Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 16

காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்த ஆதி, கார்த்திக்கை அழைக்க அவன் வழக்கம் போல எடுக்கவில்லை. ‘வர வர இவன் தொல்லை தாங்க முடியலை… போன் பண்ணா எடுக்கறதே இல்லை… அப்படி என்னதான் பண்ணுவானோ… எனக்குன்னு வந்து வாச்சுருக்கு பாரு பிரிஎண்ட்னு… எல்லாம் விதி’ என தலையில் அடித்து கொண்டு கீழே வர வெண்பா சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அங்கே கார்த்திக் தொலைபேசியை தூக்கி ஓரமாக எறிந்துவிட்டு, முழுபோர்வையும் போர்த்தி கொண்டு முத்தங்களை வாரி இறைத்து கொண்டு இருந்தான். (பதறாதீங்க கனவுல தான்..) தனது கனவு காதலியுடன் கனவிலையே குடும்ப நடத்தி கொண்டு இருக்கிறான் பல நாட்களாக. பிறகு எப்படி எடுப்பான் அழைப்பை.

ஆதி, “என்னடி குட்டி சாத்தன்… காலையிலே நல்லா கொட்டிட்டு இருக்க…” என தலையில் தட்டிவிட்டு அமர்ந்து அவனும் உண்ண ஆரம்பித்தான். வெண்பா அவனை முறைத்து விட்டு திரும்பி அவளின் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தாள். “ஆமா நீ என்ன ரெடி ஆகாம இருக்க… காலேஜ் போகலையா…?” என கேள்வியுடன் நிறுத்த, “போகலை அண்ணா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை…. அதான் திங்கள்கிழமைல இருந்து போயிக்கலாம்னு” என பல்லை காட்ட ஆதி, “நல்லா சாக்காடு சொல்லு… குட்டச்சி… எப்போடா சாக்கு கிடைக்கும் மட்டம் போடலாம்னு இருப்ப போல..” என முறைக்க வெண்பா அந்த பக்கம் திரும்பவே இல்லையே. தட்டுக்குள் தலையை விட்ருந்தாள்.

ஆதி இவளை திருத்த முடியாது என நினைத்துவிட்டு “சரி எப்பவோ… போனா சரி தான்… அதுக்கு முன்னாடி நான் கொடுத்த அந்த லாக்கெட் அ மறக்காம போட்டுட்டு போ… இனிமேல் எப்பவும் அதையே கழட்டாத… சரியா” என்க அவள் “ஏன் அண்ணா…?” என கேள்வி கேட்க… சிறிது யோசித்த ஆதி அவளிடம் அதற்கான உண்மையான காரணத்தை சொல்லிவிட்டான். அவளும் “சாரி அண்ணா… நான் நீ கொடுத்த உடனே போட்ருக்கனும்… ஜஸ்ட் நார்மல் கிப்ட் தான் நினைத்து விட்டுட்டேன்.. இனிமேல் இப்படி பண்ணமாட்டேன்” என சொல்ல அவனும் சிரித்து கொண்டு “சரி இத வீட்ல யாருகிட்டயும் சொல்லாத.. பயந்துருவாங்க…” என சொல்ல அவளும் தலை ஆட்டி வைத்தாள். இவனும் சிரித்து கொண்டே அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

கார்த்திக் வழக்கம் போல அடித்து பிடித்து கிளம்பி அலுவலகம் வந்து, ஒன்றும் தெரியாதவன் போல அமைதியாக அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தான். அங்கே வந்த ஆதி அவன் வந்துவிட்டதை பார்த்து, அவனின் அறையில் நுழைந்து அமைதியாக எதிரில் அமர்ந்து அவனை பார்த்து கொண்டு இருந்தான். கார்த்திக்கும் எத்தனை நேரம் தவிர்ப்பான். சிறிது நேரம் கழித்து, அப்போது தான் ஆதியை பார்ப்பது போல, “வா மச்சான்… இப்போதா வந்தியா… பாரு நீ வந்தது கூட தெரியலை… மீட்டிங்க்கு ரெடி ஆயிட்டு இருந்தானா அதான்…” என கேவலமாக சாமளிக்க ஆதி எதுவும் பேசாமல் அவனை தான் கூர்மையாக பார்த்தான்.

