Loading

த்மாவை பரிசோதித்தவள் ராஜனை பார்த்து, “டார்லிங் எப்போ சாப்ட்டாங்க அங்கிள்?” என்றாள் சற்று கோபமாய்.

இன்னிக்கு விரதம்னு பச்ச தண்ணி கூடக் குடிக்காம இருந்தா மா மலர், எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டேனுட்டா. அப்படியே கோயம்பத்தூர்ல இருந்து இவ்ளோ தூரம் டிராவல் பண்ணதுல ஏற்கெனவே கொஞ்சம் அசதியா இருந்தாஎன்க,

அவங்கள யாரு இந்த விரதம்லாம் இருக்கச் சொன்னது, நீங்களாவது இதப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல அங்கிள்என்றவள், “டார்லிங்என அவர் கன்னம் தட்டினாள்.

ஃபிளவர் அம்மாவுக்கு…” என அவள் அருகே வந்தவன், அவளின் தீப் பார்வையில் அதற்குமேல் பேசாமல் அமைதியாக ஒதுங்கி நின்றான். தன் அன்னையிடம் தண்ணீர் எடுத்து வரச் சொல்லியவள் அதனை பத்மாவிற்கு கொடுக்க, கண்களைத் திறக்கச் சிரமப்பட்டவாறே கண் இமைகளைத் திறந்தார்.

டார்லிங்என்றவள், அவர் கரம்பற்றி எழுந்து அமர உதவியவள், தலையணையை கட்டிலின் ஓரம் சாய்த்து வைத்து அவரை அதில் சாய்ந்தமர வைத்தாள்.

அவரின் முக வாடல் அவளுக்கு வருத்தமளித்தாலும், “உடம்பு முடியாம இருக்கும்போது இந்த விரதமெல்லாம் தேவையா டார்லிங், தண்ணி கூடக் குடிக்காம அப்படி என்னத்த விரதம் இருந்து சாதிக்கப் போறீங்கஎனக் கடிந்துக் கொண்டாள்.

விரதம் இருந்ததுக்கு பலனே இல்லாம போயிருச்சுஎன அவர் முனக, “டார்லிங்என அவர் தோளை உலுக்கினாள் மலர்விழி.

அவளைப் பார்க்க, “இனி விரதம் அது இதுனு சொல்லிட்டு சாப்பிடாம இருந்தீங்க அவ்ளோ தான். அப்புறம் ஜென்மத்துக்கும் உங்க கூட பேசமாட்டேன், எனக்கு முதல்ல உங்க ஹெல்த் தான் முக்கியம்என்க, அவளை அணைத்துக் கொண்டார் பத்மா.

பொக்கிஷப் பேழை தன் கையை விட்டு நழுவியதை உணர்ந்தவருக்கு கண்களில் ஓரம் நீர் அரும்பியது. “ப்ச், டார்லிங் என்ன இது! சின்னப் புள்ளயாட்டம்என அவர் கண்ணீர் துளிகளைத் துடைத்து விட்டவள், “ஸ்மைல் ப்ளீஸ்என்க, இதழ்கள் சற்றே விரிந்தன.

அவர்களுக்குள் உள்ள பிணைப்பைப் பார்த்த குணவதிக்கும் பாரிவேந்தனுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஐந்து வருடம் தான் கோவையில் இருந்தாள். ஆனால் ஆண்டாண்டு காலமாய் தொடரும் பந்தம் போல் இருந்தது அவர்களின் உறவும் பிணைப்பும்.

சொல்றவங்க சொன்னா தான் கேட்பியா பத்து! எத்தனை நாள் தலைகீழா நின்னு தண்ணி குடிக்காத குறையா உன்கிட்ட நான் கெஞ்சி இருக்கேன், ஏற்கெனவே உனக்கு உடம்பு சரியில்லை, இதுல இந்த விரதம்லாம் வேணுமான்னு. இப்போ மலர் சொல்றதுக்கு அடுத்த வார்த்தை பேசாம தலை ஆட்டறஎனக் கூறினாலும் அவரின் முகமும் சற்று மலர்ந்தே இருந்தது.

