Loading

திய உணவை முடித்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் அமர்ந்திருந்தனர். வீடே நிசப்தமாக இருந்தது. முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்தவண்ணம் மலர்விழி அமர்ந்திருக்க, அவளருகில் சிலம்புவும் இந்திராவும் அமர்ந்திருந்தார்கள்.

சுந்தரபாண்டியன் சற்றுமுன் தான் கிளம்பி போயிருந்தார். பாரிவேந்தன் நாற்காலியில் அமர்ந்தவண்ணம் மலரைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். குணவதியோ என்ன பேசுவது என்று தெரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்.

அங்கு யாழினியின் இல்லத்தில் தன் நண்பனுடன் அமர்ந்திருந்தான் ஹரிஹரன். இருவரும் ஒன்றாக அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும்வரை தான் யாழினி அவன் அருகில் நின்றிருந்தாள். அதன்பின் அவளின் அறைக்குள் நுழைந்தவள் தான் இந்த நொடிவரை அவள் வெளியே வரவில்லை.

திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்களும் கமலத்திடம் கூறிக் கொண்டு புறப்பட, கமலத்தின் தந்தை வீட்டார் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

இன்னும் எவ்ளோ நேரம் மச்சான் இப்படியே உக்காந்து இருக்கிறது?” என செந்தில் அவனைச் சுரண்ட, “எனக்கு மட்டும் என்ன டா தெரியும், ஏதோ காட்டுக்குள்ள தனியா வந்து சிக்கிட்ட மாதிரி ஃபீல் ஆகுது டாஎனக் கிசுகிசுத்தான் ஹரிஹரன்.

உனக்கு இப்பத் தான் அப்படி ஃபீல் ஆகுதா! எனக்கு நீ அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டும் போதே அப்படி தான் தோணுச்சு டா மச்சான்என அவன் கள்ளச் சிரிப்பு சிரித்து வைக்க அவனை முறைத்தவன், “கொஞ்சம் பக்கு பக்குனு தான் இருக்கு டா. பட்டர்பிளை ஒத்துக்கிட்டதே எனக்குப் பயமா இருக்கு, அவ அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டானு நினைச்சேன். ஆனா, இவ்ளோ சீக்கிரம் அவ ஒத்துக்கிட்டது ஆச்சரியமா இருந்தாலும் கொஞ்சம் பயமாவும் தான் இருக்குஎன்றவனின் கண்களில் தெரிந்த குழப்பத்தையும் பயத்தையும் கண்ட செந்தில், “என்னது பட்டர்பிளையா! நிக் நேமு! கொடுமை டாஎனத் தலையில் அடித்துக் கொண்டான்.

அது என் செல்ல பட்டாம்பூச்சி டாஅதான் கொஞ்சம் ஸ்டைலா இருக்கட்டுமேனு…” என அவன் இழுக்க, “அய்யா சாமி, நீ கூட்டத்துல அப்படி சொல்லும்போதே எவனாவது அருவாள தூக்கிட்டு வந்துருவாங்களோனு பயத்துல கெடந்தேன். இப்போ புரியுது, இனி உன் பட்டர்பிளை தான் அருவாளோட வந்து நிப்பாங்கன்னுஎன அவன் பீதியில் அலற,

கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா…” என அவன் இழுத்த தோரணையில், “இந்த விளையாட்டுக்கு நான் வரல டா சாமி, நான் மலர் வீட்டுக்குப் போறேன்என எழப் போனவனை தடுத்தவன், “நீயும் போய்ட்டா இங்க நான் தனியா மாட்டிக்குவேன் டா. ப்ளீஸ், இல்லனா நானும் உன்கூட வரேன்என அவன் எழப் போக, அப்பொழுது அங்குவந்த ராமாயி பாட்டி,

எங்க பா ராசா கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்?” என்றார். “அதுவந்து பாட்டி…” என ஹரிஹரன் இழுக்க, “செத்த என் பக்கத்துல வந்து உக்காரு பாஎன்றவாறே திண்ணையில் கால் நீட்டி அமர்ந்தார்.

சைத்தான் ஜமுக்காளம் விரிச்சு உக்காந்துருச்சுஎன செந்தில் கூற, அவன் கரத்தை இழுத்தவாறே ராமாயி பாட்டியின் அருகே அமர்ந்தான் ஹரிஹரன்.

அவனின் பெற்றோர், ஊர், விலாசம், குலம், கோத்திரம் முதற்கொண்டு அவர் வினவ, அனைத்திற்கும் பதிலளித்த வண்ணம் அமர்ந்திருந்தான் ஹரிஹரன்.

அப்பொழுது அங்கு கமலம் வர, “ஏன்டி கமலம், எங்க உன் மவக்காரி?” என்றார் ராமாயி. “வேற எங்க போவா, உங்க பேரன் பண்ணதுக்கு அவ சாவாம எங்கயாவது உக்காந்து மூக்க உறிஞ்சிக்கிட்டு கெடப்பா!” என்றவாறே முந்தானையை உதறி இடுப்பில் சொருகினார்.

இப்ப என்ன ஆகிப்போச்சுனு இத்தனை கோபம்? அதான் மவராசன் கணக்கா பட்டணத்துல இருந்து மாப்பிள்ளை கிடைச்சுருக்குல்ல டிஎன அவர் கூற,

அவர் எதிரே அமர்ந்த கமலம், “ஏன் பெரியம்மா, நீ தான் அந்த மலருக்கும் மாப்பிள்ளைக்கும் கண்ணாலம் பண்ணி வச்சதுனு சொன்னீங்களே, என் மவ உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணா? அவ வாழ்க்கைல ஏன் இப்படிலாம் நடக்கணும். பெரியவங்க நீங்களே இப்படி நடந்துக்கிட்டது முறையா. வேற யாராவதா இருந்தா நாக்கு புடுங்கி சாவற மாதிரி நாலு கேள்வி கேட்ருப்பேன், உங்கள அப்படி கேட்க முடியாம என் வாயல்ல கட்டிப் போட்டுக் கெடக்கிறேன்எனச் சோகத்தில் ஆரம்பித்து, அவரைத் திட்ட முடியவில்லையே என்று ஆதங்கத்தில் முடித்தார் கமலம்.

இங்க பாரு டி கமலம், நான் உன் மவக்காரிக்கு நல்லது தான் பண்ணி இருக்கேன். என் பேரன் அந்த மலரு புள்ளைய தான் விரும்புறான்னு தெரிஞ்சும் யாழுவுக்கு கட்டி வச்சிருந்தா நாளபின்ன உன் புருஷன் மாதிரியே என் பேரனும் அந்தப் புள்ளைய ரெண்டாம் கண்ணாலம் பண்ணிட்டு வந்து நின்னா என்னாகறது? உன்னை மாதிரியே உன் மவளும் கடைசிவரை சீப்பட்டு கெடப்பா. இப்பதான் அவளுக்கு ராசா கணக்குல ஒரு மாப்பிள்ளை கிடைச்சு, அவ ராணி மாதிரி வாழப் போறா இல்ல. நான் பண்ணது உன் மவளுக்கு தான் நல்லதுஎன்றார் ராமாயி. அதற்குமேல் கமலத்தாலும் பேச முடியவில்லை.

அமைதியாக அமர்ந்திருக்க, “இந்த ராசாவ வச்சுக்கிட்டே இத உன்கிட்ட சொல்லக் காரணமும் இருக்கு டி. நம்ம வீட்டு விசயத்த ஒளிவு மறைவு இல்லாம அவரும் புரிஞ்சுக்கணும்னு தான். போ, போய் உன் மவக்காரிய கூப்பிட்டு மாப்பிள்ளைய கவனிக்கச் சொல்லுஎன்றார் அதிகார தோரணையில்.