“என்ன மச்சி.. ரொமான்டிக் லுக் விட்ற… நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்…” என கேட்டு வெட்கப்பட “அட ச்சி… இவ்ளோ நேரம் என்னைய பாக்காத மாதிரி நடுச்சுட்டு இருந்தல்ல…. அத கூட நான் தாங்கிப்பேன்… தயவு செஞ்சு வெட்கம் படுற மாதிரி ஏதோ ஒன்னு பண்ணியே அத மட்டும் பண்ணாத… என்னால பார்க்க முடியலை…” என திட்ட அதுக்கு ஈ என்று இளித்து வைத்தான். ஆதி, “ஏற்கனவே கொலவெறில இருக்கேன்… சிரிக்காத… போன் பண்ணா எடுக்க மாட்டியா… அப்படி என்னதான்டா பண்ற… எதுவும் சொல்லவும் மாட்டேங்குற… இருக்கட்டும்… சிக்காமையா போக போற… அப்போ பாத்துக்குறேன்…” என முறைத்து விட்டு சென்றான். கார்த்திக் உடனே சொல்லிருக்கலாமோ… என யோசித்து விட்டு, ‘ஆனா என்ன சொல்றது… நம்மளே கனவுல காதல் பன்றோம்… நேர்ல பாப்போமான்னு தெரியலை… இதுல இவன்கிட்ட என்ன சொல்றது…’ என நினைத்து விட்டுவிட்டான்.

கயலும், திவ்யாவும் வெண்பாவை தேடி அவள் வகுப்பிற்கு செல்ல அங்கு அவள் தான் இல்லை. 3 நாட்களாக வரவில்லை என்ற செய்தி மட்டும் தான் கிடைக்க ஏதாவது உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும்.. என நினைத்து கொண்டனர். நேரம் இருந்தால் நேரில் சென்று பார்க்கலாம் என கயல் நினைத்து கொண்டாள். இருவரும் பேசி கொண்டே கான்டீன் சென்றனர்.

சிவா, இன்னும் வீரப்பாக தான் சுற்றி கொண்டு இருந்தான். கயலும் அவனை பார்த்து கொண்டு தான் இருந்தாள். ‘எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருப்பேன்னு நானும் பாக்குறேன்டா…’ என நினைத்து கொண்டாள். திவ்யா மட்டும் அவனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி கொண்டு இருந்தாள். சிவா கண்டு கொண்டதாக தெரியவில்லை. அது இன்னும் அவளுக்கு வலியை கொடுத்தது தான் மிச்சம். அளவு கடந்த
காதலை உள்ளுக்குள் வைத்து, காதலனை அருகினில் வைத்து அவள் படும் பாடு சொல்லில் அடங்காது.

இவர்கள் மூன்றாம் வருடம்… அதனால் 4-ஆம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கயல், திவ்யா, சிவா எல்லோரிடமும் ஆளுக்கு ஒரு பொறுப்பை கொடுக்கபட்டு இருக்க அவர்களும் அவர்களது வேலையை சீரும் சிறப்புமாக செய்தனர். இன்னும் சிலநாட்களே இருப்பதால், அலங்காரம், கெஸ்ட் அழைப்புகள், உணவு, கலை நிகழ்ச்சிகள், அதற்கான முன்னோட்டம், அழைப்பிதழ் என ஒவ்வென்றையும் பார்த்து பார்த்து செய்தனர்.

வெண்பாவும் இவர்களுடன் கலந்து கொண்டாள். அவளை பார்த்ததும் கயல் அன்பாய் விசாரிக்க “சும்மா தான் டியர் லீவ் போட்டேன்… டெஸ்ட் எல்லாம் வெச்சுருந்தாங்களா… அதான்…” என இளித்துவைக்க, கயல் முறைக்கவும் உடனே “உங்கள பாக்காம இருக்க முடியலை அதான் ஓடோடி வந்துட்டேன் டியர்…” என பேசி பேசியே சமாளித்து விட்டாள். கயலும் செல்லமாக முறைத்து விட்டு, பிறகு எப்போதும் போல அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

வெண்பாவும் அனைத்தையும் மறந்து எது நடந்தாலும் பார்த்து கொள்ளலலாம் என விட்டு விட்டாள். சொல்ல போனால் ரோஹனை மறந்தே போய்விட்டாள். அவனும் அவளை எப்படி பழி வாங்குவது என யோசிக்கும் போது எல்லாம் சில மொக்கை ஐடியா தான் வந்தது. இருந்தாலும் மனம் தளராமல் அவளை பாப்போம்… அப்போது எதாவது ஐடியா கிடைக்கும்… அத அப்படியே பண்ணிடலாம் என யோசித்து முதல் முறையாக தனது அதிகம் வெறுக்கும் செல்ல பொண்டாட்டியை பார்க்க ஆர்வமாக கிளம்பினான் அவளின் கல்லூரிக்கு.

