Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் …….

தொலைந்தேனடி -2

                          அபி இன்டெர்வியூக்காக ரொம்ப நல்லா படுச்சுட்டு இருந்தா ………..அவங்க அம்மா அப்போ அப்போ கல்யாணம் கல்யாணம்னு பயமுறுத்திடு இருந்தாங்க …..கல்யாணத்துல இருந்து தப்பிக்கிறதுக்காகவே அபி இன்னும் நல்லா உக்காந்து படுச்சா ……இரண்டு நாள் கழித்து ,”பாப்பா வா டா நான் விடுறேன் ” , அபி அப்பா கூப்பிட , ” இதோ வந்துட்டேன் பா ” , அபி பட படனு ஓடி வந்தா ,” நல்லா பண்ணு டி ஆல் தி பெஸ்ட் ” லதா சந்தோசமா சொல்ல , ” கண்டிப்பா அம்மா ” அபி சந்தோசமா கிளம்புனா , ” பாப்பா இந்த கம்பெனி தான ” சந்தேகமா அபி அப்பா கேட்க , ” இது தான் பா ” அபி கண்டிப்பா சொன்னா , ” சரி மா நல்லா பண்ணு சரியா ” அபி அப்பா சந்தோசமா சொன்னார் .

                           ” சரி  பா நான் உள்ள போறேன் ” அபி  சந்தோசமா உள்ள போன அங்க ஏற்கனவே ஏகப்பட்ட பேர் வந்துருந்தாங்க , “அடக்கடவுளே எப்படியாது இந்த வேலை கிடைச்சே ஆகணும் இல்லைனா இந்த அம்மா கல்யாணம்னு ஆரமிச்சுடும் கடவுளே ” அபி மனசுக்குள்ள வேண்டிட்டே போனா , ” மிஸ் நீங்க ”  ஒருத்தன் இவை நேம் கேட்க , ” என் பேரு அபிநயா ” அடக்கமா பதில் சொன்னா .

                      ” சரி மா இன்டெர்வியூக்காக தான வந்திருக்கீங்க ” சந்தேகமா கேட்க , ” ஆமா ஆமா ” அபி பதில் சொன்னா ,” சரி மா இங்க உக்காருங்க ” அவள் உக்கார இடம் காட்டிவிட்டு அவன் சென்று விட்டான் அபி எல்லாத்தியும் பாத்துட்டு இருந்தா ……….கொஞ்ச நேரத்துல மைக்ல ஒரு அறிவிப்பு சொன்னாங்க இன்டெர்வியூ வந்திருக்கிறவங்க நேரா செமினார் ஹால்கு போங்கன்னு சொன்னாங்க எல்லாம் எழுந்து அங்க போய்ச்சு.

                                  பிரஸ்ட் ரவுண்டு ஆரமிச்சாங்க அபி நல்லா செஞ்சா மொத்தம் அஞ்சு ரவுண்டு அதுல மூணு ரவுண்டு இன்னிக்கு நடக்கும் இதுல ஜெயிச்சுட்டா அடுத்த நாலாவது ரௌண்ட்க்குல போக முடியும் மூணு ரௌண்டும் முடுஞ்சுது ……..இப்போ இன்டெர்வியூக்கு வந்தவர்களா கூப்பிடுறாங்க அந்த கம்பெனியோட மேனேஜர் , ” எல்லாரும் நல்லா பண்ணிருக்கீங்கனு நினைக்குறேன் உங்களுக்கு ரெண்டு நாளுல நாங்க மெயில் பண்ணுவோம் அவங்க தான் அடுத்த ரௌண்ட்க்கு போறீங்க.

இன்னும் டீடெயில்ஸ் கேட்டுட்டு வீட்டுக்கு வரதுக்கு சாயந்தரம் ஆகிடுச்சு அப்போ தான் வீட்டுக்குள்ள வந்தா , ” வா மா நல்லா செஞ்சியா ” லதா ஆர்வமா கேட்டாங்க , ” ரொம்ப நல்லா பண்ணிருக்கேன் மா கண்டிப்பா அடுத்த ரௌண்ட்க்கு செலக்ட் ஆகிடுவேன் ” நம்பிக்கையா சொன்னா , ” செலக்ட் ஆகிட்டானு எப்போ அக்கா சொல்லுவாங்க ” திவ்வியா கேட்டா , ” இன்னும் ரெண்டு நாளுல டா ” அபி அவளுக்கு பதில் சொல்லிட்டே அவங்க அம்மாவை பார்த்தா , ” என்ன டி லுக்கு ” அவங்க கேள்வியாய் கேட்க , ” கண்டிப்பா செலக்ட் ஆகிடுவேன் மா இந்த கல்யாணம் பண்ற வேலையை கொஞ்ச நாள் ஸ்டாப் பண்ணி வையுங்க ” அபி கொஞ்சம் திமிராய் சொல்ல , ” இன்னும் ரிசல்ட் வரலால வரட்டும் அப்பரும் பேசு “, அவங்க அம்மாவும் கெத்தா சொல்ல ,” பாக்கலாம் ” அபி திரும்பிட்டு ரூம்க்கு போய்ட்டா .

