆனால் வெற்றியின் பார்வை அவளை விட்டு அகலவில்லை. தூரத்தில் நின்ற தன் அக்கா சுமதியை நன்றி போங்க பார்த்தான். சுமதி அவனுக்கு கண்களிலே ஆறுதலை சொல்லிவிட்டு உதட்டோரம் சிரித்து கொண்டாள் கயலை பார்த்து. அந்த சிரிப்பின் அர்த்தம் அவள் மட்டுமே அறிவாள்.
சுமதியின் எண்ணப்படி எல்லாம் நடந்து கொண்டு இருக்க மணமேடையில் அமர்ந்து இருந்த கயல் தான் தீயில் இட்ட புழுவாய் துடித்து கொண்டு இருந்தாள். ‘தன் வாழ்க்கை சற்று நேரத்தில் ஒன்றும் இல்லாமல் போக போகிறது… நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்… எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்…’ என்று மனதில் குமுறிக்கொண்டு வெளியில் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள். மந்திரங்களை கூறி தாலியை வெற்றியின் கையில் கொடுக்க அதை அவன் கயலின் கழுத்தில் கட்டப்போகும் நொடி…!!
பூவரசி அடித்து பிடித்து எழுந்தாள் வீட்டில். தன்னவன், தன் உயிர் மூச்சில் கலந்தவன் தன்னை விட்டு வெகு தூரம் போக போகிறான் என அவளது உள்ளம் உணர்த்தியதோ என்னமோ… அவளது இதயம் பல மடங்காக துடித்து கொண்டிருந்தது. வேர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்தவளின் மனதிற்கு தண்ணீரை குடித்தும் தாகம் அடங்கவில்லை. ‘முரட்டு மாமா… உனக்கு ஒன்னும் இல்லை தானே… என்னைய விட்டு எங்கையும் போக மாட்டதானே…’ என்று உயிரை பிடித்து இவள் பேசியது இங்கே இருந்தவனுக்கு கேட்டதோ..! என்னவோ..! ஒரு நிமிடம் வெற்றியின் கண்முன்னே பூவரசி வந்து போனாள்.
இதுவரை இருந்த சந்தோசம் இப்போது இல்லை வெற்றிக்கு. ‘தவறு செய்கிறோமோ… விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயபடுத்தும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டானோ…’ என குழப்பத்தில் இருந்தான். தாலியை கையில் வைத்து அவன் மனதில் பூவரசி வர, ‘தான் அவசர பட்டுவிட்டோமோ… ஏன் எனக்கு அவ நியாபகம் வருது… நான் ஏன் இப்படி எல்லாம் நினைக்குறேன்.. நான் கயலை தான லவ் பண்ணேன்.. அப்புறம் ஏன் நம்ப மனசு இப்படி கிடந்தது தவிக்குது’ என யோசிக்க, அனைவரும் அவனை அழைக்க நடப்பிற்கு வந்தவன் ஒரு வித தயக்கத்துடன் தாலியை அருகே கொண்டு செல்ல, நிறுத்துங்க… என்ற குரல் வர அனைவரும் அங்கே பார்க்க வாயிலில் வெண்பா நிற்க அவளுக்கு பின்னால் ஒரு பட்டாளமே நின்று இருந்தது. (வேற யாரு நம்ம சிங்க படைகள் தான்).
ஆதி, கார்த்திக், வெண்பா, சீதா, வெங்கட், சிவா, திவ்யா என அனைவரும் வர சுமதி ‘இவங்க எல்லாம் யாரு? எதுக்கு இங்க வராங்க?’ என யோசித்து கொண்டே “ஏய்… நீங்க எல்லாம் யாரு… எதுக்கு தேவை இல்லாம பிரச்சனை பண்றிங்க…” என கத்தி கொண்டு இருக்க வெண்பா, “நாங்க பிரச்சனை பண்ண வரலை… பிரச்னையை முழுசா முடிக்க வந்துருக்கோம்…” என சுமதியை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சொன்னாள். அவளின் பேச்சிலும், பார்வையிலும் பயம் வந்தாலும் ஒரு சிறு பெண்ணிடம் பயப்படுவதா… என யோசித்து “ஏய் என்ன எங்க வந்து யாரை பத்தி பேசுற… சின்ன பொண்ணுன்னு பாத்தா… ரொம்ப தான் பண்ற… மொதல்ல எல்லோரும் வெளிய போங்க….” என ஆவேசமாக கத்தி கொண்டு இருக்க வெண்பாவின் அருகில் வந்து நிற்கும் ஆதியை பார்த்து பயத்தில் வெடவெடத்து போன சுமதி அதன்பிறகு வாயை திறக்கவில்லை.
அனைவரின் பார்வையும் குழப்பத்துடன் இவர்களை பார்க்க கயலும் இவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தாள். ஆதி அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான். “இது கட்டாய கல்யாணம்… இந்த கல்யாணத்துல அந்த பொண்ணுக்கு விருப்பமே இல்லை… சொத்துக்கு ஆசை பட்டு இவங்க தான் அவளை தன் தம்பிக்கு கல்யாணம் பண்ணிவெச்சு.. மிரட்டி இவங்க பெயர்-ல சொத்துக்களை எழுதி வாங்க பிளான் போட்ருக்காங்க… செல்வா சார் இப்போ இப்படி இருக்காருனா… அதுக்கும் இவங்க தான் காரணம்… சொத்துக்கு ஆசைபட்டு இவரை கொல்ல பிளான் போட்டு அச்சிடேன்ட் பண்ணதும் இவங்க தான்… அதுல அவர் கால் மட்டும் போனதால அப்போதைக்கு விட்டுட்டாங்க… அதுக்கு பதிலா அவரையும் கயலையும் இத்தனை நாள் கொடுமை படுத்துருக்காங்க… இதை எல்லாம் கயல் வெளியை சொன்னா அவங்க அப்பாவை கொன்றுவேனு மிரட்டி இப்போ வரைக்கும் இவங்க நினைச்சதை எல்லாம் சாதிச்சுருக்காங்க…” என சுமதியை பற்றி புட்டு புட்டு வைத்தான். வெற்றிக்கே தன் அக்கா இப்படி பட்டவளா… என எண்ணம் தோன்ற அருவருப்பாக பார்த்தான்.
தன் திட்டம் மொத்தமும் அனைவர்க்கும் தெரிந்து விட்டது இனி என்ன செய்வது என தெரியாமல் சுமதி முழித்து கொண்டு இருந்தாள். செல்வாவிற்கு தன் வாழ்க்கையை நரகம் ஆக்கிய சுமதியை பார்த்து கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது. கயல் முகம் முழுவதும் கண்ணீர், கோவம், வெறுப்பு, இயலாமை என அனைத்தும் சேர்ந்து சுமதியின் முன் நிற்க சுமதி கைகளை பிசைந்து கொண்டு இருக்க, விட்டால் ஒரு பளார் என்று அடி… சுமதிக்கு மயக்கமே வந்துவிட்டது.
தன்னை சமன் படுத்திக்கொள்ளவே சில நிமிடங்கள் தேவை பட்டது. வலியுடன் கயலை பார்க்க எதிரில் ஆளை எரித்துவிடும் அளவிற்கு கோவத்தின் உருவாய் நின்றாள். மாறி மாறி கன்னங்களில் விழுந்த அடி… சுமதியை நிலை குலைய செய்தது. “ச்சி… நீ எல்லாம் ஒரு பொண்ணா… உன்னைய அம்மா ஸ்தானத்துல வெச்சிருந்த… ஆனா நீ கேவலம் இந்த பணத்துக்காக பாசம் இருக்க மாதிரி நடுச்சுருக்க… கேவலமா இல்லை… என் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இருந்துருக்க… இதுவரைக்கும் என்னைய என்னவெல்லாம் சொல்லிருக்க… கேவலமா அசிங்கமா… அதெல்லாம் ஏன் தங்கிட்டு இருந்தேன் தெரியுமா… என் அப்பாவுக்காக தான்… ஆனா நீ அவரையே கொல்ல பாத்துருக்க… பணம் தான் வேணும்னு என்கிட்டே கேட்ருந்தா நானே குடுத்துப்பேன்… அதுக்காக இப்படி எல்லாம் பண்ணனுமா… உன்னை நம்புனதுக்கு நல்லா பரிசு தான் எங்களுக்கு… ச்சி இனிமேல் உன் முகத்துல கூட முழிக்க விரும்பல… இனிமேல் என் கண்ணு முன்னாடி எப்பவுமே வந்துராத… அது தான் உனக்கு கடைசி நாளா இருக்கும்… ஒரு காலத்துல அம்மா மாதிரி அன்பு காட்டுற மாதிரி நடுச்சுட்டு இருந்தாலே… அதுக்காக உன்னைய இதோட விட்ற… போயிரு… என வெறுப்புடன் சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.
