நீயின்றி நானில்லையே 👫
அத்தியாயம் – 1
அந்த மத்தியான வேளையில் சாப்பிட்டு முடித்து விட்டு தனது கல்லூரியின் சொட்டையன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற ராஜேந்திரன் ப்ரொபசரை எதிர்நோக்கி இருந்தனர் அந்த BBA மூன்றாம் வருட மாணவர்கள் .
” ஓய் இண்ணைக்கு சொட்டையன் வர மாட்டான் போலயே . ஆனா அவன் டான் னு 2 மணிக்கு வரவனாச்சே . என்ன இன்னும் காணோம்” என்று அந்த வகுப்பின் தலைவி நீதுவிடம் கேட்டுக்கொண்டிருந்தான் வித்யேந்திரன் .
” ஏண்டா . நான் நிம்மதியாக இருந்தா உனக்கு பிடிக்காதா ஹான் …. அவன் வந்து என்ன கொல பண்ணல னா தூக்கம் வராது போல ” என்று சங்கீதம் பாட ஆரம்பித்தாள் நீது எனப்படும் நீது கிருஷ்ணா .
இவர்கள் பேசிக்கொண்டு இருக்க இவர்கள் தேடிய சாரும் வந்து சேர்ந்தார் . வந்த உடனே
” நீது கம் அவுட் ” என்றார் .
” வந்த உடனேயேவா 🤦 ” என்று விட்டு வெளியே சென்றாள் .
” பிரின்சிபால் உன்ன தேடுறாரு . போய்ட்டு வா ”
” ஓகே சார் ” நீது
ப்ரொபசரிடம் கூறிவிட்டு பிரின்சிபால் அறையை நோக்கி சென்றாள் நீது . உள்ளே நுழையவும் நீதுவிற்கு அதிர்ச்சி . அங்கு இருந்தவர் வேறு யாரோ ஒருவர் .
” கம் இன் நீது . ”
” ஹூ ஆர் யூ மிஸ்டர் . வேர் இஸ் ஆர் பிரின்சிபால் ” ( Who are you Mr ? Where is our principal ? ) நீது .
” ஹீ ஸ் மை ப்ரெண்ட் . ஹீ வில் பீ பேக் வித் இன் ஒன் ஆர் ” ( He is my friend . He will be back with in one hour ) .
அவரை முறைத்தவாறே அறையை விட்டு வெளியேற முனைந்தாள் நீது . ஆனால் அவள் வெளியே செல்லாத படி ஒரு கை தடுத்தது . அது வேறு யாருமல்ல அதே நபர் தான் . நீது அவரை நோக்கி குத்தீட்டி பார்வையைச் செலுத்தினாள் . ஆனால் அவரோ அவளை அலேக்காக தூக்கி விட்டார் .
அவளை பிரின்சிபால் அறையின் பக்கத்து அறைக்குத் தூக்கிச் சென்றார் . நீதுவின் அலறல் அதிகரித்தது . அவரது தோள்பட்டையில் சரியாக தனது கூரிய பற்களால் பதம் பார்த்தாள் . ஆனால் அவரோ அசைந்தே கொடுக்கவில்லை .
நீதுவைப் பொறுத்தவரை அதிகமாக அலறினால் மயக்கம் போட்டு விழுந்து விடுவாள் . காணாக் கூடாத காட்சிகளைக் கண்டால் கேட்டால் மயங்கி விழுவாள்.
அவரது கைகள் அவளது தோள்களில் அத்துமீறப்போக நீது மயங்கி விழுந்தாள் . அவள் விழித்துக் கொள்ளும் போது அவளது அருகில் அருகில் இருந்தது ஒரே ஒரு நபர் தான் . அது வேறு யாருமல்ல . பிபின் .
” பிபினு பிபினு …. நான் …. நான் ... ” என்று தந்தியடிக்கும் வேலையைத் திறம்படச் செய்து கொண்டிருந்தாள் .
” என்ன செல்லக்குட்டி . வாய் திறந்து ஒரு வார்த்தை என்கிட்ட பேச மாட்ட . இண்ணைக்கு என் நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சுருக்க ” பிபின் .
ஆனால் அவளோ தந்தியடிக்கும் பணியைத் தொடர அவனுக்கு சிரிப்புதான் வந்தது . அவள் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்தப் பழைய நபர் நிற்க இப்போது வீல் என அழ ஆரம்பித்தாள் . ” என்னக் காப்பாத்து …. அ … அவ... வ ”
” என்ன என்னடா … ” பிபின்
அவள் நோக்கும் திசையை நோக்க அங்கே நின்றவரைப் பார்த்து , ” ஹாய் டேட் ” என்று அழைத்தபடி எழுந்திட்டான் பிபின் .