அங்கே அவன் காண போகும் காட்சியில் இவன் தான் பைத்தியம் பிடித்து அலைய போகிறான் என தெரியாமல் கிளம்பிவிட்டான். (ஐயோ பாவம்!)

வெண்பாவும் அவள் தோழிகளும் வெளியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருக்க வெண்பாவின் வகுப்பில் படிக்கும் சுரேஷ் என்ற ஒருவன் அங்கே வர எல்லோரும் அவனை கேள்வியுடன் பார்க்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் வெண்பாவை மட்டும் பார்த்து வழிந்து கொண்டே “உன்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் வெண்பா… ரொம்ப முக்கியமான விஷயம்… ப்ளீஸ்” என கெஞ்ச இவளுக்கு எப்படி தவிர்ப்பது என்றும் தெரியவில்லை. “எதுவா இருந்தாலும் இங்கையே சொல்லு பா… இவங்க எல்லாம் என் பிரிஎண்ட்ஸ் தான்… நோ ப்ரோப்லேம்…” என எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் கேட்காமல் அடம் பிடிக்க ‘அட இவன் வேற… சரி இன்னையோட இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்…’ என நினைத்து விட்டு தன் தோழிகளிடம் சொல்லிக்கொண்டு சென்றாள்.

சுரேஷ்… வெண்பாவின் உடன் பயில்பவன்… எப்போதும் வகுப்பில் முதல் மாணவன்… அதிகமாக யாரிடமும் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன்… கொஞ்சம் பயந்த சுபாவம்… பார்ப்பதற்கும் நன்றாகவே இருப்பான்… அதனால் இவனுக்கு பெண் விசிறிகள் ஏராளம்… அவனுக்கு வெண்பா என்றால் பிடிக்கும்… எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்து ஆசிரியர்களிடம் திட்டு வாங்கிவிட்டு அனைத்தையும் தூசி போல தட்டிவிட்டு செல்லும் அவளின் செய்கை, குறும்பு எல்லாவற்றிற்கும் இவன் ஒரு ரகசியமான ரசிகன். இவளிடம் பேச தோன்றினாலும் அவனின் இயல்பு, அமைதியாக இருந்து விடுவான். எப்படியோ இவளை பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் கல்லூக்குள் ஈரம் போல இவனுக்குள்ளும் காதல் எப்படியோ நுழைந்து விட்டது. இவளிடம் காதலை சொல்லிவிடலாம் என நினைக்கும் போது எல்லாம் ஒரு வித பயம், பதட்டம்… அதனால் தூரத்தில் இருந்தே காதலை வளர்த்து கொண்டு இருந்தான்.

கடந்த சில நாட்கள் வெண்பா வரவில்லை என்றதால் இவனுக்கு அவள் மேல் இன்னும் காதல் அதிகம் தான் ஆனது, அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. எந்த அளவு காதல் இருக்கிறது என இந்த பிரிவு அவனுக்கு உணர்த்திவிட்டது. பலநாள் ஏக்கத்தை தீர்க்க இன்று வந்தவளை பார்த்து கொண்டே இருந்தான். அவளும் அவனை பார்த்து விட்டு திரும்பி விட்டாள். ஆனால் இன்று அவனாக வந்து பேசியதும் ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவனை தவிர்க்க தோன்றவில்லை.

ஒரு மரத்தின் கீழ் இருவரும் வந்து நிற்க அவனுக்கு பயத்தில் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் மனதை திடப்படுத்தி கொண்டு வெண்பா, என அழைக்க அவளும் பார்க்க அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் ஒருவித நடுக்கத்துடனே அது… வந்து… அது… நீ ஏன் லாஸ்ட் வீக் காலேஜ் வரலை.. என எதையோ நினைத்து எதையோ கேட்டு வைக்க இவளும் இதை ஏன் இவன் கேக்குறான்… என குழப்பத்தில் இருந்தாலும், “உடம்பு சரி இல்லை சுரேஷ்… அதான் வரலை…” என சாதாரணமாக சொல்ல இவனுக்கு தான் அவள் முதல் முறை இவனின் பெயரை சொன்னதால் மனதிற்குள் மலை சாரல். அதை முகத்தில் காட்டாமல் “என்னாச்சு… உடம்பு சரில்லையா… இப்போ எப்படி இருக்கு… டாக்டர் என்ன சொன்னாங்க…” என பதட்டத்துடனும் அக்கறையுடனும் கேள்வியாக கேட்க இவளுக்கு தான் குழப்பம்… ‘இவன் ஏன் இதெல்லாம் கேட்கிறான்…?’ என்று இருந்தாலும் இதற்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என தெரியாமல் யோசித்து கொண்டு சுற்றியும் பார்க்க அங்கே ரோஹன் இவர்களை பார்த்து கொண்டே வந்து கொண்டு இருந்தான்.

