Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 13

ஆதி கயலை பற்றின விபரங்களை சேகரிக்க சொல்லிவிட்டு அவனின் அன்றாட வேலையை தொடர்ந்தான். தனது குடும்பத்திற்கும் கார்த்திக்கும் கூட அவர்களுக்கே தெரியாமல் காவலாளிகளை நியமித்து இருந்தான். அந்த கோல்ட் லாக்கெட்-டை எல்லோருக்கும் சந்தேகம் வராத மாதிரி கிப்ட் ஆகா கொடுத்து விட்டான். ஏன் ஒரே மாதிரி என்று கேட்டதற்கு இது பேமிலி லாக்கெட்… அனைவரும் ஒரே மாதிரி தான் போட்டு இருக்க வேண்டும்… யாரும் எதற்காகவும் இதை கழட்ட கூடாது… என்ற நிபந்தனையுடன் தான் கொடுத்தான். அவர்களும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

வெண்பாவிற்கு இதை போட்டு தான் ஆகா வேண்டுமா என்று நினைத்து தன் அண்ணனிடம், “அண்ணா நீ இந்த மாதிரி கிப்ட் கொடுக்கறதுக்கு பேசாம கேஷ்-அ என் கைல கொடுத்துட்டா நான் எனக்கு புடுச்சது வாங்கிப்பேன்ல…” என்க அவன் முறைப்பதை பார்த்து, “சரி இப்போ என்ன கேட்டுட்டானு முறைக்குற. ஏதோ உனக்காக போன போகட்டும்-னு வெச்சுக்குறேன் என்ன பண்றது அண்ணனா போயிட்டே…” என சொல்ல அவன் அடிக்க வருவதை பார்த்து ஓடிவிட்டாள். குட்டி சாத்தானுக்கு கொழுப்பு தான்.. என நினைத்து கொண்டான். வேறு வழி இல்லாமல் வாங்கி வைத்து கொண்டாள். அவளுக்கு பெரிதாக நகைகள் போட்டு கொள்ள பிடிக்காது. அதனால் அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்து விட்டாள். இதனால் நடக்க போகும் விபரீதம் பற்றி அறியாமல் போய்விட்டாள்.

கயல் அடுத்த நாள் வகுப்பில் திவ்யாவிடம் அனைத்தும் சொல்லிக்கொண்டு இருந்தால், அதற்கு திவி, “என்னடி முகம் எல்லாம் ப்ரகாஷமா இருக்கு. அதுவும் அந்த அண்ணாவை பத்தி பேசும்போது…” என கேட்க, “அட ஏன் டி நீ வேற.. அதெல்லாம் ஏதுவும் இல்லை. என்னைய பத்தி தெரியாம இருக்கும்போதே யாரோ ஒரு பெண்ணுக்காக எல்லாம் பண்ணி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லா பாத்துக்கிட்டாங்கல்ல அதனால தான் சொன்ன. அதுவும் அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்க தான். ஆனா பணத்தை விட மனுஷங்களை தான பெருசா பாக்குறாங்க. அந்த மனிதாபிமானம் எனக்கு ரொம்ப புடுச்சுருந்தது. அதும் இல்லாம சீதா அம்மாவை இன்னும் புடுச்சது. அவங்க பாக்கும்போது எங்க அம்மாவே என்கூட இருந்த மாதிரி இருந்தது…” என சொல்லி சட்டென கண் கலங்க திவ்யா அவளை பேசி சிரிக்க வைத்தாள்.

அதன்பிறகு திவ்யாவிடம் அதை விடு, “என்ன சொன்னான் என் பிரதர்… ஓகே சொல்லுவானா என்னோட அண்ணிக்கு…” என ஒட்டி கொண்டு இருக்க, திவ்யா, “ஆமா உன் அண்ணா அப்படியே சொல்லிட்டாலும், அட போடி… என்னைய பாத்தாலே ஓட்றான். ஏதோ நான் அவனை கடுச்சு திங்குற மாதிரி…” என சலித்துக்கொள்ள, 
“ஏண்டி நல்லா ஜாலியா சுத்திட்டு இருந்த பையனை லவ் பண்றனு சொல்லி பயமுறுத்திட்ட அவன் என்னடானா உன்னைய பாத்தாலே திரும்பி பாக்காம ஓடிறான். நீ என்னமோ பண்ணிட்ட. அதான் பையன் இப்படி சுத்துறான். சொல்லுடி என்ன பண்ண…” என கேட்க திவ்யாவிற்கு தான் அந்த முதல் முத்தம் நியாபகம் வந்ததும் வெட்கப்பட… கயல் கண்டு கொண்டாள். “என்னடி வெட்க படுற, அப்போ என்னமோ நடந்துருக்கு என்கிட்டே மறைச்சுட்டாலே..” என கலாய்த்து கொண்டு இருந்தாள்.

