Loading

   

    பள்ளிபட்டி கிராமம்.. பார்க்கும் இடமெல்லாம் இயற்கையின் சாயல்.. இயற்கை வளத்திற்கு என்றும் பஞ்சமில்லா ஊர்… ஊரின் பெரிய தலையான பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் சாதாரண பெண்மணி தான் சுந்தரி… கணவர் சிறுவயதிலேயே குடியின் காரணமாய் இறந்துவிட பெண் பிள்ளை அவளுக்காய் அந்த வீட்டில் வேலை செய்து தன் மகளை காத்து வருகிறார்.. சுந்தரியின் மகள் கயல்விழி.. 

 

  பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பதினெட்டு வயதுடைய இளம் மங்கையவள்.. அதற்கு மேல் யாரும் அக்கிராமத்தில் படிக்க வைப்பதில்லை.. காரணம் படித்த பெண்களுக்கு தலைகணம் அதிகம் என்பது அவர்களின் கருத்து.. ஆதலால் யாரும் அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள்.. 

 

படித்து முடித்து சில நாட்களே தங்களுடன் வைத்து இருப்பர்.. அதன் பின் நல்ல வரன் கிடைத்தால் கல்யாணம் செய்து வாழ்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய வயதில் வாழ்கையின் மறுபகுதியான கஷ்ட நஷ்டங்களை பார்க்க வைத்து சிறு வயதிலேயே நிறைய அனுபவங்களை சேகரித்து கொள் என்று விட்டு விடுவர்.. அதில் சுந்தரி மட்டும் விதி விலக்கா என்ன.. அவரும் தன் மகளை அவ்வளவே படிக்க வைத்தார்.. 

 

  தாய் சுந்தரி என்னத்தான் கஷ்டபட்டு வேலை செய்து மகளை காப்பாற்றினால் கூட மகள் எந்த வேலையும் செய்ய அனுமதி செய்ய மாட்டார்.. அவளுக்கும் வாழ்வில் நிறைய சாதிக்கனும் என்று ஆசைகள் கொண்ட சாதாரண பெண்மணி.. அழகு பதுமை.. அவளுக்கு மனதில் பல வருத்தங்கள் இருந்தாலும் அதை என்றும் வெளிக்காட்டா சிரிப்பு பேரழகி.. (என்ன மாதிரி🙈🙈🙈)

 

  படித்து பெரிய பைலட்ஆகி பல பல நாடுகளுக்கு சென்று நிறைய விடயங்களை கற்று தெரிந்து புரிந்து நிறைய மொழிகளை தன் கை வசம் செய்து உலகை ஆள ஆசை கொண்டால் கயல்விழி.. அது மட்டும் இல்லாமல் அவள் தாயையும் பிலைட்டில் வைத்து ஊர் சுற்றி காண்பிக்க விரும்பியவல்.. கைக்கு எட்டாத கனவு என்று தெரிந்தும் மனதில் உறுதி கொண்டால்… இப்படி சில கனவுகளை கொண்டவளின் மனதில் இப்பொழுது ஏதாவது ஒரு டிகிரி முடித்து விட மாட்டோமா மக்களுக்கு நல்வழி செய்து உதவிடும் ஏதாவது ஒரு துறையில் வேலைக்கு சேர்ந்து விட மாட்டோமா என்ற ஏக்கமே மனதில் சூழ்ந்து நின்றது… 

 

அவளும் தன் தாயிடம் எவ்வளவோ மன்றாடி விட்டாள்.. தன்னை படிக்க வைக்குமாறு கெஞ்சி.. ஆனால் அவரோ பிடிவாதமாக மறுத்து விட்டார்.. 

 

” யாரும் படிக்க போகாத போ நீ மட்டும் படிக்கிறேனு சொல்லி கிளம்பி நின்னா என்னடி ஆகும்.. ஊரே நம்மளை தப்பா பேசும்.. இவ பொண்ணு மட்டும் என்ன அதிசயமானு.. அதுவும் அந்த பண்ணையார் அம்மா காதுக்கு போச்சு அம்புட்டு தான்.. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி ஆஞ்சி புடும் ஆஞ்சு..” 