ரோஹனை பார்த்ததும் வெண்பாவின் மனநிலை… ‘இவன் இங்க என்ன பண்றான்…’ என யோசித்து அவனின் வருகை காரணம் புரிய ‘ஆகான்… ஆடு வந்துடுச்சு… பலி கொடுத்துற வேண்டியது தான்… வெண்பா கரெக்ட் டைம் டி… இவனை இனிமேல் வெச்சு செய்யணும்… நீ என்னைய நாய் மாதிரி சுத்த வைக்குறையா… யாரு யாரை சுத்துறாங்கனு பாப்போம்டா ஹிட்லர்…’ என நினைத்து விட்டு உடனே ஒரு பிளானையும் போட்டுவிட்டாள். அவன் அருகில் வர அவனை பார்க்காதது போல திரும்பி சுரேஷ்-ஐ பார்க்க அவன் இவளையே பே வென பார்த்து கொண்டு இருந்தான். இவள் சுரேஷ்-ஐ தட்டி நிகழ் உலகத்திற்கு கொண்டு வர அவன் என்னவென பார்க்க, வெண்பா, “சுரேஷ் எனக்கு கால் வலிக்குது, அப்படி உக்கார்ந்து பேசலாமா…?” என கேட்க கரும்பு தின்ன கூலியா.. என நினைத்தவன் அவளை அழைத்து உட்கார வைத்து அருகில் அமர்ந்து கொண்டான்.

தூரத்தில் இதை பார்த்த ரோஹனுக்கு அடிவயிற்றில் ஆம்ப்லேட் போடும் அளவு நெருப்பு புகைந்து கொண்டு இருந்தது. அவன் அருகில் வந்ததும் அவனை பார்த்து கொண்டே சுரேஷ் இடம் சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தாள். சுரேஷ் ஆகாயத்தில் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டு இருந்தான். அவனை அடித்து பேசுவது, கிண்டல் செய்வது, அவனின் மொக்கை ஜோக்கும் விழுந்து விழுந்து சிரிப்பது என அனைத்தையும் செய்தாள். இங்கே ஒருவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். ‘அடியே… என்னடி உன் புருஷன் முன்னாடி ஒரு பொடி பையன் கூட பேசிட்டு இருக்க… அதுவும் சிரித்து சிரித்து… இதெல்லாம் ஓவரா இல்லை… இவளை நம்ம வெறுப்பதெல்லாம்னு வந்தா… இவ நம்மள டென்ஷன் பண்ணிட்டு இருக்கா… ஐயோ…!’ என தலைமுடியை பிடித்து கொண்டே இருவரையும் பார்வையால் எரித்து கொண்டு இருந்தான்.

இதை எல்லாம் கண்டும் காணாமல் பேசி கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் வகுப்பிற்கான பெல் அடிக்க இருவரும் மனதே இல்லாமல் பிரியாவிடை கொடுத்து வகுப்பில் சந்திப்போம் என்ற நிபந்தனையுடன் செல்ல ரோஹன் தான் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான். வெண்பா ஒளிந்து நின்று அவனை பார்த்து சிரித்து கொண்டே, ‘இது ஆரம்பம் தான்டா… இன்னும் இருக்கு…’ என அவனை பார்த்து கொண்டே சென்று விட்டாள். ரோஹன், அந்த கடுப்பில் எப்படி வீட்டிற்கு வந்தான் என்றே தெரியாமல் வந்து அதையே நினைத்து கொண்டு இருந்தான். ‘அவ எப்படி அவன்கிட்ட பேசலாம்… அதுவும் பக்கத்துல உக்கார்ந்து… அந்த சோடா பூட்டியும் ஏதோ அவளையே பார்த்துட்டு இருக்கான்… அவனுக்கு தான் அறிவு இல்லை. இவளுக்கு எங்க போச்சு… இருடி சிக்காமையா போக போற… பாத்துக்குறேன்…’ என மனதில் அவளை திட்டிக்கொண்டு இருந்தான். வெண்பா, இதை பற்றி எல்லாம் யோசித்து சிரித்து கொண்டே தூங்கிவிட்டாள். இங்கே இவனோ தூங்காமல் அடுத்து என்ன செய்வது என்று நினைத்து கொண்டே இருந்தான். தூக்கம் தான் தூரமாக போனது.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் சென்று கொண்டு இருந்தது. கல்லூரி நிகழ்ச்சி நாள்.. அனைவரும் ஆரவாரமாக எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்தனர். தன் வாழ்க்கையே திக்கு தெரியாத திசையில் வழிமாறி செல்ல போவது அறியாமல் சந்தோசமாக புடவையில் தேவதையாக வலம் வந்தால் கயல். பல ஆடவரின் கண்கள் அவளை தான் சுற்றி கொண்டு இருந்தது. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளுண்டு அவள் வேலையுண்டு என்று சுற்றி கொண்டு இருந்தாள்.

