Loading

“மஞ்சள் நிற சூரியன் ஒன்று

               என் நெஞ்சை மஞ்சமாக்கி

       துயில் கொள்கிறது”

        

            காலை சூரியன் வெளிச்சம் அந்த அறையின் துளைகளின் வழியே வந்து அவளின் முகத்தில் பட்டு தெறித்தது . அந்த நேரத்தில் அவளின் முகமோ சொக்கத் தங்கமாக ஜொலிக்க கண் அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். நேற்று இரவு ஓர் கனவே போலவே இருந்தது அவனுக்கு ‘ இந்த கனவு எப்பொழுதும் கலைய கூடாது என நினைத்தான் ‘ தன்னுடைய மார்பினை தலையணையாக்கி உறங்கி கொண்டு இருக்கும் அவளை அப்படியே தூக்கி தன் இதயத்திற்குள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது அவனுக்கு. மெதுவாக அவளின் நெற்றியில் மெதுவாக இதழ் பதிக்க அவளிடம் இருந்து சிறு அசைவு ஏற்ப்பட்டது . அவளோ அவனின் நெஞ்சோடு இன்னும் நெருக்கமாக சென்று அவனை அணைத்துக்கொண்டாள். 

              “கனவுகள் காண்பது 

                         நான் தான்டி

                 கள்ளியே உன்னால் 

                         

                 கலையாமல் நெஞ்சக்குள்ளே

                        பூட்டிவச்சி இருக்கேன்

                பூவே உன் பூ முகத்தை “

    நேற்று வரை குழந்தையாக தெரிந்தவள் இன்று குமரியாக தெரிகின்றாள் அதுவும் மனதளவில் முதிர்ந்து காணப்படும் பெண்ணாக ” . 

வாழ்க்கை வாழ தானே வாழ்ந்து காட்டுவோம் என்று வாழ்க்கையை அவனோடு வாழ தொடங்கி விட்டாள் நுவலி. அவளின் கண்ண குழியில் முத்தம் வைத்துவிட்டு பாத்ரூம் சென்று விட்டான். வேகமாக தன்னுடைய காலை கடன்களை முடித்தவன் குளித்துவிட்டு காலை டிபனை செய்துக்கொண்டு இருந்தான் . அவளுக்கு குளிக்க சுடுதண்ணி சுடவைத்து அதைக் கொண்டு போய் பாத்ரூம்ல் வைத்து அதனுடன் பச்ச தண்ணியை கலந்து குளிப்பதற்கு சரியான அளவில் வைத்து அவளை வந்து எழுப்பினான். 

            “மை டியர் பொண்டாட்டி எழுந்து இருங்க ” அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்ல. 

          நுவலி …. நுவலி எழுந்திரு டா 

          ம்… ம்..ம் 

       உதி, எழுந்து போய் குளித்துவிட்டு வாடா ‘ மணி என்ன ஆச்சு பாரு ? இன்னும் காலை டிபனே சாப்பிடவில்லை அதற்குள்ள மதிய உணவு நேரம் வந்துவிடும் போல ‘.

             நுவலி, கண்ணை திறக்காமலே ” மாமா எனக்கு உடம்பு எல்லாம் அசதியா இருக்கு” நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மாமா .

              நீ குளித்துவிட்டு வந்து , சாப்பிட்டு மறுபடியும் தூங்கு டா . பசியோட மட்டும் தூங்காதே! 

            போ மாமா என்னால எழுந்திருக்கவே முடியாது போல ‘ உடம்பு எல்லாம் ரொம்ப வலிக்கிறது . அவள் மெதுவாக கூற.

              அவளின் காது அருகில் குனிந்து ” சாரி டி எல்லாம் என்னால தான் ” அவனின் வருத்தம் குரலின் வழியே வெளிப்பட .

            ஆமாம் உன்னால் தான் .நீ மட்டும் தான் காரணம்னு உனக்கு தெரியும் தானே! அப்புறம் எதுக்கு புலம்பிக் கொண்டு இருக்க ? என்னுடைய வலி எல்லாம் உன்னால் தான் சரியாகும் உன் கூட இருந்தாலே போதும் டா மாமா .

          உதட்டோர சிறு புன்னகையுடன் அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன் ” அவள் போர்த்தி இருந்த போர்வையோடு சேர்த்து தூக்கி கொண்டு போய் குளிப்பாட்டி விட்டான் “.

          என்னை விடு மாமா நானே குளித்து கொள்கின்றேன் .”அடேய் விடுடா ” டேய் 

அவள் கத்துவதை எதையும் காதில் வாங்காமல் பூவினும் மென்மையாக “ஒரு குழந்தையை எப்படி குளிப்பாட்டி விடுவானோ அதே போல் அவளையும் குளிப்பாட்டி விட்டு வெளியே வந்தான். 