திவ்யா என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் முழித்து கொண்டு இருக்க, அதே நேரம் இவளை தேடி யாரோ வெளியில் இருப்பதாய் வகுப்பு மாணவன் ஒருவன் சொல்ல, “இருடி வந்து பாத்துக்குறேன்…” என கூறிவிட்டு வெளியில் பார்க்க வெண்பா நின்று கொண்டு இருந்தாள் அவளின் தோழியோடு. அவளை பார்த்தது ஒரு உற்சாகம் வர இவளும் நின்று பேசி கொண்டு தன்னுடைய தோழியையும் அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தாள். சிறிது நேரத்திலே அனைவரும் நல்ல தோழிகளாக மாற லஞ்ச் நேரத்தில் கேன்டீனில் சந்திக்கலாம் என்ற நிபந்தனையோடு அனைவரும் கலைய, கயலின் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வழிந்து கொண்டே வெண்பாவை பற்றி கேட்க, “டேய், அலையாதீங்க டா… அவங்க அப்பா ஒரு கமிஷனர்… பரவாயில்லையா…” என சொல்ல அனைவரும் வந்த சுவடு தெரியாமல் கலைந்து சென்று விட்டனர். கயலும் திவ்யாவும் தங்களுக்குள் சிரித்து கொண்டனர். சிவா அன்றும் வராததால் ஒரு கவலை அவர்களுக்கு இருந்து கொண்டே இருந்தது. 

மதிய நேரத்தில் அனைவரும் சந்தித்து பேச அவர்களுக்குள் இருக்கும் அந்த நெருக்கம் இன்னும் அதிகம் ஆனது. நெருங்கிய தோழிகள் போலவே மாறி விட்டனர். மனதே இல்லாமல் விடை பெற்று சென்றனர். இவர்களின் நட்பும் தொடர்ந்தது. முதலில் சிவாவிற்கு குழப்பம் தான் தன்னைவிட்டு புதுசாக பழகிடும் இந்த நட்பை பார்த்து. அவனுக்கும் மனதின் ஓரத்தில் சிறு வருத்தம், நண்பிகளை பிரிந்த ஏக்கம் எல்லாமே இருந்து கொண்டு தான் இருந்தது. இந்த பிரிவு நிரந்தரம் இல்லையே. எல்லாம் விரைவில் சரி ஆகிவிடும் என நினைத்து கொண்டான். ஒரு பக்கம் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர்களின் சந்தோசத்தை ஓரமாக இருந்து பார்த்து இவனும் சந்தோச பட்டுக்கொண்டான்.

இப்படியே நாட்கள் கடக்க ஒரு நாள் வெண்பா கல்லூரிக்கு கிளம்ப அவளை பின்தொர்ந்தது ஒரு வாகனம். வெண்பா சென்றிருந்த கார் நடுவழியில் நிற்க என்னவென்று டிரைவர் இறங்கி பார்க்க வாகனத்தில் ஏதோ கோளாறு. இவளும் என்ன செய்வது எப்படி கல்லூரி செல்வது என்று தெரியாமல் ஆட்டோ ஏதும் வருமா என்று பார்க்க இவளின் நல்ல நேரம் ஒரு ஆட்டோ ஒன்று வர டிரைவர் இடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். சிறிது தூரம் செல்லும்போது ஆட்டோவை ஒரு சில கார்கள் வழி மறிக்க என்னவென்று பார்ப்பதற்குள் அவளின் முகத்தில் மயக்க மருந்தை வைக்க மயங்கி சரிந்தவளை கடத்தி கொண்டு அந்த ஆட்டோ டிரைவர்-ஐ அடித்து ஓரமாக போட்டு விட்டு சென்று விட்டனர்.