 

” அம்மா என்னமா நீ.. நான் படிக்கனும் எனக்கு ரொம்ப ஆசையா இருக்குமா.. புரிஞ்சுக்கோமா பிளீஸ்.. மா பொண்ணா பொறந்தா வயசுக்கு வந்து கல்யாணம் பண்ணி புள்ளை பெக்குறது குடும்பத்தை பாக்குறது மட்டும் வாழ்க்கை இல்லமா.. அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு.. நீ கேள்வி பட்டு இருக்கியா.. கற்றது கையளவு.. கள்ளாளது உலகளவு.. அந்த மாதிரி நீயோ நானோ நாமோ இங்க தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கும்மா.. ஊரே பத்தியும் அந்த பண்ணையார் பத்தி மட்டும் யோசிக்கிறியே.. என்ன பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறியா..” 

 

” இங்க பாரு கயலு.. அம்மாக்கு தெரிஞ்சது இதோ இப்போ நான் வாழ்றேன் பாரு வாழ்க்கை அது மட்டும் தான் எனக்கு தெரியும்.. எனக்கு இந்த கையளவு ஆகாது கால் அளவு ஆகாது அதெல்லாம் தெரியாது.. தெரிஞ்சிக்கவும் வேணாம்… இப்படி ஒரு விசயத்தை உன் மனசுல இருந்து அழிச்சிடு.. என் புள்ளை ஊரு வாய்க்கு ஆள் ஆகாம கல்யாணம் பண்ணி புள்ள குட்டியோட சந்தோசமா வாழ்ரத நான் கண் குளிர பாக்கனும் அவ்வளவு தான்.. பண்ணையார் வீட்ல சொல்லி இருக்கேன்.. உனக்கு மாப்பிளை பாக்க சொல்லி.. இன்னைக்கு வராங்க.. இந்தா இந்த புடவைய கட்டிக்கிட்டு அழகா ரெடியாகி நில்லு.. அதையும் மீறி ஏதாவது செய்யனும்னு நினைச்ச உன்ன பெத்தவ என்ன உயிரோட பாக்க முடியாது சொல்லிட்டேன்..” என்ற சுந்தரி சேலையை தூக்கி சொருகி வேளையில் இறங்கினார்.. இவளும் அவரை போலவே தன் பங்கிற்கு கத்தி வைத்தால்..

 

” உனக்கு என்ன இப்போ.. நான் படிக்க கூடாது.. வெளி உலகம் பார்த்து நல்லது கெட்டது தெரிஞ்சிக்க கூடாது.. இந்த ஊருல உள்ள பொம்பளைங்க எல்லாம் எப்படி வாழ்க்கை ஓட்டுறிங்களோ அதே மாதிரி நானும் இருக்கனும் அப்படித்தானே.. உன் இஷ்ட படியே நான் இருந்துட்டு போய்டுறேன் சரியா.. என் வாழ்கையை எனக்காக வாழாம மத்தவங்களுக்காக வாழ சொல்றேன்.. செய்றேன் போதுமா.. நீ போய் சந்தோசமா உன் வேலையை பாரு தெய்வமே..” என்றவள் புடவையை தூக்கி தன் அறைக்கு சென்றாள்.. 

 

” ஏய் புள்ள கயலு..” என்ற கூவலுடன் உள்ளே வந்தாள் கயலின் பள்ளி தோழி மலர்.. மலர்கு ஒரு வருடம் முன்பே கல்யாணம் ஆகி இப்பொழுது வைட்றில் ஆறு மாத கருவுடன் தன் தோழியை காண வந்தால்.. 

 

” ஆத்தா மலரு வா வா.. எப்படி இருக்க..” உள்ளே வந்தவளை நலம் விசாரித்தார் சுந்தரி..

 

” நான் நல்லா இருக்கேன் அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க.. இன்னைக்கு தான் ஊர்லேந்து வந்தேன்.. அதான் கயல ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு..” 

 

” சரித்தா.. நீ போய் பாரு.. அப்படியே உன் ஃப்ரெண்ட்கு நாலு புத்தி மதியை எடுத்து சொல்லிட்டு போ.. படிக்கிறேன் பருத்தி ஊனுறேன் என்னமோ பேசுறா.. நீங்களாம் இப்போ கண்ணாலம் கட்டிகிட்டு சந்தோசமா இல்லை.. அதே மாதிரி அவளும் இருப்பானு ஊக்கம் குடுத்துட்டு போ..” 

