ஜில்லென்ற மழை காலத்தின் அழகான விடியல் ஒன்றில் பூத்துக் குலுங்கிய குல்மோஹர் மலர்களை ரசித்தவாறே அந்த குளம்பியை வெகு சிரத்தையுடன் தயாரித்து கொண்டிருந்தான் விஸ்வஜித்.
‘காஃபில சக்கரை கொஞ்சம் கூட போய்டுச்சே…அவளுக்கு பிடிக்காதே! சரி வேற போடுவோம்..” என்றவாறு அவனே அதை குடித்துவிட்டு மற்றொரு கோப்பையில் மீண்டும் முதலிலிருந்து செய்ய ஆரம்பித்துவிட்டான்.
விஷ்வஜித் மயூரா இருவருக்கும் நேற்று காலையில் தான் திருமணம் முடிந்திருந்தது. தன் மனைவிக்கு பிடித்த வகையில் காஃபியை போடும் வேலையில் ஏறக்குறைய பத்தாவது முறையாக இறங்கியிருந்த விஷ்வஜித்தின் கவனத்தை விடாமல் சிதறடித்த அலைபேசி அழைப்பை அவன் ஏற்கவும் அந்த பக்கத்தில் இருந்து அடைமழையாக பொழிந்தது விக்னேஷின் குரல்.
“டேய் அண்ணா! இருடா மிக்சிங் மிஸ்மேட்ச் ஆகிட போகுது! அப்புறம் இந்த பதினோராவது காஃபிய அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பி உன்னையே குடிக்க வச்சிருவேன்…” என்று விஷ்வஜித் கூறவும்,
“ஹாஹா! நல்ல புரமோஷன் டா! ஃப்ரம் ஜேர்னலிஸ்ட் டூ காஃபி மேக்கர்! கலக்குறீங்க மாப்பிள்ளை சார்!” என்றான் அவனுடைய அண்ணனான விக்னேஷ்.
“உங்களுக்கு கான்செப்ட்டே புரியல ப்ரோ! நடுவுல ஹஸ்பண்ட் ரோல்னு ஒன்னு இருக்கு! அதுல நா தான் உங்களுக்கு சீனியர்…என்கிட்ட இருந்து தான் நீங்க இதெல்லாம் கத்துக்கணும்!”
“கத்துக்கிட்டா போச்சு! விஷ்வா…அங்க ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே! மையு என்ன பண்றாங்க?”
“ஓ! ஒரு ப்ராப்ளமும் இல்லையே… என்னோட மகாராணி தூங்கிட்டு இருக்காங்க நா அவங்களுக்காக காஃபி ப்ரிபேர் பண்றேன்! நத்திங் சீரியஸ் ப்ரோ!”
“அப்படியே இருந்தாலும் நீ சொல்ல மாட்டியே ஹாவ் அ குட் டே டா! ஃப்ரீ ஆகிட்டு ஃபோன் பண்ணு…பை!”
என்று விக்னேஷ் அழைப்பை முடித்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டான் விஷ்வஜித்.
மீண்டும் அழைத்த அலைபேசியின் அழைப்பையும் ஏற்றவன், “சொல்லு மச்சான்! என்ன காலையிலே?” என்று கேட்டான்.
அந்த பக்கத்தில் இருந்த அவன் நண்பன், “டேய் நேத்து ஃபர்ஸ்ட் நைட்…” என்று ஆரம்பித்ததுமே,
“டேய் மச்சான் சரியா கேக்கல! நா அப்புறமா உனக்கு கால் பண்றேன்…பை மச்சி!” என்று கூறி தன் நண்பனின் தொடர்பை பாதியிலே கத்தரித்தவன் ‘ஷப்பா நானே இங்க உசுருக்கு போராடிட்டு இருக்கேன்! இவனுங்க வேற…இன்னும் என்னலாம் சொல்லி சமாளிக்கணுமோ?’ என தன் மனதிற்குள்ளே நொந்துக்கொண்டான்.
அடுத்தும் தொடர்ந்து சில நண்பர்கள் அழைத்து அதைப்பற்றியே விதவிதமாக கேட்கவும் அவனும் அவர்களை விதவிதமான பதில்களால் சமாளித்து வைத்தான்.
‘இப்படியா கல்யாணம் ஆகியும் கன்னி பையனா இருக்கிறவன் கிட்ட கேள்வி கேப்பாங்க…கொஞ்சம் கூட மேனர்ஸே இல்ல! ஆண் பாவம் உங்களை எல்லாம் சும்மா விடாதுடா…’ என்று அவன் முணுமுணுத்தது அப்போது தான் அங்கு வந்த மயூராவின் செவிகளுக்கும் நன்றாக கேட்கவும்,
“மிஸ்டர் கன்னியப்பன்! என்னோட ஹேண்ட்பேக் எங்க இருக்குன்னு தெரியல கொஞ்சம் தேடி தாங்களேன்” என்றவளின் குரலில் ஏகத்துக்கும் குறும்பு தவழ்ந்தது.
“ஹே மையூ! லுக்கிங் பியூட்டிஃபுல்…என்ன மார்னிங்கே இவ்வளவு ஃப்ரெஷா…வெளிய அவுட்டிங் போறோமா?”