ஒரு பாழடைந்த குடோன் போன்ற ஒன்றில் கை கால் கட்டிவைக்க பட்டு மயக்க நிலையில் இருந்தால், அப்போது அங்கே வந்த அடியாள் ஒருவன் “டேய், அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியிற நேரம். பத்திரமா பாத்துக்கோங்க… பாஸ் வந்துட்டு இருக்காரு… நான் போய் ஒரு தம் போட்டுட்டு வரேன்…” என்று அவன் கிளம்ப இவர்களும் சரிங்க தலைவா என்று சொல்லிவிட்டு அங்கே ஓரமாக அமர்ந்து சரக்கு அடிக்க ஆரம்பித்து விட்டனர். வெண்பாவிற்கு லேசாக மயக்கம் தெளிய முதலில் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தவள், தன் கை, கால் எல்லாம் கட்ட பட்டிருப்பதை பார்த்து திகைத்தாள். அவள் எழுந்ததை ஒரு ஆள் எதேர்ச்சியாக பார்த்து விட்டு சொல்ல அனைவரும் அவளிடம் வந்தனர். அவளின் வாயில் பிளாஸ்திரி ஓட்ட பட்டு இருப்பதால் அவளால் பேச முடியவில்லை. 

அடியாட்கள் அனைவரும் அவளை சுற்றி நின்று, “இங்க பாரு பாப்பா… எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியா இருக்கனும்… தப்பித்து போக எதாவது ட்ரை பண்ண போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்போம்… புரியுதா…” என கேட்க நல்ல பிள்ளையாக தலை ஆட்டி கொண்டாள். அவர்களும் அங்கு இருந்து நகர பார்க்க.. அவள் பேச முடியாமல் ம்ம் ம்ம், என தலையை அசைக்க ஒருவன் பொறுமை இழந்து அவளின் வாயில் உள்ள பிளாஸ்திரி யை எடுக்க, அவள் தான் இருமிக்கொண்டே, “தடிமாடுகளா… என்னடா அடுச்சுங்க முகத்துல… நாத்தம் தாங்க முடியலை… இதுல அந்த துணி வேற முகத்துல வெச்சு… ப்பா…. குடலே வெளியில வந்துரும் போல… கடைசியாய் எப்போடா அதை துவைச்சிங்க…” என்று பேசி கொண்டே செல்ல இப்போது பேந்த பேந்த முழிப்பது இவர்கள் முறையானது.

அவளும் விடாமல், “டேய், டம்மி பிஸுங்களா.. எத்தனை நாளைக்கு தாண்டா இப்படி குடௌன், பழைய வீடுனே அடைச்சு வைப்பிங்க… ஒரு 5 ஸ்டார், ஒரு 3 ஸ்டார், இப்படி எல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா… உங்க பாஸ் உங்களுக்கு காசு தரலையா… சரியான கஞ்சனா இருப்பான் போல. வேணும்னா என்கிட்டே வேலைக்கு சேர்த்துக்கோங்க, இந்த பாஸ் எல்லாம் வேஸ்ட்… பாரு அவரு கூட கிளிஞ்ச டிரஸ் தா போட்ருக்காரு. இவருக்கு கை எல்லாம் ஒரே காயம், அதுகூட உங்க பாஸ்க்கு தெரியல… நல்லா உங்கள ஏமாத்தி வேலையை மட்டும் வாங்கிக்குறான்…” என சொல்ல, உண்மையில் ஒருவன் கிழிந்த உடையுடனும், மற்ற ஒருவனுக்கு காயம் ஏற்பட்டு அதற்கு மருந்து போடாமல் அப்படியே விட்டுருந்தனர். 

“ஏய் பொண்ணு உன்னைய கடத்தி வெச்சுருக்கோம் நீ என்ன பயப்படாம, பேசிட்டே போற. எங்களை பார்த்த என்ன லூசு மாதிரி தெரியுதா. இப்படி எல்லாம் பேசி இங்க இருந்து தப்பிச்சு போயிரலாம்னு பிளான் பன்றியா.. அதெல்லாம் நடக்காது…” என்க அவள், “டேய் மொட்டை, நீங்களே அனுப்பினாலும் நான் போக மாட்டேன்…” என சொல்ல ஒருவன் ஏன்? என கேட்க ஆர்வமா கேக்க, “சரி எல்லோரும் உட்காருங்க அந்த சோக கதையை நானும் சொல்றேன்.. உங்க பாஸ் வர வரைக்கும் நேரம் ஆவது போகும்…” என சொல்ல அந்த மாடசாம்பிராணிகளும், ஆர்வமாக அமர்ந்து விட்டனர் கதை கேட்க.

