Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 12

கயல் சுமதியின் குரலுக்கு பயந்து அருகில் செல்ல நிமிர்ந்து பார்த்த சுமதி, “நகை எங்கேன்னு தெரியல… நானும் யோசித்து பார்த்தும் நியாபகம் வரலை எங்க வைச்சேன்னு… சரி பரவாயில்ல… நகை தான போய்ட்டு போகுது… அப்படி இல்லைனா நீ எங்கையாவது பாத்தா எடுத்து வை புரியுதா…?” என கேட்க கயல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். “சரி போ… இத சாக்காடா வெச்சுட்டு வேலையை செய்ய வேண்டாம்னு நினைக்காத. போய் சமையலை கவனி…” என சொல்ல அவளும் சென்று விட்டாள். சுமதி மனதில், ‘பரவாயில்ல சமாளிச்சுட்டோம்… இந்த அருண் பையன் தான் வாய திறக்காம இருக்கனும்… எதாவது சொன்னா அவனுக்கு இருக்கு… பாத்துக்கலாம்…’ என நினைத்து விட்டு தனதறைக்கு சென்று விட்டாள். இதை அருணும் செல்வாவும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.

செல்வாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகம் ஆகியது. சுமதியின் குணம் இது கிடையாது. நகை போனால் போகட்டும் என நினைக்கும் அளவிற்கு அவள் நல்லவள் எல்லாம் இல்லை. ஏதோ இருக்குது கண்டுபுடிக்குறேன்.. என நினைத்து விட்டு சென்று விட, இது வரை செல்வாவின் செய்கையை ஒளிந்து நின்று பார்த்து கொண்டு இருந்த சுமதி, ‘இந்த ஆளு நம்புன மாதிரி தெரியலையே… இவன் பாக்கணும்னு தான் இவ்ளோ தூரம் நடிக்க வேண்டியதா போச்சு… ஆனாலும் ஒன்னும் ஒர்கவுட் ஆனா மாதிரி தெரியலை… இதுக்கு தாண்டி சுமதி கொஞ்சம் பாத்து இருக்கனும்… இப்போ பாரு காலையில நகை காணோம்னு தெரிஞ்சதும் நீ உடனே சண்டை போட்டுட்ட… சண்டை மட்டுமா போட்ட… அவளை வேற அடுச்சுட்டே… பணம்-னு வந்தா மட்டும் உன் மூளை வேலையே செய்ய மாட்டேங்குது… சரி இனிமேல் கொஞ்சம் அதிகமா நடித்து அந்த ஆள நம்ப வைக்கணும் எல்லாம் நேரம். சொத்து மட்டும் கைக்கு வரட்டும் அப்புறம் தெரியும் இந்த சுமதி யாருனு…’ என நினைத்து கொண்டே சென்று விட்டாள்.

அருண், தன் தாயை கேவலமாக பார்த்து விட்டு தலையில் அடித்து கொண்டான். கயல் எல்லா வேலையும் முடித்து அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுக்க கயலுக்கு தான் தூக்கம் வரவில்லை. இப்போது சுமதி நல்லவிதமாக பேசினாலும், கொட்டிவிட்ட சொற்களை அள்ளிவிட முடியுமா அல்லது அதெல்லாம் இல்லை என்று தான் ஆகிவிடுமா… ‘ஆனா திடிர்னு இந்த சித்தி இப்படி எல்லாம் பேசாது… இதற்கும் எதாவது காரணம் இருக்கும்…பாப்போம்…’ என நினைத்து கொண்டிருக்கும் போதே கதவு தட்டுப்பட யாரா இருக்கும் என நினைத்து விட்டு திறக்க வெளியில் அருண் நின்று இருந்தான்.

அவனை அழைத்து, “என்னடா எதாவது வேணுமா?…” என கேட்க அவன் அக்கா, என ஆரம்பித்து அனைத்தையும் சொல்லிவிட்டான். கயலுக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அருண், “அக்கா நான் இருப்பேன் உன்கூட எப்பவும்… அம்மா பேசுனது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத…” என தனக்கு தெரிந்தவரை சமாதானம் சொல்லி கொண்டு இருந்தான். கயல் புன்னகைத்து கொண்டே, “சரிங்க பெரியமனுஷா…” என்க அவன் அக்கா என்று சினுங்க அவனை அணைத்து கொண்டாள். அவனும் தன் அக்காவை அணைத்து கொள்ள ஒரே பாச போராட்டம் தான். அதன் பிறகு அவனை அனுப்பிவிட்டு படுத்த கயலுக்கு சித்தியின் செயலுக்கான காரணம் புரிந்து போனது. ஒரு ஏக்க பெருமூச்சை விட்டு சிறிது நேரத்தில் தூங்கியும்விட்டாள்.