ஆனால் தன் மனைவி எதற்காக விரதம் இருந்தாள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தபடியால், இனி அந்த விரதத்திற்கு பயனில்லை என்று ஆன பிறகு அவள் அதைத் தொடர மாட்டாள் என்பதையும் உணர்ந்திருந்தார். ஆனால் அவரின் ஆழ்மன ஆசைகள் அவரை எந்தளவு இனி வரும் சூழ்நிலைகள் காயப்படுத்தும் என்பதை உணர்ந்திருந்ததால் நடக்கும் அனைத்தையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கும் பொம்மையாய் மாறிப் போனார்.

தன் மகளின் கண்ணசைவின் அர்த்தம் புரிந்துக் கொண்ட குணவதி, ஒரு தட்டில் உணவுடன் அங்கு வர, அதனை வாங்கிய மலர் பத்மாவிற்கு ஊட்டி விடச் சென்றாள். அவர் தட்டை வாங்க முயல, அதனைத் தடுத்தவள் தானே ஊட்டி விட ஆரம்பித்தாள்.

கடந்த ஐந்தாண்டுகளாக அவளின் அன்னையை பார்க்காமல் இருந்த சோகத்தைப் போக்கியவர் பத்மா தான். தாய்க்கு தாயாய், தோள் கொடுக்கும் தோழியாய் தான் அந்த உறவு நீண்டிருந்தது. அது காலம் முழுக்க, அந்தப் பந்தம் வேண்டும் என்றுதான் பத்மா விரும்பி இருந்தார். ஆனால் காலம் அதன் போக்கில் அவர்களை அலைக்கழிக்க ஆரம்பித்தது தன் விதியின் மூலம்.

உணவு உண்ட பின், அனைவரும் நடுகூடத்தில் அமர்ந்திருக்க, மலரும் பத்மாவும் அங்கு வந்தனர். வந்ததிலிருந்து ஹரிஹரன் அமைதியின் சொரூபமாய் தான் இருந்தான்.

அதற்குள் சுந்தரபாண்டியனுக்கும் ஹரிஹரனின் பெற்றோர் வந்திருப்பது தெரிந்து, தன் சம்பந்தியை பார்க்க அங்கு வந்திருந்தார்.

அவர் உள்ளே வந்தவுடன், “வணக்கங்கஎன்க, அவரின் முக ஜாடையை கண்டவர்கள், அவர் மலர்விழியின் தந்தை எனப் புரிந்து கொண்டு, “வணக்கங்கஎன்றார் ராஜன்.

முறைப்படி நாங்களே உங்கள வந்து அழைச்சுருக்கணும், ஆனா எதிர்பாராத விதமா இங்க எல்லாம் நடந்துப் போச்சு. தப்பா எடுத்துக்காதீங்கஎன்றார் சுந்தரபாண்டியன்.

மலர் ஃபோன் பண்ணி இங்க நடந்தத எல்லாம் சொன்னா சம்பந்தி, எங்க வீட்டு பொண்ணு மாதிரி தான் நாங்க மலர நினைச்சுக்கிட்டு இருக்கோம். இப்போ, அவளோட தங்கச்சியே எங்க வீட்டு மருமகளா வர்றதால எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லங்க. என்ன, என் மகன் கொஞ்சம் அவசரப்பட்டு இருக்க வேண்டாம்னு தான் மனசு அடிச்சுக்கிச்சு. இருக்கிறது ஒரே பையன், அவன் கல்யாணத்த கண்ணால பார்க்க முடியலையேங்கிற வருத்தம் தான்என ராஜன் பெருந்தன்மையாகக் கூற, சுந்தரபாண்டியனுக்கு மனம் லேசானது.

அவர் அரசியலில் உள்ளவர் என்பதையும் தாண்டி, நகர்புற வாசி, செல்வாக்கானவர்கள் என்பதெல்லாம் அவருக்கும் சற்று கிலியை உண்டாக்கி இருந்தது. எங்கே தன் மகளை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற பயம் இருக்கத் தான் செய்தது.

