பூவிலாங்குடி கிராமத்தில் பரசுராமின் வீட்டை அடுத்து பெரிய வீடு என்றால் அது குமரேசன் வீடு தான். பழமை மாறாமல் சில மாற்றங்கள் மட்டுமே அதில் புகுத்தப்பட்டு இன்றும் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் வீடு அது. அவ்வீட்டில் தன் ஆசை மகளுக்காக மாடி முகப்பு கொண்ட அழகான படுக்கையறையை அமைத்திருந்தார் குமரேசன். கட்டிய நாளில் இருந்து இப்போது தான் அந்த அறையில் வசிக்கிறாள் கயல்விழி. ஏனோ தந்தை தனக்கு பிடித்தமான அறையை ஆசையாக அளித்திருந்தாலும் துளியும் மகிழ்வு இல்லாமல் எங்கோ பார்வையை செலுத்தியவாறு கையில் புத்தகத்தோடு அமர்த்திருந்தாள் அவள். அவளை காண மகியும், தூரனும் அறைக்கதவை தட்ட …. உள்ளே வர சொன்னாள் கயல்விழி.