முசுடும் முயலும் – 10 😾❤️😻
அவளின் அதிர்வான முகம் கூட அவனுக்கு இன்னும் காதல் போதை ஏற்றியது. அவன் மூன்று மணிக்கெல்லாம் சலூன் சென்று தன்னை தயார் செய்து வந்தவன் வீட்டிற்கு செல்லாமல், தாமே அந்த போட்டோகிராபரை அழைத்து எங்கு இருப்பதாக கேட்டான்.
ஏனென்றால், இவர்களின் நோக்கமே பெண்ணை தனியாக ஹோட்டலில் புகைப்படம் எடுத்த விட வேண்டும். அதே போல், மாப்பிள்ளையையும் அவரின் வீட்டில் எடுக்க ஆள் அனுப்பி விட வேண்டும். பின்பு, ஐந்து மணியளவில் இருவரையும் மண்டபத்திற்கு வர சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தனர்.
ஆனால், இவன் ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பும் பொழுது நாமும் கிளம்பி விடுவோம் என்று பங்கஜம் கூறிக் கொண்டிருந்தார். அவருடன் சாரதராஜனையும் அழைத்துக் கொண்டிருந்தார்.
இதனை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் அவர்கள் முன் நம்மால் சகஜமாக இருக்க முடியாது என நினைத்து சலூனுக்கு சென்றதோடு நேராக ஹோட்டலுக்கு வந்து விட்டான்.
வந்தவன் கண்டது அழகு பதுமையாக இருக்கும் உத்ராவைத் தான். அதிலும் அவள் தன்னவள் என்கின்ற நினைப்பில் அவளின் பின்னழகை ரசிப்பதோடு இன்ச் இன்ச்சாக அளவெடுத்தான். அதில் தந்த மயக்கத்தில் தான் அவளுக்கு முத்தமிட்டான் தன்னையும் மீறி.
பின்பு, ஒரு சில போட்டோக்கள் தனியாகவும், குடும்பத்துடனும் எடுத்து விட்டு, அவளைப் பார்த்து மார்க்கமாக சிரித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டான்.
அவன் வந்ததில் இருந்து கிளம்பும் வரை அவள் அதிர்ச்சியில் தான் இருந்தாள். அவன் இறுதியாக அவளைப் பார்த்து சிரித்து விட்டு சென்ற பின்பே, இவளுக்கு மூச்சு வெளியில் வந்தது.
ஏனெனில் போட்டோ எடுக்கும் சாக்கில் அவன் அதிகமாக அவளின் கொழு கொழு இடுப்பை உரசிக் கொண்டே இருந்தான். அதில் அவள் தான் சங்கடமாக நெளிந்தாள். அவனோ அதில் மேலும் மேலும் போதை ஏறி அவளை இம்சை செய்தான்.
பின்பு, நல்ல நேரம் ஆரம்பிக்க ஐந்து ஐந்திற்கு அவளை மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு, அவனும் வர இம்முறை அவளும் அவனுக்கு சரி சமமாக தைரியத்தை வரவழைத்து நிற்க, அவனோ அவளின் முயற்சியைக் கண்டு நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு மணமகன் அறைக்கு சென்று விட்டான்.
அவளோ அதில் மெலிதாக எழுந்த கோபத்துடன் பாட்டி தாத்தாவிடம் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு, இவளும் மணமகளின் அறைக்கு சென்றாள். ஒரு சில மணித் துளிகளுக்கு பின் புகைப்படம் எடுப்பதற்கு ஆள் வர, இவளை தனியாக அழகழகாக எடுத்தனர். அதில் அவளும் தன்னை மறந்து போஸ் கொடுக்க, நல்ல நல்ல புகைப்படத்தை எடுத்தனர்.
அதன் பின் மாப்பிள்ளையுடன் எடுப்பதற்கு இருவரையும் மாடிக்கு அழைத்து சென்றனர். சூரியன் முக்கால்வாசி மறைந்து அதனின் வெளிச்சம் மட்டும் பளிச்சென்று தங்க நிறத்தில் அங்கு அங்கு தெரிய இவர்கள் இருவரையும் ஒருங்கே நிற்க வைத்தனர்.
