Loading

 

 

நிமல் மற்றும் சரண் நேத்ராவை நிமலின் வீட்டிற்க்கு அழைத்து வந்திருந்தனர். கூடவே சித்துவும் வந்திருந்தாள். நிமலின் வீட்டிற்க்கு வந்ததில் நேத்ராவிற்க்கு பயமாகவும் சங்டமாகவும் இருக்க, அதை அறிந்த நிமலோ அவளின் கைகளை ஆதரவாய் பிடித்து கண்களிலே சமாதானம் செய்தான்.

 

 

மோகன் பார்வதி நிமலின் பெற்றோர். பெற்றோர் என்பதை விட நிமலின் நல்ல தோழன் தோழி என்றே கூற வேண்டும். அவர்களுக்கு நிமல் மட்டும் தான் உலகம். ஏழு ஆண்டு கால கனவின் பலன் தான் நிமல். எனவே ஏகபோக அன்பும் பாசமும் அவனுக்காக உண்டு. வீட்டில் எல்லாம் அவன் விருப்பப் படி தான் நடக்கும். மோகன் பார்வதியுடன் நிமல் வீட்டில் செய்யும் சேட்டைகளை பார்க்கவே இரு கண்கள் போதாது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் அந்த வீடு தான் இவர்களின் சொர்க்கம். அவர்களின் பாச பிணைப்பை யார் பார்த்தாலும் அவர்களுக்கும் அது சொர்க்கமாகத் தான் தெரியும். இனி அந்த மூவர் கூட்டில் நான்காவதாக இன்னொரு உறவு சேர போகிறது. ஏற்கனவே சேர வேண்டிய உறவு தான் ஆனால் காலத்தின் கொடுமையால் இருவருடம் கழித்து வந்து சேர்கிறது.

 

கையில் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார் பார்வதி. அவளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அங்கு காத்திருந்ததோ மிகப் பெரிய அதிர்ச்சி. மோகன் கையிலிருந்த மாங்கல்யத்தை நிமலிடம் நீட்ட அதை வாங்கி கண்களிலே நேத்ராவிடம் சம்மதம் கேட்டான் நிமல். நேத்ராவிற்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பதிலேதும் சொல்லாமல் அவள் இருக்க, அவளை பார்த்து இனி முழுதும் நீ என்னோட பொறுப்பு என்று நிமல் சற்று சத்தமாகவே கூற, அதற்கு மேலும் அவளால் ஒன்றும் கூற முடியவில்லை. சரி என தலையசைத்த மறு நொடி நிமல் நேத்ராவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டினான்.

 

வீட்டிற்க்கு அழைத்துச் செல்லலாம் என்று டாக்டர் சொன்னவுடனே நிமல் முடிவு செய்து விட்டான், நேத்ரா என்னுடன் என் காதலியாய் என் மனைவியாய் என் வீட்டிலே இருப்பாள் என்று. அதற்கு முழுமனதாய் சரணும் சம்மதித்தான். ஆனால் இதை எதையும் எதிர்பார்க்காத சித்துவுக்கு மிகப் பெரிய ஏமாற்றமும் நேத்ராவின் மேல் கோபமும் உண்டாகியது. நேத்ராவை கொலை வெறியுடன் பார்த்தவள் அங்கிருந்து வெளியேறினாள். சித்துவின் மாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த சரண்….இனி உன்னால் நேராவை எதுவும் செய்ய முடியாது. அவளுக்கு அரணாய் இனி நிமல் இருப்பான். நீ செய்த செயலுக்கு எல்லாம் விரைவில் அனுபவிப்பாய் என்று மனதினுள்ளே கூறிக் கொண்டான்.

 

உன் வாழ்க்கையில் இனி எந்த வித கஷ்டங்களும் வராது உன்னை என் கண்களில் வைத்து காப்பேன் என அவளது நெற்றியில் குங்குமம் இட்டு அன்பாய் முத்தமும் இட்டான் நிமல். அவனின் முழு அன்பும் இனி அவனின் காதல் மனைவிக்குத் தான்.