“எஸ் போறோம்! நா காலையிலே எழுந்து எல்லாம் செய்துட்டேனே…நீங்க யாருக்கு இப்ப காஃபி போடுறீங்க? நீங்க மார்னிங் எதுவும் குடிக்க மாட்டிங்களே! ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”
‘அய்யயோ அப்ப நா இவள சர்ப்ரைஸ் பண்ண ட்ரை பண்ணது எல்லாம் வேஸ்ட்டாப்போச்சா? முன்னாடியே எழுந்துட்டாளா? தனி தனி ரூம்ல இருந்தா எனக்கு எப்படி தெரியும்?’ முணுமுணுத்தவாறே அறைக்கு சென்று அவன் தயாராகி வரவும்,
“காஃபி ரொம்ப சூப்பரா இருந்துச்சு! தேங்க்ஸ் ஜித்து!” என்று சிரித்தவளை ரசனையாக பார்த்தவன் அவளோடு கிளம்பினான்.
காலை முதல் மாலை வரை வெளியில் மகிழ்ச்சியாக கழித்த இருவரும் இரவு வீட்டிற்கு திரும்பும் முன்பு தன்னுடைய பெற்றோரின் இல்லத்திற்கு அவனை அழைத்து சென்றாள் மயூரா. அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ந்த அவள் குடும்பத்தினரிடம்,
“நா இங்க வந்தது என்னால நீங்க இன்னும் அவமான படுறதுக்காகவோ என்னை மறுபடியும் ஏத்துக்கோங்கனு உங்க கிட்ட கெஞ்சுறத்துக்காகவோ இல்ல! இனி நா உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன்னு சொல்லிட்டு போக தான் வந்தேன்!
உங்களுக்கு பிடிக்காத ஜேர்னலிசம் ஃபீல்ட் எடுத்துட்டேனு என் மேல தப்பே இல்லனாலும் சமுதாயத்துக்காகவும் குடும்பப் பாரம்பியத்துக்காகவும் உங்க வாழ்க்கைக்காகவும் எப்ப நீங்க என்னை புரிஞ்சுக்காம விட்டுட்டு போனிங்களோ அப்பவே உங்களை பொறுத்த வரைக்கும் நா செத்துட்டேன்!” என்று கூறியவள்,
“எனக்கு என்னோட வி..விஷ்வா மட்டும் போதும்! நிச்சயமா என் மேல எந்த தப்பும் இல்லனு நா நிரூபிக்க தான் போறேன்! என்னை அசிங்கப்படுத்தின எல்லார் முன்னாடியும் நான் ஜெயிக்க தான் போறேன்…” என்று முடித்தவளின் கண்களில் கண்ணீர் விழியவும் அதை துடைத்து விட்டவன் அவளை அங்கிருந்து அழைத்து வந்துவிட்டான்.
தங்களுடைய வீட்டிற்கு வந்த பின்னும் அங்கு சூழ்ந்திருந்த மயான அமைதியை கலைத்து அவளை இயல்பாகும் வண்ணம் பேச ஆரம்பித்தான் விஷ்வா.
“ஹே! இதுக்காடி நேத்து என்னை விட்டுட்டு தனியா போன?”
“நா எங்க போனேன்?”
“அடி பாவி! நீ தானடி நேத்து எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்னு சொன்ன…கொஞ்ச நாள் தனி தனியா இருக்கலாம்னு…”
“தெரியுதுல அப்புறம் என்ன? நா சொன்னதுக்கு ரீசன் நான் தான்! எப்பயும் நமக்கு நடுவுல வேற யாரையும் கொண்டு வராதீங்க!” என்றவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“யாரு நானா நமக்கு நடவுல மத்தவங்கள கொண்டு வரேன்? உன்னை தவிர எனக்கு வேற எதுவுமே ஞாபகம் இருக்கிறதில்ல! உனக்கு தான் என் நினைப்பே இல்ல…நா உன் ஞாபகத்துல இருக்கேனா இல்லையானு செக் பண்ணலாமா மையு?” என்று லேசான கரகரப்பு நிறைந்த துள்ளல் குரலில் கூறினான்.
“பசங்களாம் கல்யாணமான கொஞ்ச நாள் வரைக்கும் தான் இப்படி பேசுவீங்களாமே! அப்பறம் அப்படியே டோட்டலா மாறிடுவாங்களாம் நீங்களும் அந்த லிஸ்ட் தானே?”
“ஆத்தாடி அப்ப இது எனக்கான டெஸ்ட்டா?”
“அது இப்ப தான் உங்களுக்கு புரியுதா? புது மாப்பிள்ளல அதான் சாருக்கு கொஞ்சம் மூளை குழம்பி போய் இருக்கு போல!”
“உன்னை பத்தி எனக்கு தெரியாதா மையு? நேத்து நா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் இருந்தேன்! என்ன ஒன்னு நீ என் பக்கத்துலயே இருக்கணும்னு ஆசை இருந்தது…வேற எதுவும் இல்ல!”