அதில் அழகாக இயல்பாக இருவரும் சிரித்துக் கொண்டு இருந்தனர். பின்பு, ஒருவரை ஒருவர் திரும்பி பார்க்குமாறு கூற, அபியின் குறும்பு எட்டிப் பார்த்து அவளைப் பார்த்து ஒரு மார்க்கமாக சிரிக்க , இவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. பலமுறை ஸ்மைல் ஸ்மைல் என்று கூறியும் உத்ரா சிரிக்காததால், போட்டோகிராபர் உத்ராவிடம் “மேம் உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குல ? ” என்று கேட்டதில் உத்ரா அதிர, அபி சிரித்தே விட்டான்.
“ஒழுங்கா போஸ் கொடுங்க ” எனக் கூறி, இருவரையும் பார்க்க சொல்ல, அவள் முயன்று சிரித்தாள். அவனும் அவளைக் காதல் பார்வைப் பார்த்தான். அடுத்தடுத்த போஸிலும் முதலில் சொதுப்பவதும் , பின்பு ஒழுங்கா நிற்பதுமாக இருக்க, இறுதியில் அபி அவளை தன் புறம் திருப்பி அவளின் இரு கைகளையும் பிடித்து அதற்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவளைப் பார்த்தான். அதில் அவளின் மனதில்,
உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சூழலுதே
உன்ன பாத்ததாலே
தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன்
நானும் கொஞ்ச நாளா
பின்பு, அனைத்தும் முடிந்து இருவரின் பெற்றோர்கள் சுற்றாதார்களின் சாட்சியோடு வெற்றிலை பாக்கு மாற்றி, இரு பெற்றோர்கள் சம்மந்திகளாக மாறிக் கொண்டனர்.
அவனுக்கு அவள் வைரத்தில் மோதிரம் இட , இவளுக்கு ஏற்கனவே மோதிரம் போட்டதால் வைர கற்கள் பதித்த மாலையை அணிவித்தான்.
பின்பு, அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டு சாப்பிட செல்ல, போட்டோகிராபர்கள் மறுபடியும் இவர்களை தனியே அழைத்து புகைப்படம் எடுக்க, இம்முறை உத்ரா அவனை செம்மையடைய செய்தாள்.
இவள் நேராக நிற்க, அவளின் இடப் பக்கவாட்டில் இருந்து அவளை ஒரு பக்கமாக திரும்பி லேசாக அபி கட்டியணப்பது போல் நிற்க சொன்னார்கள். ஆனால், உத்ரா அவனின் புறம் லேசாக திரும்ப , அவனும் அவளின் மூக்கில் தன் மூக்கு உராய்வது போல் நிற்க, அவளோ அவனின் கன்னத்தை இடக்கையால் தாங்கி கொண்டு, வலக்கையால் தன் இடுப்பை சுற்றியிருந்த கைகளை அணைத்தாள்.
அதன் பின்பு, இருவரையும் ஒருவரை ஒருவர் பார்க்கும் படி நிற்க கூறி அவளின் நெற்றியை இவனின் நெற்றி ஒட்டியிருந்து இருவரும் சிரிப்பது போல் நிற்க சொல்ல, அவளோ தனது இரு கைகளால் அவனின் இடையை கட்டியணைத்தாள். அதில் அவனும் சிரித்துக் கொண்டே அவளின் இரு கைகளோடு சேர்த்து அவளைக் மொத்தமாக கட்டியணைத்தான்.
பின்பு, இருவீட்டார்களின் சிறுசுகளுடன் பலத்தரப்பட்ட புகைப்படத்தை எடுத்தனர் . இரவு ஒரு மணிக்கு பின்பு தான் அனைவரும் மண்டபத்தை காலி செய்தனர்.
❤️❤️❤️❤️❤️
மன மகிழ்ச்சியுடன் உத்ரா விடியற்காலையில் எழுந்தாள். இன்று பாத்திரங்கள் சத்தமும் கேட்கவில்லை . அம்மாவின் எஃப் எம் சத்தமும் கேட்கவில்லை. கண்களை விழிக்கும் பொழுது ஜன்னலைப் பார்த்தாள். சூரியன் பளிச்சென்று அதனின் வெளிச்சத்தை வீசியது .
அதில் அதிர்ந்து மணியைப் பார்க்க, எட்டு பத்து என்று தெளிவாகக் காட்டியது. அதிர்ந்து கண்களை கசக்க கைகளை தூக்கிய பொழுது தான் அவளின் மெஹந்தி அவனின் இம்சையை ஞாபகப்படுத்தியது. அதில் அவள் செவ்வானமாக சிவந்தாள். அவனின் முகம் மனதை பிசைந்தது,வயிற்றில் குறுகுறுப்பை உண்டு பண்ணியது. அவ்விம்சை கூட அவளுக்கு இனிமையாக தான் இருந்தது.
அதே துள்ளலுடன் வெளியில் வர, வழக்கம் போல் அவரவர் வேலையை செய்துக் கொண்டிருந்தனர். தானாகவே இவளுக்கு டீயை தென்றல் நீட்ட, தனது மொபைலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அதில் யமுனா ரெக்வஸ்ட் கொடுத்ததாக வர , அவளை அக்செப்ட் செய்தவுடன் அவள் போட்டிருந்த ஸ்டோரி வந்தது.
அதில் அபி தலையை கோத, அதனை உத்ரா ரசித்து பார்ப்பது போல் இருந்தது. அதனை ரசித்து ஸ்கீரின்ஷாட் எடுத்தாலும் அபி இதனைப் பார்க்கும் பொழுது என்ன நினைப்பான் என்ற நினைப்பே அவளை மேலும் செம்மையுற வைத்தது. அவன் கேட்கும் பொழுது என்ன கூறலாம் என்று யோசித்துக் கொண்டே குளித்து முடித்து அவளின் இதர வேலைகளை முடித்தாள்.
விசேஷத்திற்கு வராதவர்கள் நேரில் வந்தும், போனிலும் விசாரித்தார்கள். அன்றைய பொழுது அப்படியே கழிந்தது. மாலைப் பொழுது ஆள் மாற்றி மாற்றி வந்ததால் சுத்தமாக அலைபேசியை எடுக்கவில்லை.
இரவு சாப்பிட்டு முடித்து பத்து மணியளவில் எடுத்து பார்க்க, அபி ஒரு தகவலும் பகிரவில்லை. சரி சிறிது நேரம் கழித்து பேசுவான் என்று எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு அவன் ஆன்லைன் வந்து சென்று ஐந்து நிமிடமாகியது என்று காண்பித்தது.
அதன் பின் சிறிது நேரம் இன்ஸ்டாகிராம் பார்த்து விட்டு பத்தரை மணியளவில் வாட்ஸ் – அப்பை ஓபன் செய்ய, அவன் வந்த சென்று அரை மணி நேரமாகி உள்ளது என்று காண்பித்தது. அவன் தூங்கிவிட்டான் என நினைத்து விட்டு, இவளும் தூங்க முயல, கண்கள் கழுவி கொண்டது போல் தூக்கம் தூர சென்றது.
பத்தரை பனிரெண்டு ஆகியது. அதன் பின்பே கண் அசந்தாள். இவ்வாறு தினமும் அவனின் அழைப்புக்காக ஏங்குவாள். ஆனால் , அவன் அழைக்கவில்லை நாட்கள் தான் கடந்தது.
சரியாக மூன்று வாரம் ஆகியது அவன் இவளோடு பேசி. அவளின் கவலை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. தென்றலுக்கு புரிந்து மைத்ரேயிடம் மட்டுமே புலம்புவார். ஆனால், எக்காரணம் கொண்டும் உத்ராவிடம் காண்பித்துக் கொள்ள மாட்டார்.
மூன்று வாரத்திற்கு பின்பு, கோயம்பத்தூருக்கு சென்று கல்யாணத்திற்கு தேவையான சேலைகள் மற்றும் குர்திஸ் போன்ற உடைகள் வாங்கலாம் என முடிவு செய்து உத்ரா மற்றும் தென்றல் கிளம்பி வந்தனர். அதனை எதார்த்தமாக உத்ராவிடம் பேசுவதற்காக அழைத்த கௌதமியிடம் கூறினர்.