 

” சரிம்மா.. நான் சொல்லுறேன்.. நீங்க வருத்தபட்டுகாதிங்க..” என்றவள் தோழியை தேடி சென்றால்.. ரூமில் அடைந்து விட்டம் பார்த்து இருந்தவளின் கண்ணில் கண்ணீர் ஊற்றெடுக்க அதை துடைக்க வழி அறியாது இருந்தால் அந்த மீன்விழிகாரி..

 

” கயலு..” தோல் தொட்டு உழுக்கினால் தோழியை.. 

 

” மலரு.. வா.. வா எப்போ வந்த மலரு.. நல்லாருக்கியா..” என்றவள் கண்ணீரை வேகமாக துடைத்தாள்.. 

 

” நான் இப்போதான் புள்ள வந்தேன்.. ஆமா எதுக்கு அழுகுற..” 

 

” நான் எத நினச்சு அழுறேனு உனக்கு தெரியாதா மலரு.. எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு.. ஆசைகள் இருக்கு.. அத இவங்க கொஞ்சம் கூட புரிஞ்சிக்க இல்லை மலரு.. நமக்கு என்ன வயசு மலரு.. அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. நீயாவது கொஞ்சம் சொல்லுடி..” 

 

” கயலு நீ என்ன நினைச்ச… அவ்வளவு சுலபமா உன் கனவு இங்க நிறைவேத்தி வைப்பாங்கன்னா.. அப்டின்னு உன் மனசுல ஒரு எண்ணம் இருந்தா அளிச்சிடு கயலு.. இங்க பசங்க என்னவேனா செய்யலாம் கயலு.. ஆனா அதே இங்க நம்ம செஞ்சா பெரிய குத்தம்.. காரணம் அவங்க ஆம்பளைங்க.. நம்ம பொம்பளைங்க.. அந்த காலத்துல மனுசங்க எப்படி இருந்தான்கனு தெரியல புள்ள.. ஆனா இப்போ உள்ள நம்ம மக்க மனுஷ இந்த விதியை தான் இங்க வச்சிருக்கு.. காலம் காலமாக அத தான் பண்ணுது.. அது மாதிரி இந்த ஊருக்குன்னு ஒரு வழிமுறை.. இந்த ஊருக்குன்னு இல்ல மலரு.. நிறைய இடத்தில நம்மளை போல நிறைய பொண்ணுங்க இருக்கத்தான் செய்றாங்க.. இவ்வளவு தான் படிக்கனும்.. இத தான் செய்யனும்.. இப்படி ஒரு பொம்பளை புள்ளை இருக்க கூடாது.. இதான் பொம்பளை புள்ளைக்கு அழகு.. உங்களால அதெல்லாம் முடியாது.. அதெல்லாம் செய்ய கூடாது.. இதான் இப்படித்தான் பொம்பளை புள்ளைங்களுக்கு தலையெழுத்து கயலு.. அதையும் மீறி நீ எதையாவது செஞ்சிட்டனு வச்சுக்கோ அவ்வளவு தான்.. மண்ண அள்ளி காத்துல தூத்தி விற்றும் கொஞ்சம் கூட யோசிக்காம..” 

 

” இதுக்கு என்னதான் மலரு வழி.. என்ன மாதிரி எத்தனை பொம்பளை புள்ளைங்க கஷ்டபடும்ல.. என்ன மாதிரி நினச்சத சாதிக்க முடியாம..” 