அங்கு நடப்பவைகள் அனைத்தையும் செந்தில் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்க, அவனைத் தன் தொடையால் இடித்தவன், “டேய், இங்க என்ன படமா ஓடிக்கிட்டு இருக்கு?” என்றான் ஹரிஹரன்.

இல்ல, இந்த வயசுலயே இந்தக் கிழவி இப்படி பிளான் போடுதே நம்ம வயசுலலாம் என்ன மாதிரி பிளான் போட்ருக்கும்என்றான் கிசுகிசுப்பான குரலில்.

என்ன பா ராசா உன் நண்பன் என்னத்தையோ சொல்றான் போல இருக்கு?” என்றார் ராமாயி பாட்டி.

அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டிஎன அவன் சமாளிக்க, “இந்த வயசுலயே இப்படி பண்ணதுன்னா இது நம்ம வயசுல என்னென்ன பண்ணிருக்கும்னு தான யோசிக்கிறீங்கஎன அவர் அவன் கூறியதை அப்படியே ஒப்புவிக்க,

கெழவிக்கு பாம்புக் காது தான் டாஎன செந்தில் அங்கிருந்து எஸ்கேப் ஆனான். அப்பொழுது நிழவுபடியில் கதவோரம் வந்து நின்ற யாழினி, ஹரிஹரனையே பார்க்க, அவளைக் கண்ட பாட்டி, “ஏன் டி யம்மா, உன் புருஷன கூப்பிட வந்துப்புட்டு நிலவோரமே நின்னா என்ன அர்த்தம், வந்து அவன உள்ள கூட்டிட்டுப் போஎன்றார்.

அப்பொழுது தான் அவனும் யாழினியை பார்க்க, அவனைப் பார்க்காமல் வெளியே வாசலை வெறித்தவண்ணம், “உள்ள வாங்கஎன்றாள் யாழினி.

அவன் முகத்த பாத்து கூப்பிடு டி, அங்க வாசல பாத்துட்டு இருக்க!” என பாட்டி மேலும் அதட்ட, யாழினிக்கு பக்கத்தில் ஏதாவது கட்டை இருந்தால் அதன் தலையில் ஓங்கி அடித்துவிடத் தோன்றியது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “உள்ள வாங்கஎன அவனைப் பார்த்துக் கூற, ஹரிஹரன் எழுந்து உள்ளே சென்றான்.

அவளின் அறைக்கு அழைத்துச் சென்றவள், எதுவும் பேசாமல் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டாள். அவனோ என்ன செய்வது என்றுத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, “ஏன் ஐயாவ உக்கார சொன்னா தான் உக்காருவீங்களோ!” என்றாள் நக்கலாய்.

ஆரம்பிச்சுட்டா!’ என நினைத்தவாறே கட்டிலின் மறு ஓரத்தில் அமர்ந்தான் ஹரிஹரன். “சாருக்கு ரொம்ப பெரிய மனசோ!” என்றாள் படு நக்கலாய்.

புரியல பட்டர்பிளை…” எனக் கூற வந்தவன், அவளின் கோப முகத்தைக் கண்டு, “புரியலங்கஎன்றான். “இல்ல, பிரண்டுக்காக எனக்கு வாழ்க்கை குடுக்க முன்வந்தீங்களே அதான் கேட்டேன். ரொம்ப பெரிய மனசு தான உங்களுக்கு!” என்றாள் கேலியாய்.

என் ஃபிளவர்காக என்ன வேணும்னாலும் செய்வேன்என்றவனின் வார்த்தையில் இருந்த உறுதி, அவளுக்குக் கோபத்தை உண்டாக்கியது.

என் மாமன தான் அவ சொக்குப்பொடி போட்டு மயக்கி வச்சுருந்தான்னு நினைச்சேன். உங்களையும் நல்லா வளைச்சுப் போட்ருக்கா, கைகாரி தான்என உச்சுக்கொட்ட,

என்மேல நீ கோபப்படு, ஏன் சண்டை கூடப் போடு. அத நான் ஏத்துக்கிறேன் யாழு. ஆனா, தேவையில்லாம நம்ம விசயத்துக்குள்ள ஃபிளவர இழுக்காத. மீறி அவளப் பத்தி தப்பா பேசுன அப்புறம் நான் பொல்லாதவனாகிடுவேன்என எச்சரித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் ஹரிஹரன்.