“என்னோட பிளானை எப்படி கெஸ் செய்து அலர்ட் ஆனிங்க? அவ்ளோ மொக்கையாவா நான் பிளான் பண்ணினேன்…இருக்காதே?” என்று அவள் யோசிக்க துவங்கவும்,
“ரொம்ப யோசிக்காதடி? பெருசா என்ன நினைச்சு இருப்ப…கல்யாணத்துக்கு முன்னாடி நீ என் பின்னாடி சுத்தின மாதிரி இப்ப என்னையும் உன் பின்னால சுத்த வைக்கணும்னு நினைச்சிருப்ப… அதானே?” என்றான் விஷ்வஜித்.
“கரெக்ட்! என்னை எப்படி எல்லாம் அலைய விட்டிங்க மிஸ்டர். கன்னியப்பன்! என்ன நீங்க திரும்பி கூட பார்த்ததில்லல…அதுக்கெல்லாம் நான் உங்களை பழி வாங்க வேண்டாமா..? அதான் இப்படி!”
“ஹாஹா! இதான் நீ என்னை பழி வாங்குற லட்சணமா? உன்னால என்கிட்ட பேசாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது! வாய் மூடாம பேசிக்கிட்டே இது தான் பழிக்கு பழினா எப்படி?”
“ஓ! அப்ப இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகலையா? வேற என்ன பண்ணனும் அதையும் நீங்களே சொல்லுங்க!”
“ஹம்! எனக்கு என்னமோ நம்ப ஹனிமூன் போறது தான் சரியா இருக்கும்னு படுது…” என்று அவன் இழுக்கவும்,
“எதே ஹனிமூனா? இங்க ஒருத்தருக்கு உப்புமாக்கே வழியில்லையாம் ஆனா அவருக்கு கேசரி சாப்படணும்னு ஆசையாம்..!” என்று கூறும் போதே சிரித்து விட்டாள் மயூரா.
“ஹே! ஏன் ஏன் உப்புமாக்கு வழியில்லாதவன் கேசரிக்கு ஆசை பட கூடாதா? அதெல்லாம் ஆசை வைக்கலாம் மேடம் அப்ப தானே எப்பயாவது அது நமக்கு கிடைக்கும்!” என்று அவன் கண்ணடிக்க,
“அணில் மாம்பழத்தை அடைகாத்த கதை மாதிரி தான் ஆக போகுது! மாம்பழம் அழுகிட போகுது பார்த்து…”
“நாங்களாம் அடை காத்துக்கிட்டு மட்டுமே இருக்க மாட்டோம்… அப்ப அப்ப அதை கொஞ்சம் டேஸ்ட்டும் பண்ணுவோம்! அப்ப தான் அது கெட்டுப் போகாம இருக்குமாம்!” என்று சொல்லிக்கொண்டே குனிந்து அவள் கன்னங்களில் ஒரு முத்தம் வைத்தான்.
விஷ்வாவை முறைத்தபடியே, “எதுக்கு இப்ப என்னையே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கீங்க… போய் தூங்குங்க!” என்றாள் மயூரா.
“தூங்க தான் போறேன்..!” என்றவன் அவள் சரி செய்த படுக்கையில் குறுக்கே விழுந்தபடி “இங்க…யே..!” என்றான்.
“நோ! அட்லீஸ்ட் ஒரு வருஷமாவது நம்ப தனி தனி ரூம்ல இருக்கணும்னு நேத்தே நான் சொன்னதா ஞாபகம்!”
“பச்! போடி…என்னால முடியாது! நா ரொம்ப நல்ல பிள்ளை! இதோ நான் இங்கையே இந்த ரூம்லயே இருப்பேன் ஆனா உன்ன டிஸ்டர்ப் மட்டும் பண்ணவே மாட்டேன்..! ஓகேவா?”
“ஒஹ்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்தீங்களே சும்மா..வே…அப்படியா?”
“அது என் லிப்ஸ் தெரியாம உன் கன்னத்தை டச் பண்ணிடுச்சு! வேணும்னா அதை பனிஷ் பண்ணிக்கோயேன்! உன்னோட விஷ் மையு…நா எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்! பட் நா ரொம்ப குட் பாய் தான்…தெரியும்ல…” என்றான் விஷ்வஜித்.
அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று நினைத்தவள் வெளியில் இருந்து வந்த மழை சத்தத்திலும் உள்ளமெங்கும் பரவிய அதன் மணத்திலும் பால்கனிக்கு சென்று அங்கேயே நின்றுவிட்டவளை தொடர்ந்து விஷ்வஜித்தும் அவள் பின்னோடு அங்கு வந்தான்.
“வாவ்! மழை!! மழையோடு சேர்ந்து இந்த வாசம் நல்லா இருக்குல…எனக்கு இது ரொம்ப பிடிக்கும் ஜித்து…”
“என்னது பிடிக்குதா? என் கிட்ட இல்லாதது அப்படி இந்த மழை கிட்ட என்ன இருக்கு? எனக்கு மழை வாசமில்ல இந்த பொண்ணோட வாசம் தானே பிடிக்குது!” என்றவன் அவள் கழுத்துக்கடியில் முகம் புதைக்க,
“நா என்ன சொன்னா நீங்க என்ன சொல்றீங்க?” என்றவள் அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
“எனக்கு இரண்டும் ஒன்னுதான் மையூ! ஐ கேன் ஸ்மெல் தி ரெயின் அட் எவ்ரி மொமென்ட்…வென் யூ ஆர் வித் மீ!”