                    “ஏன் மா அக்காவை வம்பு இழுக்குற ” திவ்வியா பாவமா கேட்க , ” அவ ஏன் டி கல்யாணம்னாலே இப்படி ஓடுறா ” ஆதங்கமா கேட்டாங்க , ” அம்மா சரி ஆகும் மா விடுங்க ” திவ்வியா தைரியம் சொன்னா .

இரண்டு நாள் கழித்து ,

                அபி போனையே பார்த்துட்டு இருந்தா , ” என்ன டி அதுலயே தலையை விட்டுட்டு இருக்க ” லதா அவளை வம்பு இழுக்க கேட்டாங்க , ” மா அவளே கடுப்புல இருக்கா நீ வேற ஏன் மா ” திவ்வியா அபிக்கு சப்போர்ட் பண்ண , ” அது சரி ” லதா சலுச்சுக்கிட்டாங்க .

                   போன்ல சத்தம் வந்துச்சு அபி வேகமா போன்  எடுத்தா எல்லா சாமியும் கும்புட்டுட்டு போன் ஓபன் பண்ணா ………அவளுக்கு மெயில் வந்துருந்துச்சு ஆமா அவ அடுத்த ரௌண்ட்க்கு செலக்ட் ஆகிட்டா , ” ஹே அம்மா ” சந்தோசமா கத்துனா , “ஏன் டி கத்துற ” லதா கேட்டாங்க , ” செலக்ட்  ஆகிட்டேன் மா அடுத்த ரௌண்ட்க்கு ” அபி செம சந்தோசமா சொன்னா , ” ரொம்ப சந்தோஷம் அடுத்த ரவுண்டு எப்போ ” லாத ஆர்வமா கேட்டாங்க , ” நாளைக்கு மா ” போன் பாத்துட்டே அபி சொன்னா , ” சரி டி பாத்து பண்ணு ” லதா சொல்லிட்டு கிட்சேன்க்குல போய்ட்டாங்க , ” திவ்வியா சூப்பர் அக்கா ” அபி கட்டிபிடுச்சுடா , ” சரி நான் அடுத்த ரௌண்ட்க்கு தயாராகுறேன் ” அபி சொல்லிட்டே ரூம்க்கு போய்ட்டா .

 

பிரேம் இல்லம் ,

 

               பிரேம் ,”அம்மா மா ” அவங்க அம்மாவை கூப்டுட்டே வந்தான் , ” என்ன பா ” ஷீலா வந்தாங்க (அவங்க நேம் ),”மா பசிக்குது மா ஆஃபீஸிக்கு வேற டைம் ஆகிடுச்சு ” பிரேம் பறந்துட்டே வந்தான் , ” டாய் நீ லேட்டா எழுந்துட்டு டைம் ஆகிடுச்சுட்டு சொல்லாத ” அவனை குற்றம் சாட்ட , ” சரி மா வாங்க ” அவங்க அம்மாவை சமாதானம் பண்ணி கூப்டு போனான் , ” இன்டெர்வியூ எப்படி டா போச்சு ” அவன்கிட்ட கேட்டாங்க , ” நான் போகவே இல்லை மா HR ரௌண்ட்க்கு தான் நான் போகுவேன் ” பிரேம் சாப்பிட்டுக்கிட்டே அவங்களுக்கு பதில் சொன்னான் , ” சரி பா உங்க அப்பாகிட்ட பேசுனிய ” ஷீலா ஆர்வமா கேட்க , “இல்லையே ” அவங்க அம்மாவை ஓர கண்ணுல பார்த்துட்டே சொன்னான் , ” இந்த மனுஷன்க்கு விவஸ்தையே இல்லை இங்க ஒரு குடும்பம் இருக்குனு தெரியாதா எப்போ பாரு ஆஃபீஸி தான் ” ஷீலா கவலையாய் சொன்னாங்க , ” பிரேம் மா கூல் அப்பா இன்னும் டூ டேசுல வந்துட்டுவார் ” அவங்க அம்மாவை சரி பண்ணான் .