யாழினிக்கோ கோபம் தலைக்கேறியது. தனது தந்தையும் மாமனும் தான் மலர் மலர் என அவளுக்காக உயிரை விடுகிறார்கள் என்றால் அந்தப் பட்டியலில் இப்பொழுது அவளின் கணவனாக வாய்க்கப்பட்டவனும் அல்லவா ஃபிளவர், ஃபிளவர் என்று உருகுகிறான்.

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கக் கூசியது அவளுக்கு. ‘என்னைய விட அவ எதுல உசத்தி?’ என்ற கேள்வி தான் சதா சர்வகாலமும் அவளுள் ஓடிக் கொண்டிருந்தது.

அவளின் உயிர் நண்பன் என்று தெரிந்து தானே தானும் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தோம் என நினைத்தவள், ‘என் மாமன என்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி உன்னை உன் உயிர் நண்பன் கிட்ட இருந்து பிரிக்கல நான் யாழினி இல்ல டிஎனச் சூளுரைத்துக் கொண்டாள்.

வெளியே அமர்ந்திருந்த ஹரிஹரனின் அருகில் வந்த சண்முகம், “மாப்பிள்ளைஎன அழைத்தான். சிறு புன்னகையை சிதறவிட்டவன், “ஹாய்என்றான் ஹரிஹரன்.

நான் யாழுவோட…” என அவன் மேலும் தன்னை அறிமுகப்படுத்த முயல, “தெரியும் மச்சான்என்றான் ஹரிஹரன்.

தேங்க்ஸ் மாப்பிள்ளைஎன்றான் சண்முகம். எதற்கு நன்றியெனப் புரியாமல் அவனைப் பார்க்க, “என் தங்கச்சியோட வாழ்க்கை எங்க இப்படியே முடிஞ்சுருமோன்னு பயந்துட்டேன். தெய்வம் மாதிரி நீங்க வந்துட்டீங்கஎன அவன் கையெடுத்து கும்பிட முயல,

அவன் கரங்களைக் கீழிறக்கி விட்டவன், “தெய்வம் அது இதுன்னு பெரிய வார்த்தைலாம் வேண்டாம் மச்சான். உங்க தங்கச்சி என்கூட சந்தோசமா இருந்தா போதும்என்றான்.

இப்படிலாம் நிமிஷத்துல எல்லாம் மாறும்னு நினைக்கவே இல்ல மாப்பிள்ளை. பாரி எங்க மாமா பையங்கிறத விட எனக்கு நண்பன்னு தான் நான் சொல்லுவேன். இத முன்னாடியே அவன் என்கிட்ட சொல்லி இருந்தா என் தங்கச்சிய நான் கன்வின்ஸ் பண்ணி இருப்பேன், இவ்ளோ தூரம் மன சங்கடங்கள் வந்திருக்காதுஎனப் பெருமூச்சு விட,

முடிஞ்சத யோசிச்சு ஒரு பலனும் இல்ல மச்சான். பழச மறந்துருங்க, இப்பவும் பாரி பிரதர் உங்க பிரண்ட் தான். வேற யார கட்டிக்கிட்டாரு, ஃபிளவரும் உங்க தங்கச்சி தான மச்சான்என அவன் மனதை அறிய கூற, “இல்லனு மறுக்க முடியாது தான் மாப்பிள்ளை. ஆனா, யாழு…” என அவன் தயங்கினான்.

அவ இப்போ என் பொண்டாட்டி மச்சான், நீங்கக் கவலப்பட வேண்டாம்என அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து ஆறுதல் கூற, அவன் கரத்தைப் பற்றிக் கொண்டவன், “தேங்க்ஸ் மாப்பிள்ளைஎன்றான்.

