மறவாத ஓசைகளே
இவ்வுலகத்தில்
பிறப்பதற்கு
முன்பே
தாயின்
ஓசையை
…. உணர்ந்தோம்மே!…
அத்தருணமான
ஒவ்வொரும்
நாளும்
தொலைந்து
போனதே!…
நம் செவிகளில்
எண்ணற்ற
ஓசைகளை
கணித்தோமே!…
நீங்காத
நம் நினைவுகளில்
ஓடும் அருவியாக
பாய்ந்துகொண்டே
போகுமல்லவா!..
பாய்ந்து விழும் !
அருவியின் ஓசையினை !
.. தொலைத்தோமேடா!.. .
அன்றொரு காலத்தில்
மாட்டுவண்டியிலேயே
சுற்றி சுற்றி
உலா வந்தனவே!..
உலா செல்லும்
வேளையிலேயே
சக்கரத்தில்
.. …….சுழலுகின்ற
ஓசையை
செவிமடல்களால்
மெய்மறந்தேனோ!
தன் ஆயுள் முழுவதும்
….அவ்வோசை ஒலித்து
.. ..கொண்டே தான்
இருக்குமல்லவா!..
தொலைந்து போன…
ஓசைகள்!..
நிஜத்தில்
இல்லையே!..
நமது நிழலிலேயே
…..இருக்கின்றனவோ!..
இவையாவும்
தொலைந்து போன
ஓசைகளோ!…
முற்றும்.. வாழ்க வளமுடன்… .
.