நிகழ்ச்சி ஆரம்பம் ஆகி பல விருந்தினர்கள் வந்து சிறப்பு உரையாடல்கள், மதிய உணவு, கடைசியாக கலை நிகழ்ச்சி முடிந்து அனைவரும் நினைவாக புகைப்படம் எடுத்து கொண்டனர். அங்கே இருந்த ஒவ்வொரு நிமிடமும் அனைவரின் மனதில் நினைவுகளாகவும், பொக்கிஷமாகவும் சேமிக்கப்பட்டது.

மாலை நேரம்… நிகழிச்சிகள் முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தனர். திவியை அனுப்பிவிட்டு கயல் ஒரு ஆசிரியை பார்க்க சென்றாள். இந்த நிகழ்ச்சிக்கு உண்டான அனைத்து செலவுகளும் கயல் தான் பார்த்து கொண்டாள். அதனால் இன்றே அதை ஒப்படைத்து விடலாம்.. இரண்டு நாள் விடுமுறை வேறு. அதனால் கணக்கு வழக்கை சொல்லி மீதமான தொகையும் தந்துவிட்டு செல்லலாம் என அவர்களின் வகுப்பு ஆசிரியை தேடி அலைந்து கொண்டே இருந்தாள்.

அப்போது ஒரு இடத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அங்கே தண்ணீர் இருந்ததை கவனிக்காமல் நடந்து வழுக்கி கீழே விழுந்தவளை தாங்கி கொண்டான் ஒருவன். பயத்தில் கண்மூடி இருந்தவள் இன்னும் தான் விழுக வில்லை என்பதை உணர்ந்து லேசாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க எதிரே ஒரு முகம். இவளை மட்டும் பார்த்து கொண்டு இருந்தது. அவன் கைகள் இவளின் இடுப்பை சுற்றி இறுக்கமாக பிடித்து இருந்தது. இவளுக்கு தான் இம்சையாக போய்விட ஒருவித அவஸ்தைக்கு உள்ளானாள். ஆனால் அவனோ இவளின் அழகை தான் வைத்து கண் வாங்காமல் ரசித்து கொண்டு இருந்தான்.

குண்டு கண்கள், அதில் மீன் போல ஒரு இடத்தில் நிற்காமல் ஓடி விளையாடும் கருமணிகள், வானவில் போன்ற புருவம், ரோஜா இதழ்களை போல உதடுகள், ஜிமிக்கியாக தான் இருக்க கூடாதா என்ற ஏக்க பெருமூச்சை விட்டு கொண்டே புடவையில் தேவலோக மங்கையாக இருந்தவளை ரசித்து கொண்டு இருந்தான் தேவேந்திரன். அந்த கல்லூரி முதல்வரின் மகன். கூட்டத்தில் ஓரமாக இருந்து ரசித்தவளை இவ்வளவு அருகில் பார்க்க வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டு இருந்தான் மனதில்.

கயல் அவனிடம் இருந்து விலகி, “சாரி சார்… நான் கவனிக்கல…” என்று சொல்ல, அதை கேட்டு தேவா, “நோ ப்ரோப்லம்… இனிமேல் ஆச்சும் பாத்து போங்க…” என அக்கறையாக சொல்ல அவளும் தலை ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள். போகும் அவளை ரசித்து கொண்டு இருந்தான் தேவா. அவளுக்கு இவனை யாரு என்று தெரியவில்லை. அதனால் எப்போதும் போல சாதாரணமாக கடந்து சென்று விட்டாள். தேவா இந்த உலகத்தில் இல்லை அவளை பார்த்து கொண்டே ஒரு புன்சிரிப்புடன் கடந்து சென்றான். தன்னை தானே திட்டி கொண்டு ஒரு வழியாக ஆசிரியரை பார்த்து அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.

ஆனால், இங்கே நடந்தது எல்லாம் புகைப்படமாக சேமிக்கபட்டது தெரியாமல் அவர் அவர் பாதையில் கடந்து சென்று விட்டனர். இனி என்ன ஆகுமோ….!!!

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments