டேபிளின் மீது இருந்த விவாகரத்து பத்திரத்தை பார்த்ததும் அவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது…. கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துக் கொண்டே இருந்தது…. “நான் யாருக்கு எந்த தீங்கு செய்தேன் ….?” எதுக்காக எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலமை….? ஆசைப்பட்டது ம்ம் எனக்கு கிடைக்கவில்லை ..கிடைத்ததும் எனக்கு நிலைக்கவில்லை… எல்லாம் என் தலைவிதி யா இல்ல , யார் செய்த சதியா….? என்னுடைய வாழ்க்கை இப்படி கேள்வி குறியா இருக்கு….. இந்த விவாகரத்து செய்தியை நான் எப்படி போய் எங்க வீட்டில் சொல்லுவேன் ….. அவங்க பார்த்து …. பார்த்து இந்த கல்யாணத்துல ஒவ்வொரு வேலையா செய்தாங்களே…! கடவுளே….! இப்ப நான் என்ன செய்வது….? எனக்கு எதாவது வழி காட்டுங்க….. ‘
அவனுக்கு நம்மளை பிடித்து தானே கல்யாணம் பண்ணிக் கொண்டான்… அப்புறம் ஏன் இந்த விவாகரத்து பத்திரம்…? ஒருவேளை நாம அவனை பிடிக்கவில்லைனு சொன்னதற்காக இப்படி பண்ணி விட்டானா….? “அடேய் …. பாவி பயலே வீட்டுக்கு வாடா…. , உன்னை என்ன செய்கிறேன் பார்..அப்படியே அம்மியில் வைத்து அரைத்து விடுகின்றேன்…. அவளின் மனம் அவனை கழுவி…. கழுவி ஊத்த….. அவளின் கண்களில் கண்ணீர்தான் நின்ற வழியில்லை…. உதட்டில் ஓர் புன்னகை தோன்றினாலும் கண்களில் சோகம் இருக்கத்தான் செய்தது…. கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தவளின் மனது நாட்களை பின்னோக்கி தள்ளி , அதனுடன் பயணித்தது….
ரத்னவேல் வேகமாக வீட்டிற்குள் வந்து, இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டினர் வருவாங்கனு நம்ம புரோக்கர் சொல்லி இருக்காரு மா …. அவர் சொன்ன மாதிரியே மாப்பிள்ளை வீட்டினர் வந்துக் கொண்டு இருக்காங்களாம்” ….. நீ சீக்கிரமா போய் நம்ம பொண்ணை ரெடி பண்ணுமா….
“அவளை நான் எங்க ரெடி பண்ண”… இன்னைக்கு காலையிலே வயலுக்கு ஓடி போயிட்டா,….. அவளை போய் முதல்ல கூட்டி வாங்க….. எங்கையாவது போய் சுத்த வேண்டியது…. இப்ப கூட எந்த பூச்சி பின்னாடி ஓடிக்கொண்டு இருக்காளோ தெரியவில்லை….? இவளை பெண்ணா பெற்றதற்கு பதில் நான்கு நாய் குட்டிகளை வாங்கி வளர்த்து விடலாம்…. என்னை பாடாய்படுத்தி எடுக்குறா”…. “எப்பா முடியல ……! போய் அவளை கூட்டி வாங்க…
எப்ப பாரு அவளை திட்டாதடி …. அவ குழந்தை … உனக்கு என்னுடைய பொண்ணை திட்டவில்லைனா தூக்கமே வராது…..
இங்க பாருங்க அவளை குழந்தைனு இன்னொரு முறை சொன்னீங்க …? அவ்வளவு தான்….. பொங்கி விட்டார் வசுமதி…. குழந்தையினு சொல்றீங்க தானே …! போய் பள்ளிக்கூடத்துல சேர்த்து விடுங்க…. எதுக்கு மாப்பிள்ளையை பார்க்க வர சொல்றீங்க….?
வயசு ஆகுது தானே மா…. கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை நம்முடையது தானே…!
தெரியுது தானே போய் அவளை கூட்டி வாங்க….
தலையை ஆட்டிக்கொண்டே தன் மகளை கூட்டி வர வயல்வெளிக்கு சென்றார் ரத்னம்…
களத்து மேட்டில் படுத்துக்கொண்டு “புத்தகம் படித்துக்கொண்டு இருந்தாள் நுவலி”…..
தன் மகளிடம் வந்தவர் என்னடா பண்ற….?
படித்துக் கொண்டு இருக்கேன் பா….