“சின்ன வயசுல இருந்து எங்க அம்மா என்னைய கஷ்டபட்டு வளர்த்தாங்க. எனக்கு ஒரு 8-ல இருந்து 10 வயசு இருக்கும், அப்போ ஒரு நாள் அவங்க உடம்பு சரி இல்லாம இறந்து போய்ட்டாங்க… எங்க அம்மா பிணத்தை கூட என்னைய பார்க்க விடலை தெரியுமா…” என்று அழுக இவர்களுக்கும் கண்ணீர் வர தயாராக இருந்தது.. இவளும் தொடர்ந்தால், “என்னைய பார்த்துக்க யாருமே இல்லாம அனாதை ஆஸ்ரமுத்துல சேர்த்துட்டாங்க… நான் அங்க தான் வளர்ந்தேன்… இதோ இந்த அண்ணா மாதிரி ஒரு அண்ணா ஒருத்தர் தான் என்னைய அப்பா மாதிரி பாத்துக்கிட்டாங்க…” என்க ஒரு அடியாள், எனக்கு ஒரு டவுட்? என நிப்பாட்ட இவளும் சலித்துக்கொண்டே என்னய்யா என கேட்க, “இல்ல அண்ணா-னு சொல்ற, அப்புறம் அப்பா-னு சொல்ற உண்மையிலே அண்ணாவா? அப்பாவா?” என அதி முக்கிய கேள்வியை கேட்க, இவள் தான் நொந்து கொண்டு அதை வெளி காட்டாமல், “பாருங்க அண்ணா நான் எவ்ளோ சோகமா சொல்லிட்டு இருக்கேன்.. இவரு இப்படி எல்லாம் கேட்டு இன்னும் கஷ்டபடுத்துறாங்க…” என வராத கண்ணீரை துடைக்க மற்றவர்கள் அவனை திட்டி அமைதி படுத்தினர்.

அதுவும் அவளின் அண்ணா என்ற அழைப்பில் உருகிவிட்டவன், “அவன் கெடக்குறான் தங்கச்சி நீ சொல்லு…” என்றான். அவளும் தொடர்ந்தாள். “அதுக்கு அப்புறம் கண்ணீரிலும் கஷ்டத்திலும் தான் என்னோட வாழ்க்கையே இருந்துச்சு…” என்று அழுக கண்ணீரை துடைக்க நினைத்தால் தன் கை கட்டப்பட்டு இருப்பதால், பக்கத்தில் இருந்த மொட்டையை பார்த்து, “அண்ணா பாத்திங்களா… என் கண்ணீரை துடைக்க கூட கை இல்லையே மொட்டை அண்ணா… இனிமேலேயும் இது தான் என் விதியா…” என கேட்க அவன் உடனே கையின் கட்டை அவிழ்க்க ரொம்ப நன்றி மொட்டை அண்ணா… உங்கள நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். என சொல்ல அவனும் இந்த அண்ணன் உனக்கு எப்பவுமே இருப்பேன் மா, நீ அழுகாத என்க அவளும் நன்றாக உக்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள். 

“எங்க அண்ணா விட்ட..?” என கேட்க அவனும் சொன்னான். அவளும் தொடர்ந்து, “அப்போதான் ஒரு நாள் என்னைய ஒரு குடும்பத்துல தத்து எடுத்தாங்க. அங்க தான் நான் இப்போ இருக்கேன் அண்ணன்ஸ். அவங்க எல்லோரும் சாப்பிடும் போது எனக்கு ஒரு வாய் சோறு கூட போடா மாட்டாங்க தெரியுமா… என கண்ணீரை விட நானும் பலநாள் பட்டினியாதான் இருப்பேன்… நம்ம கேட்காமையே நம்ம பசியை போக்க எனக்குன்னு யாருமே இல்ல தெரியுமா… இதனால காலையில நான் சப்படாமையே வந்துட்டேன்… எனக்கு பிரியாணி நா ரொம்ப புடிக்கும் அண்ணா அதை கூட எனக்கு அவங்க வாங்கி தரமாட்டாங்க… என்னைய பாக்க வெச்சே சாப்புடுவாங்க… அந்த வேதனை இருக்கே வேதனை…” என காலையில் 10 நெய் தோசையை விழுங்கி விட்டு அப்பாவி போல் கண்ணீர் விட்டு கொண்டு இருந்தாள். 