நீதுவிற்கு தூக்கி வாரிப்போட்டது. கண்களில் அதிர்ச்சி உறைந்தபடி பார்த்துக் கொண்டிருக்க பின்னாலிருந்து அவளுடைய பெற்றோர் சந்தோஷமாக பிபினின் தாயிடம் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்தாள் . நீது சற்றே குழம்பிப் போனாள் . அவளை மேலும் குழம்ப விடாது அவளது அன்பு அண்ணன் நித்தியனும் பிபினின் செல்லத் தங்கை சமுத்திராவும் வந்துத் தொற்றிக் கொண்டனர் . கலகலப்பாகப் பேசிக் கொண்டு இருந்தாலும் அவளது முகத்தில் குழப்ப ரேகைகள் படர்வதை பிபின் உணர சமுத்திராவுக்குக் கண்களால் ஜாடை காட்ட நித்தியனும் சமுத்திராவும் அவளை ஒரு மரத்தடிக்கு கூட்டி வந்து அவளோடு விளையாட ஆரம்பித்தனர் . நீது குழப்பம் மறந்து மன அழுத்தம் நீங்க விளையாடினாள் . அவர்கள் விளையாடும்போது பிபின் வர மற்ற இருவரும் ஒதுங்கிக் கொள்ள நீதுவும் பிபினும் தனித்து விடப்பட்டனர் .
தொண்டையைச் செருமியவாறே , ” ஏம்மா மேசை மேல் இருந்த கண்ணாடி அ எடுக்குறது ஒரு குத்தமா ” என்று கேட்டான் பிபின் . அவனது பேச்சைப் புரியாத நீது பேவென விழிக்க அவன் சிரித்தவாறே பேசலானான் .
” உன்ன பொண்ணு கேட்டு வர இருந்தோம் . வீட்டுல பொண்ணு பாக்க வர்றாங்க னு சொன்னதும் நீ சுவர் எல்லாம் ஏறி குதிச்சு நல்லவளாட்டும் காலேஜிக்கு வந்துட்ட . உன்ன நான் தான் தூக்கிட்டு வர இருந்தோம் . ஆனா நான் வந்தா எதாச்சும் காலேஜிக்குள்ள விபரீதாமா பேசிட்டு வாங்க னு உன்னோட அண்ணனும் என் அருமை தங்கச்சியும் வர இருந்தாங்க . ஆனா எங்க அப்பா எங்களுக்கு சொல்லாம வந்துட்டாரு . டேரக்டா கூட்டிட்டு வரலாம் னு பாத்தா நீ எங்க அப்பாவ பார்த்ததுமே ஏழு கடலை தொலைச்சதுபோல மூஞ்சிய தூக்கி வைக்க சரி னு ஒரு விளையாட்டு காட்டிட்டாரு . உன்ன தூக்குமுன்னே எனக்கு மெசேஜ் அனுப்பிட்டாரு . உன்னோட வீக்னெஸ் அப்பாவுக்குத் தெரியும் . நீ குலுங்குனதுல அந்த மேசை ல எங்க அப்பாவோட கண்ணாடி விழ அது எடுக்க தான் கை நீட்டுனாரு . அதுக்கே நீ பயந்து மயங்கி விழுந்துட்ட 🙆 ” என்று பேசி முடித்தான் பிபின் .
நெஞ்சத்தில் அவனது நெஞ்சத்தில் நீது தஞ்சம் புகுந்திட எதோ ஒன்று அவளை உலுக்கும் போல இருந்தது .
☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️
” ஏய் எருமை எவ்வளவு நேரம் டி தூங்குவ . மணியப் பாரு . மணி காலை ல 11.00 ஆகுது . இன்னும் கனவு கண்டு தூங்குது பாரு . உன்ன அந்த அண்ணா கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போகுதோ ஆண்டவா ” என்று கத்தி நீதுவை எழுப்பிக் கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி .
அவள் எத்தனை உலுக்கினாலும் எழும்புவேனோ என்று கனவில் மிதந்து கொண்டிருந்தாள் நீது .
” நீது இப்ப எழும்ப போறியா இல்லையா . ஒரு நாள் போனா கல்யாணத்த சென்னைல வச்சுட்டு தூங்குது பாரு எரும . ஏய் மதியம் 1.00 மணி ட்ரெயின பிடிக்கணும் டி . அடியேய் எழுந்திரு டி ” என்று இதோடு 20வது முறையாகக் கத்திக் கொண்டிருந்தாள் அவள் . அவள் யாரு … நீதுவின் உயிர்த்தோழி கீர்த்திகா .
” கீர்த்தி ஏண்டி எழுப்புன … சே எல்லாம் கனவா . என் மன்மதன் அ கட்டிப்பிடித்துக் கொண்டு டூயட் ஆடும் ப தான் வருவா . பே ” நீது .