வெண்பா, “இவ்வளவும் பண்ணிட்டு அதெப்படி இவங்க போக முடியும்… தப்புக்கான தண்டனையை அனுபவிக்கனும்…” என சொல்லி வெளியில் சென்று அழைக்க 4, 5 காவலர்கள் வந்து சுமதியை கைது செய்தனர். சுமதி நிலைமை கை மீறி சென்றுவிட்டதை உணர்ந்து, கயலை பார்த்து “அம்மாடி கயல்… உன் சித்தி பாவம் இல்லையா… ஏதோ தெரியாம பண்ணிட்டேன்… என்னைய மன்னிச்சு விட்ருமா… இனிமேல் எப்பவும் இப்படி பண்ண மாட்டேன்…” என கயலின் காலை பிடித்து கெஞ்ச கயல் எதற்கும் அசராமல் நின்றாள்.
என்ன இங்க சத்தம்… என ஒரு குரல் கேட்க அனைவரும் திரும்பி பார்க்க, காக்கி உடையில் கம்பிரமாக நின்று கொண்டு இருந்தது ஒரு பெண் சிங்கம். Ms. ஆருத்ரா, ACP சென்னை. கண்களில் கோவத்துடன், தீர்க்கமான பார்வையுடன் வேட்டையாட காத்திருக்கும் வேங்கை போல் அவள் நின்று இருந்த தோற்றம் அனைவர்க்கும் அவள்மேல் ஒரு மரியாதையும், பயத்தையும் சேர்ந்தே அளித்தது. ஆதி அவளிடம் சென்று நலம் விசாரித்துவிட்டு அழைத்து வர வந்தவள் காவலர்களை பார்த்து, “அர்ரெஸ்ட் பண்ணாம என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க… ம்ம் சீக்கிரமா ஜீப்ல ஏத்துங்க…” என தனக்கே உரிய அதிகார தோரணையில் சொல்ல அவர்களும் அவள் சொன்ன வார்த்தையை அடுத்த நிமிடமே செய்தனர்.
அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து வரமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டிருந்த சுமதியை ஆருத்ரா விட்டாள் ஒரு அரை… ஏற்கனவே வாங்கிய அடியில் அரை மயக்கத்தில் இருந்தவளை சிங்க பெண்ணின் அடி இடியாய் இறங்க மயக்கமே போட காவலர்கள் அவளை அள்ளி தான் சென்றனர். ஆதி, “ரொம்ப தேங்க்ஸ் ஆருத்ரா… நான் கூப்ட்டேனு உடனே வந்தததுக்கு…” என்க “நோ ப்ரோப்லம் ஆதி… இட்ஸ் மை டியூட்டி…” என ஒரே வார்த்தையில் முடித்து கொண்டாள். வெற்றியை அர்ரெஸ்ட் செய்ய கேட்க ஆதி, “அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை… சோ வேண்டாம்… விட்ருங்க…” என சொல்லிவிட்டான்.