ஆனால் முதலில் ராஜனுக்குமே இந்தத் திருமண செய்தியைக் கேட்டு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை தான். காரணம், தன் மனைவியின் ஆசை ஒருபுறம். அதனையும் தாண்டிப் பெண்மகவு இல்லாத தன் வீட்டிற்கு வரும் மருமகளை குறித்த எதிர்பார்ப்பு. ஏனோ அவரின் மனைவியைப் போலவே மலர்விழியை தான் அவரின் மனமும் தங்கள் வீட்டு மருமகளாக எண்ணி இருந்தது.

அது நொடிப்பொழுதில் சிதையும்போது அதனால் ஏற்பட்ட வருத்தம் இந்தத் திருமணத்தை ஏற்க மறுத்தது. ஆனால் மலர்விழி அவரைத் தொடர்புகொண்டு இங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்திருக்க, அதன்பின் தான் அவர் மனம் ஓரளவு சமன்பட்டது. ஆனால் பத்மாவின் மனம் அதனை ஏற்க கூட முயற்சிக்காமல் இருப்பது தான் அவருக்கு வேதனையளித்தது.

ஹரிஹரனை இறக்கி விட்ட சண்முகம் அப்பொழுதே அங்கிருந்து சென்றிருந்தான். அவன் வீட்டில் உள்ளோரிடம் சென்று ஹரிஹரனின் பெற்றோர் வந்திருப்பதைக் கூறியிருக்க, அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

யாழினி தன் அறையில் அமர்ந்திருக்க, “அப்படியே உக்காந்து இருக்காம போய் முகமெல்லாம் கழுவி புடவையை மாத்திட்டு வா டி, உன் மாமனாரும் மாமியாரும் ஊர்ல இருந்து வந்துருக்காங்களாம். அவங்க முன்னாடி இப்படி அழுமூஞ்சியா நின்னா நல்லா இருக்குமாஎன கமலம் அவளை விரட்ட,

எப்படி ம்மா உன்னால இப்படி பேச முடியுது, நொடிப் பொழுதுல என் வாழ்க்கையே மாறிப் போச்சு. அதப் பத்திலாம் உனக்குக் கவலை இல்ல, அவன் அப்பா, அம்மா முன்னாடி நான் சீவி சிங்காரிச்சுப் போய் நிக்கணும்னு தான் உனக்குக் கவலையா இருக்கோ!” என்றாள் கோபமாய்.

என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் பாழாகிற கூடாதுனு தாண்டி நான் நினைக்கிறேன். எனக்கு இன்னிக்கு நடந்ததெல்லாம் பிடிக்கல தான், ஆனா உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு மா. அதயாவது கெட்டியா பிடிச்சுக்கோ, இதயும் கை நழுவ வுட்டா அப்புறம் என் நிலைமை தான் டி உனக்கும், புரிஞ்சு நடந்துக்கோஎன அவள் தலையை வருடி விட்டவர், “போ, போய் மொகத்த கழுவிட்டு வாஎன அவளைப் பின்புறம் கொல்லைப்புறத்திற்கு அனுப்பி வைத்தார்.

ராஜனும் பத்மாவும் சுந்தரபாண்டியனுடன் ஊருக்குள் கிளம்ப, ஹரிஹரனும் அவர்களுடனே புறப்பட்டான். மலர்விழியை பத்மா அழைக்க, அதனை மறுத்தவள்நீங்கப் போய் உங்க மருமகள பாத்துட்டு வாங்க டார்லிங், அங்க நான் எதுக்குஎனச் சமாளிக்க, அதன்பின் அவரும் அவளை வற்புறத்தவில்லை.

இன்றாவது தன் மகள் தன்னிடம் பேசி விடமாட்டாளா என்ற ஏக்கத்தில் சுந்தரபாண்டியன் அவளைப் பார்க்க, அவளோ அவரைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.

நால்வரும் அங்குக் கிளம்ப, இந்திரா சிலம்புவுடன் ஐக்கியமானாள் மலர்விழி. பாரிவேந்தன் தோட்டத்திற்கு சென்று வருகின்றேன் எனத் தோட்டத்திற்குச் செல்ல, குணவதி கொஞ்சம் நிம்மதியாகக் கண்ணயர்ந்தார்.

வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் ராஜனும் பத்மாவும் அமர்ந்திருக்க அவர்களின் எதிரே சுந்தரபாண்டியனும், பழனியப்பனும் அமர்ந்திருந்தார்கள். ராமாயி பாட்டி திண்ணையில் அமர்ந்திருக்க, கமலம் தன் மகள் கையில் காஃபியை கொடுத்து அவர்களுக்குக் கொடுக்கச் சொல்ல, அவளும் அவர்களுக்கு காஃபியை கொண்டுவந்து நீட்டினாள்.

தேங்க்ஸ் மாஎன ராஜன் எடுத்துக் கொள்ள, பத்மாவோ விருப்பமே இல்லாமல் அவள் நீட்டிய தட்டிலிருந்து காஃபியை எடுத்துக் கொண்டார். தன் மாமனுக்கும் தந்தைக்கும் கொடுத்தவள், இறுதியாக ஒரு ஓரமாக அமர்ந்திருந்த தன் கணவனுக்கும் நீட்ட, அவனோ அதனை எடுக்காமல் அவளையே பார்த்தான்.

அவளோ அவனைப் பாராமல் குனிந்திருந்ததால், இன்னும் காஃபியை எடுக்கவில்லையேயென அவன் முகம் பார்க்க, அவளைப் பார்த்து யாரும் அறியாமல் கண் அடித்தவாறே காஃபியை எடுக்க, அவனின் அந்தச் சிறுசெயல் அவளின் முகத்தில் லேசான வெட்க அலைகளை உண்டாக்கியது.

ஆனால் அதற்கு முன் கோபம் முந்திக்கொள்ள, அவனை முறைத்தவாறே கதவோரம் சென்று நின்றுக் கொண்டாள். சற்று நேரம் அனைவரிடத்திலும் அமைதி நிலவ, பழனியப்பனே ஆரம்பித்தார்.

நான் யாழினியோட மாமா, பாரிவேந்தனோட அப்பாஎன அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, ராஜன் பதிலுக்குத் தலையாட்டியவாறே புன்னகைத்தார்.

உங்கள கேட்காம இந்தக் கல்யாணத்த நடத்துனது தப்பு தான், அதுக்கு முதல்ல எங்கள மன்னிச்சுருங்கஎன்க, “இங்க நடந்தது எல்லாம் தெரியுங்க. எதுக்கு மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தைலாம், இனி ஆக வேண்டியத பார்க்கலாமேஎன்றார் ராஜன்.

ரொம்ப நன்றிங்க, எங்க நீங்க இந்தக் கல்யாணத்த ஏத்துக்க மாட்டிங்களோனு கொஞ்சம் பயம் இருந்துச்சு. உங்க வார்த்தைய கேட்டோனே தான் நிம்மதியா இருக்குஎன்றவர், “சம்பந்தி அம்மாவுக்கு இதுல சம்மதம் தானுங்க?” என்றார்.

பத்மாஎனத் தன் மனைவியை ராஜன் பார்க்க, “வாழப் போறவன் அவனே இதுல சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் நான் என்னங்க சொல்ல வேண்டி இருக்கு!” என்றார் பத்மா தன் மகனைப் பார்த்தவாறே.

அப்படி இல்லங்க, வாழ வேண்டியது அவங்களா இருந்தாலும் நம்ம பெரியவங்களுக்கும் பிடிச்சிருந்தா தானங்க நாளபின்ன நம்ம உறவு நீடிக்கும். கல்யாணங்கிறது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விசயம் இல்லையே சம்பந்தி அம்மா, ரெண்டு குடும்பம் ஒன்னு சேர்றது தான!” என்றார் பழனியப்பன்.

அவரின் வார்த்தைகள் அவருக்கும் புரிந்து தான் இருந்தது. ஆனால் யாழினியை அவர் ஏற்க சற்று கால தாமதம் ஆகும் என்பதை ராஜன் புரிந்து கொண்டு, “உங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டு ராணியா தான் வாழுவாங்க. அதப்பத்தி, நீங்கக் கவலப்பட வேண்டாம். மலர மாதிரி இனி யாழினியும் எங்களுக்கு மக தான், என்ன மா யாழினி உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான?” என்றார் ராஜன்.