“நிஜமாவா ஜித்…து!”
தன் கைவளைவில் நின்றிருந்தவளை இன்னும் நெருக்கமாக தன்னோடு சேர்த்தணைத்து இறுக்கிய விஷ்வஜித்,
“நிஜமா மையூ! மழை வந்ததும் வருமே ஒரு வாசம் அதை நீ என் பக்கத்துல இருக்கற ஒவ்வொரு நொடியும் நா உணருவேன்! நீ என்னை விட்டு தள்ளி போன நாட்கள்ல தான் அது எனக்கே புரிஞ்சுது! ஐ ஃபீல்ட் த வார்ம்னெஸ் வென் யூ ஆர் வித் மீ!” என்று கூறவும்,
“மழை நீர் ரொம்ப புனிதமானது… நீ…நீங்க அத்தோட என்ன…வேணாமே ஜித்து ப்ளீஸ்!” என்றாள் மயூரா உள்ளே சென்ற குரலில்.
அதில் கோபமுற்றவன், “நா உண்மைய தானடி சொல்லுறேன்…எனக்கு என்ன ஃபீல் ஆகுதோ அதை தான நா சொல்ல முடியும்!” என்று கூறி விட்டு அவளை விட்டு விலகியவன் அவள் முகத்தை தாங்கிப்பிடித்து அவள் கண்களோடு தன் கண்களை அவன் கலக்கவிடவும் அவள் தன் தலையை அகற்றி கீழே குனிந்து கொண்டாள்.
“பச்! என்னை நிமிர்ந்து பாரு மையூ… என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு…பொய் சொல்லுறவன் மாதிரியா? நீ பெரிய பேங்க் மேனேஜர் உனக்கு ஐஸ் வச்சு நான் லோன் வாங்கி ஸ்டார்ட் பண்ண போற பிசினஸ்ல அம்பானிக்கு டஃப் கொடுக்க போறேன்…போடிங்க லூசே!”
அவன் எதையோ தீவிரமாக கூறப்போவதாக நினைத்து அவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கூறியதை கேட்டு திறுதிறுவென முழித்தாள்.
அவள் கண்களில் ஆசையாக இதழொற்றி நிமிர்ந்தவன், “என்னடா?” என்றதும்,
“ம்ம்! என்னை நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று அவள் ஆரம்பிக்கும் போதே ‘பச்!’ என்று சலித்துக் கொண்டவனை பார்த்தவள்,
*உங்களுக்கு என்னை பிடிக்காது விஷ்வா! எதுக்காக என்னை கல்யாணம் செய்திங்க? என்ன தான் நா வெளிய சிரிச்சு பேசினாலும் மனசு திரும்ப அங்கயே போய் நிக்குது! எனக்கு என்ன பண்றதுனே தெரியல…” என்று முடித்தாள்.
“உனக்கு இப்ப என்னடி வேணும்? அந்த நாய் பண்ணத மறந்துரு மறந்துருனு எத்தன தடவ சொல்றேன் அதை கேட்காம என்னை அவாய்ட் பண்ணிட்டு இருக்க…சரினு நானும் உன் மனசறிஞ்சு அமைதியா இருந்தா
ஓவரா பேசிட்டே போற! என்னடி? நா உன்ன லவ் பண்றேன்னு சொன்னது ஒரு குத்தமா?
நீ என் பின்னாடி மூணு வருஷமா சுத்துன அப்பலாம் வராத லவ் எனக்கு இப்ப தான் வந்து தொலைச்சிருக்கு! நமக்கு கல்யாணமே முடிஞ்சிருச்சு…ஆனாலும் இன்னும் நீ என்னையும் என்னோட லவ்வையும் நம்பல…அப்படி தானே!”
“இல்ல இல்ல விஷ்வா? நா…நா வந்து என்னை தான்…” என்று அவன் மேல் சாய்ந்து அழுதவள், “நா உங்களுக்கு பொருத்தமானவ கிடையாது! எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு…” என்றதும், அவளை உதறிவிட்டு அவனுடைய அறைக்கு சென்றவன் அவனுக்கு தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டு அந்த அறையை பூட்டி விட்டு அவள் அறைக்கு வந்ததும் அந்த அறையையும் மூடிவிட்டு கோபத்தில் சாவியை எங்கோ தூக்கி எறிந்தான்.
“நா இந்த ரூம்ல தான் இருப்பேன்…நீயும் என் கூட தான் இருக்கணும்…என்கிட்ட திரும்ப திரும்ப அதையே பேச நினைச்ச நா மனுஷனா இருக்க மாட்டேன்! திஸ் இஸ் தி லிமிட் மையூ! என்னோட வைஃப்ப பத்தி இனி நீ எதுவும் பேச வேண்டாம்! குட் நைட்…சீக்கிரமா வந்து படு!” என்றவன் கண்மூடி படுத்துவிட்டான்.
