வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ,
தொலைந்தேனடி – 3……💖💖💖💖
இரண்டு நாள் கழித்து ,
அபி இறுதி சுற்றுக்கு தயாராகிட்டு இருந்தா ………..அவங்க அம்மா அப்போ அப்போ வந்து ஞாபகம் இருக்கட்டும்னு கல்யாண விசயத்த சொல்லிட்டே இருந்தாங்க …….
அபி : மா ஏன் மா
லதா : ஞாபகம் வெச்சுக்கணும் இந்த வேலை கிடைக்கலான நாங்க சொல்ற மாப்பிளைக்கு கழுத்தை நீட்டனும்
அபி : கிடைக்கலான தான பாத்துக்கலாம்
லதா : ம்ம்ம்…….
அபி : நீ யோசிக்கிறது பார்த்தா நீயே ஏதாது சதி செய்வ போலயே
லதா : இதுவும் நல்லாருக்கே
அபி : மா………
லதா : சரி சரி நல்லா படி நான் லேடீஸ் கிளப் மீட்டிங் போயிடு வரேன் அப்பா வந்தா சாப்பாடு பரிமாறு இந்த திவ்வியா வந்தா பிடுச்சு படிக்க சொல்லு பரீட்சை வருது
அபி : சரி மா
லதா கிளம்பிட்டாங்க …………அபி படுச்சுட்டு இருந்தா …………..அப்போ அபிக்கு அவளோட நண்பி போன் பண்ணா …………
அபி : ஹே சொல்லு டி எப்படி இருக்க
தீபிகா : நல்லாருக்கேன் டி நீ
அபி : நானும் நல்லாருக்கேன் என்ன திடிர்னு போன் பண்ணிருக்க
தீபிகா : எனக்கு கல்யாணம் டி
அபி : வாழ்த்துக்கள் டி
தீபிகா : எனக்கு வாழ்த்து சொல்றது இருக்கட்டும் நீ எப்போ எனக்கு கல்யாண சாப்பாடு போட போற
அபி : இப்போல்லாம் இல்லை
தீபிகா : உங்க அம்மா புலம்பிட்டு இருக்காங்க இருகாங்க டி
அபி : ஹே எனக்கு இப்போ அந்த எண்ணம் இல்லை டி வேலைக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கேன்
தீபிகா : சரி டி நம்ப செட்ல நான் தான் பிரஸ்ட் கல்யாணம் போல டி
அபி : ஆமா டி
தீபிகா : சரி போன் வெகுறேன் கல்யாணத்துக்கு வந்து சேறு சரியா
அபி : இன்னும் இரண்டு மாசம் இருக்குல்ல கண்டிப்பா வரேன் டி
தீபிகா : ம்ம்ம்ம் ……..
அபி போன் வெச்சுட்டு மறுபடியும் படிக்க ஆரமிச்சுட்டா …….கொஞ்ச நேரம் மூடி வெச்சா ……..அவளோட எண்ணம் அவளோட கடந்த காலத்துக்கு போச்சு ……..அவ பட்ட வேதனை அவமானம் எல்லாம் அவ கண்ணு முன்னாடி வந்துச்சு ……….எத்தனை பேச்சு எத்தனை வேதனை ……….அபி சும்மா இருக்கமாட்டா ஏன்னா அவ கொஞ்ச நேரம் அமைதியா இருந்தாலும் அவளோட கடந்த காலம் அவளுக்கு ஞாபகம் வந்து அவளை பாடாய் படுத்தும் ………அதுனாலயே அவ தனியா இருக்கமாட்டா ……….
அபி : இப்படியே யோசிச்சுட்டு இருந்தா பைத்தியம் பிடுச்சுடும் ஏதாது பண்ணலாம்
எழுந்து வெளிய வந்தா ………வெய்யில் சுள்ளுனு அடுச்சுது அமைதியா மறுபடியும் உள்ளேயே போய்ட்டா ………….
அபி : கடவுளே இந்த கம்பெனில எப்படியாது செலக்ட் ஆகிடனும் அப்போ தான் இந்த அம்மாகிட்ட இருந்து தப்பிக்க முடியும் காப்பது ஆண்டவா …………..
அவங்க அப்பா உள்ள வந்தார் …………
அபி : பா வாங்க சாப்பிடலாமா
அபி அப்பா : நீ இன்னும் சாப்பிடாலய
அபி : இல்லை பா
அபி அப்பா : இரு கண்ணா நான் கை கால் கழுவிட்டு வரேன் சாப்பிடலாம்
அப்போ தான் திவ்வியாவும் வந்தா ………..
அபி : ஏய் பரீட்சை வெச்சுட்டு இப்படி விளையாடிட்டு இரு
திவ்வியா : அக்கா மேட்ச் இருக்கு அக்கா
அபி : சரி டி படிக்கவும் செஞ்சினா அம்மா திட்டமாட்டாங்களா
திவ்வியா : சரி கா
அபி : பொய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்
திவ்வியா : சரி அக்கா ……….
அப்பாவும் இரண்டு பொண்ணுங்களும் சேர்ந்து விளையாண்டுட்டே சாப்பிட்டாங்க ……..