 

நேத்ராவை பற்றி அனைத்தும் நிமலின் பெற்றோருக்கு தெரியும். அவனின் இரண்டு ஆண்டு கால தவிப்பையும் காதலையும் கண்டவர்கள் அவனுக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை. அவளின் தலையை ஆதரவாய் தடவிய பார்வதி அவளை அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்.

 

அவளை கைகளில் ஏந்திய நிமல் சரணின் புறம் திரும்பி உனக்கு இப்போ ஓகேவாடா என்று கேட்க டபிள் ஓகே டா என்று கூறிய சரணின் மனதில் அப்படியொரு ஆனந்தம்.

 

தன் மனைவியை கண்களிலே காதல் மொழி பேசி அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டான் நிமல். பார்வதிக்கு மகளாகவே மாறிப் போயிருந்தாள் நேத்ரா. உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும் அவள் பேச வேண்டும் என்பதற்காகவே எல்லோரும் காத்திருந்தனர்.

 

இதோ முழுதாய் ஒரு மாதம் முடிந்திருந்தது. அன்று கோபமாக சென்ற சித்து, தனக்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளின் நடவடிக்கைகளை அவளரியாமல் சரணும் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான். அதில் யாரோ அவளுக்கு உதவுகிறார்கள் என்பதை அறிந்தவனுக்கு அந்த ஆள் யார் என்பதை அறிய முடியாமல் போனது. இவ்வளவு கவனமாக இருந்தும் அவனையும் மீறி நடக்க போகும் நிகழ்வில் என்ன நடக்க போகிறதோ தெரியவில்லை.

 

அன்றைய நாள் நேத்ராவை வெளியே அழைத்துச் செல்லலாம் என்று நிமல் அவளை தயார் செய்து கொண்டிருந்தான். கை கால்களில் அடிபட்டிருப்பதால் நிமல் தான் அவளின் தேவைகளை எல்லாம் செய்வான். அப்படி செய்து கொண்டிருக்கும் போது தான் சித்து வந்தாள்.

 

அவள் வரவை சாதாரணமாக நிமல் எடுத்துக் கொண்டாலும் நேத்ராவால் அதை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவளின் பார்வையில் உள்ள குரூரம் நேத்ராவை கலங்க வைத்தது. சித்து செய்த செயல்கள் நேத்ராவின் கண் முன்  நிழலாடியது.

 

பயம் அதிகரிக்க அதிகரிக்க முகம் மாறுதல் அடைய அதை பார்த்து நேத்ராவின் முன் நின்றிருந்த நிமல் என்ன என்று பதட்டத்துடன் கேட்டான், பாவம் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கண் முன்னே தவறிழைத்தவள் இருந்தும் தன்னவனிடம் எதுவும் சொல்ல முடியவில்லை என்றே கண்களில் நீர் சுரந்தது. நிமலோ அவளின் காயங்களில் தான் வலி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து அவளை நிதானப் படுத்திக் கொண்டிருந்தான். நிமலின் முன் நல்லவள் போல பேசி நேத்திராவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை தயாராக அனுப்பி வைத்தாள் சித்து.

 

சரி என்று அவன் சென்றதும் நேத்ராவின் குரல்வளையை நெறித்தவள்….எவ்வளவு தைரியம் இருந்தா திரும்பவும் வந்திருப்ப….நான் சொன்னதெல்லாம் மறந்திடுச்சா….. நான் அவ்வளவு சொல்லியும் கேட்கல இல்ல…… ஆங்காரமாய் அவளை பார்த்து…. இது நான் இருக்க வேண்டிய இடம்…..எனக்கு கிடைக்காம பண்ணிட்டீல…..உன்ன என்ன செய்றேன் பாரு……என்று கொடூரமாக சிரித்தவள்…. இனி உன்ன என்ன செய்யலாம்….. உன்னோட புருஷன உன் கண்ணு முன்னாடியே கொல்லலாமா…..இப்போ வெளிய தானே போறிங்க…. உனக்கு ஒரு ஷாக்காண விஷயம் காத்துக் கிட்டு இருக்கு…… தயாரா இரு…..என்று கூறி விட்டு சென்றவளை பயத்துடன் பார்த்திருந்தாள் நேத்ரா.