ஆதி படுக்கை அறையில் உருண்டு பிரண்டு யோசித்து கொண்டு இருந்தான். கடைசி வரைக்கும் அவ பெயர் கூட தெரியலையே. யாரு கிட்ட கேட்டா தெரியும் என யோசிக்க வெண்பாவின் நியாபகம் தான் வந்தது. உடனே அவள் அறையின் முன்னாடி நின்று கொண்டு இருந்தான். கதவை தட்டலாமா? வேண்டாமா? எப்படி கேக்குறது?.. என யோசித்து கொண்டு இருக்க, இங்க என்னடா பண்ற… என கேள்வி இவனின் முதுகுப்புறம் கேட்க சட்டென்று திரும்ப அங்கே வெண்பா நின்று இருந்தாள்.

அவள் இவனையே கூர்மையாக பார்க்க அவன் தான், ‘இந்த குட்டி சாத்தான் ஏன் இப்படி பாக்குது… எப்படி கேக்குறது… ஓவரா காலாய்ப்பாளே… வேற வழி இல்லை… நமக்கு காரியம் தா முக்கியம்…’ என நினைத்து கொண்டு இருக்க வெண்பா பொறுமை இழந்து, “டேய் அண்ணா என்னடா?…” என கேட்க அதில் நிகழ் உலகத்திற்கு வந்தவன் “அது ஒன்னும் இல்லைடி… இன்னைக்கு ஒரு பொண்ணு வந்துச்சே வீட்டுக்கு, அது கிளம்பிடுச்சா…” என கேட்க அவள் அவனை மேல் இருந்து கீழ் ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ஏன் கிளம்பாம இங்கையே பாய விரிச்சு படுத்துருப்பாங்களா…” என நக்கலாக கேட்க இவகிட்ட கேட்டதுக்கு அம்மா கிட்ட கேட்ருக்கலாம்.. என நொந்து கொண்டான்.

இருந்தாலும் காரியம் ஆக வேண்டுமே… “அட அது இல்லைடி குட்டி சாத்தான்… அந்த பொண்ணு வேற யாருனு தெரியல… நம்ம வீட்ல இருந்து எதையாவது திருடிட்டு போய்ட்டா… அதான் கேக்குறேன்…” என்க வெண்பா பொங்கி விட்டாள். “கயல் அக்கா அப்படி பட்டவங்க கிடையாது. அவங்கள பத்தி அப்படி சொல்லாதே. இது பெரிய பேலஸ்.. அப்படியே திருடிட்டாலும்…” என்க, “என்னது கயலா முழு பெயரே அதனா…?” என கேட்க “பெயர் கயல்விழி… என் காலேஜ் தான். வேற டிபார்ட்மென்ட் 3rd இயர், எவ்ளோ நல்ல பேசுனாங்க தெரியுமா… எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருந்தது…எனக்கு மட்டும் இல்லை நம்ம வீட்டிலையும் எல்லோருக்கும் பிடிச்சுது… இனிமேல் அவங்களை எதாவது சொன்ன கொன்னுடுவேன்… போடா எருமை” என திட்டிவிட்டு சென்று விட்டாள்.

ஆதிக்கு அவள் திட்டியது எல்லாம் பெரிதாக தெரியவில்லை. அவன் தான் வேறு ஒரு கனவில் இருக்கிறானே. அவளின் பெயரை உச்சரித்து கொண்டே எப்படி அறைக்கு வந்தான் என்று தெரியவில்லை. கயல்விழி… கயல் பேரு நல்லாதான் இருக்கு… என சிரித்து கொண்டு இருக்க அவனின் தொலைபேசி தான் அடித்தது. எடுத்து பார்க்க கார்த்திக் தான். ஒருவித சந்தோசத்தோடு எடுத்து சொல்லு மச்சான், என்க எதிர்புறம் என்ன சொல்ல பட்டதோ… இதுவரை இருந்த நிலை மாறி முகத்தை கடுமையாக வைத்து கொண்டு “இன்னும் 10 நிமிசத்துல அங்க இருப்பேன்” என சொல்லிவிட்டு கிளம்பி யார்க்கும் தெரியாமல் காரை எடுத்து கொண்டு பறந்து விட்டான்.