உடனே அந்த அடியாள் ஒருவன் சென்று வந்து அவளிடம் பிரியாணி-யை தர கண்களில் ஹார்ட்-இன் தான். இருந்தாலும் வெளியில் கெத்தை விடாமல், “எனக்கு வேண்டாம் தாடி அண்ணா, நீங்க சாப்புடுங்க… என் அண்ணனுங்க பட்டினியாய் இருந்து நான் சாப்பிட்டா எங்க அம்மாவே என்னைய மன்னிக்க மாட்டாங்க…” என சொல்ல “அவனும் நாங்க எல்லாம் சாப்பிட்டோம் மா… நீ சாப்பிடு…” என்க மறுபடியும் வேண்டாம் என்று சொன்னவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். அவளும் அவர்களுக்காக மட்டும் தான் சாப்பிட்டால், அதற்கு தண்ணீர் கை துடைக்க துணி, என அவளை விழுந்து விழுந்து கவனித்து கொண்டனர். திருப்தியாக சாப்பிட்டு விட்டு தொடர்ந்தாள்.

“உங்கள மாதிரி அண்னண்ஸ் எல்லாம் கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கணும்…” என சொல்லும்போது ஏப்பம் வேறு வந்து தொலைத்தது. “உங்கள மாதிரி ஒரு அண்ணா இருக்காரு… அவரு தான் என்னைய இதுவரைக்கும் பாத்துக்குறாரு.. அப்படி இருந்தும் படிக்குற இடத்துலயும் எனக்கு கஷ்டம் தான்…” என்க ஒருவன், “யாரு உன்கூட பிரச்சனை பண்றது சொல்லுமா… அவனை போட்டு தள்ளிடலாம்…” என பொங்க மற்றவர்களும் அவனை ஆமோதித்தனர். வெண்பா, “வீட்டில எல்லா வேலையும் நான் தான் செய்வேன் தெரியுமா… அதெல்லாம் முடுச்சுட்டு தூங்கவே 2 மணி ஆயிடும்.. அதுக்கு மேல நான் எங்க படிக்கறது… இது தெரியாம என் ஹச்.ஓ.டி வழுக்கு பாறை நான் சரியா படிக்கலை, டெஸ்ட் நல்ல பண்ணலைன்னு என்னைய அடித்து கிளாஸ்-அ விட்டு துரத்திட்டான் தெரியுமா… கணக்கு சரியா வரலை நா நான் என்ன பண்றது…” என அழுதுகொண்டே, “இது கூட பரவாயில்ல… லேப் ல ஏதோ தெரியாம தட்டி விட்டு ஒரு பொருள் உடைஞ்சுருச்சு அண்ணா… அதுக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத அந்த பிரின்சிபால் டொமறு அந்த லெப் முழுக்க என்னைய துடைக்க விட்டு கை எல்லாம் ஒரே புண்ணு ஆயிடுச்சு தெரியுமா…” என கையை காட்ட அவர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டே ச்சு.. ச்சு என இச்சு கொட்டினர்.

“இதை எல்லாம் கூட பொருத்துக்கலாம் ஆனா நேத்து உங்க தங்கச்சியை பர்த்து அந்த கிளாஸ் இன்ச்சார்ஜ் சொர்ணாக்கா, திட்டிட்டா…” என பாவமாக சொல்ல அவர்களும் “என்னாச்சு ஏன் திட்டுனாங்க…?” என கேட்க… “ரொம்ப பசிக்குதுனு சாப்பிட போய்ட்டேன்… அதோட கிளாஸ்-ல, அதுக்கு திட்டி சாப்பிட போன எல்லோருக்கும் இன்னைக்கு டெஸ்ட்… ஒழுங்கா எழுதல அப்புறம் இருக்கு உங்களுக்கு பனிஷ்மென்ட்னு சொல்லிட்டு போய்ட்டா… நீங்களே சொல்லுங்க பசிக்குதுன்னு சாப்பிட போனது ஒரு தப்பா…” என பரிதாபமாக கேட்க “அவர்களும் உன் தப்பு ஒன்னும் இல்லமா… எல்லாம் அந்த சொர்ணாக்கா தான்… நீ யாருனு காட்டு நாங்க பாத்துக்குறோம்…” என்க நீங்க சொன்னதே போதும் அண்ணா எனக்கு என பெருமையாக சொல்லி கொண்டாள்.