விஷ்வஜித் மயூரா இருவரும் ஒரே அலுவலகத்தை சேர்ந்த இரு வேறு பிரிவுகளில் பணிபுரியும் பத்திரிக்கை துறை நிபுணர்கள். மயூராவுக்கு விஷ்வாவை பார்த்ததில் இருந்தே அவன் மீது காதல்! அவள் காதலை விஷ்வா மறுப்பதும் அவள் மீண்டும் அவனிடம் காதலை உரைப்பதும் என்றிருந்த போதிலும் இருவரும் அவரவர் வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தங்கள் துறையில் அவர்கள் பெயர் தெரியுமளவிற்கு வெகு பிரபலமும் ஆகி இருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு அதே அலுவலகத்தில் மயூராவின் மேல் வஞ்சம் வளர்த்து வந்த ஒருவன் திட்டம் போட்டு மயூராவை தவறான முறையில் புகைப்படம் எடுத்து அவனோடு அவள் தகாத முறையில் இருக்குமாறு அதை வடிவமைத்து வெளியிட்டும் விட்டான். அவள் மீது விழுந்திருந்த அந்த கரையை அவள் துடைக்கும் முன்பே அவள் வாழ்வில் நிறைய துன்பங்களை அவள் சந்திக்க நேர்ந்துவிட்டது. இந்நிலையில் தான் மயூராவே விலகி சென்றாலும் விடாது அவளை வற்புறுத்தி மணந்து கொண்டான் விஷ்வஜித்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் பால்கனியில் நின்றபடி மழையில் நனைந்து கொண்டிருந்தவளை இழுத்து வந்தவன் தன் அருகிலேயே அவளை அமர்த்தி,
“அறிவே இல்லையாடி உனக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னமோ… எல்லார் முன்னாடியும் எனக்கு என் விஷ்வா போதும்னு சொல்லிட்டு வந்த…இப்ப என்னை விரட்டி விடாத கொறையா தொரத்துற…இது தான் நீ என்னை லவ் பண்ணற லட்சணமா?”
“…….”
“என்ன? ‘நா உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியுமா? என்னை விடவும் எங்க அப்பா அம்மாவ விடவும் இவ்வளவு ஏன் இந்த உலகத்துலேயே உன்ன தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு எல்லாம் டயலாக் சொல்லணுமா?”
“…….”
“என்ன முழிக்கிற சொல்லு! நீ என்னை லவ் பண்ணதா சொல்றியே இப்ப எங்கடி போச்சு அந்த லவ்? என் பின்னாடி மூணு வருஷமா சுத்தனியே அது தான் உன் லவ்வா? நீ என்னை லவ் பண்ணல… உன் பிடிவாதத்தை தான் லவ் பண்ணி இருக்க…நா வேண்டாம்னு விலகி போக போக உன் பிடிவாதம் அதிகமானதுல தான் என் பின்னாடி சுத்தி இருக்க…”
“…….”
“லவ்னா என்னனு தெரியுமா? ஆஃப்டர் மேரேஜ் நம்ம லைஃப் பார்ட்னருக்கு எவ்வளவு சப்போர்ட் பண்றோம்! அவங்க மிஸ்டேக்ஸ் அவங்க சொதப்பலுனு எல்லாத்தையும் டோலரேட் பண்ணி அவங்களோட கனவுகளுக்கும் நம்மோட கனவுகளுக்கும் எந்த அளவுக்கு உயிர் கொடுக்கறோம்னுன்றது தான் உண்மையான லவ்! இதெல்லாம் நமக்கு மேரேஜான பின்னாடி தான் உன்னாலையோ என்னாலையோ காட்ட முடியும்! அப்புறம் எதை லவ்வுனு சொல்ல சொல்லுற?”
“…….”
“உன் கிட்ட இருந்து நா இதை நிஜமாவே எதிர்பார்க்கல மையூ! அந்த நாய் பண்ணது தெரியும் போதே உன் செருப்ப கழட்டி நீ அவனை அடிச்சிருக்கணும்! சரி அப்ப நீ எமோஷனலி வீக்கா இருந்த… இன்னைக்கு…நீ உங்க அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போனதுக்கு பதிலா அந்த நாய் முன்னாடி அவன் பண்ணது உன்ன எந்த விதத்திலும் அஃபெக்ட் பண்ணலனு காட்டுவனு தான் நா ரொம்ப எதிர்பார்த்தேன்… உன்னை நம்பாதவங்க முன்னாடி நிமிர்ந்து நிக்கணும் உன்னை அழிக்க நினைச்சவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும் மையூ!”
“…….”
“உன்னோட கட்டுரைகள் எத்தன பேரோட லைஃப மாத்தி இருக்குனு தெரியுமா? எல்லாருக்கும் முன்னுதாரணமா நின்ன நீயே இப்படியெல்லாம் பேசவனு நா நினைக்கல! ரொம்ப டவுனாகி இருந்த உன்னை பார்க்கும் போது தான் எனக்கு நீ தான் என்னோட லைஃப்னு புரிஞ்சுது உனக்கு நா எப்பையுமே உறுதுணையா இருக்கணும்னு தோணுச்சு…அதான் உடனே இந்த கல்யாண அரேஞ்ச்மெண்ட்ஸ்!”
“…….”
“என்னால அந்த நாய அடிக்கவும் முடியும் என் பொண்டாட்டிக்காக அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கும் போக முடியும்! ஆனா நா ஏன் அதை பண்ணனும்…சொல்லு! நா உனக்கு யாரு மையூ! நீ பண்ண வேண்டியத நா பண்ணி என் பொண்டாட்டிக்கு நா இருக்கேன் நா இருக்கேன்னு உன்னை வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சு அழகு பார்க்கறேன்னு உன்னை கோழையாக்கவா நா வேணும் உனக்கு?”