மாலை ,
லதா : பாப்பா இந்தா டீ
அபி : நன்றிகள் பல
திவ்வியா : மா எனக்கு
லதா : நீ அத எனக்கு படுச்சு எழுதி காட்டு நான் உனக்கு ஹார்லிக்ஸ் தரேன்
திவ்வியா : போ மா 😏😏😏😏
அபி : மா ஏன் மா
லதா : நீ சும்மா இரு டி படிக்கிறதே இல்லை வர வர
திவ்வியா : போ மா
வீடு வாசலுல ஒருத்தர் வந்தார் ,
போஸ்ட்மேன் : மா போஸ்ட்
லதா : நமக்கு யாரு டி
அபி : தேரிலேயே பாருங்க
லதா போய் போஸ்ட வாங்கிட்டு வந்தாங்க …………
லதா : அபிமா உனக்கு தான் நீ பைனல் ரௌண்ட்க்கு செலக்ட் ஆகிட
அபி : மா சூப்பர்
லதா : வாழ்த்துக்கள்
அபி : தேங்க்ஸ் மா
திவ்வியா : சூப்பர் அக்கா
அபி அப்பா : என்ன மா
அபி : நான் பைனல் ரவுண்டு செலக்ட் ஆகிட்டேன்
அபி அப்பா : ரொம்ப சந்தோஷம் மா
லதா : இன்னும் மூணு நாளுல கடைசி ரவுண்டு பாப்பா
அபி : ஆமா அதுலாம் சூப்பரா பண்ணிடுவேன்
லதா : சரி டி
அபி : நான் சித்தி வீட்டுக்கு போய்ட்டு வரேன்
லதா : சரி டி அங்கேயே இருந்துக்காத ராத்திரிக்கு வந்துடு அவளே இரண்டு புள்ளைங்கள வெச்சுட்டு தடுமாறுவா
அபி : அதுலாம் நானே பத்துக்குவேன் மா
அபியோட சித்தி லதா தங்கச்சி இவங்க அருணா ………..அருணா இவங்க காதல் கணவன் மோகன் …… அபி பாதி நாள் இவங்க வீட்டுல தான் இருப்பா ………..அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் கழுச்சு இப்போ தான் குழந்தை பொறந்துருக்கு அதுவும் ட்ரிப்லஸ் ………..அபிக்கு அங்க போன அவ உலகமே மறந்துடும் கொழந்தைங்களோட சேர்ந்து …………..
திவ்வியா : அக்கா நானும் வரட்டா
லதா : அடி கிடைக்கும் உனக்கு
திவ்வியா : மா ……..
லதா : அரையாண்டு பரீட்சை வருது ஒழுங்கா உக்காந்து படி
திவ்வியா : சரி மா 😏😏😏😏
அபி : மூஞ்சிய அப்டி வெக்காத டி சகிக்கல
திவ்வியா : பே ………
அபி அவங்க சித்தி வீட்டுக்கு கிளம்பிட்டாங்க …………..அபிக்கும் திவ்வியாகும் பத்து வருஷம் இடைவெளி …….அபி மட்டுமே போதும்னு நினைச்சு விட்டவங்க அடுத்ததா மாசமானதும் அதை கலைக்க மனசு இளமை பெத்துட்டாங்க அது தான் திவ்வியா …………..
அவங்க சித்தி வீட்டுக்கு வந்துட்டா ……..
அபி ; சித்தி ………சித்தி
அருணா ; வா டா மா
அபி : என்ன பண்றேங்க எங்க இருக்கீங்க
அருணா : அப்டியே ரூம்க்கு வா
அபி ரூம்க்கு போனா ……..அங்க இருக்க கோலத்தை பாத்து அபிக்கு சிரிப்பை அடக்க முடில ……..
அருணா : அடியே எதுக்கு டி சிரிக்குற
அபி : என்ன சித்தி இப்படி உக்காந்துக்க
அருணா : நான் பெத்து வெச்சுருக்க மூணு பெரும் பண்ண வேலை தான் இது
அபி : எங்க அவங்க
அருணா : இங்க தான் ஒளிஞ்சுருக்குதுங்க
பின்னாடி திரைசீலைல இருந்து ஒரு தலை எட்டி பாத்துச்சு ………கட்டலுக்கு அடில இருந்து ஒரு குட்டி கை தெரிஞ்சது ……….அருணா பின்னாடி இருந்து ஒரு தலை வந்துச்சு ……….
அபி ; செல்லகுட்டிங்களா
மூணும் ஒண்ணா வந்து அபி மேல விழுந்துச்சுங்க ………..
அருணா : அடடா ……..
வந்து தூக்குனாங்க ………….
அருணா : இந்த பசங்கள வெச்சுட்டு ………
ஒவ்வோர் பசங்களும் இரண்டு நிமிஷ இடைவெளில பிறந்தாங்க…………
அருண்,வருண்,தருண் ……
அபி : அருண் செல்லம்
அருண் : கா …….கா …….
அபி : சித்தி பேச ஆரமிச்சுட்டானுங்க போல
அருணா : இவனுங்க இப்போவே இந்த ஆட்டம் போடுறானுங்க இன்னும் பேச ஆரமிச்சுட்டா நான் அவ்ளோ தான்
அபி : அதுலாம் பாத்துக்கலாம் சித்தி
அருணா : அக்கா என்கிட்ட புலம்புறாங்க
அபி : என்ன சித்தி
அருணா : கல்யாணம் தான் வேற என்ன
அபி : சித்தி …………
அருணா : சரி டி நீ மனசுல ஏதோ வெச்சுருக்க என்னனு தான் எனக்கு தெரில
அபி : ……….
அருணா : சரி சாப்பிடலாமா வா
அபி : சித்தப்பா எங்க சித்தி
அருணா : அவங்க வர லேட் ஆகும் நீ வா சாப்பிடுவ
அபி : ம்ம்ம் …………
அபிக்கு வேலை கிடைக்குமா இல்லை அவங்க அம்மா ஆசை பட்டபடி கல்யாணம் ஆகுமா பாக்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ………………
மீண்டும் அன்பில் ………….