அப்போது அங்கே தம் அடிக்க சென்ற அடியாள் வர டேய் என்னடா நடக்குது இங்க… ஏன் இவ கையை கட்டாம விட்ருக்கீங்க… எதுக்கு டா எல்லோரும் அழுதுட்டு வேற இருக்கீங்க… எதுக்கு டா கீழ உக்காந்துருக்கீங்க… என கேட்டு கொண்டே இருக்க… அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க அதே நேரம் அங்கே வந்தான் அவன். அவர்களின் பாஸ் ரோஹன். ஆதியுடன் கல்லூரி விழாவில் வம்பு வளர்த்து வாங்கி கொண்டவன். அவன் தான் ஆதியை கதற விட வெண்பாவை கடத்த திட்டம் தீட்டி அதில் வெற்றியும் கண்டவன்.

அவளை பார்த்து கொண்டே கிட்ட வர, “அட பாஸ்… அந்த பாஸ் நீங்களா… நான் உங்கள பாத்துருக்கேன் காலேஜ் ப்ரோக்ராம்-ல தூரமா இருந்து…. சொல்லப்போனா சைட் கூட அடுச்சேன்… இப்போ தா இவ்ளோ பக்கத்துல பாக்குறேன்… உங்க கூட ஒரு selfie எடுத்துக்கலாமா, காலேஜ்-ல கெத்து போடத்தான்… ஆனா சும்மா சொல்ல கூடாது… தூரத்துல பாக்குறதை விட பக்கத்துல இன்னும் அழகா இருக்கீங்க… உங்க நம்பர் இருந்த கொடுங்க… சாட் பண்ணுவோம்…” என பேசி கொண்டே செல்ல இவனுக்கு தான் கோவம் ஏற அவளை ஓங்கி அறைந்து விட்டான். அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது. மற்றவர்கள் தடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருந்தனர்.

“என்னடி நீ என்ன டேட்டிங்கா வந்துருக்க… விட்டா ஓவரா பேசிட்டே போற. உன் அண்ணன் என்னைய எப்படி அடுச்சான் தெரியுமா… அதெல்லாம் நான் மறக்க மாட்டேன். அவனை பழி வாங்க தான் நான் உன்னைய கடத்திருக்கேன்… பேசாம அமைதியா இருந்தா உனக்கு நல்லது… இல்லைனா என் சுயரூபத்தை பார்க்க வேண்டி இருக்கும்…” என பேசிவிட்டு சென்று விட்டான்… இவள் தான் மனதில் “சரியான சைக்கோ, முசுடு… என்னையே அடுச்சுட்டாளே இதுக்கு நீ அனுபவிப்படா…” என கத்த நல்ல வேலை அவனுக்கு அது கேட்கவில்லை. கேட்டிருந்தால் இன்னும் வாங்கி கட்டிருப்பாள்… 

வெண்பா, ‘எல்லாம் பிளான் படி போச்சு… இன்னும் கொஞ்சம் பேசிருந்தா அந்த டம்மி ஆட்களே நம்மள விட்ருப்பாங்க… அதுக்குள்ள இந்த சைக்கோ வந்துட்டான்… என்னடி வெண்பா உனக்கு வந்த சோதனை… இப்போ எப்படி இங்க இருந்து தப்பிக்குறது…’ என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

இனி வெண்பாவின் நிலை என்ன? தப்பித்து செல்வாளா பார்ப்போம்….

காதல் தொடரும்.

மீயாழ் நிலா

தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Venba nalla story solrama pesama neeyum writer aairu…. Apdiye heroine um aairu nadupula punta po.. enna performance ah knjm kammi pannikko bit over ah iruku…. Intha Rohan thn kadathunatha…. Viduma chota bhaiyan… Knjm naal la love nu un pinnadi Thane suthanim apo pathukkalam…

    2. நெனச்சேன் dr… வெண்பா க்கு ரோஹன் தான் pair னு…❤

      ஆனா அவர் கொஞ்சம் திருந்தனும்….