“……….”
“உண்மைய சொல்றேன் மையூ! நேத்து வர நா உன்னை லவ் பண்ணனானு எனக்கு தெரியல…பட்! நேத்துல இருந்து ஒவ்வொரு நொடியும் உன் மேலான என்னோட காதல் அதிகமாயிட்டே இருக்கு! நீ சிரிக்கிறது பிடிக்கும்! நீ பேசுறதும் நா பார்க்காத நேரம் நீ என்னையே பாக்குறதும் இவ்வளவு ஏன் நீ என்னை அவாய்ட் பண்றது கூட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு! உன்னோட ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு பிடிச்சிருக்கு டி! நவ் ஐ லவ் டு பி யுவர்ஸ்! தெரியுமா?”
“……….”
“இப்படி எல்லாம் பேசுவேன்னு நானும் நினைச்சது கூட இல்ல! பட் டிரஸ்ட் மீ… உன் கூட இருக்கற ஒவ்வொரு நொடியும் என்னோட லைஃபையே அழகா மாத்துது! உன்கிட்ட இன்னும் என்னென்னமோ எல்லாம் எதிர் பார்க்குது! எப்ப அது கரைய ஒடைச்சுக்கிட்டு வரும்னு தெரியல…ஏதோ சொல்ல தோணுச்சு சொல்லிட்டேன்! தப்பா இருந்தா சாரி…இதுக்கு மேலயும் நா உன்ன லவ் பண்ணல…ஏதோ பாவம் பார்த்து தான் இவன் நம்ம கல்யாணம் பண்ணி இருக்கான்னு நீ நினைச்சா… அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது! டேப்லெட் போட்டுட்டு தூங்கு… நாளைக்கு நா ஆஃபிஸ் போகணும்!”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அருகில் படுத்திருந்தவனின் வலது கையில் சுரண்டியதில் பெயருக்கு கண்மூடி படுத்திருந்தவன் உடனே எழுந்து ‘என்ன?’ என்று கண்களால் செய்கை செய்யவும், “நா..நா உங்கள ஹக் பண்ணிக்கலாமா?” என்று கேட்பதற்குள் தட்டுத்தடுமாறி விட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பெர்மிஷன் கேக்கணும்னு அவசியம் இருக்கா என்ன? நா உன்னோட ஹஸ்பண்ட் மையு! ஐ ஆம் ஆல்வேஸ் அட் யுவர் சர்விஸ்!” என்று சிரித்தபடி அவளை தனக்கு அருகில் இழுத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.
“எல்லாரும் ஏன்பா உங்கள மாதிரி இல்ல? என்னை அசிங்கமா பேசி…எங்க வீட்ல கூட என்னை யாருமே…புரிஞ்சிக்கல! நீங்க மட்டும்…”
“ஹே மையு! இது ஒரு விஷயமே இல்ல…கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியாகி இருந்தா நா எப்படி எடுத்துப்பேனோ அதே மாதிரி தான இப்பவும்! உனக்கு தெரியுமேடா பொண்ணுங்களுக்கு எவ்வளவோ பிராப்ளம்ஸ் நடக்குது…சொந்த வீட்ல, புகுந்த வீட்ல, ரோட்ல, வொர்க் ப்ளேஸ், இன்ஸ்டிட்யூஷன்ஸ்னு எங்கயுமே அவங்களுக்கு சேஃப் கிடையாது..!”
“ஹம்! ஆனாலும் நா எந்த தப்பும் பண்ணலையே ஜித்… ஏன் எல்லாரும் என்னை வெறுக்கனும்! அந்த…அந்த ஃபோட்டோஸ் எனக்கே தெரியாம அவ..அவன் எடுத்தது… என்..என்ன அப்படி…நோ என்னால அத மறக்க முடியல! மறக்கணும்னு நினைச்சாலும் சுத்தி இருக்கிறவங்க விட மாட்டாங்க போல…” என்று அவள் விசும்ப,
“சுத்தி இருக்கறவங்களுக்காக நீ வாழல உனக்காக வாழுற எனக்காக வாழுற மையு! நீ ஒரு ரிப்போர்ட்டர்! இந்த விஷயம் மத்தவங்களுக்கு நடந்திருந்தா அதுக்கு நீ என்ன செய்து அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இருப்பியோ அத தான நியாயமா பண்ணனும்…அதை விட்டுட்டு மூணு மாசமா இப்படி வீட்டுக்குள்ள அடைஞ்சி இருக்கிறது நல்லா இருக்கா!..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அவன் மார்பிலே தூங்கி வழிவதை கவனித்தவன்,
‘தூங்கிட்டா! என் தூக்கத்தை கெடுத்து பொலம்ப விட்டுட்டு அவளுக்கான இடம் கிடைச்சதும் நிம்மதியா துாங்கிட்டா… நா வேற ரொம்ப தான் ஓவரா பேசிட்டேனோ? சரி பேசுவோம் காசா? பணமா? நாளைக்கு ஏதாவது மாற்றம் தெரிஞ்சா நல்லா இருக்கும்!’ என்று மனதிற்குள் நினைத்தவாறே அவளை படுக்கையில் விட்டவன் அவள் பக்கம் சாய்ந்து அவள் மூக்கை கிள்ளி விட்டவாறே,
‘முன்னலாம் மூக்கு மேல கோவம் வரும்! ஆனா இப்ப எதுக்கு எடுத்தாலும் அழற? நீ இப்படி இருக்காதடி நல்லாவே இல்ல! நீ இப்படி எனக்கான வேலைகளை செஞ்சிக்கிட்டு வீட்டுக்குள்ளயே இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல! எனக்கு என்னோட மையு தான் வேணும். நீயே உன்னோட தடைகளை ஒடைச்சுட்டு வெளிய வந்தா தான் எனக்கு ஹாப்பி! லவ் யூ மை க்யூட் பொண்டாட்டி! ப்ளீஸ் ப்ளீஸ் மையு என்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காத?’ என்று அவளை கொஞ்சியவாறு அவனும் தூங்கிப் போனான்.
