Loading

 

அத்தியாயம் – 4

 

           நீது சற்று கத்திப் பேச தமிழினி ” அது … அது வந்து … ” என்று தந்தியடித்தாள் . அவள் தந்தியடித்து முடித்து விட்டு அருகில் இருந்தோரிடம் கண்ணடித்துக் காட்ட அனைவரும் கோரசாக , ” April fool ” என்று கத்திட நீது முதலில் முழித்தாள் . 

 

         நிரஞ்சன் தன் முகத்திலிருந்து உறையை எடுக்க நீது பேவென முழித்தாள் . ” புஜ்ஜி பாப்பா உனக்கு லைட்டா ஷாக் தந்து பாக்கலாம் னு நினைச்சோம் . அதான் . நீ வேற ரொம்ப அப்பாவியா இருக்க ‌ . இங்க நிறைய கொரங்கு கூட்டம் இருக்கு . அதுல இருந்து தப்ப நீ அப்பாவியா இல்ல அவங்களுக்கு மிஞ்சுனவளா இருக்கணும் . ரொம்ப பயப்படாத . நாங்க எப்பயும் இங்க இருப்போம் னு சொல்ல முடியாது . பிரபஞ்சன் கூட அடிக்கடி கான்ஃபரன்ஸ் மீட்டிங்காக வெளியூர் போக வேண்டிய நிலை ஏற்படும் . நீ தான் உனக்கு பாதுகாப்பு . இங்க மோஸ்ட்லி யாரையும் நம்பாதே … ஓகே ” நிரஞ்சன்

 

   பின்னர் புரிந்தவளாய் , ” அடப்பாவிகளா ” என்றபடி அனைவரையும் துரத்த ஆரம்பித்தாள் . எப்படியோ அவர்களின் அடிதடி முடிய வந்து அமர்ந்திருக்க நீது திரும்ப , ” பிபின் னு எதுக்கு ” என்று இழுக்க தமிழினி எதோ பேச வர , பிரபஞ்சன் இடைமறித்து , ” பாப்பு வா நான் சொல்லுறேன் . நீ என்கூட வா . நாம கைகோர்த்து நடந்தபடி பேசியதே இல்ல . அப்படி பேசுவோமா ” என்று கேட்டபடி நிரஞ்சனைப் பார்த்து கண்ணடிக்க அங்கிருந்தோர் அனைவரும் , ” ஓ… ” என்றிட வெட்கம் கொண்டவளாய் தலைகுனிந்தாள் நீது . 

 

   ‌‌ பிரபஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு ஒரு மரத்தின் அடியில் நடக்கத் தொடங்கினான் . 

 

   ” நீது . அங்க இருந்து சொன்னா நிறைய பேருக்கு பழையது நினைவு வரும் . சில விஷயங்கள் மனசுக்குள்ள அடைந்து கிடக்குறது தான் நல்லது . ” பிரபஞ்சன் .  

 

    ” அதும் சரி தான் . நீ காரணம் சொல்லு ” நீது . 

 

     ” விட மாட்டியே . சரி சொல்லுறேன் . என்னோட அப்பா அம்மா பத்தி சொன்னது ஆதியின் உறவு எல்லாம் உண்மை தான் . நிரஞ்சன் , அனுஷியா , என்னோட உறவு தான் வேற . நாங்க எல்லாம் ஒரே ஹோம் ல தான் வளர்ந்தோம் . ஆதிரன் அம்மாவுக்கு பிள்ளை இல்லாம 5 வருஷம் இருந்தாங்க . அவங்க பிள்ளை தத்தெடுக்க எங்க ஹோம்க்கு வந்தாங்க . அப்போ தான் எங்கள பார்த்தாங்க .

 

    எனக்கு ஒரு தங்கை . அதுதான் அனுஷியா . 

 

நிரஞ்சன் அவனோட வீட்டுல தனி . அவங்க அப்பா பெரிய பணக்காரர் . அவனுக்கு ஒரு தங்கச்சி தான் . நீ சொன்னா நம்ப மாட்ட . அவனோட தங்கச்சி பாப்பா பெயர் கூட நீது தான். அவங்க வீட்டில் எல்லாரும் டூர் போனப்போ அவங்க கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு . அவனுக்கு அவனோட தங்கச்சி னா

 

ரொம்ப பிடிக்கும் . இந்த சிட்டுவேஷன் ல ‌எல்லாரும் அவங்க ஃபேமிலி எல்லாரும் இறந்துட்டாங்க . அவன் மட்டும் ரொம்ப அடியோட தப்பிச்சான் . வந்த புதுசுல யாரு கூடயும் சேர மாட்டான் . ஆனா அனுஷிய்வுக்கும் எனக்கும் எப்பயும் அடிதான் . அவனுக்கு எங்க அடி பாத்து ரொம்ப சிரிப்பு வரும் . எங்கள பிரிச்சு விட அங்க உள்ளவங்களுக்கே நேரம் சரியா இருக்கும் . இவன் வந்த பிறகு தினமும் இவன் தான் வந்து பிரிச்சு வைப்பான் . அவளோட குறும்பு ல மெய் மறந்து சிரிப்பான் . பழையதை மறக்க ஆரம்பிச்சான் . நாங்க 3 பேரும் ஒரே குடும்பம் போல வாழ ஆரம்பிச்சோம் . 