அவன் சென்றதும் வேகமாக வந்து ஆடையை அணிந்துக் கொண்டு கண்ணாடியின் முன்பு தன்னைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் .சிறிது நேரத்தில் அவன் பழச்சாறு கலந்துகொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டு அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியிலும் , தலை வகிட்டிலும் வைத்துவிட்டு அவளின் முகத்தை கண்ணாடி வழியே பார்த்தான்.

           செந்தூரத்திற்கு இணையாக அவளின் முகமும் செந்தூரம் போல சிவந்து விட்டது . அவள் நிமிர்ந்து ஒருமுறை அவனை கண்ணாடி வழியே பார்த்துவிட்டு உடனே தன்னுடைய பார்வையை தரையில் பதிய விட்டவள் மறந்தும் நிமிரவே இல்லை. அவளின் காதின் ஓரத்தில் மெதுவாக சத்தமே இல்லாமல் காற்றின் உதவிக் கொண்டு அவளை “நுவலி” என அழைக்க ,

            தன்னுடைய தலையை இன்னும்… இன்னும் பூமியை நோக்கியே கொண்டு சென்றாள். ஏதோ ஒன்று அவனின் முகத்தை காண விடாமல் தடுக்க அவளும் தடுமாறி தான் இருந்தாள் மனதளவில். 

           அவளின் தோளின் மீது தன்னுடைய தாடையை பதித்தவன் ” மை டியர் பொண்டாட்டி ” இந்த மாமனை ஏன் பாக்க மாட்றீங்க ? நான் ஏதாவது தவறு செய்து இருந்து இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் இல்லனா பஞ்சாயத்தில் கூட பேசி விடலாம் நீங்க எதற்கும் கவலைப்படவேண்டாம்.  

          அடப்பாவி பஞ்சாயத்தில் பேச வேண்டிய விசயமா இது ? ஆனாலும் நீ ரொம்ப பண்ற டா என நினைத்துக்கொண்டு ” நிமிர்ந்து பார்த்து அவனை முறைக்க ” முழுமையாக முறைக்க முடியாமல் வெட்கம் வந்து சூழ மறுபடியும் தலையை குனிந்து கொண்டாள் . 

              அவளை தன் நோக்கி பார்க்கும் படி திருப்பியவன் அவளிடம் ” நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேனா? ” உனக்கு நான் வலியை குடுத்து விட்டேனா ? கேள்வியை கேட்டுவிட்டு அவளின் முகத்தைப் பார்க்க, அவளோ தலை நிமிர்ந்து அவனை பார்க்கவும் இல்லை எந்த பதிலும் கூற முடியாமல் அமைதி காத்தாள் ” தன்னுடைய மனதிற்குள்ளே இந்த வெட்கம் வேற முன்னாடி …. முன்னாடி வந்து என்னை இம்சை படுத்துகிறது. நான் எவ்வளவு பெரிய தைரியசாலி என்னையே இப்படி தலைகுனிய வச்சிட்டான் இந்த உதிரன் “.

           உதி, அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததை கண்டு என்கிட்ட சொல்ல பிடிக்கவில்லைனா நீ அத்தைகிட்டையாவது பேசுமா . அவங்ககிட்ட உன்னுடைய பிரச்சனை சொல்லு இல்ல டாக்டரை அழைத்து வர ?.

                நுவலி, விட்டால் இவன் ஊருக்கு சொல்லி விடுவான் போல என்று நினைத்தவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்து ” அடேய் இந்த விசயத்திற்கு எல்லாம் டாக்டரை அழைத்து வரவானு கேட்ட முதல் புருசன் என்னுடைய புருசன் தான் ” அவள் திக்கி திணறி பேசிக்கொண்டே இருக்க .

            என்ன விசயம் மா ? அவன் எதுவும் தெரியாதது போல கேட்க .

           அவளால் அதற்கு மேல் எதுவும் பேசவும் முடியவில்லை . அவனைப் பார்க்கவும் முடியாமல் நேற்றைய நிகழ்வுகள் மனதில் வந்து போக அவனின் நெஞ்சில் அப்படியே தன்னுடைய முகத்தைப் புதைத்துக் கொண்டாள். 