 

 

அதே நேரம் நிமலும் வர ஏதும் கூற முடியாமல் பயத்துடன் அவனுடன் கிளம்பிச் சென்றாள் நிமலின் அம்மு.

 

 

அப்படி என்ன ஷாக் காத்துக் கொண்டிருக்கிறது. சித்துவுக்கு உதவி செய்பவன் யார். அவன் யார் என்று தெரியும் போது இவர்களின் காதல் நாட்களும் இரண்டு வருட கசப்பான நாட்களும் தெரிய வருமா….பார்க்கலாம்

 

 

சித்துவின் செயலில் பயந்து போன நேத்ரா நிமலிடம் ஏதும் கூற முடியாமல் அவனுடன் வெளியே கிளம்பினாள். நிமல் முதலில் நேத்ரா தங்கியிருந்த ஆசிரமத்திற்கு அவளை அழைத்துச் செல்ல அவளின் பயம் கொஞ்சம் குறைந்தது. எல்லோரிடமும் பேசி விட்டு கிளம்பியவர்கள் பின் அவர்கள் எப்போதும் செல்லும் கடற்கரைக்குச் சென்றனர். கடல் அலைகளில் தன் பயத்தை முழுதும் மறந்திட  காதல் கணவனின் தோலில் சாய்ந்து அப்பொழுதை ரம்மியமாய் ரசித்தாள் நேத்ரா. அவளின் தலையை வருடிக் கொண்டே தங்களின் காதல் நாட்களை பற்றி பேசிக் கொண்டிருந்த நிமலுக்கு ஃபோன் வர அதை எடுத்து பேசியவன் விலகிய நேரம் பார்த்து வந்தான் அவன்.

 

கடல் அலைகளில் கவனத்தை பதித்திருந்தவளின் கண்களில் திடீரென அப்படி ஒரு பயம். அவளின் பயத்தை கண்ட அவனுக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி. அவளின் முன் சென்று நின்றவன், அவளை ஏளனமாய் பார்த்து சிரித்தவன்… ப்பா… புடிச்ச வாழ்க்கை திரும்ப கிடைச்ச ஆனந்தம் முகத்தில தெரியுது……. பார்த்து நேத்ரா….ரொம்ப ஆனந்தப் பட நிமல் இல்லாம போய்ட போறான். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி மறுபடியும் வந்து மாட்டிக்கிட்டயேமா…..நேத்ரா….விட மாட்டேன் டி உன்ன சும்மா விட மாட்டேன்…..மறுபடியும் ஏன்டா நிமல் கூட சேர்ந்தோம்னு உன்ன கதற வைக்கிறேண்டி. அப்போ தெரியும் இந்த ரகு யாருனு…..என்று மிரட்டி விட்டு செல்ல நிமலும் வந்து சேர்ந்தான். (ரகு பத்தி ஃப்ளாஷ் பேக் ல தெரிஞ்சுக்கலாம்.)

 

செல்லும் போது நன்றாக இருந்தவள் இப்போது மீண்டும் படபடப்புடன் இருக்கவும் பயந்த நிமல் அவளை உடனே அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். வழி முழுதும் சித்துவின் வார்த்தைகளும் ரகுவின் வார்த்தைகளும் தான் நேத்ராவை பாடாய்படுத்தியது.