அவள் தலையை மட்டும் ஆட்ட, “ஆமானு வாய திறந்து சொல்லு மாஎன்றார் சுந்தரபாண்டியன். “பரவால்ல விடுங்க, மொத தடவை பாக்கிறதால புள்ளைக்கும் கொஞ்சம் படபடப்பு இருக்கும்லஎன ராஜனே பெருந்தன்மையாகக் கூறினார்.

அதன்பின் ராமாயி பாட்டி அவர்களிடத்திலும் சில விசாரணைகளை வைக்க, ராஜனுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. “நல்லா பேசுறீங்க ம்மா, என் அம்மாவும் இப்படி தான் பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்க போய் பத்து வருஷம் ஆகுதுஎன்றார் ராஜன்.

அவரின் கள்ளமில்லா குணம் ராமாயிக்கும் பிடித்துப் போனது. பத்மா அமைதியாக இருப்பதைக் கண்டவர், அவரையும் விட்டு வைக்காமல் அது இது எனக் கேள்விமேல் கேள்வி கேட்க, ஓரளவு அதற்கு விடையளிப்பதற்காவது வாயைத் திறந்தார்.

பொழுது சாயும் வேளையாகிட கதிரவன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். பத்மா ராஜனிடம் ஏதோ கூற, “அப்போ நாங்க கிளம்புறோங்க. நாளைக்கு காலைல வர்றோம்என்க, “இப்பவே ஊருக்குக் கிளம்புறீங்களா சம்பந்தி?” என்றார் சுந்தரபாண்டியன்.

இல்ல சம்பந்தி, நாளைக்கு தம்பியையும் மருமகளையும் அங்க கூட்டிட்டுப் போகணும், அதுவரை இங்க எங்கயாவது ஒரு ஹோட்டல்ல தங்கிட்டு நாளைக்கு இங்க வர்றோம்என்றார் ராஜன்.

இங்க நம்ம வீடு இருக்கும்போது வெளிய போய்த் தங்கணுமா சம்பந்தி?” என்றார் தயக்கத்துடன். “அது இல்ல சம்பந்தி, இன்னிக்கு நடக்க வேண்டிய சடங்க எல்லாம் நீங்கப் பாருங்க. நாளைக்கு காலைல நாங்க வர்றோம், பக்கத்து ஊர்ல தெரிஞ்சவங்க இருக்காங்க, அப்படியே அவங்களையும் போய்ப் பார்த்துட்டா நல்லா இருக்கும்னு பத்மா ஆசைப்படறா. அதான்என்றார்.

அதற்குமேல் அவர்களைத் தடுக்க முடியாமல் சுந்தரபாண்டியன் சரி என்க, அவர்கள் புறப்படும்போது யாழினியிடமும் கூறி விட்டே சென்றனர்.

கமலத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை தான் அமைந்துள்ளது என ராஜனையும் பத்மாவையும் பார்த்துப் புரிந்து கொண்டவர், அவளுக்குத் திருஷ்டி சுற்றி, “உன் மாமனார், மாமியார அனுசரிச்சுப் போய்க்கணும் யாழு. பார்க்க நல்ல மனுஷங்களா தெரியறாங்கஎன்றார்.

க்கும், அந்த அம்மா ஒரு வார்த்தை கூடப் பேசாம கல்லு மாதிரி உக்காந்து இருக்கு, நல்ல இடமாம் நல்ல இடம்என அவள் முகத்தைச் சிலுப்ப, “ஏன் டி எந்த அம்மாவுக்குத் தான் கோபம் இருக்காது சொல்லு, தன் மகன் கல்யாணத்தை பார்க்க முடியலையேனு அவங்களுக்கும் வருத்தம் இருக்கத் தான செய்யும். அதெல்லாம் நாளபின்ன சரியாகிருவாங்க, ஒரே பையன் எங்க போகப் போறாங்க, விட்டுப் புடி டி. அப்புறம் எல்லாம் உன் ராஜ்ஜியம் தான்என மீண்டும் நெட்டி முறித்தார்.

அவர் என்ன கூறினாலும் அவள் மனம் ஏனோ சமாதானமாகவில்லை. தன் மாமியாரின் அமைதி அவளுக்கு எங்கோ இடித்தது. அதனைவிட ராஜன் கூறும்போது, “மலர் மாதிரி இனி யாழினியும் எங்க பொண்ணு தான்என்ற வார்த்தை அவள் காதில் ரிங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.