உங்க தேங்க்ஸ்லாம் இப்போ வேண்டாம், என்னைக் கொஞ்சம் வெளிய மட்டும் கூட்டிட்டு போறீங்களா! ரொம்ப நேரமா இங்கயே உக்காந்துருக்க முடியலஎன்றான் ஹரிஹரன்.

வாங்க மாப்பிள்ளைஎன்று, அவனை வெளியே அழைத்துச் சென்றான் சண்முகம். அவனது வண்டியில் இருவரும் நகர்வலம் வந்தனர். “இதான் நம்ம தோட்டம் மாப்பிள்ளை, இது நம்ம தோப்பு, இந்த மல்லிகை, முல்லை எல்லாம் நம்மளுது தான்எனத் தோட்டத்தையும் ஒரு ரவுண்டு அடித்தனர் மாப்பிள்ளையும் மச்சானும்.

சில நொடிப் பொழுதிலே ஆண்டாண்டு பழகிய நண்பர்கள்போல தோஸ்து ஆகிவிட, அப்படியே பக்கத்து ஊர்வரை சென்றவர்கள்பின் திரும்பி வரும்போது, பேருந்து நிற்கும் இடத்தில் இருந்த தேநீர் கடையில் நின்றனர்.

ஆளுக்கொரு டீ சொல்லியவர்கள் அதற்காகக் காத்திருக்க, வண்டியின் மீது சாய்ந்து நின்றவாறே ஹரிஹரன் சண்முகத்திடம் பேசிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு கார் அவர்களை உரசிய வண்ணம் வந்து நிற்க, அவர்களைத் திட்டப் போனான் சண்முகம். ஆனால், அதில் உள்ளவர்களைக் கண்ட ஹரிஹரனுக்கு தான் லேசான பயம் உண்டானது.

முன்பக்க கார் கண்ணாடியைச் சற்று கீழே இறக்கினார் பத்மா. அவரைக் கண்டவன், “அம்மாஎன்றான். அவனின் அழைப்பைக் கேட்ட சண்முகம் அமைதியாகிவிட, பத்மாவோ முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜன் காரைவிட்டு இறங்கினார். அவரைக் கண்டவன், “அப்பாஎன இழுக்க, “மலர் வீட்டுக்கு எப்படிப் போகணும்னு வழிய மட்டும் கேளுங்கஎனத் தன் கணவனிடம் பத்மா கூற,

அவரின் வார்த்தைகள் அவனுக்கு வலியைக் கொடுத்தது. “ம்மா!” என அவன் மீண்டும் அழைக்க, “வழிய மட்டும் கேட்டுட்டு கிளம்பற வழிய பாருங்க ராஜ்என்றவர், மீண்டும் கார் கண்ணாடியை மூட,

நாங்க முன்னாடியே போறோம் ப்பா, எங்க பின்னாடி வாங்கஎன்றவன் சண்முகத்தைப் பார்க்க, அதற்குள் அவன் வண்டியை இயக்கி இருந்தான்.

பின்பக்கம் அவன் ஏறி அமர்ந்துக் கொள்ள, இருசக்கர வாகனம் அந்த தார் ரோட்டில் வழுக்கிக் கொண்டு சென்றது. அவர்களை காரும் பின்தொடர, அந்தத் தோட்டத்து வீட்டிற்குள் வண்டி நுழைந்தது.

வீட்டின் முன் சண்முகம் வண்டியை நிறுத்த, அவர்கள் பின்னால் வந்த காரும் நின்றது. அதிலிருந்து இருவரும் இறங்க, வண்டி சத்தம் கேட்டு குணவதி வாசலை எட்டிப் பார்த்தார்.