அடுத்த நாள் காலையில் அலுவலகத்துக்கு செல்வதற்காக விஷ்வஜித் கிளம்பி வரவும் நேற்று போலவே அவனுக்காக உணவு மேஜையில் தயாராக இருந்தது. அதில் கோபமுற்றவன் அவளை தேடவும் அவனுடைய அறையில் நேற்று போலவே புடவை அணிந்து தயாராகி இருந்தாள் மயூரா.
‘ஹம்! நோ சேஞ்ஜஸ்! மவனே எல்லாம் உன்னால டா…ஜெயிலுக்கு போய் நாலு மிதி மிதிக்கனும் அவன..’ என்று வெறுப்பாக முணுமுணுத்தவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே, “நா போயிட்டு வரேன்டா…” என்று கூறி விட்டு கிளம்பிவிட்டான்.
“ஹே! ஜித்து…இருங்க ஒரு நிமிஷம்!” என்றவளின் சொற்கள் கோபத்தில் விடுக்கென அங்கிருந்து சென்று விட்டவனின் செவியை எட்டியதாகவே தெரியவில்லை!
தன் காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வந்தவனை வழி மறைத்தபடி வந்து நின்றவளையும் அவள் கைகளில் இருந்த மதிய உணவுகளையும் கண்டதும் முணுக்கென்று வந்த கோபத்தில்,
“நா உன்னை கேட்டேனா? போடி! போய் சாப்ட்டு சாப்ட்டு தூங்கு…நைட் அழ தெம்பு வேணும்ல! போங்க மேடம் வீட்டை க்ளீன் பண்ணிட்டு என்னோட டிரெஸ்ஸை வாஷ் பண்ணி வைங்க வீட்ல சும்மா தான இருக்கீங்க?” என்றவனின் கேலி பேச்சை கேட்டபடியே காரை திறந்து அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவளை அவன் குழம்பி போய் பார்க்கவும்,
“ஹலோ! ஏதோ போனா போகுது நம்ப புருஷன் தானேனு சமைச்சுக் கொடுத்தா…மொத்த வேலையும் என்னையே செய்ய சொல்றீங்க… ஹுஹம் நானும் இன்னைக்கு ஆஃபீஸ் போறேன் தெரியுமில்ல!” என்று கெத்தாக கூறியவள் தன்னுடைய பொருட்களை சரி பார்க்கவும் அவன் அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து டாஷ் ஃபோர்டில் கையூன்றி அதில் தன் தலையை சாய்த்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்ன?’ என்று கேட்டு தலையசைத்தவளை அவன் மேலிருந்து கீழாக பார்த்து சிரிக்கவும், “என்னனு சொல்லிட்டு சிரிங்க!” என்று கேட்டவளின் காதுக்கு அருகில் சென்று, “புடவை கட்டிக்கிட்டு இந்த ஃபுல் மேக் அப்போட நீ ஆஃபிஸ் வர போறியா…இதை நான் நம்பணும்…ஹம்?” என்று முனங்கினான் சின்ன முறுவலுடன்.
“ஏன் இந்த ட்ரெஸுக்கு என்ன கொறைச்சல்! ஐ ஃபெல்ட் மோர் கம்ஃபோர்ட் இன் சேரி” என்றவளுக்கு பதில் கூறாமல் அமைதியாக வந்தவன் அவர்களுடைய அலுவலகம் வந்ததும் இறங்க போனவளை இழுத்து தன்னோடு அணைத்தபடி,
“ஆல் தி பெஸ்ட் மையூ! யாராவது ஏதாவது சொன்னாலும் டோண்ட் டேக் இட் ஆஸ் சீரியஸ்! நீ எப்பயும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும் என்னோட மையூ குட் கேர்ள்!” என்றவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கி, “ஐ லவ் யூ மையூ!” என்றான்.
“ஹோய்! மிஸ்டர் ரோமியோ! ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க…வீட்டுக்கு வந்ததும் எல்லா வேலையும் நீங்க தான் செய்யணும்! அதுக்கு தயாரா வந்து சேருங்க…பை ஜித்து!”
“……..”