இங்கே இவ்வளவு கலவரம் நடக்க இது எதுவும் தெரியாமல் ஆருத்ராவை தான் பார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். பின்னே அவனின் கனவு காதலி நேரில் வந்தால், அதுவும் இந்த தோற்றத்தில். மயக்கம் போடாமல் அவன் நிற்பதே பெரிய விஷயம் தான்… கனவில் அவன் குயில் கிராமத்து பைங்கிளியாக வந்து அடக்கத்தில், வெட்கத்தில் அவனை சிறை எடுத்தவள் நேரிலே வெட்கம் என்றால் என்ன… அது எங்கு விற்கிறது… என கேட்கும் நிலையில் இருக்கும் இவளை தான் விழி அகலாமல் பாத்து கொண்டு இருந்தான். ரொம்ப நேரமாக தன்னை ஒரு கண் கூர்மையாக பார்ப்பதை உணர்ந்து சுற்றி பார்க்க அவள் கண்களில் விழுந்தான் கார்த்திக். இருவரின் விழிகளும் சில நிமிடம் சந்தித்து மீள முடியாமல் தவிர்க்க சற்று நேரத்தில் சுயநினைவை அடைந்தாள் ஆருத்ரா.
பின் ஆதியிடம் சொல்லிவிட்டு அவள் கிளம்ப காரணம் இல்லாமல் கார்த்திக்கின் மனதும் அவளுடவே சென்றது. ஆருத்ரா ஒரு கணம் திரும்பி அவனை பார்த்து விட்டு காற்றாய் மறைந்து போனாள். வெறிக்க வெறிக்க பார்த்தவன் அவளின் கடைசி பார்வையில் மொத்தமாக சரணடைந்து விட்டான். ஆதி உலுக்கியதில் நினைவு திரும்பி பேந்த பேந்த விழித்தான். ஆதி அவனை ஒரு மார்கமாக பார்த்து வைக்க, வெற்றி ஆதியின் அருகில் வந்து நன்றி சொல்லிவிட்டு மன்னிப்பும் கேட்டுவிட்டு கயலிடம் வந்தான். “என்னைய மன்னிச்சுரு கயல்… அவங்க பேச்சை கேட்டு நானும் ஏமாந்துட்டேன்… அவங்களை நம்புவது தான் தப்பு… உன்னைய கஷ்ட படுத்திட்டேன்…” என்று மனதார மன்னிப்பு வேண்டி செல்வத்தின் காலில் விழுந்து மன்னிப்பை யாசித்து நண்பனை அழைத்து கொண்டு சென்று விட்டான்.
செல்வத்திற்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் ஒரு பக்கம் தன் மகளின் வாழ்வை எண்ணி கவலையாகவும் இருந்தது. சீதாவும் வெங்கட்டும் தான் அவரின் கலக்கத்தை புரிந்து ஆறுதலாக மாறினர். கயல் பேசியும் சமாதானம் ஆகாதவர், ஆதரவாக அவளின் தலையை தடவி, “உன் வாழ்க்கை இப்போ கேள்விக்குறியாய் இருக்கே மா… நான் என்ன பண்ணுவேன்…” என தலையில் அடித்து கொண்டு அழுதவரை பார்க்க வேதனையாக தான் இருந்தது.
சீதா, “அண்ணா என் பையனுக்கு உங்க பொண்ண குடுப்பிங்களா… அவளை என் பொண்ணு மாதிரி பாத்துக்கிறேன்….” என உரிமையாக கேட்க ஒரு நிமிடம் உறைந்து விட்டார் செல்வா. ஆதி அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்க கயல் உறைந்தே விட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து ஆதி, கயல் கழுத்தில் மூன்று முடுச்சிட்டு அவளை தன்னவளாக ஏற்று கொண்டான். அவனின் முகம் முழுவதும் குழப்பம், இயலாமை, ஏக்கம் எல்லாம் நிறைந்து இருக்க கயலோ கல்லென சமைந்து இருந்தாள். அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதிக்க அந்த இரு மனங்களும் திருமண என்னும் பந்தத்தில் இணைந்தது.. மனங்களும் இணையும் நாள் எந்நாளோ….!!!
காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ai palam naluvi paalil viluntha madhiri agiputte…..
Kaarthi un aala intha getup la ethir pakkave illa😂😂😂
வெற்றி அஹ் கொஞ்ச நாள் சுத்தல் அஹ் விடுங்க அரசி….
ஆதி, கயல் க்கு கல்யாணம் ஆகிடுச்சு… வாழ்த்துக்கள்… 🥰🥰
கார்த்திக்… ஒரு லேடி சிங்கம் அஹ் யா லவ் பண்றாரு… ❤
இனி என்ன னு பாப்போம்… ❤