 

” இதுக்கு நல்ல தீர்வு உன் அம்மா சொல்றது தான்.. உனக்கு நல்லது தான் கயல் செய்வாங்க.. நீ பயப்படாம இரு.. அந்த காலத்துல எந்த பொம்பளை படிச்சாங்க சொல்லு.. ஆனா குடும்பத்தை பத்தி கேளு புட்டு புட்டு வைக்கும்.. நாட்ட பத்தி கேளு.. நாடாவது மாடாவது தல்லுடி அங்குட்டுன்னு போவும்.. அவ்வளவு தான் கயல்.. நம்மதான் புரிஞ்சி நடந்துக்கனும்.. நீ வேனா ஒன்னு பண்ணு.. நீ கல்யாணம் பண்ணி உன் புருசன் கிட்ட உன் ஆசையை சொல்லு.. அதுக்கு பிறகு பாப்போம்.. இப்போ கிளம்பு.. அப்புறம் ஆத்தா கவலைப்படும்.. பாவம் அது ஒன்டியா கஷ்டபட்டு உன்ன வளத்து ஆளாக்கிருக்கு.. நீ இப்படி உக்காந்து இருந்தா அது மனசு கஷ்டப்படும்..” என்றவளின் கூற்று என்னோவோ சரியாய் இருந்தாலும் அவள் மனம் தான் அதை ஏற்று கொள்ள மறுத்தது..

 

அதே மனநிலையுடன் கிளம்பி அமர்ந்தாள்.. சிறிது நேரத்தில் பண்ணையார் அம்மாவுடன் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வற அவர்கள் முன் நின்று அனைவருக்கும் வணக்கம் வைத்தால்..  கயலை பார்த்த மாப்பிளை கண்ணனுக்கு அவளை மிகவும் பிடித்து விட அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர்.. 

 

இது நாள் வரை வேலை செய்து சேத்து வைத்திருந்த பணத்தை வைத்து தன் மகளின் திருமணத்தை தனக்கு தெரிந்த சில உறவுகளை அழைத்து தன்னால் முடிந்த வரை வெகு சிறப்பாகவே செய்தார்… 

 

  மணமேடையில் ஐயர் மந்திரங்கள் ஓத அதை கண்ணனும் அவர்க்கு பின்பாட்டு படிக்க சிறிது நேரத்தில் கயல் வந்தால்.. சிகப்பு வண்ண பட்டுத்தி காதில் பெரிய ஜிமுக்கியும் கையில் கண்ணாடி வளையல் குலுங்க கழுத்தில் தங்க நகைகள் மின்ன மீன்விழிகளில் மை இட்டு அழகு பதுமையா நடந்து வந்தவளின் கனவுகள் அனைத்தும் இங்கு இப்பொழுது இந்நொடி காணலாய் போனதாய் உணர்ந்தாள்.. 

 

கயலின் கழுத்தில் கண்ணன் மங்களனான் பூட்ட அனைவரின் ஆசியும் அர்ச்சதை மூலமாய் அவர்களுக்கு கிடைத்தது… பின் நெற்றி வகுட்டில் தான் இன்னொருவன் மனைவி என்று மற்றவர்களுக்கு பறைசாற்றும் வழியில் குங்குமமும் காலில் மெட்டியும் அணிந்து உலகிற்கு தெரியப்படுத்தினர்… 

 

இரவு வேலையும் ஆகியது.. ஆனால் கயலின் மனதில் தான் ஏதோ ஒன்று பிசைந்தது.. இது என்ன உணர்வு என்று அவளுக்கு முழுமையாக உணரும் வயதும் கூட இல்லை.. பெரியவர்கள் ஏதோ சொல்ல மண்டையை மண்டைய ஆட்டிதான் சென்றால்.. பயந்து பயந்து உள்ளே சென்று அவன் முன் நின்றாள்.. பால்செம்பை அவன் கையில் குடுத்து முதலில் காலில் விழுந்து வணங்கியவல் கண்டு மெலிதாய் சிரித்து அவளை தோல் தொட்டு தூக்கினான்.. அவன் தொட்டதில் கயல் அவள் சற்று மிரண்டு தான் போனால்.. ஆனால் வெளியில் காட்டி கொள்ளவில்லை… 

 

” வா கயல் இப்படி உக்காரு..” அவளும் அவன் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.. 

 

” பால் எடுத்துக்கோங்க..” அவனும் பாதி அருந்திவிட்டு மீதியை அவளிடம் தந்தான்.. 

 

” நான் பால் சாப்ட மாட்டேன்..” 

 

” சரி.. ஏதாவது பேசலாமா..” என்றவன் மெல்ல அவளின் கை தொட கயல் விருகென்று இழுத்து கொண்டால் தன் பக்கம்..