ஹரிஹரன், சண்முகத்துடன் மேலும் இருவர் வந்திருக்க அவர்களைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டார் குணவதி. தன் தந்தையின் சாயலில் தான் ஹரிஹரன் இருக்க, அவனின் பெற்றோர் தானெனப் புரிந்து கொண்டவர்,

அம்மாடி மலரு, ஹரி தம்பியோட அப்பா, அம்மா வந்துருக்காங்க மாஎன்க, மலர் வேகமாக வெளியே வந்தாள். பத்மாவை கண்டவள், ஓடிச் சென்று அவரை அணைத்துக்கொள்ள, “எப்படி மா இருக்க?” என அவள் முகத்தைப் பற்றி வினவியவரின் கண்களில் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் நாண் பட்டது.

இருக்கேன் டார்லிங்என்றவளின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தாலும், அவருக்குக் குழப்பங்கள் அதிகமாகின. அவர் இன்னும் அவளைத் தன் மருமகளாகத் தான் நினைத்திருந்தார்.

மாலையுடன் வேறொரு பெண்ணோடு ஹரிஹரன் புகைப்படம் அனுப்பி இருந்தபோது கூட அந்த தாய் மனம் அதனை அவன் தன்னை ஏமாற்றுவதற்காக விளையாட்டாய் செய்த காரியம் என்று தான் மனதை தேற்றிக் கொண்டிருந்தார்.

அவர் மனம் மலர்விழியை தன் வீட்டு மருமகளாகவே பாவித்து இருக்க, சிலம்பு அவனின் திருமண செய்தியைக் கூறியும் நம்பாமல் மலரிடம் கேட்டார்.

அவளோ, நேரில் வாருங்கள் என அழைப்பு விடுத்திருக்க, வழியெங்கும் ஆண்டவனை துணைக்கு அழைத்துக் கொண்டு தான் இருந்தார் பத்மா. ராஜனுக்கு தான் தன் மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது எனப் புரியாமல் குழம்பித் தவித்தார். மலர் அவருக்குத் தனியாக அலைப்பேசியில் அழைத்து இங்கு நடந்த விவரங்களை ஏற்கெனவே கூறி இருந்ததால் நிதர்சனத்தை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால் பத்மா தன் மனக்கணக்கில் மானசீகமாக அவளைத் தன் மருமகளாக ஏற்றுக் கொண்டதன் விளைவு நிஜத்தை அவர் கற்பனை என்றே நம்பத் தொடங்கி இருந்தார்.

ஆனால் இங்கு மலரின் கழுத்திலும் தாலியைக் கண்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவளின் கழுத்தில் இருந்த தாலியை அவரின் விரல்கள் தடவிக் கொடுக்க, அவரின் எண்ணம் புரியாமல் அவரைப் பார்த்த மலர், “டார்லிங்என்றாள்.

இதுஇது…” என்றவருக்கு மேலும் வார்த்தைகள் இடற, தலை வலிப்பதுபோல் இருந்தது அவருக்கு. தன் மகனை அப்பொழுது தான் பார்த்தார் பத்மா.

அவன் தலைகுனிந்த வண்ணம் நின்றிருக்க, சுற்றி உள்ளவர்களைப் பார்த்தார். அதில் பாரிவேந்தனும் இன்னும் பட்டு வேஷ்டி சட்டையிலேயே நின்றிருக்க, அவரால் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடியாமல் தலையை அழுத்திப் பிடித்தார்.

பத்துஎன ராஜன் அவரைப் பிடிக்கப் போக, “டார்லிங்என அவரைத் தாங்கிப் பிடித்தாள் மலர்விழி. அப்படியே கண்கள் சொருக, அவர் மயக்கமடைய அவரை வீட்டிற்குள் தூக்கிச் சென்றனர்.

கட்டிலில் அசைவற்று பத்மா படுத்திருக்க, அவரைச் சுற்றி அனைவரும் நின்றிருந்தனர். அவர் அருகில் கையில் ஸ்டெத்தஸ்கோப்புடன் அமர்ந்திருந்த மலர்விழி, அவர் கண் இமைகளைத் திறந்துப் பார்த்தவள், பின் அவரின் இதயத் துடிப்பை சரிபார்த்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்