 

     அந்த நேரத்தில் ஆதிரனோட அம்மா வந்தாங்க . அவங்க அண்ணாக்கு சமுத்திரா இருந்தா . அவங்க இரண்டு குடும்பமும் சேர்ந்து இருந்த நேரம் அது . தத்தெடுக்க வந்தவங்க ஆண் குழந்தை க்கு வந்து கடைசியில் அனுஷியாவ கூட்டிட்டு போக நிக்க அவ போய் என் அண்ணன்களையும் கூட்டிட்டு போனா நானும் வருவேன் னு ஓலம் போட எங்களையும் கூட்டிட்டு வந்தாங்க . ஏற்கனவே அனுஷியாவுக்கும் எனக்கும் அடி பயங்கரம் . அதனால் நிரஞ்சனும் அனுஷியாவையும் ஆதிரனோட அம்மா தத்தெடுத்தாங்க . அப்புறமா நான் சமுத்திரா வீட்டுக்கு வந்தேன் . சமுத்திரா என்கூடவே சுத்துவா . நானும் அவளும் சேந்து திரிஞ்சோம் . கொஞ்சம் நாள் ல ஆதிரன் அம்மா கன்சியூவ் ஆனாங்க . ஆதிரன் பிறந்தான் . இரண்டு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை . பொண்ணுங்க ரெண்டும் சேந்தா அவன் உயிர் காலி ஆகிடும் . இப்பயும் அப்படித்தான் . 

 

   சமுத்திராவுக்குப் பிபின் ங்குற பெயர் ரொம்ப பிடிக்கும் . அதாவது சமுத்திரா அம்மா நாங்க வரும்முன்னே ஒரு பாப்பா 6 மாசத்தில் பிறந்து இறந்துருக்கு . அவனுக்கு பிபின் னு தான் பெயர் வைக்கணும் னு அவ நினைச்சிருந்தா . 

 

    ஒரு நாள் அவ டைரி படிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சு . அடிக்கடி யாராவது பிபின் னு எங்கயாவது கூப்பிட்டா ஆசையா திரும்பி பாத்துடுவா . அவ ஆசை நிறைவேற என்னோட பெர்த் செர்டிபிகேட் , எல்லா செர்டிஃபிகேட் லயும் பெயர் பிபின் னு சேஞ்ச் பண்ணிட்டேன் . அதனால் தான் பிபின் னு பெயர் . ஆனா அனுஷியாக்கு பிரபஞ்சன் பெயர் ரொம்ப பிடிக்கும் . அதுனால அனுஷியா அண்ட் ஃபேமிலி மெம்பர்ஸ் பிரபஞ்சன் னு கூப்டுவாங்க . சமுத்திரா என்ன பிபின் னு கூப்பிடுவா . உன்ன ஏமாத்த வசதியா இருக்க எல்லா இடத்திலும் பிரபஞ்சன் னு போட்டு வேலை பார்த்தாங்க . பட் என்னோட சைன் ( sign ) எல்லா இடத்திலும் பிபின் னு தான் இருக்கும் ” என்று பெரிய புராணம் கூறி முடித்தான் பிரபஞ்சன் என்ற பிபின் . 

 

    ” ஹான் நிரஞ்சனோட பிராப்பர்டி எல்லாம் அவனோட 18 வது வயது ல அவனுக்கு வந்துச்சு . அவனோட தங்கச்சி னு ஒரு பங்கு தனியா ஒதுக்கி வச்சுட்டு மற்ற பங்கு எல்லாம் காலேஜ் முடிச்சதும் எடுத்து நாலு பங்கா பிரிச்சு எங்களுக்கும் சேர்த்தே குடுத்தான் . நாங்க ஏத்துக்கல னா வீட்ட விட்டு போயிடுவேன் னு மிரட்டி எழுதி வச்சுட்டான் குரங்கு . ஆதிரன் ஃபேமிலி யும் எங்களுக்கு அவங்க சொத்த சொந்த பிள்ளையா எண்ணி எழுதி வச்சாங்க . அப்புறம் நாங்க கம்பெனி கைல எடுத்ததும் எல்லா இடத்திலும் ப்ராஞ்ச் ஓபன் பண்ணி வேலை ஸ்டார்ட் பண்ணிட்டோம் . அதுல தான் நாங்க இப்படி 2வது பணக்காரன் ஆனது . இது தான் பணக்கார விபரம் . உன்ன குழப்புனது சந்திரா தானே . அவ என் பேக் ரௌண்ட் தெரிஞ்சு என் பின்னாடி சுத்துனா . அவள பத்தி தெரிஞ்சு விலகிட்டேன் . என்ன பொறுத்தவரை பணம் இல்ல . எங்க ஐந்து பேரையும் ஒண்ணு போல பாத்துக்கணும் . தனியா பிரிக்கக் கூடாது . நீ பிரிக்க மாட்ட னு நம்புனேன் . அவ்வளவு தான் . ” என்று அடுத்த கதையைக் கூறி முடித்தான் பிரபஞ்சன் என்ற பிபின் .

 

 

தொடரும் … 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்