                              “சரி பா சாப்பிடு “ஷீலா அவனுக்கு பரிமாறினாங்க .சாப்பிட்டு முடுச்சான் “சரி பா பாத்து போயிடு வா நான் லேடீஸ் கிளப் மீட்டிங் இருக்கு போயிடு வரேன் ” பிரேம் கிட்ட சொன்னாங்க ,” சரி மா பை நானும் கிளம்புறேன் ” .

                      பிரேம் கிளம்பி ஆஃபீஸிக்கு கிளம்புனான் அவங்க மனஜரஹ் மேனேஜர் அவன் கேபின் குள்ள வர சொல்லிட்டு வந்தான் , “மே ஐ கம் இன் சார் ” மேனஜர் அவன்கிட்ட கேட்டுட்டு உள்ள வந்தான் , ” நேத்து இன்டெர்வியூலம் எப்படி போச்சு ” பிரேம் என்ன நிலவரம்னு கேட்டான் , ” சார் மொத்தமா நாங்க 50 மெம்பெர்ஸ் செலக்ட் பண்ணிருக்கோம் அதுல 10 தான் பைனல் ரௌண்ட்க்கு செலக்ட் பண்ண போறோம் சார்” பவியமா சொன்னான் , ” well ஓகே பைனல் ரௌண்ட்ல பாக்கலாம் யூ மே கோ நொவ் ” அவனை போக சொல்லிட்டு பிரேம் அவன் வேலையை பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டான் .

அடுத்த நாள் காலை ,

                        அபி ஆஃபீஸிக்கு வந்துட்டா , “அணைக்கு பார்த்தப்போ நெறய பேரு இருந்தாங்க இப்போ இவ்ளோதானா ” அபி தனக்கு தானே பேசிட்டு இருந்தா ………” மேடம் ” குரல் வந்த பக்கம் பார்த்தா ,” சொல்லுங்க ” மரியாதையா கேட்டா , ” இன்னும் கொஞ்ச நேரத்துல இன்டெர்வியூ ஸ்டார்ட் ஆகிடும் அங்க போய் வெயிட் பண்ணுங்க ” .

                          அந்த மேனேஜர் தான் , ” சரி சார் ஹான் சார் ” அவர்கிட்ட ஒரு விசியம் கேட்க கூப்பிட்டா , ” சொல்லுங்க மா ” என்ன கேட்க போறான்னு பார்த்தார் , ” இன்னிக்கு எத்தனை பேத்தை செலக்ட் பண்ணுவீங்க ” ஆர்வமா கேட்டா , ” இன்னிக்கு உங்களுள இருந்து 10 மெம்பெர்ஸ் ” சொல்லிட்டு போய்ட்டார் , ” என்ன 10 தான நல்லா பண்ணனும் ” கடவுளை வேண்டிகிட்டே போன .

 இரண்டு மணி நேரம் கழித்து ,

                      எல்லாரும் நாலாவது ரவுண்டு முடுச்சுட்டு வெளிய வந்தாங்க , ” ஓகே இப்போ பைனல் ரௌண்ட்க்கு யார் யார் செலக்ட் ஆகிருக்கீங்கனு சொல்றேன் ” மேனேஜர் தான் மைக்ல சொல்ல ஆரமிச்சார் ஒரு ஒரு பேரா சொன்னார் , ” கடவுளே எனக்கு கிடைக்கணும் ” மனசுக்குலயே வேண்டுதல் வெச்சுட்டு இருந்தா , ” அண்ட் லாஸ்ட் பட் not லீஸ்ட் அபிநயா ” மேனேஜர் எல்லாத்து பேரையும் சொல்லி முடுச்சர் .

                               ” சூப்பர் கடவுளே ரொம்ப நன்றி ” அபிக்கு சந்தோசம் தாங்கல , ” உங்களோட பைனல் ரவுண்டு எப்போன்னு உங்க வீட்டுக்கு கூரியர் வரும் அதுல கம்பெனி டீடெயில்ஸ் அண்ட் தேதி டைம் வரும் அன்னிக்கு வந்து நீங்க பைனல் ரௌண்டஹ் அட்டென்ட் பண்ணனும் ஒன் மோர் திங் பைனல் ஒருத்தர் தான் செலக்ட் பண்ணுவோம் சோ பி ரெடி ஆல் தி பெஸ்ட் கைஸ் ” அவன் சொல்லிட்டு போய்ட்டான் அபியும் வீட்டுக்கு கெளம்பிட்டா .

அபிக்கு வேலை கெடைச்சுடுமா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ……….

 

மீண்டும் அன்பில் …………..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்