 

பாவம் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேச முடிந்தாலாவது நிமலிடம் கூறி விடலாம். ஆனால் அதுவும் இப்போது முடியவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டாள். நிமலும் நேத்ராவிற்க்கு ஏதோ பிரச்சனை என்று ஓரளவு தெரிந்து கொண்டு தான் இருந்தான். ஆனால் இப்போது அவளிடம் ஏதும் கேட்க வேண்டாம், உடல் நிலை தேறிய பின் கேட்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் தன் அம்முவை இப்படி பயம் கொள்ளச் செய்தது மட்டும் அவனுக்கு தெரிந்தால் அந்நாள் தான் அவர்களின் கடைசி நாள். அதிலும் விளையாட்டாய் தான் நேத்ரா தன்னை விட்டு பிரிந்தாள் என்று நினைத்திருப்பவனுக்கு அதற்கு பின் பல காரணங்களும் மிரட்டல்களும் இருக்கும் என்று அறிந்தால் என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது.

 

நேத்ராவை அறையில் அமர வைத்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் படிக் கூற அவளும் அவன் சொல்படியே கேட்டாள். கண்களை மூடினாள் தவிர தூக்கம் வர வில்லை. அவள் அருகிலே நிமல் இருக்க அவனின் கையை பிடித்துக் கொண்டு கண்களை மூட அப்படியே உறங்கியும் போனாள். அவளின் முகத்தை வைத்தே எதையும் அறியும் நிமலிடம் நேத்ரா எதையும் சொல்லா விட்டாலும் அவன் புரிந்து கொண்டான் ஏதோ ஒரு பிரச்சனை தன்னவளுக்கு என்று. அதை அறிய அவன் முதலில் நாடியது சரணைத் தான். நிமலிற்க்கு தெரியும் நேத்ரா எந்த ஒரு விஷயத்தையும் சரணிடம் கூறாமல் இருக்க மாட்டாள் என்று.

 

அவளை உறங்க வைத்து சரணிற்க்கு அழைத்தான். விவரம் ஏதும் சொல்லாமல் வீட்டிற்க்கு வா என்று மட்டும் சொல்ல, சரணும் மறுப்பேதும் கூறாமல் வரேன் என்று ஃபோனை வைத்து விட்டான்.

 

சரணிற்க்கு புரிந்து விட்டது நிமலுக்கு நேத்ராவை பற்றி ஏதோ கேட்க வேண்டும் என்று தான் அழைத்திருக்கிறான், அமைதியாய் இருப்பவன் விஷயம் அறிந்தால் என்ன ஆகுமோ என்று பயந்தவன் நிமலின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான்.

 

இங்கு அறையில் உறங்கும் தன்னவளை பார்த்த நிமலிற்கு அவளை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் வந்தது.

 

இரண்டரை வருடத்திற்கு முன்பு தனது அலுவலகத்தில் தான் நிமல் நேத்ராவை சந்தித்தான். இஸ்லாமியப் பெண்கள் அணியும் கருப்பு நிற ஆடை உடலை மறைத்திருக்க அவளின் மை விழிகள் மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. பார்த்த முதல் பார்வையிலேயே விழுந்து விட்டான் அவளிடத்தில்.

 

நான் கண்டது விழிகளா

அல்ல

என்னை ஈர்க்கும்

காந்தங்களா….

 

பல பெண்கள்

முகம் பார்த்து

தோன்றா உணர்வு

உன் மை விழியைக்

கண்டதும்

தோன்றியதன்

காரணம் தான்

என்ன????

 

என்னுள்ளும்

ஓர் கள்வன்

உள்ளான்….

அவன் இவ்வாறெல்லாம்

ஓர்

பெண்ணின் விழிகளில்

தொலைவான்

என்றும் நினைத்ததில்லை… மொத்தமாய்

கவிழ்ந்திடுவான் என்றும் நினைத்ததில்லை….

 

உன் மை விழிகள்

கண்ட என்

கள்ள விழிகளோ

உன் மலர் முகம்

காண துடிக்குதடி……

என் விழிகளும்

ஏக்கமாய் உன் விழிகளில் கதறுதடி கண்ணே…….

 

 

 

 

இனி நீங்கள் எதிர்பார்த்த காதல் மொழி பேசும் மை விழிகள் ஆரம்பம்.

 

 

 

தொடரும்……. Prabhaas 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்