           அவனும் சிறு சிரிப்புடனே அவளின் தலையை வருடி விட்டவன் அவளின் காதின் அருகில் சென்று “நீ இன்னும் பதில் சொல்ல வில்லை டி “

               அவனை விட்டு அகலாமல் ” ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா டா இது? “

           ஆமாம் ..நீங்க சின்னப் பொண்ணு இல்ல என்னுடைய செல்ல குழந்தை போதுமா ? . அவள் தலையை ஆட்ட , சரி இப்படியே எவ்வளவு நேரம் நிற்பதாக உத்தேசம் வா வந்து சாப்பிடு . அவன் சென்று இரண்டு தட்டில் டிபனை போட்டுக்கொண்டு வந்து இருந்தான். ஒரு தட்டை எடுத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட போக,

அந்த நாற்காலியில் அவளுக்கு முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அவளை தன் மடிமீது உட்காரவைத்து கொண்டு ” எந்த வீட்டிலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? “

         நுவலி, என்ன? என்பது போல புரியாமல் அவனைப் பார்க்க.

          உதி, புருசன் எழுவதற்கு முன்னாடி பொண்டாட்டி எழுந்து சமைத்து புருசனுக்கு ஊட்டி விடனும் . ஆனால் இங்க அப்படியே தலைகீழாக இருக்கு.

          நுவலி, அவனின் கண்ணத்தில் முத்தம் குடுத்து விட்டு, எம்புருசன் சமைக்கிறான் நான் சாப்பிடுகின்றேன். ஏன்னா எனக்குத்தான் சமைக்க வே தெரியாதே! கூறிவிட்டு அவள் சிரிக்க.

       அவளையே ரசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தான். தட்டில் இருந்த உணவை எடுத்து ஒரு வாய் அவள் சாப்பிட்டு ” டேய் மாமா நீ சூப்பரா சமைக்கிற டா ” எனக்கு சமைக்க தெரியாதது நல்லதா போச்சு நீயே காலம் முழுவதும் சமைக்கப்போற நான் நல்லா சாப்பிட போறேன் கூறிக்கொண்டே அவனுக்கு ஊட்டி விட.

           அவன் சிரித்துக்கொண்டே , அடியேனின் சித்தம் இது. 

          டேய் மாமா’ ஓவரா பண்ணாதே!

        உதி, கல்யாணத்திற்கு பிறகு என்னை “டா ” போட்டு மட்டும் தான் கூப்பிட்டுக் கொண்டு இருந்த , இப்ப என்னடான்னா ” வாடா … …போடா… டேய் …” இப்படி எல்லாம் கூப்பிடுறியே?

            நுவலி, அப்படி தான் டா கூப்பிடுவேன் டா…டா… டா .

           உதி, நீ எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு டி .நீ தானே கூப்பிடுற? என் பொண்டாட்டி என்னை கூப்பிடாம வேற யாரு கூப்பிட போறா?….  

       நுவலி , நீ ரொம்ப ஸ்வீட் டா மாமா. இருவரும் உணவை சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் உட்கார்ந்து கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர். 

           அன்றைய பொழுது முழுவதும் அவளை எவ்வித வேலையையும் செய்ய விடாமல் அவனே எல்லா வேலையும் செய்தான். அவளுக்கு மதிய உணவையும் அவனே ஊட்டி விட்டு ” அவளை நன்கு ஓய்வு எடுக்கச் சொன்னான் ” . தனக்காக அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் காதல் தான் அவளுக்கு தெரிந்தது. 

 

         பகல் பொழுதை சூரியன் ஆண்டது போதும் என்று நிலவு பூமியை ஆள வந்து விட்டது. இரவு உணவை உதிரன் மும்முரமாக செய்து முடித்துக் கொண்டு வந்து வைக்க. நுவலி, அவன் என்ன சமைத்து இருக்கான் என்று ஆர்வமாக எதிர்பார்த்து இருக்க உட்கார்ந்து இருக்க.

         வசு, என்னடி பண்ற? சாப்பிட்டியா? இல்லயா? மாப்பிள்ளை என்ன பண்றாரு?

       நுவலி, என்ன? அம்மாவின் குரல் கேட்கிறது என்று திரும்பி பார்க்க வசுமதியும் ரத்னமும் இவளின் பின்னாடி நின்றுக்கொண்டு வீட்டை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

       உதி, வாங்க அத்தை மாமா ! சாப்பாடு ரெடியா இருக்கு வந்து சாப்பிட்டு போய் ஓய்வு எடுங்கள். அதிக நேரம் டிராவல் பண்ணதால் ரொம்ப களைப்பா இருப்பீங்க. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ,

      நுவலி, “அம்மா” ஏன் இவ்வளவு அவசரமா வந்து இருக்கீங்க? பொறுமையாக வந்து இருக்கலாமே?. நீங்க ஒரு வாரம் கழித்து வருவதாக தானே சொன்னீங்க? தீடீரென இரண்டு நாட்களிலே திரும்பிவந்து விட்டீங்க?.