அது பழைய வீடு அதை சுற்றிலும் காடு மட்டும் தான் உள்ளது. வழி தெரியாமல் காட்டுக்குள்ளே மாட்டி கொண்டால் காட்டு மிருகங்களுக்கு இரையாக வேண்டியது தான். பெரும்பாலும் இந்த வீடு யாருக்கும் தெரியாது. இது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியும் கூட. சுற்றிலும் எந்த வீடுகளும் ஆட்கள் நடமாட்டமும் இல்லாமல் இருப்பதால் இந்த காடு எப்போதும் பார்ப்பதற்கு பயங்கரமாகவும் திகிலாகவும் இருக்கும். அந்த வீட்டிற்கு செல்ல ஒரு மண் வழி பாதை மட்டுமே உண்டு. ஆதியின் கார் அந்த மண் தடம் வழியாக சென்று கொண்டு இருந்தது அந்த பழைய வீட்டை நோக்கி. ஆதி வந்து அவனுடைய கைவிரல் ரேகை வைத்ததும் அந்த பிரம்மாண்ட கேட் ஆனது திறந்து அவனுக்கு வழிவிட்டது. அதின் உள்ளே சென்ற ஆதி ஒரு ரகசிய எண்ணை அழுத்த அந்த வீட்டின் கதவு திறந்து கொண்டது. யாரும் அனுமதி இல்லாமல் நுழையவும் முடியாது, மீறி வந்து விட்டால் வெளியில் செல்லவும் முடியாது.

வெளியில் இருந்து பார்க்க பழையதாக இருந்தாலும் அதன் உள்ளே எல்லாம் சற்று புதுசாக உபயோக படுத்த ஏதுவாக தான் இருந்தது. சற்று விசாலமான அந்த பெரிய அறையை கடந்து இடது பக்கம் உள்ள ஒரு பெரிய புகைப்படத்தின் முன்பு வந்து நின்றான். அதின் கண்ணை தொட, இவன் நிற்பதற்கு 20 அடி தள்ளி உள்ள ஒரு கதவு ஒன்று திறந்தது. சாதாரணமாக பார்த்தால் அந்த கதவு அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது. அங்கே இருந்த கதவின் வழியில் இறங்க படிக்கட்டுகள் இருக்க அதன் வழியே இறங்கி சென்றான் ஆதி. அவனின் சத்தம் கேட்டு அங்கு இருந்த அவனின் ஆட்கள் எல்லோரும் அவனை பார்க்க சிறு தலை அசைப்புடன் கடந்து சென்றான்.

நாற்காலியில் ஒருவன் மயக்க நிலையில் கட்டிபோட பட்டிருந்தான். அவன் அருகில் அமர்ந்து கார்த்திக் போனில் விளையாடி கொண்டு இருக்க ஆதியின் கார்த்திக் என்ற அழைப்பில் அனைத்தையும் வைத்து விட்டு அவன் அருகில் வந்து நின்று கொண்டான். ஆதி தன் எதிரில் உள்ளவனை பார்க்க அவன் இன்னும் மயக்க நிலையில் இருந்ததால் அவனின் மேல் தண்ணீரை ஊற்ற மயக்கம் தெளிந்து எழுந்தவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அவன் சற்று தெளிந்ததும் அதிர்ந்தான்.

அவனின் முன்னாள் நாற்காலியில் ருத்ரமூர்த்தியாய் இருந்த ஆதியை பார்த்து இவனுக்கு உயிரே போய்விட்டது. ஆதியின் கண்களில் உள்ள கோவம் அவனின் ரத்த நாளங்களை எல்லாம் அதிர செய்தது. இவனை பற்றி முழுதாக தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டான். ஆதி அவனை பார்த்து “நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்ன போதும்… புரியுதா?” என்க தலையை மட்டும் ஆட்டினான். “குட், எதுக்கு எங்களை பின்தொடர்ந்து வந்த? யாரு உன்னைய அனுப்புனாங்க? என்ன சொன்னாங்க?” என கேட்டு விட்டு காத்திருக்க அவன் வாயை திறக்க வில்லை. பதில் சொல்லாமல் இருப்பவனை பார்த்து ஆதியின் கோவம் பன்மடங்காக பெருக… பதில் வருமா? வராதா? என நக்கலாக கேட்க, “அதை சொன்னா என்னைய கொன்னுடுவாங்க சார்.. என்னைய விட்ருங்க… இனிமேல் உங்க வழியில வர மாட்டேன்…” என்றான் பவ்யமாக. ஆதி வாய்விட்டு சிரித்து விட்டு, ஒரு சொடக்கு போட அவன் முன்னாள் சில பொருட்கள் அடங்கிய பெட்டியை அவன் ஆட்கள் வைத்தார்கள்.