[( அப்போ இதுலாம் கனவா . சே என் செல்லத்த கொஞ்சம் நேரம் கனவுல கூட கொஞ்ச முடியலயே 😩😪 . இடி விழுந்த கல்யாணம் வேற . சே . பட் அவன் என்ன எல்லாம் நினைக்கக் கூட மாட்டானே . கேவலம் ) என்று மனதில் தனியே புலம்பிக் கொண்டே இருக்கிறாள் நம் செல்லக்குட்டி நீது . 🤭🤣🤣 ]
” ஆமா மத்தந்தா ( நாளை மறுநாள் ) கல்யாணம் வச்சுட்டு இப்ப டூயட் ஆடு . எரும நாம 1.00 மணி ட்ரெயினுக்கு கிளம்புனா தான் வீட்டுக்கு நைட்டுக்குள்ள போய் சேர முடியும் . 10.00 மணிக்கு அடுத்து சென்னைக்குக் கிளம்பணும் . சீக்கிரம் கிளம்பு அம்மா 100 டைம் கால் பண்ணிட்டாங்க . பயந்து நான் அட்டெண்ட் பண்ணல. சீக்கிரம் கிளம்பேண்டி . ” கீர்த்திகா .
” ஹேய் நீது ஒரு விஷயம் தெரியுமா அந்த பிபின் ல ” என்று ஓடி வந்தாள். நித்திலா .
” யாரு டி ” நீது
” அட தீஞ்ச முட்ட … 🤦 . உன் பின்னாடி 5 வருஷமா திரிஞ்சானே டி ” சந்திரா
” ஆமா இப்ப தான் விலகிப் போய்ட்டானே . அண்ட் இப்ப நாங்க நார்மலா பேசிக்கிறோம் . ஒரு வருடம் முன்பு டெல்கி ல வேலை கிடைச்சதா கிளம்பி போனானே . நேத்து தான் மெயில் போட்டான் . அவனுக்கு கல்யாணம் னு . எனக்கு கல்யாணம் அண்ணைக்குத் தான் அவனுக்கும் கல்யாணம் . அவன் பெரிய கம்பெனி ல வேலை பாக்குறான் . சென்னை ல ஒரு பெரிய ஹால் ல கல்யாணம் ஏன் ண்ணி இருக்கானாம் . ” என்று கூலாக சொன்னாள் நீது .
” நான் சொல்ல வந்தது வேற விஷயம் டி . அவன் ஒரு பெரிய பணக்காரன் டி . இந்தியா ல உள்ள டாப் மோஸ்ட் பிஸ்னஸ் மேன் ல 2வது அவன் தான் . அவங்க கம்பெனி 19வது இடத்துல இருந்துருக்கு . இந்த ஒரு வருஷத்துல 2வது ப்ளேஸ் வந்துருக்கு . எப்படி பார்த்தாலும் அவன் பெரிய பணக்காரன் . அவனையே நீ வேண்டாம் னு சொல்லி இருக்க ” என்று குழப்ப ஆரம்பித்தாள் .
” கீர்த்திகா சற்று வெளியே சென்று அனுஷியாவிடம் , ” நீ கொஞ்சம் திருச்சி வர முடியுமா ” என்று கேட்டாள் .
” அக்கா நான் திருச்சி ல தான் இருக்கேன் . அண்ணாவும் என் கூட இருக்காங்க . ” அனுஷியா
” ஃபோன் குடுமா ” கீர்த்திகா
” என்னமா ” பிரபஞ்சன்
” அண்ணா அனுஷியாவ மட்டும் எங்க ஹாஸ்டல் முன்னால் கொண்டு விடுங்க . இங்க ஒரு ஏழர நீதுவ குழப்பிட்டு இருக்கு . எல்லா உண்மையையும் உளருது . அவள நல்லா குழப்புறா . விட்டா கல்யாணம் வேண்டாம் னு சொல்லுவா போல இருந்தது ” என்று கல்யாண மாப்பிள்ளையிடம் புலம்பினாள் கீர்த்திகா .
” பயப்படாத . நான் பாத்துக்குறேன். இப்போ அனுஷியா வருவா ” பிரபஞ்சன் .
” சரி அண்ணா ” கீர்த்திகா .
பேசி முடித்துவிட்டு நீதுவிடம் காரமாக பேசி ஹாஸ்டலை விட்டு வெளியே வர அங்கு அனுஷியா நிற்க அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்துக் கொண்டு வந்தாள் நீது . அனைவரும் தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர் .
நாமும் புறப்படுவோம் …
தொடர்ந்திடும் பயணங்கள் …
– என்றென்றும் அன்புடன் சில்வியா மனோகரன் 🙈