காரில் இருவரும் அமர்ந்து சற்று தூரம் சென்றபிறகு காரை ஓரம் கட்டியவர், “ஏன் பத்து அங்கயும் முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டே உக்காந்துருக்க? ஹரிகிட்டயும் ஒரு வார்த்தை கூடப் பேசாம வந்துட்ட, அவன் நம்ம மகன் பத்துஎன்றார்.

ஆனா இப்போ அவன் என் மகனா இல்லயேங்கஎன்றவரின் கண்களில் கண்ணீர் கசிய, “இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன், அவங்க விருப்பம் இல்லாம உன் மனசுல தேவையில்லாத ஆசைகள வளர்த்துக்காதன்னு. அவங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் மா, அத நம்மளே கொச்சைப்படுத்தக் கூடாது. மலர் விருப்பப்பட்டு தான் அந்தத் தம்பி பாரிய கல்யாணம் பண்ணி இருக்கா, இல்லனா அந்தக் கல்யாணம் நடந்து இருக்குமா சொல்லு! அதே மாதிரி தான் ஹரியும். அவனுக்கும் யாழினிய பிடிச்சததால தான ஊர் மக்களுக்கு முன்னாடி அப்படி சொல்லி இருக்கான். நமக்கு அவங்க சந்தோசம் தான மா முக்கியம்என்றார் தன் மனைவிக்குப் புரிய வைக்கும் நோக்கத்தோடு.

அவங்க சந்தோசம் தான் நமக்கு முக்கியம் தான்ங்க. நான் இல்லனு சொல்லல, ஆனா நான் மலர எப்பவும் நம்ம வீட்டு மருமகளா தான் பார்த்தேன். அவ எனக்கு மருமகளா இருக்கிறத விட மகளா இருப்பானு தான் ஆசைப்பட்டேன், ஆனா இப்போ அதெல்லாம் இல்ல, இவ தான் உன் மருமகனு ஒருத்திய கொண்டு வந்து நிக்க வச்சா அத எப்படிங்க என் மனசு ஏத்துக்கும்? உங்களுக்கே தெரியும்ல நான் எவ்ளோ ஆசைப்பட்டேன்னுஎனத் தன் பக்க நியாயத்தை அவர் கூற,

புரியுது பத்து, ஆனா நம்ம ஆசைப்பட்டது எல்லாம் நடந்துட்டா பரவாயில்லை, ஆனா அப்படி நடக்காத போதும் அத ஏத்துக்க நம்ம மனச பக்குவப்படுத்திக்கணும் பத்துஎன அவர் கரத்தைத் தன் கரத்திலும் வைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.

ஒத்தப் புள்ள கல்யாணத்த எப்படிலாம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன், ஆனா இப்போ…” என்றவரை தோளோடு அணைத்துக் கொண்டவர், “சரி, இப்போ எங்க போகலாம் சொல்லுஎன்றார் ராஜன்.

ஆமாங்க, நானே கேட்கணும்னு நினைச்சேன், இங்க யாராவது நமக்குச் சொந்தக்காரங்க இருக்காங்களா? யாருங்க, எனக்குத் தெரியாம?” என்றார் குழப்பத்துடன்.

சொந்தக்காரங்க யாரும் இல்ல பத்து, சம்பந்திய சமாளிக்க அப்படி சொன்னேன். அதே நேரம் நம்ம மலர் வீட்ல போய்த் தங்கறதும் சரிவராது, ஹோட்டல்ல ஒரு நாள் தங்கிட்டு நாளைக்கு தம்பியவும் மருமகளையும் கூட்டிட்டு ஊருக்குப் போகலாம். ஊர்ல சின்னதா ஒரு ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணனும்என்றவர்,

நம்ம கட்சி ஆளுங்க இங்க இருக்காங்க, அவங்க மூலமா நல்ல ஹோட்டல் எங்க இருக்குனு கேட்கிறேன்என்றவர் அலைப்பேசியில் மூழ்கிவிட, காரின் ஜன்னலோரம் சாயந்தமர்ந்த பத்மாவிற்கு கண்கள் பனித்தன.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்