ஏன்டா ,நம்ம வீட்டில் இடம் இல்லனா….? களத்து மேட்டில் வந்து புத்தகம் படிக்கிற….?
நான் வீட்டில் படிக்க முடியாது…. உங்க இருவரின் சண்டையை தான் பாக்க முடியும்….. எனக்கு தான் பரீட்சை இருக்கே “அதற்கு நான் தானே படிக்கனும்”….
சரி வாடா … அம்மா உன்னை கூட்டி வர சொன்னாங்க…
அம்மா கூட்டி வர சொல்றாங்க என்றாலே ஏதோ வில்லங்கத்தை என்னுடைய தலையில் கட்ட தான் பிளான் பண்றீங்கனு அர்த்தம்….. என்னனு தான் பார்ப்போம்…. சரி வாங்க போகலாம்…. அவள் எழுந்து முன்னே நடக்க , அவளின் பின்னாடி ரத்னம் நடந்து சென்று கொண்டு இருந்தார்….
வீட்டிற்கு சென்றதும் வசுமதி அவளைப் பார்த்து கத்த ஆரம்பித்துவிட்டார்…. என்னடி…..! ஏழு கழுதை வயசு ஆகிறது உனக்கு. இன்னமும் வீட்டில் ஒரு வேலையும் செய்யாம ” இந்த புத்தகத்தை தூக்கிக் கொண்டு ஓடுற”….
இப்ப நான் என்ன பண்ணனும் மா….? ஏன் இப்படி கத்துற…..?
உன்கிட்ட கத்தனும்னு எனக்கு வேண்டுதல்…. இப்படி மச… மசனு நிக்காம போய் கட்டிலின் மீது எடுத்து வைச்சிருக்க சேலையை கட்டிக்கிட்டு வா….
எதுக்கு மா… ?
“ஓ” சொன்னாதான் மேடம், சேலையை கட்டிக்கிட்டு வருவீங்களா….? போய் சேலை கட்டிகிட்டு வாடி…..
அமைதியாக மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு , தன்னுடைய தாயையே பார்க்க … அந்த பார்வை என்ன சொல்லியது என்று வசுமதிக்கு புரிந்தது…. “நான் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றால் ….? நீங்க நினைப்பது நடக்காது ,புரிந்ததா…’ ‘ இதுவே அவளின் பார்வையின் அர்த்தம் என்று உணர்ந்தவர் , அவளைப் பார்த்து “உன்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க ” போதுமா …. இப்ப போய் சேலை கட்டிகிட்டு வா….
சரி …. இவ்வளவு யோசித்த நீங்க , எனக்கு சேலை கட்ட தெரியாது என்ற விசயத்தை யோசிக்காம போயிட்டிங்களே …! என்னுடைய அம்மா அவர்களே….!
ஏழு கழுதை வயசு ஆனாலும் ஒரு சேலை கூட கட்ட தெரியவில்லை உனக்கு…. என் கூடவா என்று நுவலியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றவர் , சில நிமிடங்களில் வேகமாக சேலையை கட்டி விட்டவர் .அவளை திட்டி விட்டு சீக்கிரமாக தலைவாரி கொண்டு ரெடியாக இருக்கும்படி சொல்லிவிட்டு வெளியே வந்தார்…..
கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர் என்று உறவினர் ஒருவர் சத்தமாக கூற …. அந்த சத்தம் அறையில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த நுவலியின் காதில் விழுந்தது….
பலரின் பேச்சுக்குகள் மாறி மாறி அவளின் காதில் விழுந்தது…. சிறிது நேரத்தில் வந்தவர்களில் யாரோ ஒருவர் பெண்ணை கூட்டி வாங்க பா…!
ரத்னம் தன்னுடைய மனைவியைப் பார்த்து கண் அசைக்க …..
அதைப் புரிந்தவர் போல , நேராக அறையினுள் சென்று நுவலியை அழைத்துக்கொண்டு வந்து அனைவரின் நடுவே நிற்க வைத்தார்….
வந்த மாப்பிள்ளை வீட்டினர் அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டவளின் கண்கள் உதிரனின் மீது நிலை குத்தி நின்றது…. யாருக்கும் தெரியாமல் அவனை மட்டும் ஓரக்கண்ணால் அளவு எடுத்துக்கொண்டு இருந்தாள்…. ஏனோ தெரியவில்லை அவளுக்கு , தான் இப்படி இருப்பது இதுவே முதல்முறை என தோன்றியது அவளுக்கு…..
