மனதினில் யாழின் மழை – டீசர்
“இந்த நெக்லஸ் போட்டுக்கோ, இந்த சேரிக்கு இதான் சூட் ஆகும்…” என்றவள், அவள் சங்கு கழுத்தில் அந்த அட்டிகையை அணிவித்தாள்.
“போட்டோல பார்த்தே அண்ணாத்த பிளாட்டு. நேர்ல பார்த்தால், இங்கே இருந்திடுறேன் அடம் பிடிக்க போறாரு…” எனக் கேலி செய்யவே, வெட்கத்தில் அவ்வனிதை வதனம் சிவந்தாள்.
“பார்ரா… அம்மணிக்கு வெட்கத்த”
“சும்மா இரு டி”அவளை அடக்கினாலும் அவளது வெட்கம் மட்டும் அடங்கின பாடில்லை. உள்ளே இருவர் மட்டுமிருக்க, தன் பேத்தியைக் காண வந்தார் அலமேலு.
“என் ராசாத்தி எம்முட்டு அழகா இருக்கா? என் கண்ணே பட்டுடும் போல இருக்கே …! ” அவளை சுற்றிவழித்து நெற்றி முறுக்கினார்.
“மாப்பிள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…” என வெளியே சத்தம் கேட்க, “அவிக வந்துட்டாங்க போல, நான் போய் பார்க்கறேன் என்ன” என அவளை மீண்டும் கொஞ்சியவர் பக்கத்தில் நிற்பவளை கண்டு முகம் சுருக்கினார்.
” ராசாத்தி அந்தச் செயினு விலகிருக்கு பாரு அத, சரி செயி…!” என்றவர் பக்கத்தில் நிற்பவளை கண்சாடையில் அழைத்தார்.
“என்ன?”
“இங்க பாரு என் பேத்திய பொண்ணு பாக்கவந்திருக்காக, அவிக முன்னாடி வந்து இப்படி ஆடிட்டு நிக்காத. அவிக போற வரைக்கும் உள்ளயே இரு புரியுதா?” என சுருக்கென குத்தி விட்டு போக, அமைதியாக அவளருகில் தன் வலியை மறைத்து சிரித்த முகமாக நின்றாள்.
நடுக் கூடத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, வழக்கம் போலே உடன் வந்தவர்கள் ” பொண்ண வர சொல்லுங்க” என்றிட, வானதியும் அறிவுமதியும் அறைக்குள் நுழைந்தனர்.
“யாழு, சைலுவ கூட்டிட்டு வா மா…!” எனவும், “அத்த, நான் வரல, நீங்களே இவளை கூட்டிட்டு போங்க” தயங்கிய படியே கூறியவளை மூவரும் வித்தியாசமாகப் பார்த்தனர்.
“என்ன என் மாமியார் எதுவும் வெளிய வரக் கூடாதுனு சொன்னாங்களா?” வானதி கேட்கவும் தலை குனிந்தாள்.
“அந்த கிழவி சொல்லுதுனு என் கூட வர்றாம இருக்க போறீயா டி …!”
“இல்ல டி அது வந்து…” யாழினி மேலும் தயங்கிட, ” இங்க பாரு மருமகளே, எனக்கு நீயும் சைலஜாவும் வேற வேற இல்ல. நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னும் தான் மா …போட்டோவ பார்த்து பிடிச்சி தானே பொண்ணு கேட்க வந்தாங்க… அப்படியும் உன்ன பார்த்து பிடிச்சிருக்கு சொன்னால் என்ன? நாங்க சைலுக்கு இன்னொரு வரன பார்த்துட்டு போறோம் இதுல என்ன டி இருக்கு என் மருமகளே…! நேரமாச்சு உன் தோழிய அழைச்சிட்டு வா…!” எனவும் தயங்கியே தன் அன்னையை பார்த்தாள், அவரும் தன் கண்ணசைவில் வா என்றார்.
“கூட வாடி கொஞ்சம் நேர்வஸ் இருக்கு…”அவள் கையோடு கை கோர்த்து அறைக்கு வெளியே அழைத்து வந்தாள். கூடத்தில் சைலு வந்து நின்று அனைவருக்கும் வணக்கம் வைத்தாள்.
ஏற்கெனவே போட்டோவில் பார்த்து பிடித்து போக, சம்பிரதாயத்திற்காக நேரில் சந்திக்க வந்திருந்தனர்.
“ம்ம்.. பரவாயில்ல, போட்டோல விட மாப்பிள்ளை நல்லா தான் இருக்கார். எங்க ஆன்லைன் ஆடர் பண்ண துணிக்கணக்கா, கலர் மாத்தி வந்திருவரோனு நினைச்சேன்… ” என சைலுவிற்கு மட்டும் கேட்கும் படி கேலி செய்தாள் யாழினி.
“அடியே சிரிப்பு காட்டாத டி, அப்புறம் அப்பத்தா டிசப்பிளின் கிளாஸ் எடுத்து உயிர வாங்கும். அமைதியா இரு டி …!” என்று, அவளை ஒரு இடி இடித்தாள் சைலு.
“என்ன டா, நீ சொன்னது போல நேர்ல பார்த்தாச்சு பொண்ணு பிடிச்சிருக்கு தானே …?” வித்யா தன் மகன் விமலிடம் கேட்க, அவனும் ” பிடிச்சிருக்கு மா” என்றான்.
“பொண்ணுக்கு?” என அனைவரும் பொண்ணைப் பார்க்க “சரி” என்று தலையை அசைத்தாள்.
“அப்றம் என்ன தேதி குறிக்க வேண்டியது தானே?” கூடத்தில் ஒருவர் சொல்ல, சிரித்த முகத்தோடு, ” குறிச்சிடலாம்ங்க” என்றவர், வானதியிடம்” சைலுவ உள்ள கூடிட்டிபோமா” என்றார் மதுசூதனன்.