அதனை உடனே தனது மகனிடம் பகிர , அவன் சரி என்று கூறிவிட்டு போனை வைத்தவன் குனிந்து தனது டேபிள் மற்றும் கணிணியைப் பார்த்தான். வேலை பன்மடங்காக பெருகி இருந்ததை கண்டவன் ஆழ மூச்சு எடுத்து விட்டு அவளுக்கு அழைத்தான்.
😾❤️😻
கோயம்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தவள் , இசையை ஹெட்செட்டின் மூலம் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தடங்கலாக அழைப்பு வந்தது. அழைத்தது அபியே !
இவ்வளவு நாள் தனக்கு அழைக்கவில்லை . ஒரு மெசேஜ் செய்யவில்லை என்பதை எல்லாம் மறந்து அவனின் அழைப்பில் மகிழ்ந்தாள். உடனே அழைப்பை எடுக்க, “ஹாய் டி…… எங்க இருக்க? கோயம்புத்தூர்ல இருக்கியா? ” வேலை பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவனின் உரிமை பேச்சில் இன்னும் சிலிர்த்தவள் அன்னை கூறியதால் அழைக்கிறான் எனப் புரிந்தாலும் குறைந்தபட்சம் இதையாவது செய்கிறான் என மகிழ்ந்து “ஆமா…. பர்சேஸ் ! “
“பர்சேஸ்ஸா ? மீட் பண்ணுவோமா ? மதியம் ஒரு மணி போல எங்க இருப்ப? “
“ப்ருக் ஃபீல்ட் “
” சரி! நீ போய்ட்டு கூப்பிடு நான் வரேன் ! ” எனக் கூற, அவள் சரி என்று கூறிய நொடி பட்டென்று வைத்து விட்டான்.
😾❤️😻
அவன் தென் இந்தியாவில் கால் தடம் பதிக்க எடுத்த முயற்சியில் தோல்வி காணவில்லை என்பது போல் எதிர்ப்பார்த்த வெற்றியும் காணவில்லை. அதில் மிகுந்த கவலையுற்று தனது முழு கவனத்தையும் அதில் செலுத்தி அடுத்த மாதத்தில் இந்த மாதத்தை விட வருமானம் பெருகுவதற்கான வேலைகளை துரிதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று வாரமும் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இதை மட்டுமே கருத்தில் கொண்டு சிரத்தையாக வேலைச் செய்துக் கொண்டிருந்தான்.
நேரம் காலம் போவது கூட தெரியாமல் அவன் வேலை செய்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி ஒலி எழுப்பியது. அதில் தான் அவன் திசை திரும்பி பார்த்தான். உத்ரா தான் அழைத்திருந்தாள். அலைபேசியிலேயே மணியைப் பார்த்தான். மணி ஒன்று முப்பது என்று காண்பித்தது.
அவளின் அழைப்பை ஏற்க உற்சாகமாக மாலுக்கு வந்ததாக கூறினாள். இவனோ சிரத்தையே இல்லாமல் “வந்துட்டியா ? ………… சரி வரேன் “என அரை நொடி கழித்தே கூறினான்.
அதில் உத்ராவின் முகம் வாடிவிட்டது. இருந்தும் வெளியில் காட்டாமல் அன்னையுடன் சேர்ந்து டிரெண்டிஸில் சுடிதார் வகைகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே அவளின் அருகில் வந்தான். புருவத்தை தூக்கி “ஹாய் ” என சைகை செய்து விட்டு அலைபேசியில் பேச, தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
பிடித்தவர்களின் சந்தோஷத்திற்குசிறு சிறு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய நினைக்கும் உத்ராவிற்கு, ஒவ்வொரு நொடிப் பொழுதும் தனக்காக மட்டுமே வாழ்பவனான அபி பொருத்தமானவனா?
கீர்த்தி☘️
உத்ராவோட எதிர்பார்ப்புக்கு இந்த அபி ஈடு கொடுக்க மாட்டான் போலயே
கொஞ்சம் கஷ்டம் தான்