 

” நான் அது உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..” 

 

” சொல்லுமா..” 

 

” அது எனக்கு படிக்கனு ஆசை.. ஆனால் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. நீ நீங்க என்ன படிக்க வைப்பிங்களா.. எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு..” தயங்கி தயங்கி அவனிடம் கேட்டு வைத்தால்.. 

 

” மனுசன்னு இருந்தா கனவுகள் ஆசைகள் எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கத்தான் செய்யும்.. தப்பில்லை.. ஆனா நீ இப்போ ஒரு கல்யாணம் ஆன பொண்ணு மா.. உனக்கு இப்போ பொறுப்புகள் அதிகம்.. உனக்கு புரியுதா.. வீட்டிலும் வெளியிலும் உனக்கு நிறைய வேலைகள் இருக்கும்.. ரொம்பவே சோர்ந்து போய்டுவ.. உன்னால ஃப்ரீயா உக்காந்து படிக்க முடியாது.. பின்னாடி வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அங்க நீ உன் பக்கத்து நியாயத்தை பேசுனா கூட பாரு நிறைய படிச்சிருக்கா.. அதான் தலகணம் அதிகமா இருக்கு.. அப்டின்னு என் காது பட பேசுவாங்க.. உன்ன பத்தி யாராவது பேசுனா எனக்கு கோவம் வரும்.. ஏன்னா நீ என் பொண்டாட்டி.. அதுக்கான உரிமை இந்த வீட்ல உனக்கு எப்பவும் இருக்கும்.. இப்போ நமக்கு கல்யாணம் ஆச்சு.. நம்ம வாழ்க்கையோடு அடுத்த கட்டம் இங்க ஆரம்பம் ஆகுது.. அடுத்து நீ பிரக்நெண்ட்..  ஒரு புள்ளைய வைத்துல சுமக்க நீ முழுசா தயார் ஆகனும்.. சரி அப்படியே இதெல்லாம் நான் தள்ளி போட்டு உன்ன படிக்க வச்சேனு வை காலாகாலத்தில் புள்ள பெக்கல இவ ஒரு மலடின்னு ஊர் பேசும்.. இப்படி எவ்வளவோ இருக்கும்மா.. அதுக்கு தான் சொல்றேன்.. ஊர் வாய்க்கு நம்ம விருந்தாகிட வேணாமே.. நீ வேணா நமக்குன்னு ஒரு புள்ளை வந்த பிறகு நான் உன்ன படிக்க வைக்க முயற்சி செய்றேன் சரியா.. அதுவரை இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா எனக்கு நல்ல பொண்டாட்டியா இரு.. இப்போ நம்ம வாழ்கையை தொடங்கலாம்..” என்றவன் அவளின் பேச்சை எதிர்பாராமல் அவளை பட்டென மெத்தையில் சாய்த்து  அவள் மேல் முழுதும் படர்ந்தான்.. அவளின் நெஞ்சு கூடு ஏறி இறங்க பட்டென அங்கு ஒரு முத்தம் வைக்க மெத்தையில் சிலையாகி போனால்..

 

கண்களில் வலியும் கண்ணீருடன் இன்றுடன் தன் கனவுகளுக்கு மூட்டை கட்ட முடிவு செய்தால்.. என்னத்தான் நம் கனவுகளையும் ஆசைகளையும் மூட்டை கட்ட முடிவு செய்தாலும் அது மனதின் ஓரம் என்றும் அழியா நினைவாய் தான் இருக்கும்..

 

இதோ இந்த கயலை போல் இங்கு ஏராளம் பெண்கள்.. தன் மனதின் கனவுகள் ஆசைகள் அனைத்தையும் ஒதுக்கி ஒரு புது வாழ்கையை தங்கள் குடும்பத்துக்காக ஏற்று வாழ தொடங்கினர்… 

 

************

 

இது எனது குட்டிக்கதை.. இந்த சமூகத்தில் நிறைய பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.. என்னை போல் உங்களில் ஒருவரும் இருப்பர்.. படிச்சிட்டு மறக்காம comments பண்ணுங்க.. 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்