         வசு, நாளைக்கு மாப்பிள்ளை வேலைக்கு கிளம்பும் போது நாங்க எப்படி ஊரில் இருக்க முடியும்?. நாளைக்கு காலையில் சம்மந்தி வீட்டில் இருந்து வருவாங்க உங்க ரெண்டு பேரையும் கூட்டி போக அந்த நேரம் நாங்க உங்க கூட இல்லாமல் இருந்தால் சரியாக இருக்காது டி அதனால் தான் அவசர… அவசரமாக வந்துவிட்டோம் . 

       நுவலி, சாப்பிட்டு முடித்துவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தாள் . வசுமதி கூறியதை கேட்டதும் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த டம்ளரை அப்படியே கீழே தவற விட்டுவிட்டு அதிர்ச்சியாக உதிரனைப் பார்க்க , அவனோ இவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.  

      ரத்னம், உனக்கு பிடித்த சாக்லேட் எல்லாவற்றையும் வாங்கி வந்து இருக்கேன் பாரு டா.

     நுவலி, எதையும் காதில் வாங்காமல் வேகமாக எழுந்து தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். சில நிமிடங்களில் உதிரனும் சாப்பிட்டு முடித்து விட்டு “அத்தை மாமா நீங்க சாப்பிட்டு போய் ஓய்வு எடுங்க காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு அவனும் அறையின் உள்ளே செல்ல , அங்கு முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள் நுவலி. 

        உதி, கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு ” கடவுளே! என்ன அடி அடித்தாலும் சத்தம் மட்டும் வெளியே கேட்க கூடாது ” என நினைத்தவன் அவளின் அருகில் கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டு அவளின் தோளின் மீது கை வைக்க .அவளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள். கண்கள் மட்டும் கண்ணீரை சிந்திய படியே இருக்க வார்த்தைகள் மட்டும் பேச நா எழவில்லை. அவளின் முகத்தை தன் புறமாக திருப்ப .

        நுவலி, என்கிட்ட எந்த விசயத்தையும் சொல்லக்கூடாது என்ற முடிவில் இருக்க தானே! நான் உனக்கு அவ்வளவு வேண்டாதவளா போய் விட்டேனா? என்கிட்ட ஒரு வார்த்தையும் பேசக்கூடாது என்ற முடிவில் தானே இருக்க? நீ அப்படியே இரு . அவள் மறுபடியும் முகத்தை திருப்பிக் கொள்ள.

           உதி, அவளின் முகத்தை திருப்பி கண்ணீரை துடைத்து விட்டவன் அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளின் கண்ணீர் துளிகள் ஊற்றாய் பெருக்கெடுத்து அவளின் நெஞ்சை நனைக்க , அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு ” நீ இப்படி அழுவ என்று எனக்கு தெரியும் டி”. அதனால் தான் உன்கிட்ட சொல்ல எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது. இந்த விசயத்தை நீ எப்படி எடுத்துக்கொள்ளுவனு எனக்கு தெரியாது டி? அதனால் தான் அத்தையும் மாமாவையும் போன் போட்டு சீக்கிரமா வர சொன்னேன். எனக்கு மதியம் தான் போன் வந்தது நாளைக்கு வேலைக்கு வரவேண்டும் என்று அப்பொழுது இருந்து உன்கிட்ட எப்படி விசயத்தை சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கேன் மா. 

       நுவலி, என்ன சொல்வது என்று அவருக்கும் தெரியவில்லை. காலம் செய்யும் கோலம் என்பதா! இல்லை கடவுள் செய்யும் விளையாட்டு என்பதா’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க.

       அவளின் கண்ணீரை அழுந்த துடைத்தவன் அவளை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு தானும் அவளின் அருகில் படுத்துக்கொண்டு அவளை தன் நெஞ்சுக்குள்ளே வைத்து காப்பது போல அவளை தன் கை வளைவிற்குள் வைத்துக்கொண்டான். அவளுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது அந்த நேரத்தில் . அவனின் நெஞ்சிலே தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டு அவனின் வாசத்தையும் இதயத்தின் மொழியையும் தன் மனதின் உள்ளே சேகரித்து கொண்டு இருந்தாள்.

காலம் முழுவதற்கும் இவனின் இதய துடிப்பு மட்டும் தான் நிரந்தரம் என்று நினைவலைகளாக இன்று இரவு முழுவதும் தூங்காமல் சேகரிக்க முடிவு செய்துவிட்டாள் போலும்! 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்