வந்தவர்கள் அனைவரும் எங்களுக்கு பெண்ணை பிடித்து இருக்கு, “நாங்க வீட்டுக்கு போய் ஜாதகம் பார்த்துவிட்டு சொல்றோம்”… ஜாதகம் பொருந்தினால் மற்ற விவரங்களை பேசலாம் என்று கூறிவிட்டு அனைவரும் கிளம்பி சென்றுவிட….
ரத்னமும் வசுவும் சேர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு , அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட்டனர்…..
நுவலிக்கு அவனின் முகமே மனதில் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது…. அவனின் உயரம் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்று தோராயமாக நினைத்தவள் , அவனைப் பற்றிய மற்ற உடலமைப்பை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்…. அவனின் கண்கள் இரண்டும் கூர்மையாகவும் “ஒருவித ஆளுமையை மற்றவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இருந்தது”….
அவளின் மனமோ , இப்ப எதுக்கு இப்படி கற்பனை கோட்டை கட்டிக்கொண்டு இருக்க…? அவன் உன்னை பெண் பார்த்துவிட்டுத்தான் போயிருக்கான் ஒன்னும் தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கிவிட்டு செல்லவில்லை …. புரிந்ததா…! தன்னுடைய மனம் கூறுவதும் சரி என தோன்றியதால் அவனைப் பற்றி நினைப்பதை நிறுத்தி இருந்தாள்…..
மாலை நேரம் ஆனதால் வசுமதி , தன்னுடைய மகளிடம் வந்து எங்கடி மாப்பிள்ளை …? எங்க போயிருக்காரு ….?
இந்த ஊர் அவருக்கு புதுசு ஆச்சே….?
தன்னுடைய தாயின் குரலில் நிகழ் காலத்திற்கு வந்தவள் , ” தன்னுடைய தாயை பார்த்து எனக்கு தெரியாது மா …!”
என்கிட்ட சொல்லிட்டு போகவில்லை….
அவரு எங்கையாவது பக்கத்துல தான் போயி இருப்பாரு, நீங்க கவலைப்படாதீங்க ….’ அவரு வந்து விடுவாரு …
என்ன பெண்ணோ நீ எனக்கு தெரியவில்லை…. மாப்பிள்ளைக்கு கால் செய்து ,எங்க இருக்காருனு கேளு. சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்லு என்று கூறிவிட்டு அவர் சென்று விட….
இவளோ அவனுக்கு போன் செய்யலாமா….? வேண்டாமா…? என்ற குழப்பத்தில் இருக்க….. அவளுடைய மனமோ அவனுக்கு கால் செய்து பேசு என்றது…. இவளோ நான் எதற்கு அவனுக்கு கால் செய்து பேசணும்…? அவன் என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போனானா…? நான் அவனுக்கு கால் செய்ய மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருக்க….. அவளுடைய போனுக்கு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது…… அதை எடுத்து பேசியவளுக்கு அந்த பக்கத்தில் இருந்து பதட்டமான குரலுடன் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்….
நான் தான் ராம் பேசுறேன் மா…. நீ சீக்கிரமா நான் சொல்ற மருத்துவமனைக்கு யாருக்கும் தெரியாமல் நீ மட்டும் வாமா….
நீங்க யாரு ….? நான் ஏன் மருத்துவமனைக்கு வரணும்….?
நான் உதிரனோட நண்பன் ராம் பேசுகின்றேன் மா…. நம்ம உதிக்கு இன்னைக்கு கல்யாணம் ….. கத்தி குத்து என்று வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் திக்கி ….. திக்கி வெளிவந்தன….. அவன் மருத்துவமனையின் விலாசத்தை மட்டும் சரியாக சொல்ல போன் கட்டானது …..
இந்த பக்கத்தில் இருந்து இவள் “ஹலோ..ஹலோ என கத்த பதில் மட்டும் இல்லாமல் போயிருந்தது….. மனம் சற்று பயம் கொள்ள அதனை கொஞ்சம் சமன் செய்து அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது என்று தனக்கு தானே ஆறுதல் படுத்திக் கொண்டு , வெளியே வர துடிக்கும் கண்ணீரையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு, வசுமதியிடம் அருகில் சென்று வருகின்றேன் என்று மட்டும் கூறிவிட்டு வேகவேகமாக அவனைப் பார்க்க மருத்துவமனை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தாள்….
Acahacho udhi ku enna achu athukulla enna pa achu….
Thank you sago 🥰