ஆதி அவனை பார்த்து கொண்டே சோ… நான் கேக்குற கேள்விக்கு பதில் வராது அப்படி தான… என்று கேட்ட அவன் குரலில் இருந்த கண்டிப்பு எதிரில் உள்ளவனின் இதயத்துடிப்பை இன்னும் அதிகரித்தது. அந்த பொருளில் ஒரு கொரடு போன்ற ஒன்றை எடுத்து தனக்கு எதிரில் இருந்த அவனை பார்த்து விஷமமாக சிரித்தான். எதிரில் இருந்தவனுக்கு வயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்துவிட்டது. “சார் என்னைய விட்ருங்க சார்… இனிமேல் எப்பவும் உங்க வழியில வர மாட்டேன் சார்… ப்ளீஸ் சார்” என கெஞ்ச ஆதி, “நான் முன்னாடியே சொல்லிட்டேன்… நான் கேக்குற கேள்விக்கு மட்டும் தான் நீ பதில் பேசணும்… இந்த மாதிரி தேவையில்லாத விஷயத்தை பத்தி வாய கூட திறக்க கூடாது…” என கூற அவன் தயங்குவதை கண்ட ஆதி அதை கொரடை எடுத்து அவன் கிட்டே வந்து Answer my question? என கடைசியாக கேட்க அவன் வாயை திறக்க மறுத்துவிட்டான்.

ஆதி சிரித்து கொண்டே அவனின் கையை பிடித்து கட்டை விரல் நகத்தை பிய்த்து எடுத்தான். அவன் வலியில் அலற அதை பொருட்படுத்தாமல் அடுத்த நகத்தையும் பிய்த்து எடுக்க ரத்தம் சொட்ட சொட்ட வலி தாங்க முடியாமல் அவன் அலறும் சத்தம் அந்த அறையை தாண்டி வெளியில் கேட்கவில்லை. அவன் வலி தாங்க முடியாமல் அலறி கொண்டே, “சார் விட்ருங்க சார்… நான் எல்லா உண்மையும் சொல்லுறேன்…” என கெஞ்ச ஆதியும் அவன் முகத்தை பார்த்து சொல்லு என்க “கதிரவன் தான் சார்… என்னைய கூப்பிட்டு இந்த வேலையை கொடுத்து பணமும் நிறையா கொடுத்தாரு… நானும் பணம் கிடைக்குதேன்னு ஒத்துக்கிட்டேன்… என்ன ஆனாலும் இதை வெளியே சொல்ல கூடாது தெரிஞ்சா என்ன ஆகும்னு உனக்கே தெரியும்னு மிரட்டுனாரு… உங்க பேமிலி பத்தி எல்லா டீடைலும் கொடுத்து உங்க குடும்பத்துல எல்லோரும் பின்தொடர்ந்து யாரு கிடைச்சாலும் தூக்கி அவரு கெஸ்ட் ஹவுஸ்ல அடைச்சு வைக்க சொன்னாரு… இதுக்காக நாங்க காத்திருக்கும் போது தான் ஒரு கார் வந்தது.. அது உங்க கார் இல்லை… சோ நாங்களும் பாலோவ் பண்ணிட்டு பின்னாடி வந்தோம்… கூட நீங்க இருப்பிங்கனு தெரியலை… அதனால நாங்க பின்வாங்கிட்டோம்… இது தான் சார் நடந்தது. இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தெரியாது என்னைய விட்ருங்க சார்…” என கதற ஆதி அவனின் ஆட்களிடம் கண்ணை காட்டிவிட்டு ஆதியும் கார்த்தியும் கிளம்பிவிட்டனர். ஆதியின் ஆட்கள் அவனை அடித்து துவைத்து உயிரை மட்டும் விட்டுவிட்டு குற்றுயிராக அவனை போட்டு விட்டு அதை ஒரு விபத்து போல மாற்றி விட்டனர்.

கதிரவன் ஆதியின் தொழிழ்முறை எதிரி. அவன் எப்படியாவது சம்பாதித்தால் போதும் என்று தவறான வழியில் பணம் சம்பாதித்து பகட்டாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தற்போது அவனின் தொழில்களுக்கு தடையாக ஆதி இருப்பதால் அவனின் குடும்பத்தை கடத்தி வைத்து அவனை ஆட்டிவைக்க நினைத்து ஆதியை பற்றி தெரியாமல் சிங்கத்தின் குகைக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டன். அதற்கு தான் ஆள் செட் பண்ணி பின்தொடர சொல்ல அவர்களும் ஆதியின் அம்மாவை பின்தொடருவதாய் நினைத்து ஆதியும் கூட வருவது தெரியாமல் அவர்கள் வேலையை செய்ய ஆதியின் கண்களில் தான் தப்பிவிடுமா என்ன!!