“சரிங்க ” என அவரும் யாழுவையும் சைலுவையும் உள்ளே போகச் சொல்ல இருவரும் உள்ள செல்லவிருக்கும் போது” ஒக்க நிமிஷம் ” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினர்.
விமல் அருகில் அமர்ந்திருந்தவன், தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் விமலின் தாய் சரோஜாவிடம் ” அண்டி, நாக்கு இ அம்மாயி இஷ்டம்” என்றான் சுந்தர தெலுங்கில்.
தன்னை பார்த்து ஏதோ சொல்வதைக் கண்டு குழம்பி போன யாழினி, ” என்னடி சொல்றான் அந்த வைகுண்டபுறம் …?” சைலுவின் காதைக் கடிக்க, “எனக்கும் புரியல டி” உதட்டைப் பிதுக்கினாள்.
சரோஜாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை கைகளை பிசைந்து தயங்கியவர் தன் மருமகன், தனவ் ஹர்ஷவர்தனை பார்க்க, அவனோ சொல்லுமாறு கண்களாலே கெஞ்ச, சரோஜாவோ தன் கணவனை பார்த்தார். அவரும் “சொல்” என்றார்.
“அது ஒன்னும் இல்லங்க சம்மந்தி, இவன் என் அண்ணன் பையன். இவனுக்கு எல்லாமே நான் தான். விமலும் இவனும் எனக்கு வேற வேற இல்ல… இவன் என்ன சொல்றான்னா, இவனுக்கு சைலுவோட பிரண்ட பிடிச்சிருக்காம்… ” என இழுத்தவர், யாழினியின் தலையில் இடியை இறக்க, ஸ்தம்பித்து நின்றாள்.
*******************************************
“ஓ… அவங்க பேசி முடிச்சிட்டாங்க, நீயும் சம்மதம் சொல்லிட்ட, அப்படி தானே?” எனக் கொதித்து போயி கேட்டான் கிருஷ்.
“நான் எங்க கிருஷ் சம்மதம் சொன்னேன். அவங்களா முடிவெடுத்துட்டாங்க, என்னால் அங்க எதுவும் பேச முடியல டா”
“எதுவும் பேச முடியலன்னா, அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்க போறீயா யாழினி?” எனவும் அவள் அமைதியாக இருக்க,
“ஓ… அப்ப மேடம் முடிவெடுத்துட்டு தான் என்னை பார்க்க வந்திருக்கீங்க? இவன் கிட்ட இன்ஃபோர்மேஷன் சொன்னா போதும்னு நினைச்சிட்டல … !”
“கிருஷ், நான் அப்படி நினைக்கல நான் உன்னை தான் லவ் பண்றேன். உன்ன தான் கல்யாணமும் பண்ணிப்பேன்… ” என்றிட, ” அப்போ போய் இந்தக் கல்யாணத்த நிறுத்து…” என்றதும் மீண்டுமவள் அமைதியாக நின்றாள்.
” இப்படி அமைதியா இருக்காத டி, எனக்கு உன்னை கொன்னு போடுறளவுக்கு கோவம் வருது…” என்று பல்லை கடித்தவன் கை முஷ்டியை இறுக்கினான்.
“எங்க வீட்லே வந்து பொண்ணு கேளு கிருஷ்” என்றாள்.
“என்ன டி விளையாடுறீயா, நாம இன்னும் காலேஜே முடிக்கல, இதுல பொண்ணு கேளுன்னா உங்க அப்பன் எப்படி
பொண்ணு குடுப்பான்? “
“படிச்சி முடிச்சதுக்கு அப்றம் கல்யாணம் பண்ணிக்கறேன் சொல்லு கிருஷ்…” என்றாள்.
“ஏன் இந்த வியாக்கியானத்த உன் அப்பன் கிட்ட நீ சொல்றது.என்னை ஏன் டி சொல்ல சொல்ற? “
“எங்க அப்பாக்கு காதல்ன்னா பிடிக்காது கிருஷ்… நாம காதலிக்கறோம்னு அவர் கிட்ட சொல்ல முடியாது, அதான் பொண்ணு கேக்க சொல்றேன்…” என்றவள் கெஞ்ச,
“அப்ப ஏன் டி என்ன காதலிச்ச? நீ என்னை காதலிக்கிறேன் உன் அப்பன் கிட்ட சொல்ல மாட்ட, நான் வந்து பொண்ணு கேட்டு, வேலை இல்லாதவனுக்கு என் பொண்ணானு என்னை அசிங்க படுத்துவான் அதை கேட்டு நிக்கணுமா?, போ போய் உங்க அப்பன் சொல்றவன கல்யாணம் பண்ணிக்க… போடி”என்று கோபமாக சென்று விட்டான்.
.
ஏன்மா யாழு…அங்க வச்சே நான் வேற பையன லவ் பண்றேன்னு சொல்றதுக்கு என்னமா….சரி தனியா கூப்டு ஷைலு கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல…அத விட்டுட்டு கல்யாணம் முடிவானதுக்கு அப்புறம் இங்க வந்து புலம்புற….இந்த பய சொல்றதும் வாஸ்தவமா தானே இருக்கு….இப்போ என்னமா பண்ணப்போற…..
இவன் அத்தை பையனுக்குப் பொண்ணு பாக்க வந்தானா?? இல்ல, அவனுக்கு பொண்ணு கெடைக்குதான்னு பாக்க வந்தானா??? பாவம் யாழ், ஒரு பக்கம் குடும்பம், ஒரு பக்கம் காதல் னு மாட்டிக்கிட்டு இருக்கா…