ஊர் நடுவிலே காணப்பட்ட அந் நவீன வசதிகளுடன் கூடிய ஹோட்டலை ஒட்டிய திருமண மண்டபத்தில் ஒரு வாரமாக மொத்த ஊர் மக்களும் திரண்டு காணப்பட்டனர்.
அனைவரும் ஆங்காங்கு கூடி திருமண வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.
மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
சிறுவர் பட்டாளமே ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
இளம் பட்டாளத்தின் கேலிக்கூச்சல்களும் குறைவில்லாமல் ஒலித்தன.
மண்டபத்தின் முன் வாயிலில் பூக்களால் “JANANI weds PREM” என மணமக்களின் புகைப்படத்துடன் பெயர் பொறிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
“ஏய்..ஜனனி…இன்னெக்கி நீ தான்மா கல்யாணப் பொண்ணு.. ஏன் இப்படி டென்ஷனா மொபைலும் கையுமா இருக்காய்…”
“மேடம்க்கு இன்னும் ரெண்டு நாளெக்கி ப்ரேம் அண்ணாவ பார்க்காம இருக்க முடியல போல.. அதனால தான் இப்படி மொபைல்லயே கடல போடுறாங்க…”
என மணப்பெண் ஜனனியின் தோழிகளான அஞ்சலி மற்றும் திவ்யா பேசி சிரித்துக்கொள்ள, தோழிகளின் கிண்டலில் மொபைலிலிருந்து கவனம் சிதறிய ஜனனி அவர்களை முறைத்த வண்ணம்,
திவ்யா
“கடவுளே! இந்த இராட்சசி கிட்ட இருந்து எங்க நித்யாவ காப்பாத்து…” என மேலே பார்த்து உரக்கக் கூறிய திவ்யா ஜனனியின் அடியைப் பெற்றாள்.
அவ் அறையே இவர்களின் சிரிப்பலைகளால் நிறைந்திருந்தன.
அதே நேரம் அங்கு மணமகனுக்கென ஒதுக்கிய அறையில், “மச்சி..நீ பண்ணுறது உனக்கே நியாயமா இருக்காடா? இதோ நிக்கிறானே ஆரவ் அவன் 5 வருஷமா பிரியாவ காதலிச்சி ஒரு வழியா வீட்டுல எல்லா பேசி முடிச்சிட்டான்.. வினோத் கல்யாணமே பண்ணிக்கிட்டான்.. நம்ம மற்ற ப்ரென்ட்ஸ் மேக்சிமம் கொமிடட்..இங்க அப்பாவியா ஒரு ஜீவன் சிங்கிளாவே சுத்திட்டு இருக்கானே அவனுக்கு தங்கச்சியோட ப்ரென்ட்ஸ இன்ட்ரு பண்ணுவோம்னு ஒரு அறிவு வேணாம்?” என தனக்குத்தானே வக்காலத்து வாங்கிக்கொண்டு இருந்தான் ப்ரேமின் தோழன் ஹரிஷ்.
“ஹஹஹா..டேய் இப்படி கூட இன்டீரெக்டா சொல்ல முடியுமா மச்சி தங்கச்சி ப்ரென்ட்ஸ இன்ட்ரு பண்ணி வைக்க சொல்லி..” என பதிலுக்கு கலாய்த்தான் ஆரவ்.
“போதும்டா நிறுத்து..நான் டிரெக்டாவே சொல்றேன் எனக்கு அதுங்கல இன்ட்ரு பண்ணுடா.. நானும் காலங்காலத்துல காதலிச்சி கல்யாணம் பண்ணி இந்த சிங்கிள்ஸ் சங்கத்துல இருந்து ஓரமாகிக்கிறேன்..” என்ற ஹரிஷின் கூற்றில் இவ்வளவு நேரமும் அமைதியாக தன் நண்பர்களின் கூத்தை வேடிக்கை பார்த்த ப்ரேம்,
“ஹரி..நீ எவ்வளவு ட்ரை பண்ணிணாலும் யூஸ் இல்லை மச்சி.. ஜானு ப்ரென்ட்ஸில் முக்கால்வாசி பேர் கொமிடட்..” ப்ரேமின் பேச்சில் கடுப்பான ஹரிஷ்,
“மீதி கால்வாசி பேர் இருப்பாங்க தானே.. நான் அதில் யாராச்சும் ஒருத்திய கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. டேய் சர்வேஷ் நீயும் வரியா என் கூட? என் ஆள பாக்க போறேன்.. பார்த்து சேதி பேச போறேன்..” என பாடியவாறு ஹரிஷ் அவ் அறையை விட்டு வெளியேறினான்.
இவ்வளவு கலவரம் நடந்தும் இது வரை அமைதியாக வேறு யோசனையில் இருந்த தன் உற்ற தோழன் சஜீவ் சர்வேஷ் ஐ அப்பொழுது தான் கவனித்தான் ப்ரேம்.
“டேய் சர்வேஷ்..என்னடா யோசனை?” என்று ஆரவின் உலுக்கலில் சுயநினைவடைந்தவன்,
“ஆஹ்…ஒன்னுமில்லடா ஆரவ்.. எங்க மற்ற யாரையும் காணோம்..” என்க,
“அது சரி..சேர் இந்த உலகத்துலே இல்லையே மச்சான்..” என ப்ரேம் சர்வேஷின் முதுகில் அடித்தான்.
“சரி சரி வாங்க நாமலும் போகலாம்.. இந்த ஹரி பையன் வெளியே என்ன கோமாளித்தனம் பண்ணுறானோ?” என்றவாறு ப்ரேமையும் சர்வேஷையும் வெளியே இழுத்துச் சென்றான் ஆரவ்.
மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கார்டனில் ஜனனி தன் தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருந்த இடத்திற்கு வருகை தந்த ஹரிஷ்,
“ஹாய் கேர்ள்ஸ்.. வாட்ஸ்ஸப்.. ஐம் ஹரிஷ்.. யூ கேன் கால் மீ ஹரி.. ஐம் ப்ரேம்ஸ் ஃப்ரென்ட்.. ஜனனி சிஸ் நோவ்ஸ் மீ வெல்.. தென் ஹவ் ஆர் யூ ஆல்? “
“எதுக்கு அண்ணா இது எல்லாம் எங்க கிட்ட சொல்றீங்க?” என அப்பாவி போல் முகத்தை வைத்தவாறு அஞ்சலி வினவ,
திவ்யாவின் மேல் தன் பார்வையைப் பதிந்திருந்த ஹரிஷ் அஞ்சலியின் அண்ணா என்ற அழைப்பில்,
“இப்படி சட்டுன்னு அண்ணாணு சொல்லி என்னோட இந்த சின்ன ஹார்ட்ட டேமேஜ் பண்ணிட்டியேம்மா…” என்றவாறு நெஞ்சில் கை வைக்க,
இவ்வளவு நேரம் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த ஜனனி, அஞ்சலி, பிரியா, திவ்யா என அனைவரும் கலகல என சிரித்து விட,
பிரியா
திவ்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவன் அவளது சிரிப்பில் மெய் மறந்து,
“நீங்க சிரிக்கும் போது ரொம்ப க்யூட்டா இருக்கீங்க..” என கூறவும் திடுக்குற்ற திவ்யா வாயை மூடிக்கொண்டாள்.
“ஹரி அண்ணா.. இப்போ நான், ஜனனி, அஞ்சலி கூட தான் சிரிச்சோம்.. அது என்ன திவ்யாவோட சிரிப்ப மட்டும் க்யூட்னு சொல்றீங்க..” என ப்ரியா உள்ளுக்குள் சிரித்தவாறு வெளியே கோபமாய் வினவ,
ஹரிஷ் அசடு வழிய ஈஈஈஈ என இளிக்க அஞ்சலி, “அது ஒண்ணுமில்லை ப்ரியாக்கா.. திவ்யா அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தங்கச்சி போல… இல்லண்ணா???” என ஹரிஷை கிண்டல் செய்ய,
“இந்தாம்மா பொண்ணு..உன் பேரேன்ன? ஆங்.. அஞ்சலி பாப்பா.. உனக்கு, ப்ரியா, ஜனனி எல்லோருக்கும் வேணா நான் அண்ணனா இருக்கேன்.. ஆனால் மற்றவங்களுக்கு…..” என இழுத்தவாறு கடைக்கண்ணால் திவ்யாவைப் பார்க்க,
அவன் கூற வந்ததன் அர்த்தம் புரிந்தவள் புன்னைத்தவாறு தலையை தாழ்த்திக்கொண்டாள்.
திவ்யாவுக்கு முதல் பார்வையிலேயே ஹரிஷைப் பிடித்து விட்டது.
அவனது வெகுளித்தனமான குணமும் பேச்சும் அவளை வெகுவாக அவன் பக்கம் ஈர்த்தது.
இவர்கள் பேசிக் கொள்ளும் போது அவள் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் (சைட் அடித்துக்கொண்டு) .
இதைக் கவனித்த மற்ற பெண்கள் மூவரும் கோரசாக,
“ஓஓஓ…ஓஹோ…கதை இப்படி போகுதா??” என கலாய்க்க அவ்விடம் வந்த ஆரவ்,
“என்ன கதை..எப்படி போகுது..” என கேட்டவாறே ஹரிஷின் தோளில் கை போட்டுக்கொண்டான்.
“ஆமாம் யாரோட கதை சிஸ்டர்ஸ்..?” என கேட்டவாறே ப்ரேமுடன் அவ்விடத்தை அடைந்தான் சர்வேஷ்.
ஜனனி, “அது ஒண்ணுமில்லை சஜீவ் அண்ணா நம்ம ஹரி அண்ணாவுக்கு நாங்க எல்லோருமே தங்கச்சிங்களாம்.. ஆனால் ஒருத்தங்க மட்டும் ஸ்பெஷலாம்….” என அவர்களுக்கு கண்களால் திவ்யாவைக் காண்பிக்க,
அதன் அர்த்தம் புரிந்தவர்கள் சிரித்துக்கொண்டு, “மச்சான்…..” என ஹரிஷின் முதுகில் சேர்ந்து அடித்தனர்.
“ஏன் எருமைங்களா..” என ஹரிஷ் முதுகைத் தடவ, திவ்யா வெட்கத்தில் முகம் சிவக்க தலையைத் திருப்பிக் கொண்டாள்.
திரும்பியவள் கண்ட காட்சியில் கண்களை அகல விரித்து, “ஹேய்…ஜனனி அங்க பாருடீ…” என கை காட்ட அவள் கை காட்டிய பக்கம் பார்வையைத் திருப்பியவர்களும் அதிர்ந்தனர்.
❤️❤️❤️❤️❤️
மக்களே!!! முதல் அத்தியாயம் எப்படி இருக்கு… உங்க ஆதரவ வழங்குங்க…
– Nuha Maryam –
Vithyasamana starting sis nalla iruku😍😍😍vegulli payan nu harish ah sonnathu tha konjo ethuka mudila🤭🤭🤭
😂😂 Thanks sis… Keep supporting ☺️
Nice nice
Thank you ☺️ keep supporting