காலையில் கோவிலுக்கு செல்வதில் இருந்து பின்தொடரும் காரை கண்டு கொண்டு அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பின்தொடர்ந்து இதோ தூக்கிவிட்டான் அனைவரையும். அதில் மற்றவர்களை ஆதியின் ஆட்களே கவனித்து விட்டனர். இவன் தான் அந்த கூட்டத்தின் ஹெட் ஆதலால் தான் இவனை மட்டும் ஆதி பார்க்க அவர்கள் இடத்திற்கு கொண்டு வந்தனர். இப்போது எதிரி யார் என்று தெரிந்து விட்டது. இனிமேல் அவனின் நிலை தான் அந்தோ பரிதாபம். இவன் அம்பு அதனால் இத்துடன் விட்டுவிட்டான். இதுவே எதிரி என்றால் அவனின் எலும்புகள் கூட யாருக்கும் கிடைக்காது. ஆதியின் இந்த முகம் கார்த்திக் மட்டுமே அறிவான்.

கார்த்திக் ஆதியிடம், “என்ன மச்சான் பண்ண போற அந்த கதிரவனை… என்ன பிளான்” என கேட்க ஆதி, “அந்த கதிரவனை நான் பாத்துக்குறேன்… அவனுக்கு சாவு என்கைல தான்…” என்று ஆத்திரம் குறையாமல் சொல்லி கொண்டு இருந்தான். “இனிமேல் நீ பத்திரமா இரு.. எங்க போனாலும் எனக்கும் நம்ம ஆளுகளுக்கும் சொல்லிட்டு போ.. எப்பவும் இத போட்டுக்கோ” என்று ஒரு கோல்ட் லாக்கெட் கொடுத்தான். இதுல ஜி.பி.ஸ் இருக்கு சோ நீ எங்க இருந்தாலும் எனக்கு காட்டிரும். இத நான் ஏற்கனவே யோசிச்ச வெச்சுருந்தேன்… இன்னைக்கு நடந்ததை பாத்ததும் லேட் பண்ணாம உடனே வாங்கிட்டேன்… இதை பேமிலில எல்லோருக்கும் கொடுக்கணும்… அப்புறம் நம்ம வீட்டு ஆட்கள் பாதுகாப்பிற்கு இன்னும் கொஞ்சம் ஆட்களை எக்ஸ்ட்ரா போடு சரியா…” என்க கார்த்திக்கும் அது தான் சரியாக தோன்ற ஒத்துக்கொண்டான். கார்த்திக்கை அவன் வீட்டில் விட்டுவிட்டு ஆதியும் கிளம்பி விட்டான்.

ஆதி வீட்டிற்குள் வர வெங்கட் எதிர்ச்சியாக பார்த்து விசாரிக்க என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல், “அது ஒன்னும் இல்லப்பா… பிரிஎண்ட்ஸ் பர்த்டே பார்ட்டி…” என இளித்து வைக்க, “உன்னைய எல்லாம் திருத்த முடியாதுடா.. கண்ட நேரத்தில ஊற சுத்தமா இருன்னு சொன்ன கேட்க மாட்டே. அந்த கார்த்தி வரட்டும் இருக்கு ரெண்டு பேருக்கும்…” என திட்டி விட்டு சென்று விட்டார். ஆதி பெருமூச்சை விட்டுவிட்டு தனதறைக்கு சென்று விட்டான்.

அறையில் நுழைந்ததும் குளித்துவிட்டு வந்து படுக்க மறுபடியும் அவனுக்கு கயலின் நியாபகம் வந்து ஒட்டி கொண்டது. உதட்டில் ஒரு புன்சிரிப்பு. அவளை பற்றி அனைத்து விபரங்களையும் சீக்கிரமாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டான். அவளின் முகத்தை நினைத்து பார்த்து கொண்டே இருக்க எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை.

இங்கே ஆதியை கதற வைக்க வெண்பாவை கடத்தும் திட்டத்தை போட்டு கொண்டு இருந்தது ஒரு உருவம்… அந்தோ பரிதாபம்… தன் குடும்பத்தை பின்தொடர்ந்ததுக்கே அவர்களுக்கு இந்த நிலைமை… இதில் தங்கையை தூக்கினால் என்ன ஆகுமோ…???

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Sangusakkara vedi

      Acho intha adhi soft bhai summa frnd kaga sanda podurannu Partha ivlo terror ah panran…. Follow pannunathukka ipdi na writer ji sonna mathiri thangachiya kadathina margaya thn…. Nic ud sis…