“அண்ட் ஒன் மோர் திங்! மழைக்கு வாசமே கிடையாது அது மண்ணோடு சேரும் போது தான் வாசம் வரும்! அப்ப அது மண்ணோட மணமா? இல்ல மழையோட மணமா? மண்ணோடு சேர்ந்தா தானே அது மழை! அதே மாதிரி உங்க கிட்ட வந்து சேர்ந்ததால தான் நானும் வாசமா இருக்கேன் போல!” என்றவளையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தவனின் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“இனிமே நீங்க என்னை லவ் பண்றீங்களா இல்லையானு நா கேட்க மாட்டேன்! ப்காஸ் ஐ நீட் யூ ஃபார் மை ஹோல் லைஃப்! நீங்க மட்டும் என்னை முன்னாடி மாதிரி கண்டுக்காம இருந்திங்க கேட்டுட்டு எல்லாம் இருக்க மாட்டேன் மண்டையில இரண்டு கொட்டு கொட்டிட்டு போய்ட்டே இருப்பேன்! பீ கேர்லெஸ்!” என்று சிரித்தபடி இறங்கி சென்றவளை கண்டு, “மை மையூ இஸ் பேக்!” என்று கூறிவிட்டு அழகான புன்னகை ஒன்றை உதிர்த்தான் விஸ்வஜித்.
நன்றி!
உன்னை நம்பாதவங்க முன்னாடி
நீ,,நிமிர்ந்து நிற்கணும்,
உன்னை ,அழிச்சவங்க ,முன்னாடி
நீ வாழ்ந்து ,காட்டணும்,,,
அருமையான,,வரிகள், இருவரின்.சண்டையும்””ஊடலும்
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா❤️❤️உங்கள் ஊக்கதிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அக்கா❤️😊
அழகான காதல் 🥰 அருமையான கதை, ஷார்ட் அண்ட் ஸ்வீட் ப்ரசண்ட்டேஷன்!! ❤வாழ்த்துக்கள் பேபி 💥✨
Wow❤️மிக்க நன்றி டா பேபி ❤️🔥ஷார்ட் அண்ட் ஸ்வீட்… ஹாஹா சோ ஹாப்பி💚💚
😍😍😍
ஆஹா மழை மண்ணோட சேரும் போது தான் வாசனை வரும் இத நான் யோசிச்சே பாத்ததில்லை😂அழகா அதையே concept ah எடுத்து கதையாவே சொல்லிட்டிங்க great uh😍❤
மிக்க நன்றி டா பேபி❤️❤️🔥🔥ஆமாம் ஆமாம் அதையே ஒரு கான்செப்ட் ஆகிடுச்சு😍😍 தாங்க்ஸ் பேபி❤️❤️
அருமையாக இருந்தது சிறுகதை வாசிப்பதற்கு
காதலித்த பெண் மூன்று வருடமாக பின்னே சுற்றிய போது வராத காதல், அவளது விலகலில் உதிர்த்திருப்பது மட்டுமின்றி அவளை வலிமை பொருந்தியவளாக மாற்றவும் செய்திருக்கிறது…
சூப்பர் மா… மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
மிக்க நன்றி அக்கா😍😍❤️❤️🔥🔥ரொம்பவும் நன்றி அக்கா தவறுகளை சரி செய்ய முயற்சி செய்கிறேன் அக்கா💜💜💚💚மிக்க நன்றி அக்கா💞💞❤️❤️
😍😍😍💞💞💞அபி செம்ம டா 👌👌👌👍🏻👍🏻👍🏻… நல்ல கருத்துடன் லவ் ரொமான்ஸ் எல்லாம் கலந்து சூப்பரா இருக்கு .. Keep rocking 💞💞💞💞
அக்கா😍😍😍ரொம்ப ரொம்ப நன்றி அக்கா❤️❤️🔥🔥ரொம்ப சந்தோஷம் அக்கா… Thanks akka❤️❤️💯💯
கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
மிக்க நன்றி அக்கா❤️❤️😍😍உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா❤️❤️
மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Hey❤️😍Unexpected… Thankyou so much d❤️❤️🔥🔥Always Love you❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Romba nalla irukkuda abi maa , super super
Akkkaav❤️😍Thankyou so much Akkaa❤️❤️🔥🔥ethir parkave illa… Thankyou Akka… Miss you kaa💞💞💯💯
விஷ்வஜித் மயூராவை பழைய நிலைக்கு மீட்டெடுத்தது அருமை.. பெண்களை பழிதீர்க்க ஆண்கள் இப்படிச் செய்வதுதான் வலியின் உச்சம்..அவன்தான் அப்படி செய்தான்னா அதை பத்தி நம்மை சுற்றி இருக்கிறவங்க பேசறது அதைவிட கொடுமையான விஷயம்..மழை மண்ணோடு சேர்ந்தாதான் நறுமணம்🥰🥰🥰👍..அழகான படைப்பு.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
ரொம்பவும் நன்றி அக்கா😍❤️மழையும் மண்ணும் சேர்ந்திருப்பதை போல நாமும் சேர்ந்திருப்போம்🙈😜ஹீரோ ஹீரோயின் dialogue தான் பயந்துறாதிங்க🙈😜Yh I don’t want to interpret the bad of someone… We just want to show the strength of the girl with her man😍❤️ Suma pogira pokkula thooninathu than… Thankyou so much for your comment Sis💚💚